Featured post

Mr X Movie Review

Mr X Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mr x படத்தோட review வை தான் பாக்க போறோம்.   இந்த படத்துல  ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு...

Tuesday, 31 March 2026

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!

 *பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!* 



நான் சோமிதரன், 'நீளிரா' திரைப்படத்தின் இயக்குநர். ஒரு பத்திரிகையாளராக உங்களுடன் இருந்து, பாலு மகேந்திரா அவர்களின் உதவியாளராக பணியாற்றி, ஆவணப் படங்களை இயக்கி இன்று இப்படத்தை இயக்கியுள்ளேன். அதுவும், என் கனவான என் மக்களின் கதையை படமாக எடுத்துள்ளேன். 


தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை, ஆனால் சொல்ல வேண்டிய கதையை உங்கள் முன் படைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழ் சினிமாவில் காட்ட வேண்டும் என்பது எனது கனவு மட்டுமல்ல, எத்தனையோ ஈழ மக்களின் கனவு, பாலு மகேந்திரா போன்ற பெரும் கலைஞர்களின் கனவு. 


இப்படத்தின் மீதான உங்கள் விமர்சனங்களை படிக்கவும், காணவும், உங்கள் கருத்துகளை கேட்கவும் ஆவலாக உள்ளேன். உங்கள் விமர்சனம் தான் இப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும். 


இந்த சமயத்தில் ஒரு வேண்டுகோளையும் உங்களிடம் வைக்கிறேன். 'நீளிரா' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி உங்கள் விமர்சனங்களில் குறிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த கல்யாண காட்சி தான் படத்தின் மிக முக்கியமான பகுதி என்பதால் அதை பற்றி முன்னரே அறிந்து கொள்ளாமல் திரையரங்கில் ரசிகர்கள் காண வேண்டும் என்று நான் விரும்புவதால் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் சகோதரனாக,  ஈழ மண்ணின் கலைஞனாக இந்த படத்தை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். 



நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

 *நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு*








வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா - சைதன்யா- சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.


தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,


''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,


''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.


தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,


''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.


நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,


''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.


நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,


''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.


நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.


இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.

Visual Majesty Unleashed: Jayasurya-Prabhu Deva-Anushka Shetty’s ’ ‘Kathanar’ Trailer Delivers a Dazzling Spectacle

 *Visual Majesty Unleashed:  Jayasurya-Prabhu Deva-Anushka Shetty’s ’ ‘Kathanar’ Trailer Delivers a Dazzling Spectacle*



Producer Gokulam Gopalan’s Sree Gokulam Movies, acclaimed as one of India’s most amazing trailblazers, continues its legacy of fresh storytelling, technical grandeur, and visual splendour. The banner returns with a cinematic feast: Kathanar, starring Jayasurya, Anushka Shetty, and Prabhu Deva alongside an ensemble of industry titans, now igniting sky-high expectations with its recently launched theatrical trailer.


Clocking 2 minutes 49 seconds, the trailer unleashes a cascade of breathtaking moments: stunning visuals, a soaring musical score, crystalline sound design, and the magnetic screen presence of its leads, heralding a fresh fusion of fantasy in an ancient backdrop.


Director Rojin Thomas, whose heartfelt Home won hearts, crafts here an indelible theatrical odyssey. Co-writing the screenplay with R. Ramanand, he promises audiences an epic for the ages. With principal photography wrapped, the post-production team races toward a worldwide 2026 release in up to 15 languages.


Kathanar’s trailer has instantly captivated critics, trade experts, and fans, a rare exemplar of pre-release brilliance.


The stellar cast features Sanoop Santhosh, Sandy, Devika, Nitish Bharadwaj, Vineeth, Harish Uthaman, Srikant Murali, and Kulpreet Yadav in pivotal roles. Shot extensively with cutting-edge virtual production, the film boasts Neil D’Cunha’s cinematography, Rahul Subrahmanian’s evocative score, Rojin Thomas’ editing and VFX supervision, Rajeevan’s production design, and action by Jungjin Park and Kalai Kingson. V. C. Praveen and Baiju Gopalan serve as co-producers, with Krishnamoorthy as executive producer.

நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி

 *நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!*



புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ரசிகர்களுக்கு காலத்தைக் கடந்து செல்லும் ஒரு காவிய அனுபவமாக இந்த படம் இருக்கும் என்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இந்தப் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


‘கத்தனார்’ டிரெய்லர் வெளியான உடனேயே விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே ஒரு படத்தின் டிரெய்லர் இத்தகைய வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


*நடிகர்கள்:* சனூப் சந்தோஷ், சாண்டி, தேவிகா, நிதீஷ் பரத்வாஜ், வினீத், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் குல்ப்ரீத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


ஒளிப்பதிவு: நீல் டி’குன்ஹா,

இசை: ராகுல் சுப்ரமணியன்,

எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: இயக்குநர் ரோஜின் தாமஸ், 

கலை இயக்கம்: ராஜீவன்,

ஆக்‌ஷன்: ஜங்ஜின் பார்க் மற்றும் கலை கிங்சன், 

இணைத் தயாரிப்பாளர்கள்: வி.சி. பிரவீன் மற்றும் பைஜு கோபாலன், 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

 *நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு*



வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா - சைதன்யா- சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.


தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,


''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,


''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.


தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,


''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.


நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,


''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.


நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,


''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.


நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.


இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் 'ரீ யூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் 'ரீ யூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*





*ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் 'ரீயூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* 


தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரீ யூனியன்'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


இயக்குநர்  சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ' ரீயூனியன் ' திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமிசம் சிவா, குட்டி கோபி ,ஹரிஷ் , அருண் உதயன், சரத் , க்ரிஷ்&அய்ஷூ ,காக்காமுட்டை ரமேஷ், பூவையார், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்திருக்கிறார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார்  மேற்கொண்டு இருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் (Kartik Jayas) தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அருள்தாஸின் தோற்றமும், ஏனைய கதாபாத்திரங்களின் தோற்றமும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

Monday, 30 March 2026

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி

 *விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!*








அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.


நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.

Khelo India Asmita Women’s Kickboxing National League 2025–2026

 Khelo India Asmita Women’s Kickboxing National League 2025–2026




The Tamil Nadu State Amateur Kickboxing Association (TNSKA) successfully organized the Khelo India Asmita Women’s Kickboxing National League 2025–2026 at the Vinayaka Missions Research Foundation, Chennai Campus, from 26th to 29th March 2026.


The prestigious national-level event witnessed enthusiastic participation from women athletes representing various states across India, showcasing exceptional talent, discipline, and sportsmanship in the field of kickboxing. The championship served as a significant platform under the Khelo India Asmita initiative to empower women athletes and promote grassroots development of combat sports in the country.


The competition featured multiple categories and weight divisions, with players demonstrating high standards of technical skill and competitive spirit throughout the four-day event. The league not only highlighted emerging talent but also provided valuable exposure to athletes aiming for national and international recognition.


With excellent coordination by the organizing committee, the event ensured smooth conduct of weigh-ins, matches, accommodation, transportation, and athlete welfare. Coaches, officials, and referees played a vital role in maintaining the professionalism and integrity of the competition.


Tamil Nadu team delivered an outstanding performance, securing the Overall Championship Title with an impressive medal tally:


Gold Medals: 11


Silver Medals: 4


Bronze Medals: 5



This remarkable achievement reflects the continuous efforts, structured training programs, and unwavering support extended by the association and sports authorities.


TNSKA expresses its sincere gratitude to the WAKOIndiaKickboxingFederation, organizing committee members, officials, volunteers from Vinayaka missions Research Foundation, Chennai Campus and all participating teams for their invaluable support in making this event a grand success.


The successful completion of the league marks another milestone in promoting women’s participation in sports and strengthening India’s presence in kickboxing at the global level.


Regards,

Tamil Nadu State Amateur Kickboxing Association (TNSKA)

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026

 கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026




தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA) சார்பில், கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி 26ம் தேதி முதல் 29ம் தேதி மார்ச் 2026 வரை, சென்னை வினாயகா மிஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமை, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு நெறிமுறைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். கேலோ இந்தியா அஸ்மிதா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டி, மகளிர் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முக்கிய மேடையாக அமைந்தது.


நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு எடைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வீராங்கனைகள் உயர்ந்த தரமான திறமைகளை வெளிப்படுத்தினர். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகும் வீராங்கனைகளுக்கு இந்த லீக் ஒரு முக்கிய அனுபவமாக அமைந்தது.


ஒழுங்குபடுத்துநர் குழுவின் சிறப்பான ஒருங்கிணைப்பின் மூலம், எடைப்பரிசோதனை, போட்டி நடத்துதல், தங்கும் வசதி, போக்குவரத்து மற்றும் வீராங்கனைகளின் நலன் ஆகியவை முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் போட்டியின் தரத்தை உயர்வாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.


