Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Sunday, 30 March 2025

Teaser of second single Biriyani from 'Accused' starring Udhaya, Ajmal and Yogi Babu

 Teaser of second single Biriyani from 'Accused' starring Udhaya, Ajmal and Yogi Babu to be unveiled on Ramzan*



*Venkat Prabhu and Premgi have sung the energetic Biriyani song composed by Naren Balakumar*


*Dubbing and other post-production works of ‘Accused’ going on in full swing*



Made under the banners of Jaeshan Studios in association with Sachin Cinemas, Sri Dayakaran Cine Productions, and MIY Studios, 'Accused' is a film produced on a grand budget by A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel. 


Directed by Prabhu Srinivas, a renowned director in the Kannada film industry known for his successful films, the film will see Udhaya acting with Ajmal and Yogi Babu for the first time. The movie features popular Kannada actress Jahnvika as the female lead.


The shooting of ‘Accused’, which was done on a huge budget, was completed in a single schedule of 54 days. Dubbing and other post-production works are going on in full swing.


While the teaser of the first single, Shokka Nikkiriye, sung by G.V. Prakash Kumar and composed by Naren Balakumar for the film, was released recently and received a great response, teaser of the second single Biriyani will be released tomorrow at 10 am on the occasion of Ramzan. Biriyani song has been sung by director Venkat Prabhu and actor Premgi.


The lyrics of this energetic song have been penned by Hide and sung by Venkat Prabhu and Premgi along with Hide. Biriyani song features Udhaya, Ajmal and Yogi Babu on screen. The full album of the film, including these two songs, will be released by a leading audio label soon.


Popular actors play key roles in 'Accused'. Three thrilling fight scenes under the direction of famous action director Stunt Silva will keep the audience on the edge of their seats. Cinematography of the film was handled by Maruthanayagam I. The film’s editing is done by renowned editor K.L. Praveen. The art direction is by Anand Mani, and public relations are managed by Nikil Murukan.


The film crew said post-production work will be completed soon and 'Accused' will be released in theaters during the summer holidays.




***

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு*



*நரேன் பாலகுமார் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உற்சாகமிக்க பிரியாணி பாடலை பாடியுள்ளனர்*


*'அக்யூஸ்ட்’ டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன*



ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. 


பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து  நடிக்கின்றனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். 


படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று, டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


இப்படத்திற்காக நரேன் பாலகுமார் இசையில் ஜி வி பிரகாஷ் குமார் பாடிய ஷோக்கா நிக்கிறியே முதல் சிங்கிளின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப் படுகிறது. பிரியாணி பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி பாடியுள்ளனர். 


உற்சாகமிக்க இப்பாடலின் வரிகளை ஹைட் எழுதி இருப்பதோடு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி உடன் இணைந்து பாடியுள்ளார். பிரியாணி பாடலில் உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து திரையில் தோன்றுகின்றனர். விரைவில் இந்த இரண்டு பாடல்கள் உள்ளிட்ட படத்தின் முழு ஆல்பம் முன்னணி ஆடியோ நிறுவனத்தால் வெளியிடப்படும். 


முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் 'அக்யூஸ்ட்' படத்தில் நடித்துள்ளனர். பிரபல ஆக்ஷன் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கைவண்ணத்தில் மூன்று பரபரப்பு சண்டைக் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும். மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன். 


போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைந்து நிறைவுற்று கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் ‘அக்யூஸ்ட்’ வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.


***



Makkal Selvan Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’

 *Makkal Selvan Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project Announced, Shoot Begins In June*



The film in the deadly combination of Dashing Director Puri Jagannadh and Makkal Selvan Vijay Sethupathi promises to be unlike anything you’ve ever seen before. With Puri’s signature flair for unique hero’s characterization, gripping storytelling and the powerhouse actor Vijay Sethupathi’s impeccable screen presence, this is going to be an EPIC Pan-India extravaganza. This most ambitious movie will be mounted lavishly by Puri Jagannadh and Charmme Kaur under the banner of Puri Connects. The official announcement has been made today, on the occasion of Telugu New Year – Ugadi.


What makes this project even more thrilling is that Puri Jagannadh penned a distinctive script and will be presenting Makkal Selvan Vijay Sethupathi in a first-of-its-kind role. This film indeed is set to unleash a side of Vijay Sethupathi that no one has seen before.


The announcement poster captures the sheer joy, excitement, and passion of the trio- Vijay Sethupathi, Puri Jagannadh and Charmme Kaur, as they come together to make this dream project a reality.


