Sunday, 1 March 2026

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’

 *‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!*



வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்!


பெரம்பூர் பின்னணியில் பரபரக்கும் காதல் கதை – ‘அன்பே டயானா’டைட்டில் டீசர் வெளியீடு!


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் அசத்தலான டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.


பக்கா லோக்கலாக “வட சென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என ஆச்சரியமளிக்கும் வகையில் ஆரம்பிக்கும் டீசர், இதுவரை திரையில் பெரிதாக பார்க்காத சென்னையின் ஒரு புதுமுகத்தை காட்டுகிறது.


அத்தோடு வடசென்னை மிடில்கிளாஸ் இளைஞனின் அதிரிபுதிரியான குடும்பத்தை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தையும் டீசர் நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது.


இப்படியான சூழலில், அந்த இளைஞன் ஒரு ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறைகள் என பல்வேறு வேறுபாடுகள் மோதும் போது உருவாகும் சம்பவங்கள் களேபரமாக வெடிக்கின்றன. காதலும், குடும்பமும், கெத்தும், காமெடியும் கலந்து நகரும் இந்த பரபரப்பான காட்சிகள், “அடுத்து என்ன ஆகும்?” என்ற எதிர்பார்ப்பை தூண்டி படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா  நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.


சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெற்றிகரமாக ஈர்த்துள்ள ‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில்,  குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான என்டர்டெய்னராக அமையும்.



Link : 

https://youtu.be/lf1RiFkZG18?si=ekHDJrb-TjvakxS5

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கான்பரன்சில் பங்கேற்ற நடிகர் செளந்தரராஜா

 *டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கான்பரன்சில் பங்கேற்ற நடிகர் செளந்தரராஜா*
















தமிழ் சினிமாவில் நாயகனாகவும் இணைநாயகனாகவும் கவனம் பெற்ற நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயிகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.


இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடைபெற்ற Vishwa Yuvak Kendra அமைப்பு நடத்திய NGO–CSR கான்பரன்சில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் செளந்தரராஜா மூன்று நாட்கள் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் கலந்து கொண்டன.


மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். எதிர்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கிலும் நடிகர் செளந்தரராஜா கலந்துகொண்டார்.


இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) நிதியை சமூக நலத்திட்டங்களுக்கு சிறப்பாக பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ளவும் அவர் இந்த கான்பரன்சில் பங்கேற்றதாக தெரிவித்தார்.


தன்னுடைய சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முன்னெடுத்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால், அதற்கான அனுபவம் மற்றும் வழிகாட்டுதலை பெறவும் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக அவர் கூறினார்.


மேலும், “ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தது ஒருவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முன் வர வேண்டும்” என்றும் நடிகர் செளந்தரராஜா வலியுறுத்தினார்.