Featured post

கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!

 கிச்சா சுதீப்  நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!  கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் M...

Thursday, 13 November 2025

கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!

 கிச்சா சுதீப்  நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு! 






கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர்.


ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது. 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது  வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.

Kichcha Sudeep’s MARK Wraps Up Shoot in Grand Style!

 Kichcha Sudeep’s MARK Wraps Up Shoot in Grand Style!






The much-anticipated film MARK, starring Kichcha Sudeep, has successfully completed its shoot. The final schedule featured a grand song sequence filmed on a massive 200-foot-long ship set, bringing together over 100 artists and 300 junior artists for a spectacular visual treat.


The production team has gone all out to create a film that exceeds fan expectations in both scale and grandeur. The film also features leading actors Naveen Chandra, Yogi Babu, Guru Somasundaram,  and Vikrant in key roles, with music composed by Ajaneesh Loknath.


With the shoot now complete, MARK sails into post-production, gearing up for release.

Kinaru’ (The Well): A children’s film directed by Harikumaran, produced by Madras Stories

 *‘Kinaru’ (The Well): A children’s film directed by Harikumaran, produced by Madras Stories*







*‘Kinaru’, winner of six international awards, to release on November 14 in celebration of Children’s Day*


*Film personalities join 30 ashram children at celebrity premier show*


Madras Stories, a production company focused on introducing talented filmmakers and technicians, and acclaimed for films such as 'Burkha' and 'Lineman', is proud to present its latest production — Kinaru’ (The Well), a children’s film directed by Harikumaran and bankrolled by Suriya Narayanan and Vinod Sekar.


The film, which has already won six international awards, is set for a theatrical release on November 14 to mark Children’s Day. At the celebrity premiere screening held in Chennai, 30 ashram children were joined by film personalities who enjoyed watching the movie and expressed their congratulations.


'Kinaru' has received honors for Best Film, Cinematography, and Direction at prestigious events such as the Pegasus Film Festival 2024, the Accolade Global Film Competition, and the IndieFEST Film Awards. It was also officially selected in the World Cinema Competition section at the Chennai International Film Festival 2024.


Speaking about the film, director Harikumaran said, "Kinaru tells a story centered around childhood, friendship, faith, and family bonds. It follows four children from a village who are humiliated and forbidden from playing near a neighbour’s well. 


Determined to create a space of their own, they decide to dig their own well — a journey that faces many obstacles. This pursuit of their dream is told beautifully through the eyes of children. 'Kinaru' is not just for kids; it’s a heartwarming and humorous family film that everyone can enjoy.”


*Crew Details*


Director: Harikumaran

Producers: Suriya Narayanan & Vinod Sekar

Production House: Madras Stories

Cinematography: Gautham Venkatesh

Music: Bhuvanesh Selvanesan

Editing: K.S. Gautham Raj

Sound Mixing: Daniel (Four Frames)

Sound Design: Kishore Kamaraj

Publicity Design: Madhan




***

கிணறு' ('The Well'): மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்*

'கிணறு' ('The Well'): மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்*






*6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள 'கிணறு' குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 வெளியாகிறது*


*செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு*


திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் 'புர்கா' மற்றும் 'லைன்மேன்' உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து 'கிணறு' திரைப்படத்தை தயாரித்துள்ளது. 


சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள 'கிணறு' குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு திரைப்பிரபலங்கள் பங்கேற்று படத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். 


பெகாசஸ் திரைப்பட விழா 2024, அக்கலேட் உலகளாவிய திரைப்படப் போட்டி,  இண்டிஃபெஸ்ட் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விழாக்களில் சிறந்த படம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கான விருதுகளை பெற்ற 'கிணறு', சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024ல் உலக சினிமாப் போட்டி பிரிவில் அதிகாரப்பூர்வ போட்டித் தேர்வாக இடம்பெற்றது. 


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஹரிகுமரன், "குழந்தைத்தனம், நட்பு, நம்பிக்கை, குடும்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை கிணறு சொல்கிறது. ஒரு கிராமத்தை சேர்ந்த நான்கு  பிள்ளைகள், அருகிலுள்ள வீட்டின் கிணற்றில் விளையாடுவதற்காக அடக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதனால், தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், தடைகள் அவர்களின் முன்னே நிற்கின்றன. கனவு நோக்கி ஓடும் இப்பயணம் குழந்தைகளின் கண்களில் அழகாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரசிக்கும், உணர்ச்சியும் நகைச்சுவையும் நிறைந்த குடும்பப்படமாக 'கிணறு' வெளியாகிறது," என்று தெரிவித்தார். 



*குழு விவரம்*


இயக்கம்: ஹரிகுமரன்

தயாரிப்பாளர்கள்: சூர்யா நாராயணன் & வினோத் சேகர்

தயாரிப்பு நிறுவனம்: மெட்ராஸ் ஸ்டோரிஸ் 

ஒளிப்பதிவு: கவுதம் வெங்கடேஷ்

இசை: புவனேஷ் செல்வநேசன்

எடிட்டிங்: கே. எஸ். கவுதம் ராஜ்

சவுண்ட் மிக்சிங்: டேனியல் (Four Frames)

சவுண்ட் டிசைன்: கிஷோர் காமராஜ் பப்ளிசிட்டி டிசைன்ஸ்: மதன்


***



Kaantha Movie Review

Kaantha Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kantha படத்தோட review அ தான் பக்க போறோம். இந்த படம் நாளைக்கு தான் release ஆகுது. Selvamani செல்வராஜ்  தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இது ஒரு period drama movie .  Dulquer Salmaan, Rana Daggubati, Samuthirakani, and Bhagyashri Borse னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

ayya ன்ற character ல நடிச்சிருக்காரு samuthirakani , இவரு ஒரு famous ஆனா director . இவரு தான் mahadevan அ நடிச்சிருக்க dulquer salman அ ஒரு actor அ groom பண்ணிருப்பாரு. mahadevan முதல் street ல சின்ன சின்ன performance தான் பண்ணிட்ருப்பாரு. இவரை கண்டுபிடிச்சு acting ல இருந்து எல்லாமே சொல்லி குடுத்தது ayya தான். இப்போ ayya shaantha ன்ற படத்தை direct பண்ணுவாரு. இதுல mahadevan தான் hero வா நடிக்கணும். ஆனா mahadevan ஓட status actor ஆனதுக்கு அப்புறம் உச்சத்துக்கு போனதுனால யாரோடைய பேச்சும் கேட்கமாட்டாரு. shaantha படத்தோட set க்கு வந்ததுக்கு அப்புறமா படத்தோட பேரா kaantha னு மாத்தி வைப்பாறு. இதுனால ayya க்கும் mahadevan க்கும் ego clash ஆகும். இந்த kaantha படத்துல heroine அ வராங்க kumari அ நடிச்சிருக்க bhagyasree borse. இவங்க burma ல இருந்து india க்கு அகதியா வந்திருப்பாங்க. இவங்கள கூட்டிட்டு வந்தது ayya வா thaan இருக்கும். இப்போ mahadevan க்கு kumari யா ரொம்ப பிடிச்சிபோயிடும். ஆனா mahadevan க்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருக்கும். இருந்தாலும் mahadevan kumari ya love பண்ணுறாரு. இவங்க ரெண்டு பேரோட affair வெளில தெரியவே ayya க்கும் mahadevan க்கும் நடுவுல இருக்கற ego clash பெரிய சண்டையை மாறுது. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும் போது , dulquer ஓட இந்த character ரொம்ப mysterious அ இருந்தது. அடுத்து என்ன பண்ணுவாரு னு நமக்கு தெரியாது. ஒரு arrogant அ அதே சமயம் innocent னு இவரு transform ஆகுற scenes எல்லாமே genuine அ இருந்தது. இந்த படத்துல main ஆனா character ஏ bhagyasree borse தான். இவங்க சுத்தி இருக்கற எல்லாருமே இவங்கள manipulate  இருந்தாலும் ரொம்ப genuine  அ அவங்களோட கருத்தை சொல்லுவாங்க. இந்த மாதிரி ஒரு நிலமைலயும் genuine  அ இருக்கிறது ரொம்ப கஷ்டம். இவங்கள ஒரு object மாதிரி மாதிரி பயன்படுத்துனாலும் இவங்க அமைதியா strong  அ நிக்கிறது தான் இந்த படத்தோட emotional  core  னே சொல்லலாம். samuthirakani ஓட ego , tension , அவரோட கைல இருந்து control மீறி போகுது னு தெரியவரும்போது வர கோவம் னு ரொம்ப நேர்த்தியை நடிச்சிருக்காரு. inspector devaraj அ வர rana dagubati ஓட performance  yuum super  அ இருந்தது. அதுவும் இவரு investigate பண்ணுற scenes  எல்லாமே interesting  அ இருக்கும். அப்புறம் மத்த supporting actors ஆனா Ravindra Vijay, Bijesh Nagesh, Vaiyapuri, Gayathrie Shankar, Nizhalgal Ravi, Bagavathi Perumal  னு இவங்களோட performance  யும் super  அ இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது selvamani ஓட direction அ பத்தி சொல்லும்போது படத்தை ரொம்ப interesting அ எடுத்துட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும்.படத்துல வர  twist and turns எல்லாமே super அ இருந்தது. 1980 ல இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி எல்லா details யுமே பக்கவா குடுத்திருக்காரு director . அதுமட்டும் இல்லாம ஆதிக்கம், ego politics னு எல்லாம் விஷயங்களையும் touch  பண்ணிட்டு வந்திருக்கு இந்த படத்தோட கதை.  Jakes Bejoy ஓட music and bgm இந்த படத்தை வேற ஒரு level க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். anthony ஓட editing யும் பக்கவா இருந்தது. இந்த படத்தோட cinematography யும் பாராட்ட பட வேண்டிய விஷயம் தான். 1980 's க்கு மாதிரி visuals எல்லாமே brown colour tone ல தான் இருந்தது. அதுனால பாக்குறதுக்கு ஒரு பழைய படத்தை பாத்த ஒரு feeling அ குடுக்குது. lighting யும் பக்கவா use பண்ணிருக்காங்க. tension அ இருக்கற scenes க்கு கொஞ்சம் sharp ஆனா lighting யும் ஒரு emotional ஆனா scenes க்கு ரொம்ப soft ஆனா lighting அ use பண்ணிருக்காங்க. art direction அ பத்தி சொல்லும்போது அந்த period ல shooting sets எல்லாம் எப்படி இருக்குமோ அதே மாதிரி ரொம்ப தத்ரூபமா ready பண்ணிருக்காங்க.   


மொத்தத்துல ஒரு super ஆனா படம் தான் இந்த kaandha . சோ மறக்காம theatre க்கு போய் பாருங்க.

அமெரிக்காவில் விருது விழாக்களை நடத்திய நடிகர் விஜய் விஷ்வா

 *அமெரிக்காவில் விருது விழாக்களை நடத்திய நடிகர் விஜய் விஷ்வா*

 









நடிகர் விஜய் விஷ்வா-வின் வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் திறமை மற்றும் சாதனை புரிந்தவர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில் விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகிறது. 


மதுரை, சென்னை, விருதுநகர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நிகழ்வுகளை நடத்திய பிறகு, இந்நிறுவனம் இம்முறை இலங்கையில் தனது முதல் சர்வதேச விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியது.


அதனைத் தொடர்ந்து, வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் புதிய முயற்சியாக “Utsav Mela – 2025” என்ற பெயரில் அமெரிக்காவின் Dallas நகரில் நடைபெற்ற கலாச்சார விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் போட்டிகளை ஏற்பாடு செய்தது.


சமையல் போட்டி (No Boil – No Oil) குழந்தைகள் (8–15) மற்றும் பெரியவர்கள் (16 மற்றும் அதற்கு மேல்) பிரிவுகளில் நடத்தப்பட்டது. 

மேலும், Talent Show எனும் நிகழ்வில் பாடல், நடனம், இசைக்கருவி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.


அதேபோல், Fashion Show போட்டியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் நடுவர்களாக இந்தியாவில் இருந்து நடிகர் விஜய் விஷ்வா, அமெரிக்காவிலிருந்து Mrsஸ்ரீதேவி, Ms வேதா  Mrsஜனனி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.


இவர்கள் வாஷிங்டனில் நடிகர் திரு நெப்போலியன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


இந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி துறைகளில் சாதித்த பல்வேறு கலைஞர்களுக்கு Lifetime Achievement Award வழங்கப்பட்டது. 


மேலும், திரு. பால் பாண்டி அவர்கள் திரு. கால்ட்வெல்நம்பி அவர்களுக்கு தமிழுக்கு ஆற்றிய பணிக்காக 'தமிழன் ரத்னா' விருது வழங்கினார்.


பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக Global Women Icon Awards, தொழில் முனைவோரை பாராட்டும் International Business Icon Awards, தனது இலக்கை நோக்கி பயணிக்கும் திறமையாளர்களுக்கான Future Icon Awards, மற்றும் சமூகத்திற்கு சேவை ஆற்றியவர்களுக்கான JFC Social Service Awards ஆகியனவும் வழங்கப்பட்டன.


இவ்விழாவை தொடர்ந்து VV  Entertainments வழங்கிய “India’s Vibe” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 டால் கலைஞர்கள், 20 செண்டை மேளக் கலைஞர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட #தாளம் பறையாட்டக் கலைஞர்கள் கலந்து கொண்டு புதிய பாணியிலான மியூசிக்கல் வைபை நிகழ்த்தினர். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். DJ Chuck வழங்கிய நிகழ்ச்சியும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


டிமான்டி காலனி 2, ரெட்டதல திரைப்படத்தின் தயாரிப்பாளரும் BTG Universal  நிறுவனத்தின் தலைவர் ஆன திரு. பாபி பாலச்சந்திரன் அவர்கள் இவ்விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


திரு. விமல்  அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்வுக்கான முழுமையான ஏற்பாடுகளை வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து SSS Entertainments நிறுவனத்தின் தலைவர் சக்தி நவராதித்தன், திருமதி வளர்மதி, மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.


இதனை தொடர்ந்து சிகாகோவில் நடைபெற்ற  தமிழ்சங்க நிகழ்வில் தலைமை விருந்தினராக விஜய் விஷ்வா கலந்து கொண்டார்

கோப்ரா பிரதீப்குமார் பேசியதாவது.., நான் சின்னத்திரை நடிகராக சரவணன்

 கோப்ரா பிரதீப்குமார் பேசியதாவது.., 

நான் சின்னத்திரை நடிகராக சரவணன் மீனாட்சியில் அறிமுகம் ஆனேன். ரமேஷ் பாரதி அண்ணன் இயக்கிய கனா காணும் காலங்கள் சீரிஸில் நடித்தேன். அங்கு அவரிடம் கிடைத்த அறிமுகம் தான் இங்கு படம் வரை வந்துள்ளது. எங்களைப் போலக் கலைஞர்களை உங்கள் வாழ்த்து தான் வளர்ந்து விடும். உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 













நடிகர் கோபி பேசியதாவது..,

ரஜினி கேங் படத்தின் இயக்குநர் ரமேஷ் பாரதி அவர்கள் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறார். கனா காணும் காலங்கள் தொடரில்,  ஹோட்டல் மாஸ்டராக நடித்தேன். மாஸ்டர் போல எல்லலோருக்கும் பாரதி அண்ணன் வாய்ப்பு தருகிறார்.  ரஜினி கேங் படம் மிகப்பெரிய வெற்றிபெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். 


நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது.., 

ரஜினி கேங் படத்தில் நான் இரண்டாவது நாயகன் எனக் கூறி தான் இயக்குநர் ரமேஷ் பாரதி அண்ணன்  நடிக்க வைத்தார். கனா காணும் காலங்கள் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த குழுவிற்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த ரஜினி கிஷன் அவர்களுக்கு நன்றி. எனக்கு பாட்டு ஃபைட் எல்லாம் இருக்கிறது. படப்பிடிப்பில் ரஜினி கிஷன் பெரும் உதவியாக இருந்தார். ஹீரோயின் மிக அழகாக நடித்துள்ளார் அவரும் எனக்கு உதவியாக இருந்தார். இசையமைப்பாளர் மிக அருமையான இசையைத் தந்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி. 


நாயகி திவிகா பேசியதாவது.., 

ரஜினி கேங் மன நிறைவான மனதுக்கு நெருக்கமான படம். மொழி கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் என் திறமையைப் பார்த்து எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ரமேஷ் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் எல்லோரும் என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ரஜினி கிஷன் எனக்கு மிக உதவியாக இருந்தார். எங்கள் இருவருக்கும் நிறையச் சந்தேகம் இருந்தது. திரைக்கதை அப்படி, நாங்கள் காட்சியை எங்களுக்குள் விவாதித்து நடித்தோம். இசையமைப்பாளர் ஜோன்ஸ் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் அண்ணன், கூல் சுரேஷ், முனீஷ்காந்த் அண்ணன் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.  எனக்கு நிறையச் சொல்லித்தந்தார்கள். படக்குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எங்கள் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் ரஜினி கிஷன் பேசியதாவது.., 

ரஜினி கேங் எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி சார் மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம். படத்தில் எல்லா பெரிய நடிகர்களையும் கமிட் செய்துவிட்டோம், ஆனால் எனக்கு ஹீரோயின் மட்டும் செட்டாகவில்லை. பலரை அணுகினோம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை, இறுதியாக தான் திவிகா வந்தார். என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. முனீஷ்காந்த் என் நடிப்பைப் பாராட்டினார். ஷீட்டிங் போது கூல் சுரேஷ் வந்தார் அவருக்காக ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். 3 மணி நேரம் ஷீட்டிங் நிறுத்திவிட்டோம் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடன் நடித்த எல்லா பெரிய நடிகர்களும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள்.  ஒரு பாடல் நன்றாக வந்தால்  போதும் என நினைத்தேன் ஆனால்  இசையமைப்பாளர் மூன்று பாடல்களும் அட்டகாசமாகத் தந்தார். ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். மேனேஜர் சந்துரு என் வேலையை எளிமையாக்கிவிட்டார். அவருக்கு நன்றி.  என் அப்பா சொன்னது போல ஒரு டீமாக எல்லோரும் உழைத்து ஒரு நல்ல படைப்பை உருவாக்கியுள்ளோம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


இயக்குநர் M.ரமேஷ் பாரதி பேசியதாவது.., 

ரஜினி கேங் இது எல்லோருக்குமான படம். இதில் காமெடி, ஹாரர், எமோசன் என எல்லா அம்சங்களும் உள்ளது. இசையமைப்பாளர் ஜோன்ஸ் பெரும் திறமைசாலி அவருடன் இணைந்த பிறகு வேறு யாருடனும் வேலை பார்க்கவில்லை. அற்புதமான இசையமைப்பாளர். இப்படத்தில் அட்டகாசமான பாடல் தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சதீஷ் அவரும் அப்படித்தான், அவருடன் இணைந்த பிறகு வேறு யாருடனும் வேலை பார்க்கவில்லை. எடிட்டர் வினோத் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். எல்லோருமே ஒரு டீமாகத்தான் வேலை செய்துள்ளோம். இப்படத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க என் உதவி இயக்குநர்கள் பெரிய உறுதுணையாக இருந்தார்கள். மேனேஜர் சந்துரு சார் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என நிறைய விவாதித்தோம், அப்போது கிஷன் சார் அவர் பெயரை ரஜினி கிஷன் என மாற்றினார், அதனால் அவர் கதாபாத்திரத்திற்கும் ரஜினி எனப் பெயர் வைத்தோம். அவரது பயணமும் அவருக்கு உதவும் கேங்கும் தான் இந்தக்கதை, அதனால் ரஜினி கேங் என வைத்திவிட்டோம். ரஜினி  என்றாலே பவர் என்பதால் எல்லோருக்கும் பிடித்துவிட்டது.  ரஜினி கிஷனுக்கு  முதலில் இந்தப்படம் எப்படி வரும் என்ற சந்தேகம் இருந்தது.  ஷீட் ஆரம்பித்த பின்னர் தான் நம்பினார்.  இந்தப்படத்தைச்  சொன்ன நேரத்தில், சொன்ன மாதிரி முடித்துக்கொடுக்க அவர் என் மீது வைத்த முழுமையான நம்பிக்கை தான் காரணம். நிறைய ஹீரோயின் தேடி கடைசியாக திவிகா வந்தார், அவர் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார். மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த்  என எல்லா நடிகர்களும் எல்லோரும் இரவு பகல் பாராமல் நடித்துத் தந்தார்கள். கூல் சுரேஷ் எல்லாத்தையும் கச்சிதமாகச் செய்வார்.  ஏன் இவரை எல்லோரும் திட்டுகிறார்கள் எனத் தோன்றியது. படத்தில் நடித்த எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்தார்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றிகள். இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரைப்பட பைனான்ஸ்,  விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,  அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள்,  அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக  இப்படம் உருவாகியுள்ளது.


பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை  இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். 


இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது. 


பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 


இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது. 


தொழில் நுட்ப குழு 

தயாரிப்பு: C.எஸ்.பதம்சந்த், C.அரியந்த் ராஜ் & ரஜினி கிஷென்  

இயக்கம் : M. ரமேஷ் பாரதி

இசை : M.S. ஜோன்ஸ் ரூபர்ட்

எடிட்டிங் : R K . வினோத் கண்ணா 

ஒளிப்பதிவு : N. S. சதீஷ்குமார் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

Wednesday, 12 November 2025

Autograph Movie Review

 Autograph Review


ஹாய் மக்களே nov 14 th அன்னிக்கு autograph படத்தை re release பண்ண போறாங்க. 2004 ல வெளி வந்த இந்த படம் ஒரு romanticmovie.  இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணி produce பண்ணிருக்கறது cheran தான். இந்த படம் அந்த வருஷத்தோட மிக பெரிய blockbuster hit னு தான் சொல்லணும். இந்த படத்துல cheran , Gopika, Sneha, Mallika and Kaniha னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை பல film festival ல premier  பண்ணி இருந்தாங்க. அதோட இந்த படத்தை telugu , kannada அப்புறம் bengali ளையும் remake பண்ணி இருந்தாங்க. 



சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். sendhil  அ நடிச்சிருக்க cheran ஓட வாழக்கை ல நடந்த விஷங்களை தான் காமிப்பாங்க. இவரோட wedding  க்காக தன்னோட friends and family அ invite பண்ணுறதுக்காக train ல போவாரு. அப்படி போகும் போது தான் இவரோட life ல நடந்த விஷயங்களை காமிப்பாங்க. முதல் ல இவரு school ல படிக்கும் போது kamala ன்ற பொண்ண love பண்ணுவாரு. இந்த school love ரொம்ப calm  அ இருக்கும். kamala கூட நடந்து வரணும் ண்றதுக்காக தன்னோட cycle tyre அ puncture பண்ணிட்டு நடப்பாரு. கடைசில இந்த  பொண்ண 11 th std முடிக்கறதுக்குள்ளயே கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க. இப்போ 14 வருஷம் கழிச்சு செந்தில் பாக்கும்போது kamala க்கு மூணு பசங்க இருக்கும் அப்புறம் இவங்களோட  husband ஒரு விவசாயி யா இருப்பாங்க. இப்போ இவரோட college க்காக kerala க்கு போவாரு. அங்க தான் lathika வா நடிச்ச gopika வை பாப்பாரு. ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிப்பாங்க. lathika ஓட family பெரிய பணக்காரங்க. இவங்களுக்கு lathika ஓட love matter தெரிய வரவும் இவளோட cousin ஆனா madhavan ன்ற பையனுக்கு கட்டி வச்சுடுறாங்க. sendhil இவளுக்கும் வந்து invitation கொடுக்கும்போது விதவையா அவங்க பாட்டி கூட 14 வருஷமா இருந்துட்டு இருப்பாங்க. இப்படி love failure ஆச்சே னு நினச்சு ரொம்ப depressed அ இருப்பாரு. அப்போ தான் divya வா நடிச்சிருக்க sneha வை meet பண்ணுறாரு. இவங்க தான் sendhil க்கு full அ support குடுப்பாங்க. இவங்களுக்கு அப்பா கிடையாது அதுனால full family அ இவங்க தான் பாத்துக்கணும். கடைசில இவங்களுக்கு america ல இருந்து ஒரு  நல்ல சம்பந்தம் வரவும், அங்க கல்யாணம் ஆயிட்டு போய்டுவாங்க. ஆனா 3 வருஷம் கழிச்சு இவர்களுக்கும் divorce ஆயிடும். கடைசியா அப்பா அம்மா பாத்த ponnu ஆனா thenmozhi யா நடிச்சிருக்க kanika வை தான் கல்யாணம் பண்ணிப்பாரு. இந்த marriage ல தான் அவரோட school , காலேஜ் , ல படிச்சவங்க , friends  சொந்தக்காரங்க னு  எல்லாருமே சேந்து attend பண்ணுவாங்க. இதோட இந்த படமும் முடிஞ்சிடும். 


இந்த படத்துக்கு இசை அமைச்சது bharathwaj. இந்த படத்துல மொத்தம் 8 songs வரும். எல்லாமே super hit னு சொல்லலாம். ஞாபகம் வருதே ன்ற song  அ சேரன் தான் எழுதி இருந்தாரு. ஓவுவுறு பூக்களுமே ன்ற song ஒரு motivation song மாதிரி அமைச்சிருந்தது அதோட சித்ரா குரல் ல செம hit னு சொல்லலாம்.   இந்த படத்துல மொத்தம் 4 cinematographers work பன்னிருத்தாங்க. ravivarman senthil ஓட school life அ பண்ணிருப்பாரு. vijay milton senthil யும் lathikka வும் கேரளா ல இருந்த scenes அ shoot பண்ணிருப்பாரு. dwarakanath தான் chennai ல நடந்த scenes அ shoot பண்ணாரு. கடைசியா shanky mahendran sendhil ஓட perspective ல இருந்து வர scenes அ shoot பன்னிருத்தரு. இந்த படத்துக்கு நெறய விருதுகளும் கிடைச்சது.  


இப்போ இந்த படத்துல sneha ஓட portions தான் அதிகமா இருக்கும். இவங்களோட expressions, dialogue delivery எல்லாமே அவ்ளோ நேர்த்தியை இருக்கும். முக்கியமா ஓவுவுறு பூக்களுமே song ல இவங்க குடுக்கற expressions லாம் அவ்ளோ perfect அ இருக்கும்.  gopika ஓட dance scenes , இவங்க college scenes எல்லாமே super அ இருக்கும். பல வருஷம் கழிச்சு cheran இவங்கள பாக்க வரும் போது ஒரு matured ஆனா character அ transform ஆயிருக்கிறது னு ரொம்ப அழகா perform பண்ணிருப்பாங்க. அடுத்து kamala அப்புறம் kaniha ஓட scenes லாம் கம்மி தான். இவங்களோட நடிப்பும் அருமையா இருக்கும். rajesh cheran ஓட அப்பாவா , ilavarasu cheran ஓட teacher அ இவங்களோட performance யும் அட்டகாசமா இருக்கும்.  


இப்போ re release க்கு ready ஆயிட்டுருக்க  இந்த படத்துக்கு colour gradation லாம் குடுத்து update பண்ணிருக்காங்க. அதோட dolby atmos sound க்கும் improve பண்ணிருக்காங்க. இந்த படத்தோட running time அ 15 mins க்கு கொறச்சுருக்காங்க. அது மட்டும் இல்ல cheran இந்த படத்தோட re release க்காக 50 lakhs spend பண்ணிருக்காரு னு ஒரு interview ல கூட சொல்லிருக்காரு.  