The film’s regular shoot begins in June, and it’s going to be a multi-language release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages.


Cast: Vijay Sethupathi


Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும்

 *இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!*



பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம்

ஜூனில்  படப்பிடிப்பு தொடக்கம்!!


பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும்,  புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது.  கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில்,  விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார்.  இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திருவிழாவாக இருக்கும்.


இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவத்தின் கீழ், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். இந்த அற்புதமான படம் இன்று உகாதி தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக இயக்குநர்  பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்  எனக் கூறப்படுகிறது.


இந்த மாபெரும் கனவு திரைப்படத்தை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் புன்னகையுடன் இணைந்திருக்கும் அழகான  போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.


நடிகர்கள் :

விஜய் சேதுபதி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

CEO : விசு ரெட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர

 தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்'






யானையை மையமாக வைத்து உருவாகும் 

'இத்திக்கர கொம்பன்'

 குழந்தைகளைக் கவர  வருகிறது.!


 திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை  மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்.


அந்த வகையில்'இத்திக்கர கொம்பன்' என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.


இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா  வடகரா தயாரித்துள்ளனர்


 மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு , சுமேஷ், ஸ்ரீஜா போன்ற நடிப்புக் கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.


இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.அவர் தூத்துக்குடி செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டும் தோற்றத்தில் வருகிறார். அசர வைக்கும் நடிப்பிலும் மிரள வைக்கும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார்.


 படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு. இவர் பிரபல இயக்குநர் கிருஷ்ணசுவாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


 இப்படத்திற்கு பினீஷ் பாலகிருஷ்ணன் - சீனு வயநாடு ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள்.

வீ.கே . பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை தோன்றும் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துள்ளார்.

சாபு இரன்மல கலை இயக்கத்தையும், ஜான்சன் தாமஸ் படத்தொகுப்பையும்  கவனித்துள்ளனர்.சண்டைக் காட்சிகளை ஆக்சன் அஷ்ரப் குருக்கள் அமைத்துள்ளார்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பிற்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விறுவிறுப்பான கதையுடன், குழந்தைகளைக் கவரும்படியான, குடும்பத்தினருடன் பார்க்கும்படியான ஒரு திரைப்படமாக இந்த

'இத்திக்கர கொம்பன்' படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி - அவர் நடிக்கும் ' ஆர் பி எம் - R P M

 *நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி - அவர் நடிக்கும் ' ஆர் பி எம் - R P M' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*






*ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு*


*டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான 'ஆர் பி எம் (RPM) ' படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்* 


நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. 


இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி  இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது


எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர்களுடன் கிரியா டெக்  நிறுவனர்-  தொழிலதிபர் பாஸ்கரன், 'எம் ஆர் டி மியூசிக்' முருகன், 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்' சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர்,  தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், '' இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்..  எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி  தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார். அந்த சந்திப்பின்போது, 'நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?' என கேட்டார். அந்தப் பாடலைக் கேளுங்கள். தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னேன். 'தண்ணீர் தண்ணீர் ' எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய 'கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே..' என்ற பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலாததற்கு மன்னிக்கவும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயிற்சி பெற்று அந்த பாடலை நேரில் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன். 


'சிங்கார வேலனே' என்ற பாடலை பாட இயலுமா! என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன்.  


அவர் மிகுந்த திறமைசாலி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்... நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர். 

அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும். 


மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. 


அதன் பிறகு அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன்.‌ அந்தப் பாடலை இங்கு நான் பாட விரும்புகிறேன். இந்த பாடலுக்கான வரிகள் நம்மிடமிருந்து மறைந்த அந்த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும்.


மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.


இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 


அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலுத்தினேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை.  நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் 'ஆக்சன்' என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது வியந்து போனேன். 


இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வர் கார்த்திக் - நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. 


ஆர் பி எம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இயக்குநர் பிரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினரும் பரிபூரணமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.  இந்தத் திரைப்படத்திற்கு அனைவருடைய ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.


டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், '' டேனியல் பாலாஜி சின்ன குழந்தையாக இருக்கும்போதே ரொம்ப பக்தி. மூன்று வயதில் இருந்தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான்.

காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். 


அவன் நடிச்ச படம். இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.  


