Featured post

குழந்தைகளை கவரும் விதமாக யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை

 *குழந்தைகளை கவரும் விதமாக யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’* *விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அழகர் யானை’* *நல்ல நேரம்...

Monday, 9 January 2023

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்...தமிழ்நாட்டில் இருந்து

 *பெருங்காமநல்லூரின் கலகக் குரல்...தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல்*

*ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு* 

ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து ஓர்உலகக் குரல் என்று

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து பேசியிருக்கிறார்.

கபிலன்வைரமுத்து எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ஆகோள் என்ற நாவலின்அறிமுக விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதாவது:  

1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசைஎதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கையாக்கிஇருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கலவரத்தைமட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவணமாக முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சொல்லும் செய்தி என்ன என்ற அளவில் இதைஎழுதியிருப்பதால் இது ஆவணம் என்ற நிலையைத் தாண்டி ஒரு புதிய ஆரம்பமாக இருக்கிறது. இதுஇளைஞர்களுக்கான இலக்கியம். நம் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வளரும் துறையைஅறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் டேட்டா என்ற பெருந்தரவு தொழில்நுட்பம் குறித்துவிரிவாக எழுதியிருக்கிறேன். கை ரேகை சட்டம் ஒழிந்தும் கை ரேகை அரசியல் ஒழியவில்லைஎன்பதை இந்த நாவல் வழி சொல்லியிருக்கிறேன். ஆகோள் வெறும் புத்தகமல்ல. இது புத்தகவடிவில் ஓர் விழிப்புணர்வு இயக்கம். 

விழாவில் சொல்வேந்தர் கம்பம் பெ. செல்வேந்திரன் நூலைப் பற்றிய அறிமுக உரையைநிகழ்த்தினார். மருத்துவர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாகஇருநூறு மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பெற்று அவர்களுக்கு ஆகோள் புத்தகம்வழங்கப்பட்டது. தேனி மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையின் இளைஞர் அணியைச் சேர்ந்த குணா, இராஜபாண்டியன், பிரபு தங்கம்,  வீரபாண்டியன், பால அரவிந்த், கார்த்தி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment