Friday, 10 July 2026

Evil Dead Burn Movie Review

Evil Dead Burn Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம Evil Dead Burn படத்தோட review அ தான் பாக்க போறோம். இதோட அடுத்த படமான Evil Dead Wrath 2028 ல release ஆகும் னு இந்த படத்தோட team சொல்லிருக்காங்க. evil dead படங்களை direct பண்ணது sam raimi அப்புறம் ash williams character ல bruce campbell நடிச்சிருப்பாரு.



 இவரோட direction ல வந்த எல்லா evil dead series யுயுமே box office hit தான். reviews யும் அட்டகாசமா வந்துச்சு. அதே மாதிரி horror movie lovers க்கு இந்த படம் ரொம்பவே பிடிச்சிருந்தது. இவரு இந்த series அ நிறுத்துனதுக்கு அப்புறம் வேற வேற directors இந்த படத்தோட sequel அ எடுக்க ஆரம்பிச்சாங்க. இது ஒன்னும் புதுசு கிடையாது, terminators, jaws எல்லாமே original செம hit அடிச்சது. வேற directors இதோட sequel பண்ணாங்க. ஆனா அது எதுவுமே அந்த அளவுக்கு hit ஆகல. இந்த மாதிரி வேற ஒரு director களம் இறங்கும் போது original version ஓட எப்பவுமே compare பண்ணுவாங்க. ஆனா இந்த evil dead burn அப்படி கிடையாது னு தான் சொல்லணும். 


evil dead படத்தோட கதையை பாத்தீங்கன்னா ஒரு சில friends காட்டுக்குள்ள இருக்கற ஒரு cabin க்கு போவாங்க. அங்க Book of the Dead (Necronomicon ) கிடைக்கும். அதுல இருக்கற எழுத்துகளை படிப்பாங்க. ஒடனே பேய் வந்துடும். இதை ரொம்ப thrilling அ எடுத்திருப்பாங்க. இதை வச்சு comedy ஆவும் squel  யும் பண்ணிருக்காங்க. அதே மாதிரி ash  williams character  அ மெய்யப்படுத்தி tv ல series ஆவே போயிடு இருக்கு. அதுனால இவரை வச்சு இனிமே படம்மும் எடுக்க முடியாது. அதுனால மறுபடியும் பழைய கதையை புது விதமா காமிச்சா தான் கதை நல்ல இருக்கும். என்னதான் evil dead series ல நெறய படம் வந்தாலும், இந்த படம் தான் original version க்கு சரியாய் பொருத்தமா இருக்கு. இது 2023 ல release  ஆனா evil dead rise படத்தோட direct sequel கிடையாது. ஆனா கதை அதே lakeside location ல தான் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு அப்புறமா post credit scenes யும் வருது. அது இன்னும் அடுத்த part க்கு strong ஆனா அடித்தளமா இருக்கு.  


ஒரு பெரிய accident  க்கு அப்புறம் alice அ நடிச்சிருக்க Souheila Yacoub அவரோட husband, William அ நடிச்சிருக்க George Pullar இறந்து போய்டுறாரு. husband இறந்து போனதால alice மனசோடஞ்சு போய்டுவாங்க னு எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா அவங்க அப்படி இல்ல. இவங்க இந்த மாதிரி ஒரு மனநிலை ல இருக்கற காரணம் என்ன கதை போக போக reveal பண்ணுறாங்க. joseph அ நடிச்சிருக்க Hunter Doohan அப்புறம் இவரோட girlfriend Thya வ நடிச்சிருக்க Luciane Buchanan , இவங்க மட்டும் தான் alice க்கு support பண்ணுறாங்க. ஆனா joseph ஓட parents ஆனா Susan அ நடிச்சிருக்க Tandi Wright அப்புறம்  Edgar அ நடிச்சிருக்க Erroll Shand யும் alice மேல கோவத்தை தான் கொட்டுறாங்க. ஆனா funeral நடக்கறதுனால எல்லாத்தயும் பொறுத்துகிட்டு இருக்கங்க. இதுக்கு அப்புறம் தான் horror scenes அ கொஞ்சம் கொஞ்சமா  ஆரம்பிக்குது. இவங்க எல்லாரும் ஒரு பழைய வீட்டுக்கு போறாங்க. இதுக்கு அப்புறம் தான் நெறய demonic creatures வர ஆரம்பிக்குது.  yacoub ரொம்ப நல்ல நடிச்சிருந்தாங்க. இந்த படத்துல இவங்க தான் central character அ நடிச்சிருக்காங்க. மத்தபடி first part ல இருக்கற மாதிரியான கோரமான scenes இந்த படத்துல ளையும் இருக்கு.  


Sam Raimi and Rob Tapert யும் புது directors க்கு chance குடுத்திருக்காங்க. இவங்க தான் இந்த படத்துக்கு producers யும் கூட. என்னதான் Sébastien Vaniček இதுக்கு முன்னாடி ஒரே  ஒரு படம் பண்ணி இருந்தாலும், இந்த story  அ ரொம்பவே அழகா handle பண்ணிருக்காங்க. New French Extremity ஓட violent style தான் இந்த படம் full  அ இருக்கு. audience முக சுளிக்கற மாதிரி நெறய scenes யும் இருக்கு. இந்த violence scenes எல்லாமே பாக்க ரொம்ப realistic ஆவும் இருக்கு. ஒரு சில எடத்துல comedy scenes யும் இருக்கு. அதெல்லாம் workout யும் ஆயிருக்கு. இந்த படத்துல use பண்ணிருக்க camera work அப்புறம் visuals னு எல்லாமே பக்கவா இருக்கு. action scenes யும் ரொம்ப engaging  அ இருக்கு. 


ஒரு நல்ல energetic படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க .

No comments:

Post a Comment