Thursday, 2 October 2025

விண்வெளி நாயகனின் பிறந்தநாள் பரிசாக முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய *நாயகன்

 விண்வெளி நாயகனின் பிறந்தநாள் பரிசாக முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய *நாயகன்*



நவம்பர் 6 உலகமெங்கும் வெளிவர உள்ளது 


மணிரத்னம் இயக்கிய நாயகன்' (21/10/1987)வெளிவந்து இன்றோடு 38 வருடங்கள் ஆகின்றன.


திரு.முக்தா சீனிவாசன் & திரு.முக்தா ராமசாமி அவர்களது  முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில்

மணிரத்தினம் இயக்க,  இசை இளையராஜா( 400 வது படம் ) 


1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது

மூன்று தேசிய விருதுகளை வென்றது... 


வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி *நாயகன்*கதை எழுதப்பட்டிருந்தது.  


இளைஞனான வேலுவும் வயதான வேலு நாயக்கரும் திரையில் உயிர் பெற்றிருந்தார்கள்.. 


" நாளைக்கு கணக்கு பரிட்சை சீக்கிரமா விட்டுடுவீங்களா " என்று கேட்கும் இடம் வலி மிகுந்த வசனம்..நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம்.


நீங்க நல்லவரா கெட்டவரா என்னும் கேள்விக்கு, முதிர்ந்த வேலு நாயக்கரால் "*தெரியலயேப்பா*"என்று என்று ஒற்றை பதிலை கூறிய மணிரத்தினத்தின் *நாயகன்* திரைப்படம் மறுபடியும் உங்கள் பார்வைக்கு..


மகனாக 'நிழல்கள்' ரவி, மகளாக கார்த்திகா, மருமகனாக,போலீஸ் அதிகாரியாக நாசர் மற்றும் வீ. கே. ராமசாமி, டெல்லி கணேஷ், ஜனகராஜ், குயிலி ஆகியோர்  நடித்திருக்கிறார்கள்


கதை, திரைக்கதை, இயக்கம் - மணிரத்தினம்

இசை இளையராஜா  

வசனம் - பாலகுமாரன்

ஒளிப்பதிவு -  பிசி ஸ்ரீராம்

எடிட்டர் - B. லெனின்  V. T.விஜயன்

கலை - தோட்டா தரணி.. 

ஸ்டண்ட்- சூப்பர் சுப்புராயன்

நடனம் - சுந்தரம் மாஸ்டர்

மக்கள் தொடர்பாளர்கள் - சினிநியூஸ் செல்வம், வி.பி.மணி

மறு வெளியீடு மக்கள் தொடர்பாளர்கள் - டைமண்ட் பாபு, சாவித்ரி.

No comments:

Post a Comment