Featured post

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்! 'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர...

Friday 30 June 2023

போர் தொழில் திரைப்பட வெற்றி விழா

 *போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!*

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்  சுனில் பேசுகையில், '' போர் தொழில் டிரெய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்களைக் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் ராஜா மிக அற்புதமான படத்தைத் தந்துள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்கள். இது தமிழில் எங்களுக்கு அறிமுகப்படம். ஒரு நல்ல தரமான படத்தைத் தந்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவால் தான் இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.  தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. ''என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், '' இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது, நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்தீர்கள். நன்றி, படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது, இது ஒரு சாதாரண விஷயமில்லை, அது மட்டுமல்ல.. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , இயக்குநர் ஒரு அசாத்திய வெற்றியைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்துள்ளார், இவர் கண்டிப்பாக ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் ஆச்சரியம் இல்லை , தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி. அவருக்குத் தேவையான வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி.'' என்றார்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான E4 எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ் எல் எல் பி முகேஷ் R மேத்தா பேசுகையில், '' உங்கள் அனைவருக்கும் நன்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். அடுத்ததாக ரசிகர்கள் அவர்கள் படத்தின் டிவிஸ்ட்டை உடைக்காமல் படத்தைப் பாராட்டி, வரவேற்பு தந்தார்கள். அசோக் செல்வன், சரத்குமார் அவர்களின் கதாபாத்திரத்தைப் புரிந்து அட்டகாசமாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா மிக அற்புதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி இருந்தாலும்  நல்ல கதைகள் கண்டிப்பாக ஓடும், மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்கள் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. தொடர்ந்து இது மாதிரி நல்ல படங்களைத் தருவோம் நன்றி'' என்றார் . 

ஒளிப்பதிவாளர் கலைச் செல்வன் பேசுகையில், '' நான் பாலு மகேந்திரா சாரின் கல்லூரியில் படித்தேன், அவர் எப்போதும் சொல்வது ஒரு வார்த்தை தான், 'படத்தின் ஸ்கிரிப்ட் தான் படத்தைத் தாங்கும்' என்று சொல்வார், அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, விக்னேஷ் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அவரின் பார்வை தான் இந்தப்படம், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார் .

விநியோகஸ்தர் தீபா பேசுகையில், ''

எனக்கு முகேஷ், அசோக் செல்வனைப் பல காலமாகத் தெரியும். இந்தப்படம் எங்களிடம் வந்த போதே, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் எனத் தெரியும். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்து வருகிறார்கள். இந்தப்படத்தைச் சின்ன சின்ன நாடுகளில் கூட எங்களால் விநியோகம் செய்ய முடிந்தது. படத்திற்கான வரவேற்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. இப்படம் இன்னும் யூகே வில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் தங்கள் முழு ஒத்துழைப்பைத் தந்தார்கள். தொடர்ந்து படத்தை புரமோட் செய்தார்கள். நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. தொடர்ந்து  நல்ல படங்களைத் தருவோம் நன்றி'' என்றார்.

நடிகர் தேனப்பன் பேசுகையில், '' இந்த கம்பெனியை பற்றி நான் பெரிதும் கேள்விப் பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர், இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்து கடிதம் எழுதினார். அது எனக்கு மறக்க முடியாத தருணம், இயக்குநர் தனக்குத் தேவையானது கிடைக்கும் வரை விட மாட்டார், அது தான் அவருக்கு இப்படி ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது, கண்டிப்பாக அவர் நல்ல நல்ல படங்களை எடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள், படக்குழு அனைவருக்கும் நன்றி'' என்றார்.

பாடலாசிரியர் & எழுத்தாளர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ''தயாரிப்பாளருக்கு நன்றி. இதை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல் ஒரு படமாக நம்பி இந்தப் படத்தை உருவாக்கியதற்கு நன்றி, இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல்தான். அது படத்தின் இறுதியில் வரும். அதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இதை நான் நன்றி கூறும் மேடையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி'' என்றார்.

எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் பேசுகையில், '' நிறைய மீம்கள் போர் தொழில் சம்பந்தமாக இணையத்தில் வந்தது. படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இவ்வளவு பெரிய வரவேற்பைத் தந்த உங்கள் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்'' என்றார்.

ஒலிக்கலவை பொறியாளர் ஹரி பேசுகையில், '' திரில்லர் படத்திற்குத் தேவை சவுண்ட் மிக்ஸிங் தான். இந்தப் படத்தில் இயக்குநருக்கு அதில் ஒரு தெளிவு இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' ஒரு நாள் மிட் நைட் அசோக் செல்வன் போன் செய்தார். 'பிரதர் நான் போர் தொழில் என்று ஒரு படம் செய்கிறேன். படத்தில் ஒரே ஒரு பாடல் தான். ஆனால் நீங்கள் இந்தப்படத்துடன் இணைய வேண்டும்' என்றார். டிரெய்லர் பார்த்தவுடனே இந்தப்படம் நல்ல படமாக இருக்குமெனத் தோன்றியது. பொதுவாக அறிமுக இயக்குநர் படங்களுக்கு  நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். இந்த வருடம்  'டாடா' , 'குட் நைட்' படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் இணைந்தது மகிழ்ச்சி. அசோக் செல்வனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி'' என்றார்.

நடிகை லிசா சின்னு பேசுகையில், '' முதல் முறையாக நான் ஒரு மேடையில் நிற்கிறேன். மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பல நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர், பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் தான் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இயக்குநர் விகனேஷ் ராஜா என்னைத் தேர்வு செய்யும்போதே சொன்னார். இது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமென்று சொன்னார். அது நடந்து விட்டது, அதற்கு நன்றி , படக்குழு அனைவருக்கும் நன்றி'' என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு பேசுகையில், '' தேனப்பன் சார், என்னைக் கஷ்டப்படுத்தி விட்டார்கள் என்றார். என்னையும் கடுமையாக கஷ்டப்படுத்தினார்கள். நான் வேலை பார்த்த மலையாள படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். இயக்குநர் பிழிந்தெடுத்துவிட்டார். ஆனால் படத்தை அற்புதமாக உருவாக்கினார். படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

நடிகர் சுந்தர் பேசுகையில், '' விக்னேஷ் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசியபோது என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் நிறையப் படங்கள் செய்துள்ளேன் என்றேன். ஆனால் எனக்காகச் செய்து காட்டுங்கள் என்றார். அப்போதே என்னை பெண்டு நிமிர்த்த ஆரம்பித்து விட்டார். சரத்குமார் சார் சிரிக்காமல் நடித்த ஒரே படம் இது தான். அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. இப்படத்தில் அவரை பார்த்து ரசித்தோம். படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி'' என்றார்.

நடிகர் ஹரீஷ் பேசுகையில், '' படம் ரிலீஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். நான் நடித்ததில் மிக வித்தியாசமான கேரக்டர் இது தான். என் பெற்றோருக்குப் பிடித்த படம் இது தான். என்னைப் போன்ற புதுமுகத்துக்கு திறமையை மதித்து இம்மாதிரி கேரக்டர் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த மாதிரி படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு நன்றி'' என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், '' இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி, E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, 

ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம். யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோர்க்கும் நன்றி. கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். படம் நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. எல்லோரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரத்குமாருடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதைக் கேட்கும்போது, நண்பனாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனோடு குறும்பட காலத்திலிருந்து பழகி வருகிறேன், தான் என்ன எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பான். அவன் இன்னும் உயரம் செல்வான். தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படம் எடுத்ததற்கு நன்றி. ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன்,  இந்தப்படத்தில் ஒரு வசனம் வரும் “உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும்”  அனைவருக்கும் நன்றி'' என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ''விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி'' என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், '' என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு  தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை..  எழுதியதை... எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார். இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. சவுண்டிங்கில் மிரட்டி விட்டார். படம் முழுக்க அதன் உணர்வை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது இசையும் சவுண்டும் தான். அதை மிகச்சிறப்பாக செய்தார்கள். இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை 2010 ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ஆல்ஃபிரட்டையும் என்னையும் தனியாக மனதில் பிரித்து பார்க்க முடியவில்லை. நாங்கள் இருவருமே ஒரே ஆள் தான். இப்படி ஒரு ரைட்டர் கிடைப்பது வரம். நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார்.  அசோக் செல்வன்  காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிகை வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்... இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செயத்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம். இறுதியாக ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தை போட்டுக்காட்டலாம் என்ற போது... யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விட்டால்..!  என்ற பயம் வந்தது. சக்தி சார் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார். அதேபோல்  ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், படம் பிரீமியர் ஆனவுடனே இணையத்தில் படத்தை பற்றி புகழ்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்கள். விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிக்கை விமர்சனங்களால்.. ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம். அனைவருக்கும் நன்றி'' என்றார்.