கௌதம் மேனன், பாலாஜி இவர்களெல்லாம் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் அவனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. பிறகுதான் வந்தது.  முதலில் அவர்கள் அப்பா வேண்டாம் என்று தான் சொன்னார். பிறகு 'வேட்டையாடு விளையாடு ' படத்தை பார்த்துவிட்டு அவர் சந்தோஷம் அடைந்தார்.  எப்போதும் அவன் ...அவன் இஷ்டப்படி தான் இருப்பான். 


கடைசி அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, 'நான் இருக்க மாட்டேனே!!' என்று சொன்னான்.  நான் இன்னும் இருக்கும்போது... அவன் இல்லையே!! என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது '' என்றார்.



கல்வியாளர் - ஆராய்ச்சியாளர் - தொழிலதிபர் பாஸ்கரன் பேசுகையில், '' கல்லூரியில் படிக்கும் போது வாரம் இரண்டு திரைப்படங்களை பார்ப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் திரைப்படங்களை பார்ப்பேன். தொழில் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது தான் சினிமாவின் வீரியம் எனக்கு புரிந்தது. 


மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் சினிமா தான். ஏனென்றால் அங்கு பள்ளி படிப்பில் தமிழ் கிடையாது. 


அமெரிக்காவில் கூட கடந்த 20 ஆண்டுகளாக தான் நம்மவர்கள் தமிழில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் தமிழர்கள் இன்று தமிழ் பேசுகிறார்கள் என்றால் அது திரைப்படங்களை பார்த்து தான். புத்தகத்தை வாசித்து தமிழ் தெரிந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்காவின் என்னுடைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் தமிழ் பேசுவார்கள். 

நான் இது இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்.. தமிழ் திரைப்படத்தில் ஒரு பக்கம் கான்ட்ரவர்ஸியல் பேசினாலும்.. மற்றொரு பக்கம் சமூகத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 


இந்தோனேசியாவில் ஒரு ஆலயத்தில் ஒரு சின்ன பெண் முருகனின் பாடலை அற்புதமாக பாடினார். அந்தப் பெண் அந்த நாட்டை சேர்ந்த ஐந்தாம் தலைமுறை பெண். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியவில்லை. ஆனால் தமிழில் அற்புதமாக பாடுகிறார். அந்தப் பாட்டின் பொருள் தெரியவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தப் பாடலை அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். 


மொழி மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சினிமாவை பார்க்க வேண்டும். புத்தகத்தை வாசிக்குமாறு கேட்டால் மறுத்து விடுவார்கள்.


அதில் தருணத்தில் சினிமாக்காரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். உங்களுடைய படத்தின் வன்முறையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.


தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாராகும் திரைப்படங்களை பார்த்து தான் மொழியை பேசுகிறார்கள். 


இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைவரது ஆசீர்வாதமும், ஆதரவும் இந்தத் திரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.


இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், '' அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன். 

அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை. 


சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி. 


அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.

ZEE5 தளம் வழங்கும் "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸின் முன் திரையிடல்

 *ZEE5 தளம் வழங்கும்  "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு   !!* 










இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி  சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 


இந்நிகழ்வினில் 


ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசியதாவது...

கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த  ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக டைம் எடுத்தது. 2 மணி நேரத்தை ஒரு சீரிஸாக கொடுக்கும் முயற்சி தான் இது. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், ராஜேஷ் சூசைராஜ் ஐந்தாம் வேதம் முதலே தெரியும் மிகத் திறமைசாலி, இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த மாதிரி கதை நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார்.  அவருக்கு வாழ்த்துக்கள். ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் செய்துள்ளார், வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. வேற வேற ஜானர்களில்  ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது. உங்களுக்குப் பிடித்தமாதிரி படைப்புகள் தொடர்ந்து வரும். ஆதரவு தாருங்கள் நன்றி. 


தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது...

முன்னதாக மதில் எனும் ஓடிடி படைப்பைத் தயாரித்துள்ளோம், இப்போது செருப்புகள் ஜாக்கிரதை உருவாக ஆதரவாக இருந்த ZEE5  கௌசிக் நரசிம்மனுக்கு நன்றி. இந்தக் கதை சிறப்பாக வர வேண்டும் என்றால்  சிங்கம் புலி தான் வேண்டுமென நினைத்தோம், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சாருக்கு நன்றி. இந்த அருமையான கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி. இந்த கதையைத் திரையில் உயிர்ப்பித்த ஒளிப்பதிவாளர் கங்காதரனுக்கு நன்றி. இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் மிக அற்புதமாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


ஒளிப்பதிவாளர் கங்காதரன் பேசியதாவது...

