VELS கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் சார்பாக சென்னை, செம்பரம்பாக்கத்தில் VELS வர்த்தக மற்றும் மாநாட்டு மையம், VELS திரைப்பட நகரம் மற்றும் VELS திரையரங்குகளுக்கான திறப்பு விழா, கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட, பத்ம பூஷண் டாக்டர் கமல்ஹாசன், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) அவர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
டாக்டர் கமல்ஹாசனின் வருகை இந்த நிகழ்விற்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது. சினிமா, கலைகள் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தன்னை "சினிமாவின் குழந்தை" என்றும், தனது அடையாளத்தையும் சாதனைகளையும் வடிவமைத்ததற்காக சினிமாவிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், சென்னை, பான்-இந்திய சினிமா உருவாக்கத்திற்கான பிறப்பிடமாகவும், உண்மையான மையமாகவும் வரலாற்றுப் பங்களிப்பு செய்ததாக தெரிவித்தார்.
VELS குழுமத்திற்கு, இந்த தொடக்க விழா நிகழ்வானது ஒரு மைல்கல் தருணமாக, படைப்பாற்றல், புதுமை மற்றும் தொழில்துறைக்குத் தயாராக இருக்கும், திறமையை வளர்க்கும், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அதன் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது.





No comments:
Post a Comment