பிரைம் வீடியோ மனதிற்கு உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க

 *பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது*

ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது.

டிரைலரை இங்கே காணவும்: https://www.youtube.com/watch?v=1X_iut1c4lo

மும்பை, இந்தியா—30 ஜூன், 2023— இந்தியாவின் மிகவும் அதிகளவில்  விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, எதிர்வரும்  ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும் ஒரிஜினல் தமிழ் தொடரான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. ரேஷ்மா கட்டாலா (Reshma Ghatala) உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு லக்ஷ்மி (Lakshmi), மது (Madhoo), மற்றும்  சாந்தி (Santhy)  நடித்துள்ள இந்த  மனதுக்கு உற்சாகமளிக்கும் தொடரை பிஜாய் நம்பியார், (Bejoy Nambiar), கிருஷ்ணா மாரிமுத்து (Krishna Marimuthu), மற்றும்  சுவாதி ரகுராமன் (Swathi Raghuraaman) ஆகியோர் இயக்கியுள்ளனர்.

உலகெங்கிலும் 240 க்கும் அதிகமான  நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூலை 6  முதல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட  இந்த தமிழ் தொடரை  ஸ்ட்ரீம் செய்யலாம். ஸ்வீட் காரம் காபி  தொடரானது  பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில்  கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள்,  ஒரே ஒரு முறை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி  பணத்தை சேமிப்பதோடு, இதர வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும்  அனுபவித்து மகிழலாம்.

மனதுக்கு உற்சாகமளிக்கும் ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள், ஒரு உணர்ச்சிகரமான குடும்ப நாடகம். ஒரே குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த  மூன்று பெண்கள் எவ்வாறு ஒரு நினைவை விட்டு அகலாத வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை அது அழகாகக் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் அன்றாட வாழ்வின் பரபரப்பில் இருந்து மட்டுமல்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் பண்டைய நடைமுறைகளில் இருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரு உந்துதலோடு தொடங்கும் இந்த சாலைப் பயணம், அவர்கள் தங்களை மீண்டும் கண்டறியவும் வாழ்வின் மீதான அவர்களின் ஆர்வத்தை புதுப்பித்த ஒரு பயணமாக மாற்றம் காணுகிறது. 

இயக்குனர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, மற்றும் சுவாதி ரகுராமன் வெவ்வேறு எபிசோடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, தங்களின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும்  சிறப்பான திறன்கள் மூலம் ஒன்றிணைந்து இந்த கதையை தங்கு தடையின்றி மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில்  காட்சிப் படுத்தி உயிர்பெறச்செய்திருக்கிறார்கள்.

“இரண்டு வெவ்வேறு இயக்குநர்கள் மற்றும் ஒரு நிகழ்ச்சி வெளியீட்டாளருடன்  இணைந்து ஒரு திரைப்படத்தை நான்  இயக்குவது இதுவே முதல் முறை. ஆக, வெவ்வேறு எபிசோட்களை தனிப்பட்ட மூன்று இயக்குனர்கள் இயக்கியிருந்தாலும், இந்தத் தொடரில் கதை கதாபாத்திரங்களோடு இணைந்து எவ்வாறு பயணிக்கிறது என்பதை தீர்மானிப்பதில் நாங்கள் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்து செயல்பட்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள்  ஒவ்வொருவரும் கதைக் கருவின் ஆழ் மட்டத்துக்கு சென்று ஒன்றிணைந்துள்ளோம்.

மேலும் ரேஷ்மா,  ஸ்வீட் காரம் காபி தொடர்பாக அவர்  கொண்டிருந்த, கண்ணோட்டத்துக்கு எந்த ஒரு பங்கமும் விளைவிக்காமல் அதற்கு உரிய நியாயத்தை நாங்கள் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் எங்களை மிகவும் சாதுர்யமாக ஒன்றிணைத்தார் என்றே நான் நினைக்கிறேன்” என்று, ஒன்று மற்றும் எட்டாவது எபிசொடுகளின்  இயக்குனர் பிஜாய்  நம்பியார் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது எபிசோடுகளை  இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து மேலும் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை கதைதான் எனக்கு அனைத்துமே. ஒரு குடும்பத்தின் பாட்டி ஒருவர் அவரது மருமகள் மற்றும் பேத்தியுடன் இணைந்து ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்வது பற்றிய ஆரம்பம் முதல் இறுதி வரையிலான கதையை, ரேஷ்மா கட்டாலா (எழுத்தாளர் & நிகழ்ச்சி வெளியீட்டாளர்) தொலைபேசி மூலம் ஒரு ஐந்தே நிமிடத்தில் விளக்கியது என்னையும் இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளத் தூண்டியது. 

சமூகத்தின்  இருண்ட பக்கங்களை காட்சிப்படுத்தும் கதைகள் அதிகம் காணப்படும் இந்த கால கட்டத்தில் அனைத்து மட்டங்களிலுமுள்ள பார்வையாளர்களுக்கு இன்றியமையாத தேவையாக விளங்கும் ஸ்வீட் காரம் காபி போன்ற கதைக் கருவுக்கு ஆதரவளித்துவரும்  பிரைம் வீடியோவுக்கு எனது பாராட்டுகள். நான் தொடர்ந்து என்னுடைய ஒவ்வொரு உருவாக்கத்திலும் ஒரு புதுமுகமாக கற்று வருகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், இந்தத் தொடரில் இயக்குனர் பிஜாய் நம்பியார் மற்றும் ஸ்வாதி ரகுராமன் ஆகியோருடன் இணைந்து இயக்கும் வாய்ப்பு உண்மையிலேயே என்னை மேலும்  மேம்படுத்திக்கொள்ள, இந்தத் தொடருக்காக நான் கொண்டிருந்த கண்ணோட்டத்திற்கு உயிர் கொடுத்து  உதவி அதன் மூலம் என்னை ஒரு சிறந்த திரைப்பட உருவாக்குனராக உணரச் செய்த  இசையமைப்பாளர் - கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் - கிருஷ்ணன் வசந்த் மற்றும் எடிட்டர் - பிரவீன் ஆண்டனி ஆகியோருக்கு எனது மிகப்பெரிய நன்றியும் பாராட்டுக்களும்” . 

 “ஸ்வீட் காரம் காபி-ன் கதை தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. . மனிதர்கள் மேம்பாடடையும் போது , உறவுகளும் குடும்பமும் அதற்கிணையாக மேம்பாடு காணவேண்டும். அதில் ஒரு சிலர் ஆர்வத்துடன் அந்த மாற்றத்தில் ஒன்றிணைந்து கொள்கிறார்கள், வேறு சிலர் அதற்கான மனோ தைரியத்தை மெல்ல மெல்ல கந்தடைக்கிறார்கள், மேலும்  சிலர் கத்தி கூப்பாடு போட்டு சண்டைக்குச் செல்கிறார்கள். லட்சுமி மேடம் , மது மற்றும் சாந்தி போன்ற மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் மூலமும் மற்றும் அதற்கு சற்றும் குறையாத இந்தக் கடகியில் தங்களை முழுமையாக ஈட்படுத்திக் கொண்ட ஒரு மிகச் சிறந்த குழுவினருடனும் இணைந்து இந்த பலதரப்பட்ட மக்களின் குணாதிசயங்களை, குறிப்பாக எனது முதல் வெளிப்புற படப்பிடிப்பில், புத்தாய்வு செய்தது இந்தத் தொடரைப் போலவே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதைக் கவரும் விதமாகவும் இருந்தது. என்று இதன் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது எபிசோடுகளின்  இயக்குனர் சுவாதி ரகுராமன் கூறினார்.

ஸ்ட்ரீமிங்கில் முதன் முறையாக அறிமுகமாகிய, இளமை மாறா நட்சத்திரமான லக்ஷ்மி கூறுகையில், “நான் பல பத்தாண்டுகள் நீடித்த  பிரபலமான தொழில் வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஸ்வீட் காரம் காபி மூலமான  எனது ஸ்ட்ரீமிங் அறிமுகம்  நிச்சயமாக சிறப்பான ஒன்றாக அமையும். சுதந்திரமான  மனப்பான்மை, சுதந்திரமான எண்ணங்கள்  மற்றும் உங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை என்ற அடிப்படையிதான் நாம் அனைவரும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் - சுந்தரி அவற்றை மிகச் சிறந்த வடிவத்தில் பிரதிபலிக்கிறது. பல வழிகளில் என்னை எனது எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில்  ஒரு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது உண்மையிலேயே புத்துணர்ச்சியளிப்பதாக இருந்தது. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற , இந்தத் தொடரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மனம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” 

