Friday, 10 July 2026

Rao Bahadur Movie Review

Rao Bahadur Tamil Movie Review 

Rao Bahadur Movie Rating: 4/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம rao bahadur படத்தோட review வை தான் பாக்க போறோம். Satyadev, Vikas Muppala, Deepa Thomas, Bala Parasar, Anand Bharathi, Pranay Vaka, Kunal Kaushik, Master Kiran  ]னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. Venkatesh Maha தான் இந்த படத்தை direct பண்ணிருக்காங்க. Ramappa Rao Bahadur இவரு ராஜவம்சம்த்தை சேந்தவரு. ஆனா இவரு இப்போ மரண படுக்கை ல இருக்காரு. 



என்னதான் இவருக்கு வயசு ஆனாலும், ரொம்ப நோய் வாய் பட்டு இருந்தாலும், உயிரோட இருக்கறதை பாக்கும் போது doctor ஏ அசந்து போய்டுறாரு. இவருக்கு ஒரு சில pshycological issues இருக்கு. இது அவருக்கு எப்படி வந்தது றத்தை பத்தி பொறுமையா தான் reveal பண்ணுறாங்க. இந்த depression க்கு காரணம் ஒரு சந்தேகம் தான். இந்த சந்தேகம் அவருக்கு ரொம்ப வருஷமா உருத்திக்கிட்டே இருக்கு. அப்புறம் இதுதான் அவரோட வாழக்கையை அழிச்சிடுச்சு னு சொல்லலாம். அதுக்கு அப்புறம் தான் இந்த சந்தேகத்தை பத்தி தெளிவா சொல்லுறாங்க. 


இந்த படத்தோட first part ல பாத்தீங்கன்னா ramappa வாழ்ந்துட்டு இருக்கற Bhuvanalayam ன்ற பெரிய mansion அ காமிக்கறாங்க. இங்க இருக்கற ஆட்கள் ஓட accent யும் different அ இருக்கும். இந்த கதைல skin colour discrimination , bloodline obsession அப்புறம் caste discrimination இதை பத்தி ரொம்ப தெளிவா கொஞ்சம் comedy ஓட கலந்து சொல்லிருக்காங்க. இந்த கதை 1968 ல இருந்து 1991 வரைக்கும் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. என்னதான் serious ஆனா topic அ இந்த படத்துல பேசினாலும், நெறய எடத்துல comedy அ இதை சொல்லிட்டு போயிருக்காங்க. இந்த character க்காக satyadev 85 நாளைக்கு 5 மணி நேரம் prosthetic makeup போட்டு நடிச்சிருக்காரு. அவரு போட்ட effort இந்த படத்துல நல்லாவே தெரியுது. படத்துல side characters எல்லாருமே கம்மிதான். இருந்தாலும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு அருமையா நடிச்சிருக்காங்க. deepa thomas , renuka வை நடிச்சிருக்காங்க. அப்புறம் vikas muppala - achari யா நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட characters யும் இந்த படத்துக்கு முக்கியமா அமைச்சிருக்கு. 


என்னதான் இது படமா இருந்தாலும், கிட்டத்தட்ட drama மாதிரி இருந்தது. satyadev போட்டிருக்க prosthetic makeup , அப்புறம் இவரு பேசுற பெரிய பெரிய dialogues எல்லாமே அப்படியே ஒரு play மாதிரி தான் இருந்தது. படத்தோட screenplay யும் ரொம்ப fast அ இருந்தது. இந்த படத்தோட director 2018 ல  C/o Kancharapalem னு ஒரு சின்ன தெலுகு படம் எடுத்து செம hit குடுத்திருந்தாரு. இந்த படம் கொஞ்சம் வித்யாசமான style ல குடுத்திருக்காரு. இதுல இருக்கற visuals , detailing , natural ஆனா approach னு எல்லாமே அழகா இருந்தது. படத்தோட technical side னு பாக்கும்போது Kartik Parmar’ஓட  cinematography ரொம்ப நல்ல இருந்தது.  atmospheric lighting அப்புறம் unusual colour palettes னு use பண்ணி ரொம்ப அழகா இந்த படத்தை camera ல பதிவு பண்ணிருக்காங்க. Rohan Singh ஓட production design அப்புறம் Smaran Sai’ ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலமா இருக்குனு தான் சொல்லணும். படத்தோட ஆரம்பம் கொஞ்சம் மெதுவா இருந்தாலும் கதை போக போக விறுவிறுப்பா போகுது nu தான் சொல்லனும். 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க .

No comments:

Post a Comment