ஒரு soulful  ஆனா realistic touch ல இருக்கற படம் தான் இந்த autograph . சோ மறக்காம இந்த படத்தோட magic  அ theatre  ல பாத்து enjoy பண்ணுங்க.

மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 *‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*














ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 


நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!”.


இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், “டில்லி பாபு சார் தேர்ந்தெடுத்த கதை நிச்சயம் நன்றாக இருக்கும். ராமதாஸ் அண்ணன் 10 வருடங்களாக எனக்கு பழக்கம். நல்ல மனிதர். அவருக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். விஜயலட்சுமியின் நடிப்பு படத்தில் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ஒரு படம் முடியும்போது அதில் அறம் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது இருக்கிறது. இயக்குநர் கிஷோருக்கு வாழ்த்துக்கள்”.


கலை இயக்குநர் மாதவன், “நான் ராஜீவ் அவர்களின் சிஷ்யன். ‘லிஃப்ட்’ படம் செய்து கொண்டிருக்கும்போது துரைதான் என்னை கூப்பிட்டார். ஏனோதானே என்று இந்தப் படம் செய்ய முடியாது. ஒவ்வொரு விஷயமும் கவனமாக செய்திருக்கிறோம். நம்பிக்கை கொடுத்த இயக்குநர், கேமரா மேனுக்கு நன்றி”.


இயக்குநர் சதீஷ் செல்வகுமார், “இங்கு இருக்கும் நம் எல்லோருடைய கதைதான் ‘மிடில் கிளாஸ்’. ரொம்ப முக்கியமான கதை இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், ராஜ்சிதம்பரம். “தமிழ்நாட்டில் ‘லப்பர் பந்து’, ‘மாமன்’ படங்களை விநியோகம் செய்திருக்கிறேன். மூன்றாவது படம் ‘மிடில் கிளாஸ்’. படம் வெற்றியடைய செய்வது உங்கள் கையில்தான் உள்ளது”.


இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, “தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் திறமையை ஊக்குவித்தவர் டில்லி பாபு சார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதற்கு காரணம் டில்லி பாபு சார் சினிமா மீது வைத்திருந்த ஈடுபாடு. அவர் கேட்டு ஓகே சொன்ன இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு தேவை. கிஷோர் நல்ல இயக்குநர் என்பதை படத்தின் டிரைய்லரே சொல்கிறது. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முனீஷ்காந்தை கதையின் நாயகனாக பார்ப்பதில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். இதுபோன்ற கதாபாத்திரத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்த விஜிக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ராஜூமுருகன், “என் மனதுக்கு நெருக்கமான படம் இது. எளிமையான கதைதான். ஆனால், அது விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைக்கொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது”.


இயக்குநர் விஜய் வரதராஜ், “படம் பார்த்துவிட்டேன். படத்தில் பேசப்பட்ட பல பிரச்சினைகளை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஆனந்த், “டில்லி பாபு சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ’மிடில் கிளாஸ்’ படம் பார்க்கும்போது டில்லி பாபு சார் முகம்தான் நிறைந்திருந்தது. என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையை அவர் மாற்றியிருக்கிறார். படத்தின் பல தருணங்களை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. இசை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்”.


எடிட்டர் சான் லோகேஷ், “இந்தப் படத்தில் பல எமோஷன் தருணங்கள் உள்ளது. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.


ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், “இதுபோன்ற கதைகள் ஏன் எனக்கு வருவதில்லை என ஏக்கமாக எதிர்பார்த்திருந்தேன். கதை மீது நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் சின்சியராக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.