இந்தக் கதை,  இதன் கதா மாந்தர்கள் மற்றும் இந்த இல்லம் அனைத்தையும்  ஒன்றிணைக்கும் ஒரு மரபார்ந்த பாத்திரத்தில் தோன்றிய மது,  கூறினார் “காவேரி மற்ற எல்லாவற்றையும் விட தனது குடும்பத்தை பெரிதும் நேசிக்கும், ஒரு பொறுப்பான இல்லத்தரசி. அனைவரையும்கவனித்துக்கொள்கிறாள்,  ஆனால் வாழ்க்கைப் பாதையில் ஏதோ ஒரு இடத்தில் தன்னை இழந்து விட்டிருப்பதை உணர்கிறாள்  . எனவே, அவளது மாமியார் மற்றும் மகள் ஒரு திடீர் சாலைப் பயணத்தில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அவளை சமாதானப்படுத்திய போது, இந்த பயணத்தை தனக்காகவென்றே  தொடங்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் அவளுக்குள் தோன்றுகிறது.

கருத்துருக்களின் உள்ளடக்கத்தை நாம் உருவாக்குவது மற்றும் அனுபவிப்பது போன்ற வழிமுறைகளை ஸ்ட்ரீமிங்  புரட்சிகரமாக்கியுள்ளது. மேலும் பிரைம் வீடியோ ஸ்வீட் காரம் காஃபி  போன்ற பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு நம்பமுடியாத அளவிலான உத்வேகத்தை அளித்துள்ளது. காலாவதியாகிப் போன, வழக்கமான மரபுகள் மற்றும் சமூக எதிர்பார்ப்பு போன்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய உங்கள் வீட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு உங்களை நீங்கள் மீண்டும் கண்டறிவது மற்றும் வாழ்க்கையை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த  ஒரு பயணத்தின் அழகான கதையாகும். இந்தத் தொடரில் பங்குபெற்று அதன் ஒரு பகுதியாக விளங்கியது எனக்கு மிகவும் பயனுள்ள ஒரு அனுபவமாக இருந்தது.  

மேலும் எனக்காகவே உருவாக்கப்பட்டது  போல, மிகவும் நுணுக்கமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பொறுமையான ஒரு கதா பாத்திரத்தை எனக்கு வழங்கியமைக்காக ரேஷ்மாவையும், பிரைம் வீடியோவையும் கொண்டு நான் மிகவும் பாராட்டுகிறேன். 

"நாடு முழுவதையும் சுற்றிவரும் ஒரு பயணத்தை - ஒரு இளம் பெண், அவளுடைய தாய் மற்றும் அவளுடைய பாட்டி – தொடங்கும் மூன்று தனித்துவமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களோடு, சேர்ந்து கொள்ள பார்வையாளர்களுக்கு ஸ்வீட் காரம் காபி அழைப்பு விடுகிறது. ஒவ்வொரு பெண்ணும்  தங்களை தனிப்பட்ட முறையில் கண்டறியும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள், மேலும்தங்களை கண்டறியும்  அவர்களின் இந்த சாகசப் பயணத்தின் இடையில் வாழ்நாள் முழுவதும் ஆறுதல் மற்றும் ஆதரவை வழங்க உறுதியளிக்கும் ஒரு தோழமை உணர்வை நிலைநாட்டுகிறார்கள்” நுணுக்கமான, நன்கு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றும் வாய்ப்பு நடிகர்களான எங்களுக்கு கிடைத்தது.

கதாபாத்திரங்களின் குறிப்பிட்ட வகையிலான  கண்ணோட்டம், அனுபவங்கள் மற்றும் மனத் தடுமாற்றங்கள் நம்மோடு தொடர்புபடுத்திக்கூடியவைகளாக இருந்தது. இந்த மிகச்சிறந்த  நடிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெற்ற வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்; மேலும் தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களின் மனதை ஆக்கிரமிக்கப் போகும் ஆற்றலைக் கொண்ட மன நிறைவளிக்கும் திரைப்படத்தை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.*பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது*

கதாபாத்திரங்களின் குறிப்பிட்ட வகையிலான  கண்ணோட்டம், அனுபவங்கள் மற்றும் மனத் தடுமாற்றங்கள் நம்மோடு தொடர்புபடுத்திக்கூடியவைகளாக இருந்தது. இந்த மிகச்சிறந்த  நடிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெற்ற வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்; மேலும் தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களின் மனதை ஆக்கிரமிக்கப் போகும் ஆற்றலைக் கொண்ட மன நிறைவளிக்கும் திரைப்படத்தை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன்

 வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “  செல்அம் எழுதி இயக்குகிறார்.

தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி  மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “

 இந்த படத்தில் 2K கிட்ஸின் நிஜ கதாநாயகன்  பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.

நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார் 

ஒளிப்பதிவு கொளஞ்சி குமார்  

ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – செல்அம் 

(இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன்.

ஜூலை மாதம் இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

TT.F வாசனின் பிறந்தநாளான நேற்று “ மஞ்சள் வீரன் “  படத்தின் பூஜையும் மற்றும் FRIST LOOK வெளியீடும் நடைபெற்றது.

Thursday 29 June 2023

Insidious: The Red Door to release on 6th July 2023 in India

 *Insidious: The Red Door to release on 6th July 2023 in India!*

_A day prior to its US release!_

*In a special treat for horror fans, the first show will be showcased at 12 am midnight!*

Link: https://www.instagram.com/p/CuEAciDAbAl/

In ‘Insidious: The Red Door’, the horror franchise’s original cast will be seen together for the last time, as they complete the Lambert family’s bone-chilling and dreadful story. The starcast reuniting for the final chapter has intrigued the audiences to a whole new peak and owing to the excitement of the fans and love for the horror genre in the Indian market, the makers have decided to release the film on 6th July 2023, which is a day prior than it’s international release. 

The film continues a few years after the terrifying event that horrified the Lambert family. The original cast from Insidious is back with Patrick Wilson (also making his directorial debut), Ty Simpkins, Rose Byrne and Andrew Astor. Also starring Sinclair Daniel and Hiam Abbass. Produced by Jason Blum, Oren Peli, James Wan and Leigh Whannell. The screenplay is written by Scott Teems from a story by Leigh Whannell and Scott Teems, based on characters created by Leigh Whannell.

*Sony Pictures Entertainment India releases Insidious: The Red Door exclusively in cinemas on July 6, 2023, in English, Hindi, Tamil and Telugu.*

Ondraga Entertainment ஒரிஜினல்ஸின் சமீபத்திய வரவு: ’முத்த பிச்சை’

 *Ondraga Entertainment ஒரிஜினல்ஸின் சமீபத்திய வரவு: ’முத்த பிச்சை’ மனதைக் கவரும் மெலடி!*

Ondraga Entertainment பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட அடுத்த சுயாதீன பாடலின் வெளியீட்டை அறிவிப்பதில் Ondraga ஒரிஜினல்ஸ் பெருமிதம் கொள்கிறது. இந்த வசீகரிக்கும் பாடலுக்கு 'முத்த பிச்சை' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, கருத்துருவாக்கம் செய்து இயக்கியவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த பாடல் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். 

வெற்றிப் படமான ’பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்த சந்தோஷ் மற்றும் திறமையான ஊர்மிளா கிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பாடலில் நடித்துள்ளனர். காட்சிகள் உண்மையிலேயே கண்களைக் கவரும்படியும், இதன் பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாகவும் இதன் மெல்லிசை பாடலுக்கு உயிரூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

பாடலுக்கு விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்க, குமார் கங்கப்பன் கலையை கவனித்துள்ளார். இதுமட்டுமல்லாது, பிருந்தாவின் நடன அமைப்புடன் ஆண்டனியின் எடிட்டிங்  இந்தப் பாடலை மேலும் மெருகூட்டியுள்ளது. 

ஜூன் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் இசை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்த பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பாடலின் சக்திவாய்ந்த குரல் மற்றும் நேர்த்தியான கதை சொல்லல் ஆகியவை ஒன்றாக இணைந்து பார்வையாளர்களின் உணர்ச்சிகளை ஊடுருவும் வகையில் அமைந்துள்ளது.

Ondraga Entertainment தரமான உள்ளடக்கத்தை தயாரிப்பது மற்றும் அதன் Ondraga ஒரிஜினல்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் சுயாதீன இசையைத் தொடர்ந்து தயாரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வெளியீட்டின் போதும், படைப்பாற்றலின் எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் தனித்துவமான மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளைக் கொண்டுவர Ondraga சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

’முத்த பிச்சை’ பாடல் இப்போது அனைத்து முக்கிய இசை தளங்களிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்த பாடலின் மாயாஜாலத்தை அனுபவியுங்கள் மற்றும் Ondraga  ஒரிஜினல்ஸின் மெல்லிசைகள் உங்கள் காதல் மற்றும் இசை உலகத்தின் மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லட்டும்.