இந்த வாய்ப்பைத் தந்த ராஜேஷுக்கு நன்றி, ராஜேஷ் மிக நெருங்கிய நண்பர், இதை ஒப்புக்கொண்ட கௌஷிக் சார், சிங்கார வேலன் சாருக்கு நன்றி.  சிங்கம்புலி அண்ணா முழு ஒத்துழைப்புத் தந்தார், அவருக்கு என் நன்றிகள். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவரும் இந்த சீரிஸ் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர்கள் எல் வி முத்து & கணேஷ் பேசியதாவது...

இந்த வெப் சீரிஸ் ZEE5 உடன் இரண்டாவது படைப்பு, அவர்களுக்கு எங்கள் நன்றி. இதில் வாய்ப்புத் தந்த சிங்காரவேலன் சாருக்கு நன்றி.  நண்பர் ராஜேஷ் அருமையான காமெடி டைரக்டர். சிங்கம்புலி அண்ணாவைத் திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும், அருமையாக நடித்துள்ளார். விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் எல்லோருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அவர்கள் நடிப்புக்கு இசையமைப்பது எளிதாக இருந்தது. ராஜேஷ் அருமையாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். இந்த சீரிஸ் வெளியாகியுள்ளது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


கதை வசனகர்த்தா எழுச்சூர் அரவிந்தன் பேசியதாவது...

நண்பர் கௌஷிக்கும் நானும் 22 வருட  நண்பர்கள். நல்ல காமெடி கதை வைத்திருக்கிறீர்களா எனத் திடீரென கேட்பார், அடுத்த விவாதத்தில், 2 வாரத்தில் துவங்கி விடும். கே எஸ் ரவிக்குமார் நடிப்பில், மதில்  ZEE5 க்காக எழுதினேன், உடனே கே எஸ் ரவிக்குமார் டீமில் எழுத்தாளாராக சேர்ந்து விட்டேன், அடுத்து இந்த சீரிஸில் நடித்த  விவேக் ராஜகோபால் நண்பர் படத்தில் இப்போது வேலை செய்கிறேன். இப்படி புதுப்புது வாய்ப்புகள் ZEE5 மூலம் கிடைத்துள்ளது. எப்போதும் எனக்கு உதவும் குணமுள்ளவர் தயாரிப்பாளர் சிங்காரவேலன், என்ன வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒரு போன் செய்தால் செய்து விடுவார். ராஜேஷ் மகா உழைப்பாளி, மிக அருமையாக உழைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இந்தக்கதையின் முக்கிய தூண் சிங்கம்புலி அண்ணன், அவர் நடிப்பைப் பார்த்தாலே சிரிப்பு வரும். இதில் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். எல்லா நடிகர்களும் மிக நன்றாக நடித்துள்ளனர்.  இந்த படைப்பில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ZEE5 ல் இன்னும் தொடர்ந்து நிறையக் கதைகள் செய்ய ஆசைப்படுகிறேன்,  நன்றி 


ஐரா அகர்வால் பேசியதாவது...

மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் நடித்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ZEE5  கௌசிக் நரசிம்மன்  சார், தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. வாய்ப்பு தந்த ராஜேஷ் சாருக்கு நன்றி. நான் நடித்ததில் எந்த படத்திலும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை, இந்த ஷூட்டிங் ஸ்பாட் வெகு கலகலப்பாக இருந்தது. டைரக்டர் ராஜேஷ் மிகமிக அமைதியானவர், அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிங்கம் புலி சார் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கங்காதரன் சார் எனக்கு  முழு ஆதரவு தந்தார். எல்லோரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள்.   உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் விவேக் ராஜகோபால்  பேசியதாவது...

முதலில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி, மதில் படைப்புக்கு முழு ஆதரவு தந்தீர்கள், அதனால் தான் இங்கு நான் நிற்கிறேன். செருப்புகள் ஜாக்கிரதை படைப்புக்கும் முழு ஆதரவு தாருங்கள். ZEE5 க்கு நன்றி. முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி சார் அவ்வளவு சேட்டை, லவ்லி ஹியூமன், எல்லோரையும்  சிரிக்க வைப்பார் என்ன கேட்டாலும் சொல்லித் தருவார். இயக்குநர் ராஜேஷ் என்னிடம் நிறையக் கதை சொல்லியுள்ளார், எனக்கு வாய்ப்பு வந்தால் உன்னைக் கூப்பிடுவேன் என்றார். மை டார்லிங்க் ராஜேஷ் சாருக்கு நன்றி. இதில் நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசியதாவது...