தமிழ்நாடு அணி சிறப்பான சாதனை புரிந்து, மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது, பதக்க விவரம் பின்வருமாறு:


தங்கம்: 11


வெள்ளி: 4


வெண்கலம்: 5



இந்த சாதனை, வீராங்கனைகளின் கடின உழைப்பு, பயிற்சி திட்டங்கள் மற்றும் சங்கத்தின் உறுதியான ஆதரவை பிரதிபலிக்கிறது.


இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற உதவிய 

வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்பு

 ஒழுங்குபடுத்துநர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து அணிகளுக்கும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


இந்த லீக் வெற்றிகரமாக நிறைவு பெற்றது, மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் மற்றும் இந்திய கிக் பாக்சிங் வளர்ச்சிக்கு மேலும் ஒரு முக்கிய படியாகும்.


நன்றி,

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA)

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா '

 *ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு*




இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி   தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.


ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் 'நீளிரா' திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா 'நீளிரா' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.


இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில், ''என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் 'நீளிரா' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.


இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ''நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.


பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.


படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன்.‌ படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,'' என்றார்.


தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி.  நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.


நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து  தொடங்கினோம். முதல் படமாக 'மேயாத மான்' படத்தை தயாரித்தோம். 'நீளிரா' திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.


'மேயாத மான்' படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் 'நீளிரா' எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம்.‌ பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார்.‌ அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர்.‌ அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.‌


இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம்.‌ இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார்.


இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில், "இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.


இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள்.


இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.


இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,'' என்றார்.


இயக்குநர் சசி பேசுகையில், ''இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், 'நீளிரா' என்றொரு படத்தை திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள் என்றார். லிங்குசாமி எப்படி என்றால் 'பாகுபலி' படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார் 'கொட்டுக்காளி' படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் 'நீளிரா' கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.


ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில்  ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.


இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.


இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,'' என்றார்.


நடிகை கபிலா வேணு பேசுகையில், ''நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.


நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,'' என்றார்.


இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ''ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான 'மேயாத மான்' படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.


நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.


எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌


'நீளிரா' ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். 'சின்னர்ஸ்' என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.  


இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை.‌ எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.

நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்," என்றார். 


இயக்குநர் பொன்ராம் பேசுகையில், ''இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும். 


நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, 'நீண்ட இரவு ' என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.‌ அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்," என்றார்.


இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், ''நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.


ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது அதை உடைக்கக்கூடிய முதல் படமாக 'நீளிரா' இருக்கும்.


இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌ ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி," என்றார்.


எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.‌


எழுத்தாளர் பிரபஞ்சன் ''இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது'' என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.


இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான்.‌


நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,'' என்றார்.


இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' எனக்கு மிகவும் பிடிக்கும், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.


ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.


இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்," என்றார். 


இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், ''கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.


ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும் . படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.


சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது," என்றார்.


இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ''இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம்.


இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.


நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.


பொதுவாக திருமணம் என்பது நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அதே திருமணம் 80, 90களில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை கண் முன் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது. சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டும் இணைந்து கதை சொன்னது போல் இருந்தது.


நான், லிங்குசாமி ஆகியோரெல்லாம் மணிரத்னத்தின் வசனங்களுக்கு பெரிய ரசிகர்கள். ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் ஒன்றை பேசுகிறது என்றால் அதற்கு எதிர் கதாபாத்திரம் என்ன பதிலளிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. அதுபோன்ற உரையாடல்கள் இந்த படம் முழுவதும் இருந்தது.


இந்தத் திரைப்படத்தை ஓடிடி-யில் பார்த்து விடலாம் என்று காத்திருக்காதீர்கள். அவசியமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். முக்கியமாக குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்களுக்கு கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் போர் சூழல் பற்றி தெரியவரும்.‌ இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். திரில்லர் படமாகவும் இருக்கும்,'' என்றார்.


நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ''இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.


அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.


நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,'' என்றார்.


இயக்குநர் சோமிதரன் பேசுகையில், ''நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, 'நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.‌


படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.


தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில்  சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர்  கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி," என்றார்.


இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், ''இயக்குநர் லிங்குசாமியும் நானும் கார்த்திக் சுப்புராஜ் அழைப்பின் பேரில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்று அங்கு திரையிடப்பட்ட நீளிரா படத்தை பார்த்தோம். படத்தைப் பார்க்கும் முன் படத்தைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. இப்படத்தை பார்த்த பிறகு கார்த்திக்கிடம் இந்த படத்தின் இயக்குநர் யார், நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இயக்குநர் சோமிதரனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.


அப்போது கார்த்திக்கிடம் தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தை உடனடியாக வெளியிடாமல் சரியான முறையில் அனைவருக்கும் தெரிய செய்து மக்களை சென்றடையும் வகையில் படத்தை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்


இதை சரியாக புரிந்து கொண்டு காத்திருந்து தற்போதைய நல்ல தருணத்தில் இப்படம் வெளியாகிறது. வாழ்த்துகள். தற்போது சிறிய பட்ஜெட்டிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சின்ன படங்களின் பொற்காலமாக இந்தக் காலத்தை குறிப்பிடுவேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழு சின்ன பட்ஜெட்டிலான படங்கள் வெற்றி பெற்று  இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.


இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.‌


ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன். 

இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.


தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,'' என்றார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ''இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன் அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.


கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள்  இடம்பெறுகின்றன.  அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.


நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில், ''சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌


இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம். மலையாளம்,  மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.


சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.


நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.


இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும்,  வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.‌


இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்," என்றார்.


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ''மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி.


இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன்.‌ நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.


இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. 


ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.


படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்," என்றார்.


***

துரந்தர் பழிவாங்கல்: 11 நாட்களிலேயே முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து சாதனை!

 *துரந்தர் பழிவாங்கல்: 11 நாட்களிலேயே முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து சாதனை!*



இரண்டாவது வாரயிறுதியிலும் வசூல் வேட்டையை தொடரும் துரந்தர் பழிவாங்கல் படம், உலகளவில் ரூ. 1365 கோடியை வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.


ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. எவராலும் அசைக்க முடியாத மாபெரும் ஹிந்தி படமாக உருவெடுத்துள்ள இப்படம், உலகளவில் ரூ. 1365 கோடியும், இந்தியாவில் ரூ. 867 கோடியும் வசூலித்து அசத்தியுள்ளது. வெறும் 11 நாட்களிலேயே துரந்தர் முதல் பாகத்தின் மொத்த வாழ்நாள் வசூலையும் முறியடித்து, உலகளாவிய மார்க்கெட்டில் தனது அசாதாரண ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. 


படம் வெளியான முதல் நாள் மற்றும் சிறப்பு திரையிடல்களில் இருந்தே, இந்த ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது. அதிக வசூல் செய்த சிறப்பு திரையிடல்கள், உலகளவில் மிக பெரிய ஓப்பனிங் வீக்கெண்ட், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம், உலகளவில் மிக விரைவாக ரூ. 1000 கோடியை எட்டிய படம் என இதுவரை இல்லாத அளவிற்கு பல புதிய உலகளாவிய பெஞ்ச்மார்க்குகளை உருவாக்கியுள்ளது. வெளியான ஒரே வாரத்தில், எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய இந்திய திரைப்படமாக உருவெடுத்து, இந்திய சினிமாவின் உலகளாவிய வெற்றியின் அளவுகோலையே மாற்றியமைத்துள்ளது.


முதல் வாரத்தில் சாதனைகளை தவிடுபொடியாக்கிய இப்படம், தனது பிரம்மாண்டமான ஓட்டத்தை இரண்டாவது வாரயிறுதியிலும் தொடர்கிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிடத்தக்க வசூலை பதிவு செய்துள்ள இப்படம், திரையரங்குகளில் இதன் ஆதிக்கம் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்பதையே காட்டுகிறது.