இயக்குநர் விஷால் வெங்கட், “டில்லி பாபு சார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை பொறுப்புடன் அடுத்து எடுத்து செல்லும் தேவ் மற்றும் துரை இருவருக்கும் வாழ்த்துக்கள். சந்தோஷமும் நிம்மதியும் எங்கே என்ற தேடுதல் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும். அதை தான் இந்தப் படம் சொல்கிறது. உங்களுக்கும் படம் கனெக்ட் ஆகும். முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் நடிப்பில் கலக்கிவிட்டார்கள். படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் சுப்ரமணியம் சிவா, “நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் கஷ்டப்படுகிறார். விஜயலட்சுமி நுணுக்கமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பணத்திற்கான போராட்டம்தான் இந்தப் படம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஏ. வெங்கடேஷ், “இயக்குநர் கிஷோர் திறமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ மனிதன் எப்படி இருப்பார் என்பதை திரையில் காட்ட முனீஷ்காந்த் சரியான தேர்வு. மிடில் கிளாஸ் நபர்களிடம் எப்போதும் கனவும் ஏக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் வாழ்வை மாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதை அவன் தவற விட்டு அதற்காக போராடும் விஷயம்தான் இந்தப் படத்தின் கதை. விஜயலட்சுமிக்கு இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா, “என் கதையே படமாக இருக்கிறதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்போது எனக்கு தோன்றியது. படத்தின் முதல் ஷாட்டிலேயே இது வேற லெவல் படம் என்பது புரிந்தது. திரைக்கதை புதுமையாக இருந்ததுதான் பெரும்பலம். முனீஷ்காந்த், விஜயலட்சுமி பற்றி பேசாமல் இந்தப் படம் கிடையாது. விஜி அசத்தி இருந்தார். முனீஷ்காந்த் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். தொழில்நுட்பக் குழுவினரின் பணிக்கு வாழ்த்துக்கள். தேவ் மற்றும் துரைக்கு வாழ்த்துக்கள். திரையில் இந்தப் படத்தை என் குடும்பத்தோடு மீண்டும் பார்க்க காத்திருக்கிறேன்”.


பாடகர் ஆண்டனி தாசன், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளருக்கு நன்றி. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.


இயக்குநர் சக்திவேல், “டில்லி பாபு சார் கம்பெனியில் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்கள்தான். திறமை மீது நம்பிக்கை வைத்தவர்தான் டில்லி பாபு. ’மிடில் கிளாஸ்’ படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”


இயக்குநர் ரவீந்திரன், “என்னுடைய இரண்டு படங்களுக்கு கோ-டைரக்டராக பணியாற்றினார் கிஷோர். இப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்தக் கதையை முதலில் என்னிடம்தான் சொன்னார். முனீஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சூப்பர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


நடிகர் குரேஷி, “டில்லி பாபு சாரிடம் வாய்ப்பு கேட்டேன். என்னை மதித்து அவர் கொடுத்த வாய்ப்பு இது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி நன்றாக நடித்துள்ளார்கள். ராதாரவி சார், கோடாங்கி என எல்லோரும் கலக்கி இருந்தார்கள். ‘மிடில் கிளாஸ்’ என்ற பெயருக்கு ஏற்ப பல விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


பாடகி சுப்லாஷினி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த பிரணவ்வுக்கு நன்றி. வித்தியாசமான பாடலாக இருக்கும். இந்தப் பாடலுக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை”.


இயக்குநர் ராகவ் மிருதுத், “படத்தின் முதல் ஷாட் அருமையாக இருந்தது. பல பெரிய விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற படங்கள்தான் நூறு கோடி வசூலிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஸ்டைல் மாறும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும்”.


ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர், “டில்லி பாபு சார் மறைவுக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள்”.


இசையமைப்பாளர் பிரணவ், “எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் துரை, தேவ், இயக்குநர் கிஷோருக்கு நன்றி. படத்தில் நிறைய விஷயங்கள் என்னோடு கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய பெற்றோர், டெக்னீஷியன்ஸ், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய குரு சந்தோஷ் நாராயணன், மீனாட்சி அக்காவுக்கு நன்றி. படம் 21 ஆம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “’கர்ணன்’, ‘வாழை’, ‘பாரீஸ் ஜெயரஜாஜ்’, ‘ரெட்ரோ’ எனப் பல படங்களில் என்னுடைய பணியாற்றியுள்ளார் பிரணவ். ரொம்ப திறமையானவர். திபு நினன் தாமஸ், பிரணவ் என என்னுடைய அணியில் இருந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள்”


தயாரிப்பாளர் தேவ், “எனக்கு எமோஷனலான தருணம் இது. டில்லி சார் ரொம்ப ஆசைப்பட்டு தொடங்கிய படம் இது. அவர் ஆசியுடன் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது. ஆனால், அதற்கான ரூட் மேப் தெளிவாக டில்லி சார் வைத்திருந்தார். அதை துரை அண்ணா தெளிவாக செயல்படுத்தி வருகிறார். டில்லி சார் ஆசைப்பட்டதை கிஷோர் அண்ணா அழகாக திரையில் எடுத்து வந்துள்ளார். நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர். முனீஷ்காந்த் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நன்றி. அடுத்து நிறைய படங்கள் அவர் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். விஜயலட்சுமி மேமின் நடிப்பு தீவிரமாக இருந்தது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.


நடிகை விஜயலட்சுமி பேசியதாவது, “’மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. விஜியும் அன்புராணியும் எதிர் எதிர் துருவங்கள். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் கிஷோர், “இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஷ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும். படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள்”.


நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.