முதல் நன்றி  ZEE5  கௌசிக் நரசிம்மன்  சாருக்கு தான், அவர்  மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, ஐந்தாம் வேதம் மூலம் தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவரது சினிமா அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டியது, என்ன சந்தேகம் கேட்டாலும் எளிதாகத் தீர்த்து விடுவார். அவருக்கு என் நன்றி. அவர் தான் சிங்காரவேலன் சாரிடம் அனுப்பி வைத்தார், தயாரிப்பைத்  தாண்டி மிக நல்ல மனிதர். கௌசிக் சார், சிங்காரவேலன் இருவரால் தான் நான் இயக்குநர் இருவருக்கும் நன்றி. சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களை விட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங்க் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக்கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன், நன்றாக நடித்துள்ளார். நான் அசோஷியேட்டாக வேலை பார்த்த போது, கங்காதரனும் அசோஷியேட்,  நான் இயக்குநர் ஆனால் நீ தான் கேமராமேன் என்றேன் ஆக்கிவிட்டேன். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகர் சிங்கம்புலி பேசியதாவது...

ZEE5  நிறுவனத்திற்கு முதல்  நன்றி. தயாரிப்பாளார் சிங்காரவேலன் அவர்களுக்கு நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேச பேச காமெடியாக இருக்கும் அவரிடம் அத்தனை கதை இருக்கிறது. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார், கங்காதரன் நான் கருப்பன் செய்யும் போது, அவர் அஸிஸ்டெண்ட், இதில் அவர் ஒளிப்பதிவு எனும் பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன். விவேக் ராஜகோபால் மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். ஐரா மிக அழகானவர் மிகத்திறமைசாலி. இந்த சீரிஸில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5  எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி,  இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


இயக்குநர் எம் ராஜேஷ் பேசியதாவது...

புதிய இளமையான டீம், செருப்புகள் ஜாக்கிரதை டைட்டிலே மிக அழகாக இருக்கிறது. ZEE5  அடுத்தடுத்து நிறைய புராஜக்ட் செய்யப்போவதாக கௌஷிக் சொன்னார், அது நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பைத் தரும் அதற்காக அவருக்கு நன்றி.  சிங்காரவேலன் என் நெருங்கிய நண்பர், அவருக்கு வாழ்த்துக்கள். சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவர் வந்து பேசியபிறகு தான், நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது, இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது அருமை, அவர் திறமை பெரிது. அவருக்கு வாழ்த்துக்கள். விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீரிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. 


ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 


இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன்  விவேக் ராஜகோபால், இரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


28 மார்ச் முதல் ZEE5 ல், செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸை பார்த்து மகிழுங்கள்!!

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ்

 *தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு*






*நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்*


*முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு*



தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர்.


முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். 


காற்றில் விதைத்த கருத்து நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். 


கவிஞர் முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு K. பாக்யராஜ், தலைவர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தலைமை தாங்க RK செல்வமணி,  தலைவர், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்; T. சிவா, பொதுச்செயலாளர், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்; கருணாஸ், துணைத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாக்யராஜ் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார். 


தமிழ்த்தாய் வாழ்த்தை வைஜெயந்தி பாட, லியாகத் அலிகான், பொதுச்செயலாளர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், வரவேற்புரை வழங்கினார். நடிகைகள் பூர்ணிமாபாக்யராஜ், குட்டி பத்மினி, ரோகிணி, தேவயாணி ராஜகுமாரன், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். 


கவிஞர் முத்துலிங்கம் பற்றிய குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது. 


***

சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

 *’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*








ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. 


நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். 


நடிகர் சத்யா யாது, “நான் உத்ரபிரதசேத்தை சேர்ந்தவன். ‘சாரி’ படம்தான் எனக்கு அறிமுகப் படம். இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ‘சாரி’ திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் படத்தை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்” என்றார். 


தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா, “ராம் கோபால் வர்மா சாருடன் எனக்கு இது முதல் படம். நல்ல படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்”.


கேரள விநியோகஸ்தர் ஷானு, “உலகம் முழுவதும் இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இப்போது சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ்டுடியோஸ் வினோத் அவர்களை படம் பார்க்க அழைத்தேன். படம் பிடித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விநியோகிக்க கேட்டுக் கொண்டோம். 100 செண்ட்ருக்கும் மேலாக தமிழகத்தில் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொன்னார். படத்தை புரமோட் செய்யுங்கள்” என்றார். 


தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத், “இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ படம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டேன். விநியோகஸ்தராக இது என்னுடைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை” என்றார்.


இயக்குநர் ராம் கோபால் வர்மா, “ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில்  கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது” என்றார்.

Saturday, 29 March 2025

முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில்

 *முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!*






*முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி  வைத்தார் !!*


*DCutz By Dev" சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ்*


முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , "DCutz By Dev" எனும்  பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார்.  இந்த சலூனின்  திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும்  கலந்து கொண்டு வாழ்த்தினர்.


தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் "DCutz By Dev" மூலம்,  பரந்த அளவில் அனைத்து  மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார்.


DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் சிகை அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலை இன்னும் விரிவாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.  இந்த சலூன் இப்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

Actor Dhanush Inaugurates “DCutz By Dev” Salon in RA Puram, Chennai

 *Actor Dhanush Inaugurates “DCutz By Dev” Salon in RA Puram, Chennai*






Renowned actor Dhanush inaugurated “DCutz By Dev”, a premium salon by celebrity hairstylist Dev, in RA Puram, Chennai. The grand opening witnessed an enthusiastic gathering of well-wishers and professionals.


Dev, a well-known hairstylist in the South Indian film industry, has worked with some of the biggest superstars, crafting iconic looks for films and personal styling. With DCutz By Dev, he brings his expertise and artistry to a wider clientele, offering top-notch grooming services in a luxurious setting for everyone.


DCutz By Dev aims to redefine hairstyling and grooming with its state-of-the-art facilities, expert stylists, and a commitment to excellence. The salon is now open to the public, offering a wide range of services for men and women.

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம்

 *வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து*




வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. 


மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.



கௌதமன் இயக்கும்

புரட்சிப் படம்

படையாண்ட மாவீரா 


அனைத்துப் பாடல்களையும்

எழுதியிருக்கிறேன்


ஒவ்வொரு பாடலையும்

வந்து வாங்கிச் செல்வார்;

வாசித்து வழங்கச் சொல்வார்


இந்தப் பாடலை

வாசிக்கும் பொழுது

குளமான கண்களோடு

கும்பிட்டுக்கொண்டே எழுந்தார்


அவர் கைகளில்

பாட்டுத்தாளை ஒப்படைத்தேன்

நல்ல ரசிகனுக்கு

நல்ல பாடல் அமையும் 


இசை: ஜி.வி.பிரகாஷ்


பல்லவி:


"மாவீரா மாவீரா

வாவா வீரா மாவீரா!


நதியில் குளித்தது போதும்

இனிமேல்

குருதியில் குளித்து வா வா

பொடிநடை போட்டது போதும்

இனிமேல்

புலிநடை போட்டு வா வா


ஆதித் தமிழின்

அடையாளமே வா

ஆதிக்கம் அழிக்கும்

படையாழமே வா


ஆதவனை உன்

இடுப்பில் கட்டு

ஆயிரம் யானையைக்

கால்களில் கட்டு


காக்கும் கடவுள் அம்சம் நீதான்

வன்னிக் காட்டின் வம்சம் நீதான்


ஆயிரம் கோயில் ஆராதிக்கும்

அய்யனாருமே நீயேதான்


எரிமலை பொடிபட

எதிரிகள் அடிபட

கோழைகள் வழிவிட

ஏழைகள் வழிபட

எழுந்த மாவீரன் நீயேதான்


சரணம்:


உயிரைப் பிரிவது

மட்டுமா சாவு?

ஊரைப் பிரிவதும்

சாவுதானடா!

மண்ணகம் எல்லாம்

மண்ணகம் அல்ல

மானம் வீரம் வாழ்வுதானடா


தமிழன் யார்க்கும் சோறு கொடுப்பான்

மண்ணைத் தொட்டால்

திருப்பி அடிப்பான்


வீரத் தமிழன் மானத் தமிழன்

மூன்று இடத்தில் திருப்பி அடித்தான்


ஒருகாடு எங்கள் சந்தனக்காடு

மறுகாடு இந்த முந்திரிக்காடு

எல்லாவற்றிலும் மேலாய் இருப்பது எங்கள் எங்கள் வன்னிக்காடு


மாவீரா மாவீரா

வா வா வீரா மாவீரா!



படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் மிகவும் உக்கிரமான நான்கு சண்டைக் காட்சிகளை "ஸ்டண்ட்" சில்வா வடிவமைக்க  நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், "தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை '"கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன் கவனிக்கின்றனர். இப்படைப்பைப் பற்றி இயக்குநர் வ.கௌதமன் பேசும் பொழுது நேர்மையோடும் அறத்தோடும் படைக்கப்பட்ட "படையாண்ட மாவீரா" மொழி கடந்து, இனம் கடந்து மனித மனங்களை கொள்ளையடிப்பான், ஆன்மம் அதிர மெய் சிலிர்க்க வைப்பான். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இப்படைப்பு வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது" என மகிழ்ச்சி பொங்க நிறைவு செய்கிறார்.