*நாள்வாரியான வசூல் நிலவரம் (இந்தியா)*


*முதல் வார தொகுப்பு (8 நாட்கள்): ரூ. 690 கோடி*


*இரண்டாவது வாரயிறுதி:*

 நாள் 9 - வெள்ளிக்கிழமை - ரூ. 42.00 கோடி

 நாள் 10 - சனிக்கிழமை - ரூ. 64.00 கோடி

 நாள் 11 - ஞாயிற்றுக்கிழமை - ரூ. 71.00 கோடி


*இரண்டாவது வாரயிறுதி மொத்த வசூல்: ரூ. 177.00 கோடி*


 இந்தியாவின் நெட் வசூல் (NBOC): ரூ. 867.00 கோடி

 இந்தியாவின் மொத்த வசூல் (GBOC): ரூ. 1023.00 கோடி


*வெளிநாட்டு வசூல்*


 முதல் வாரம் + இரண்டாவது வாரயிறுதி: ரூ. 342 கோடி


*உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்: ரூ. 1365.00 கோடிகள்*


*துரந்தர் பழிவாங்கல் — படைத்த சாதனைகள்:*


-எல்லா காலத்திலும் மிகப்பெரிய ஹிந்தி ஓப்பனிங் திரைப்படம்.அதிக வசூல் செய்த சிறப்பு திரையிடல்கள்.

-உலகளவில் மிகப்பெரிய முதல் வாரயிறுதி வசூல்.

-அதிகபட்ச முதல் வார வசூல்.

-உலகளவில் மிக விரைவாக ரூ. 1000 கோடியை எட்டிய திரைப்படம்.

-வெளிநாட்டு மார்க்கெட்டில் அதிக வசூல் செய்த மிகப்பெரிய இந்தியத் திரைப்படம் (முதல் வாரத்திற்குள்).

-வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம்.

-வெறும் 10 நாட்களில் துரந்தர் பார்ட் 1 படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்தது.


ரசிகர்களின் அமோக வரவேற்பு, ரிப்பீட் ஆடியன்ஸ் மற்றும் அனைத்து பகுதிகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் என, பாக்ஸ் ஆபிஸில் துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் மற்றொரு வரலாற்று சாதனைக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

The vibrant political comedy commercial film “ TN 2026 “ is all set to release worldwide in theatres on April 10!

 *The vibrant political comedy commercial film “ TN 2026 “ is all set to release worldwide in theatres on April 10!*



Produced by Kannan Ravi and Deepak Ravi under the banner of KRG Kannan Ravi Group, and directed by Umabathi Ramaiah, the film stars Natti Natraj in the lead role. “TN 2026” is designed as a lively political satire blended with a commercial entertainment format.


The film delivers a mix of political humor and socially relevant themes, making it an engaging entertainer for all sections of the audience.


The newly released poster presents Natti at the center, standing on a stage with his hand raised, while key characters around him chant slogans. A massive crowd surrounds them, holding flags and satirical banners, creating a striking and energetic visual. The poster has already received a strong response from fans across the internet.


The story is written by Thambi Ramaiah, while the screenplay and direction are handled by Umabathi Ramaiah. The film is produced on a notable scale by Kannan Ravi and Deepak Ravi, who continue to deliver quality projects in Tamil cinema.


Alongside Natti Natraj, the film features Siruttha Rao, Santhini Tamilarasan, and Yashika Aannand as the female leads. Veteran actors including M. S. Bhaskar, Ilavarasu, and Thambi Ramaiah appear together for the first time.


The supporting cast includes Redin Kingsley, Lollu Sabha Maaran, Bigg Boss Muthukumar, Adithya Kathir, Chitra Lakshmanan, Thalaivasal Vijay, Vaiyapuri, Vadivukkarasi, Viji Chandrasekhar, Sreeja Ravi, and Indraja Robo Shankar. Sandy appears in a cameo role.


With all production work completed, the film is gearing up for a grand theatrical release worldwide on April 10.


Technical Crew:

Screenplay & Direction – Umabathi Ramaiah

Story – Thambi Ramaiah

Music – Dharbuka Siva

Cinematography – P. G. Muthiah

Editing – Arul R. Thangam

Art – NK Rahul

Stunts – Mahesh Mathew

Head of operations - Srinath viswanathan

Choreography – Sandy, Praveen

Producers – Kannan Ravi, Deepak Ravi

PRO – AIM Sathish

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10

 *கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!*



KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.


நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.


இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு:


திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா

கதை – தம்பி ராமையா

இசை – தர்புகா சிவா

ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா

எடிட்டிங் – அரள் R. தங்கம்

கலை – NK ராகுல்

ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ

நடனம் – சாண்டி, பிரவீன்

தயாரிப்பு மேற்பார்வை - ஶ்ரீநாத் விஸ்வநாதன் 

தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி

மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

ராவடி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

 *'ராவடி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது*





செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.


சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.


நடிகர்கள் பஸில் ஜோசப் - L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.


காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.


தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.