ராசய்யா கண்ணன் தயாரிப்பில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக

 ராசய்யா கண்ணன் தயாரிப்பில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பைலா’!






’ராசய்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் ராசய்யா கண்ணன், ’கதையல்ல நிஜம்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தில் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தம்பியாக ராஜ்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர நடிகை மிச்சலா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என்.இளங்கோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


’சேஸிங்’ படத்தை இயக்கிய K.வீரக்குமார் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, ’அழகிய தீயே’, ‘மொழி’, ’36 வயதினிலே’, ‘கோட்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார்.


”அய்யோ சாமி..” ஆல்பம் பாடல் புகழ் இலங்கை இசையமைப்பாளர் சனுகா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை இலங்கை புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்வின் எழுதியிருக்கிறார். பாலுமகேந்திரா, ரத்தினவேல், ஆர்த்தர் ஏ.வில்சன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஏ.எஸ்.செந்தில்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் தென்னரசு கலை இயக்குநராக பணியாற்ற, திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார் நிர்வாக தயாரிப்பாளர் சுகிந்தன் சக்திவேல் கவனிக்க தயாரிப்பு மேற்பார்வை கோகுல்நாத் பணியாற்றுகிறார்.

நீல்கிரிஸ் முருகன் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நீலகிரி முருகன் மற்றும் கே.ஆர்.எம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.ஆர்.முருகானந்தம் இணை தயாரிப்பில் உருவாகும் ‘பைலா’ படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரம், உத்திரகோச மங்கை அம்மன் கோவில், வழி விடு முருகன் கோவில்களில் தொடங்கி, தற்போது இராமேஸ்வரம், இலங்கை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Friday, 28 March 2025

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி

 கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி"


ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி".


இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த இயக்குனர் வீர அன்பரசு, இரண்டாவது கதாநாயகன் ஆகாஷ் முத்துவுடன் சென்று, பின்னணி இசை அமைக்க கேட்டுக் கொண்டார். கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்க உடனே ஒப்புக் கொண்டார்!


நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் "கமாண்டோவின்  லவ் ஸ்டோரி" 


கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர். 


கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு.  ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.


@GovindarajPro

கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில்

 “கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா  திரையில் !!





















ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில், S.முருகன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம்  “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இந்நிகழ்வினில்....


*நடிகை சுதா பேசியதாவது...* 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. 


*நடிகை சாந்தி பேசியதாவது...* 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இயக்குநருக்கு நன்றி, என் முதல் படம் என்னை நம்பி சான்ஸ் தந்ததற்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி


*நடிகர் வைகுண்டம் பேசியதாவது பேசியதாவது...* 

இந்தப்படத்தில் வில்லன் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, படம் மிக நல்ல எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது. மக்களிடம் சேர்க்க வேண்டியது பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் பொறுப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


*ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த் பேசியதாவது...* 

மேடையில் இருக்கும் அனைவருக்கும் நன்றி, தயாரிப்பாளரை இப்போது தான் இரண்டாம் முறையாகப் பார்க்கிறேன். இயக்குநர் விக்னேஷ் என் நண்பர் அவர் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது, உங்களோடு தான் படம் செய்வேன் என்றார், அதே போல எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார், தயாரிப்பாளர் யாருக்கும் சம்பள பாக்கி வைக்கவில்லை, நான் பார்த்ததில் மிக நல்ல தயாரிப்பு நிறுவனம் இது. இன்னும் நீங்கள் பல படங்கள் தயாரிக்க வேண்டும், இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி. 


*நடிகர் அஷ்வின் பேசியதாவது...* 

மிக மிக மகிழ்ச்சி, மிக அருமையான டீம் இது, இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் ஷீட்டிங்க் என்பதே கஷ்டம், இந்தத் திரைப்படத்தை இந்த அளவு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷ் மிக நல்ல இயக்குநர். மிக அருமையாக இப்படத்தைத் தந்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியது மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி. 


*நடிகர் ஹர்ஷத் பேசியதாவது...*

நான் இங்கு இருக்க இயக்குநர் நெல்சன் அண்ணா தான் காரணம் அவருக்கு நன்றி.  இயக்குநர் விக்னேஷ் நான் ஒரு ஷீட்டில் இருந்த போது போன் செய்தார், அவர் அணுகிய  விதம், அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை வில்லனாக நடிக்க கேட்டார். அவருக்கு ரொம்ப நல்ல மனசு. எல்லோரும் அவர் மீதான அன்பில் பணியாற்றினார்கள். உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. மீடியா இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.


*பாடாலாசிரியர் அஸ்மின் பேசியதாவது....*

2012 ல் விஜய் ஆண்டனியால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப் பட்டேன்,  அவருக்கு என் நன்றி. இயக்குநர் விக்னேஷ் அவர்களை, இப்படத்தில் ஒரு பாடல் எழுதத்தான் சந்தித்தேன், அந்தப்பாடல் பிடித்துப் போய், எல்லாப்பாடல்களையும் எழுதும் வாய்ப்பைத் தந்தார். எல்லோருக்கும் இப்படப் பாடல்கள் பிடித்திருக்குமென நம்புகிறேன். அனைத்து மீடியா நண்பர்களும் இப்படத்திற்கு ஆதரவைத்தர வேண்டும் நன்றி. 


*நாயகன் நிஷாந்த் பேசியதாவது...* 

இந்த வருடம் மிகுந்த ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. எனது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. கொஞ்ச நாள் பொறு தலைவா மிக நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர் யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல், மிக பொறுப்புடன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் மிக அட்டகாசமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்திற்கு மீடியா நண்பர்கள் முழு ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி. 


*இசையமைப்பாளர் சமந்த் நாக் பேசியதாவது...* 

தயாரிப்பாளரை இன்று தான் முதல் முறையாகப் பார்க்கிறேன், மிக நல்ல தயாரிப்பாளர். விக்னேஷுக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும், ஆனால் எல்லாம் படத்துக்காகத் தான். மிக அருமையாகப் படத்தை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் அஸ்மின் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. என்னுடன் வேலை பார்த்த பிரவீனுக்கு நன்றி. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி. 



*இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது...* 

கொஞ்ச நாள் பொறு தலைவா இந்த விழா ஒரு குடும்ப விழாவைப் போல உள்ளது. எல்லோரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். எல்லோரும் தயாரிப்பாளரைப் பற்றி மிக மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். தயாரிப்பாளர் முருகன் அவர்களுக்கு நன்றி. உழைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் தந்த முதல்பட தயாரிப்பாளருக்காக, இப்படம் ஓட வேண்டும். இயக்குநர் விக்னேஷ் மிக அருமையாக இயக்கியுள்ளார். பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள். ஈழத்து கவிஞர் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், அவருக்குத் தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தைத் தரும். நடிகர் நிஷாந்த் அருமையாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


*டிரெய்லர் இசையமைப்பாளர்  ஷாஜகான் பேசியதாவது...*

இந்தப்படக்குழுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இந்த அனுபவம் மிகப் புதுமையாக இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி. 


*ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில் கலியமூர்த்தி பேசியதாவது...* 

ஆரூத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது, அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து உள்ளோம். எப்போதும் காமெடி படத்திற்குத் தனி வரவேற்பு உண்டு. மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள். நான் படம் பார்த்தேன் எனக்குப் படம் மிகவும் பிடித்தது. இப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


*நடன இயக்குநர் சபரீஷ்* 

இந்தப்படத்தில் இரண்டு பாடல்கள் வேலை செய்துள்ளேன், ஒரு பாடல் தான் வேலை செய்வதாக இருந்தது என் வேலையைப் பார்த்து எனக்கு இரண்டு பாடல் வாய்ப்பைத் தந்தார் இயக்குநர் விக்னேஷ். அவருக்கு என் நன்றி. இப்படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


*இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் பேசியதாவது...*

என்னை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் முருகன் சாருக்கு என் நன்றி. ஒரு நாள் கூட அவர் ஷீட்டிங்க் வந்ததே இல்லை, முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கை மீடியா நண்பர்கள் தான் எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தர  வேண்டும்.  ஒரு நல்ல படம் தந்துள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி. 


"வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.  நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன்  காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கிறார். எடிட்டிங் விது ஜீவா. 

இத்திரைப்படத்தை,, 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வெற்றி கொடி நாட்டிய, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஆரூத்ரன் லேண்ட் டெவலப்பர்ஸ்  நிறுவனத்தின், மற்றொரு அங்கமான, ஆரூத்ரன் பிக்சர்ஸ் சார்பில் S.முருகன் தயாரித்து, வழங்குகிறார்.