Saturday, 28 March 2026

Satan The Dark Movie Review

 Satan The Dark Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம satan the dark படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல ஃபிரெட்ரிக் ஜான் அய்ரா, சாந்தினி தமிழரசன்  தான் lead pair அ நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தை இயக்கி இருக்கிறது மணிகண்டன் ராமலிங்கம். இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதி இருக்காரு.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.  
மாந்தீரிகம், சாத்தான் அ வழிபடுறதை மையமா வச்சு எடுக்க பட்ட திரைக்கதை தான் இது. இந்த படத்தோட கதை east indian company இருந்த காலத்துல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க.


அஸ்தினாபுரம் ன்ற ஊர்ல தான் கதை நடக்குது. இந்த கிராமத்துல தான் மாந்தீரிக கலை யை பண்ணுறாங்க. ஒரு மாந்தீராக சடங்கு பண்ணும் போது தவறு ஏற்படுது, அதுனால  இருண்ட சாபம் ஒன்னு உருவாகுது.  இந்த சாபம் தலைமுறை தலைமுறையா ஒரு குடும்பத்தை தீவிரமா பாதிக்குது. இந்த சாபத்தோட கொடுமையை அனுபவிச்சிட்டு இருப்பாங்க heroine chandhini tamilarasan . இவங்களோட boyfriend தான்  ஃபிரெட்ரிக் ஜான். தன்னோட காதலியை இந்த சாபத்துல இருந்து காப்பாத்த என்ன என்னலாம் hero செய்றாரு ? chandhini இந்த சாபத்துல இருந்து விடுதலை அடைஞ்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  

படத்துல lead role ல நடிச்சிருக்க்க ஃபிரெட்ரிக் ஜான் அப்புறம் chandhini tamilarasan அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு சிறப்பா perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது bala g ramasamy ஓட cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். thrilling ஆனா scenes க்கு லாம்  ரொம்ப அருமையா camera work பண்ணிருக்காரு. இந்த படத்தோட பெரிய plus point னா  அது கண்டிப்பா aswin krishna ஓட music யும் bgm மும் தான்.

 psychological வழியா இந்த பேய் கதையை கொண்டு வந்திருக்காரு director manikandan . படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் thrilling ஆவும் suspense ஓடையும் கதையை கொண்டு போயிருக்காரு.

இது ஒரு வித்யாசமான பேய் கதை. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாத்துட்டு வந்துருங்க.

Friday, 27 March 2026

Nee Forever Movie Review

Nee Forever Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம nee forever படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Sudharsan Govind , Archenaa Ravi , Prathu (Prathosh) , Noble james , Vidya , Y Gee Mahendran , Nizhalgal Ravi , MJ sriram , Rethika Srinivas   னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது Ashokkumar Kalaivani . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதி இருக்காரு.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.  



இந்த கதையோட hero sudharshan . இவரோட தாத்தா தான் y g mahendran . தாத்தாவோட கண்டிப்பான வளர்ப்புல வளந்திருக்காரு sudharshan . hero ஒரு app developer  அ work பண்ணிட்டு இருப்பாரு. இப்போ இவரு love related அ ஒரு app அ develop பண்ணிட்டு இருப்பாரு, ஆனா இது இவருக்கு work ஆகல அதுக்கு காரணம் இவருக்கு love அ பத்தி ஒண்ணுமே தெரியாது. இன்னொரு பக்கம் archana ravi அ அறிமுகம் பண்ணுறாங்க. இவங்களுக்கு  director ஆகணும் ன்றது தான் கனவு. அப்போ தான் இவங்களுக்கு ஒரு offer வருது. அந்த offer படி ஒரு love story கொண்டுவாங்க படம் பண்ணலாம் னு சொல்லிருப்பாங்க. இப்படி வேற வேற situation ல இருக்கற hero வும் heroine யும் எப்படி ஒண்ணா சேருறாங்க, இந்த காதல் அவங்களோட வேலைக்கு எப்படி உதவுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

sudharshan ஓட நடிப்பு நல்ல இருந்தது. archana ravi ஓட நடிப்பும் எதார்த்தமா இருந்தது. முக்கியமா இவங்களோட emotional scenes எல்லாம் நல்ல இருந்தது. படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க. படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematography ரொம்ப colourful அ இருந்தது.  ashwin hemanth ஓட music யும் bgm யும் இந்த கதைக்கு நல்ல set ஆயிருக்கு. 


love க்கு நடுவுல என்னிக்குமே ego இருக்க கூடாது ன்ற message ஓட இந்த கதையே முடிச்சிருக்காங்க. மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

Muthu Engira Kaattaan Web Series Review

Muthu Engira Kaattaan Web Series Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம muthu alias kaattan ன்ற web series ஓட  review அ தான் பாக்க போறோம். இதை இயக்கி இருக்கிறது m manikandan அப்புறம் b ajithkumar . இதுல விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா னு பல பேர் நடிச்சிருக்காங்க. இது தான் vijay sethupathi  க்கு  முதல் webseries . அது மட்டும் இல்ல இதோட producer யும் இவரு தான். இந்த series இன்னிக்கு jio hotstar ott ல release ஆகுது. இதுல மொத்தமா 10 episodes இருக்கு. 



இந்த series ஓட main hero muthu வா நடிச்சிருக்க vijay sethupathi தான். இவரோட life ல சந்தோஷமும் இருக்கும் துக்கமும் இருக்கும், இவரோட life ல நடக்கற interesting ஆனா விஷயங்கள் தான் இந்த web series ஓட கதையே. ஆரம்பத்துலயே kaalai pandiyan அ நடிச்சிருக்க vadivel murugan அ காமிக்கறாங்க. இவரு ஒரு police officer அ இருப்பாரு. என்னதான் இவரோட area ல crime rate கம்மியா இருந்தாலும் station ல வர cases அ பொறுப்பா பாத்துக்கணும் னு நினைக்கறாரு. அப்போ தான் இவங்களுக்கு ஒரு வினோதமான case ஒன்னு வருது. இந்த case muthu வை சம்பந்த பட்டதா இருக்கு. இந்த case அ kalai யும் அப்புறம் அவரோட team மும் investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. 

ஊர் ஓட தலைவரா இருக்காரு balaji  sakthivel , இவரு தான் muthu வை பத்தி ஒரு முக்கியமான clue வை குடுக்கறாரு. meena வை நடிச்சிருக்க risha jacobs கிட்ட தான் muthu தான்  வேலை பாத்துருக்காரு. meena ஒரு dance team அ வச்சி நடத்திட்டு இருப்பாங்க. அந்த team க்கு bouncer அ முத்து வேலை பாத்துருப்பாரு அதுமட்டும் இல்ல அவரு நெறய எடத்துல part time ல வேலை பாத்துருப்பாரு. அதுக்கு அப்புறம் ஒரு stylish ஆனா businessman அ அறிமுகம் பண்ணுறாங்க. அவரு தான் sivettan அ நடிச்சிருக்க miland soman . அப்புறம் இவரோட எதிரி தான் johny அ நடிச்சிருக்க sudev nair . இவங்க ரெண்டு பேரும் கேரளா ல தான் இருப்பாங்க. இவங்கள பாக்குறதுக்காக SI siddharthan அ நடிச்சிருக்க muthukumar யும்  thangamudi யா நடிச்சிருக்க singam puli யும் kochi க்கு போறாங்க. அதே சமயம் kalai கிடைச்ச clues அ வச்சு tamilnadu ல சுத்திட்டு இருப்பாரு. 

இந்த series ஓட கதையை எழுதி இருக்கிறது M. Manikandan , B. Ajithkumar, அப்புறம்  La Rajkumar. இந்த series அ பாக்கும்போது கிட்டத்தட்ட மலையாள படங்கள் மாதிரி தான்  இருந்தது. ஒரு சின்ன situation ல இருந்து ஆரம்பிச்சு கடைசில complex ஆனா story ல போய் முடியும். இதுக்கு நடுவுல நெறய twist and turns அப்புறம் side  tracks லாம்  வச்சுருக்காங்க. அது எல்லாமே காமிச்சதுக்கு அப்புறம் தான் main story ஓட connect ஆகும். அந்த மாதிரி தான் இந்த series யும் கதைக்களத்தை அழகா build பண்ணி மக்களுக்கு பிடிக்கிற மாதிரி interesting அ எடுத்து வச்சிருக்காங்க. இருக்கற 10 episodes ல இந்த case ல இருக்கற mystery அ solve பண்ணுறதா இருந்தாலும், ஓவுவுறு character க்கும் இருக்கற சின்ன சின்ன details யும் காமிச்சிருப்பாங்க. இது ரொம்ப serious ஆனா story கிடையாது. அதுக்கு பதிலா natural அ கிராமத்துல நடக்கற மாதிரி ஒரு positive ஆனா கதையை கொண்டு வந்திருக்காங்க. 

muthu கிராமத்துல இருக்கற எல்லா scenes யும் பாக்க genuine அ இருக்கும். என்னதான் crime series ல police characters அ ரொம்ப smart அ காமிச்சிருந்தாலும் இந்த series ல அப்படி இருக்கமாட்டாங்க. இவங்களும் muthu இருக்கற அதே கிராமத்தை சேந்தவங்க தான் அதுனால இவங்களோட investigation style கொஞ்சம் மெதுவா போனாலும் clues அ பக்கவா கண்டுபிடிச்சிடுவாங்க. இதெல்லாம் பாக்க நல்ல  இருந்தது. இதுல siddharthan character அ தான் புத்திசாலியா காமிக்கறாங்க. muthu க்கு பின்னாடி ஒளிஞ்சு இருக்கற மர்மம் சாதரணமானது கிடையாது சீக்கிரமாவே புரிஞ்சுப்பாரு.  இவரு நடுவுல english பேசறதை இருக்கட்டும், bodylanguage னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. 

kerala ல நடக்கற ஒரு சில விஷயங்கள் மட்டும் கதையை தாண்டி போற மாதிரி இருந்தது இதெல்லாம் சரியா connect பண்ணிருந்தா இன்னுமே நல்ல இருந்திருக்கும். இந்த case ல இருக்கற அந்த மர்ம முடிச்சை மெதுவா களையும் போது தான் muthu ன்ற ஆளு எப்படி பட்டவன் னு நமக்கு புரிய வரும். series ஓட ஆரம்பத்துல இருந்து ending வரைக்கும் muthu வை mystery அ வச்சுருந்தது super ஆவும் entertaining ஆவும் இருந்தது. இந்த series ரொம்ப slow வா போனாலும், ஒரு ஒரு episode ளையும் ஒரு twist வச்சிருக்காங்க. இதுக்கு நடுவுல kalai ஓட வீட்ல நடக்கற விஷயங்களையும் side track அ கொண்டு வந்திருக்காங்க. இது கதைக்கு சம்பந்தம் இல்லனாலும் kalai character அ பத்தி detailed புரிஞ்சுக்க இந்த portions எல்லாம் helpful அ இருக்கும்.  muthukumar police அ நல்ல perform பண்ணிருக்காரு. இவரு வெளில பாக்கும்போது ரொம்ப அமைதியானவரா தெரிஞ்சாலும் தன்னோட புத்திசாலித்தனத்தை வச்சு case அ handle பண்ணுற விதம் எல்லாமே நல்ல இருந்தது. 

இந்த series ஓட highlight ஆனா performance னா அது vijay sethupathi தான். இவரோட body language , எதார்த்தமான நடிப்பு, வெகுளித்தனமான பேச்சு னு audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். 


ஒரு பக்கம் crime , இன்னொரு பக்கம் மனுஷங்களோட எண்ணம் எப்படி இருக்கும் ன்றதா இந்த series ல நல்ல explore பண்ணிருக்காங்க. சோ miss பண்ணாம இந்த series அ பாருங்க.

Thursday, 26 March 2026

சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*









பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.


ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.


ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் 'குறையொன்றுமில்லை' என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.


இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், "இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்


கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், "இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. 'கார் மேனி செல்வம்' ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.


நடிகர் கோதண்டம் பேசுகையில், "இந்தப் படத்தை 'ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்' என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி - யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.


ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.


குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். 'கார் மேனி செல்வம்' படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்," என்றார்.


நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், "இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்," என்றார்.


நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், "அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.‌


இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.‌ அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்," என்றார்.


எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், "எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌


இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.


இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.


தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.


இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார்.  இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌


இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், "இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.

அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌


இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் 'ஸ்கூல் பஸ்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் 'குறையொன்றுமில்லை' படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌


என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌


புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌


இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.


நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.


இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌


இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் -பாடலாசிரியர் - பாடகர்கள் - ஆகியோர்கள் மட்டுமே.  ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.


இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.


இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்.‌


நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.


இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்' என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.


மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த 'கார்மேனி செல்வம்' படைப்பு.


இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.  அதைப் பார்த்த இயக்குநர் 'தேவலோகத்தில் இருக்கிறோமோ..!' என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.


பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம்.


'கார் மேனி செல்வம்' சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.


நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்," என்றார்.


***