Ondraga Entertainment Presents: "MUTHTHA PICHCHAI" A Soul-Stirring Melody - The latest

 Ondraga Entertainment Presents: "MUTHTHA PICHCHAI" A Soul-Stirring Melody - The latest offering from Ondraga Originals

Ondraga Originals is proud to announce the release of its next independent song, produced under the banner of Ondraga Entertainment. This captivating song, 'Muththa Pichchai', is composed, performed, produced, conceptualized, and directed by filmmaker Gautham Vasudev Menon, with its lyrics penned by the ingenious lyricist Madhan Karky.

The music Video stars Santhosh, who gave a remarkable performance in the blockbuster Ponniyin Selvan films, and the talented Urmila Krishnan. The visuals truly breathe life into the passionate lyrics and energetic melody.

The mesmerizing video of the song showcases cinematography by Vishnu Dev, Art by Kumar Gangappan, editing by Anthony with Brinda's choreography.  

Released on the 29th of June, 2023, the song has garnered unanimous praise and admiration from music lovers and critics alike. Its enchanting composition, combined with powerful vocals and impeccable storytelling, has struck a chord with audiences, resonating deeply with their emotions.

Ondraga Entertainment, known for its commitment to producing quality content, continues to produce and promote independent music through its Ondraga Originals platform. With each release, they strive to bring unique and soulful melodies that push the boundaries of creativity and resonate with audiences worldwide.

The song is now available for streaming on all major music platforms. Experience the magic of this exceptional creation and let the melodies of Ondraga Originals transport you to a world of romantic and musical delight.

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 ரேகா நடிக்கும் 'மிரியம்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'கடலோர கவிதைகள்' ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'மிரியம்மா' எனும்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

தாய்மை தவம்.. குழந்தை வரம்...

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு  ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ரஞ்சித் மேற்கொண்டிருக்கிறார்.  தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும்  மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நடிகை ரேகா அழுத்தமான வேடத்தில்  நடிப்பதால், 'மிரியம்மா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் 'மிரியம்மா' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ரேகாவின் தோற்றம்.. அர்த்தமுள்ளதாக இருப்பதால் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய ஆவலை தூண்டி இருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' பெண்ணாக பிறந்து ஒவ்வொருவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக்கோடான இவ்விசயத்தில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் சவால்கள் தான் இப்படத்தின் கதை. '' என்றார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

 ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2'

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கும் இந்த 'சந்திரமுகி 2' படத்திற்கும், பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் புதிய திரைப்படம்

 ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் புதிய திரைப்படம்

Trending entertainment & White horse studios K. சசிகுமார்   தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. 

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின்  சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான  விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, இயக்குநர்கள் P.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சகோ கணேசன் இயக்குகிறார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின்  எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். நாய் சேகர், விலங்கு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். யானை, சினம் படப்புகழ்  கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். இப்டத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

A new-fangled Hyperlink Crime-Thriller Movie

 *A new-fangled Hyperlink Crime-Thriller Movie* 

Trending Entertainment & White Horse Studios  K. Sasikiumar are producing a new project, written and directed by Sago Ganesan. The yet-to-be-titled movie features Vidharth, Kalaiyarasan, Santhosh Prathap and Trigun as the lead characters. The shooting of this hyperlink crime thriller commenced recently and is progressing at a rapid pace in and around Chennai. 

According to the chaos theory, a small thing or element can make a huge difference and impact and the screenplay has been created befitting this premise accordingly. The film revolves around the complex situation of four characters that are linked to a murder. This Hyperlink thriller encapsulates the murder mystery and crime thriller genres together featuring promising actors like Vidharth, Kalaiyarasan, Santhosh Prathap, Trigun, John Vijay, Teju Ashwini, Athulya Chandra, Swetha Dorathy, Radha, and many more prominent actors. 

Sago Ganesan, a former associate of eminent filmmakers P Vasu and Thankar Bachan is helming this project. NS Udhayakumar of Kodiyil Oruvan and Kurangu Bommai fame is handling the cinematography for this movie, which has editing works handled by V Ramar (Asuran, Viduthalai fame). Super Singer Ajeesh, who composed music for Nai Segar and Vilangu web series is the music composer for this movie. Michael, who wowed us with his tremendous art direction in the films like Yaanai and Sinam is overseeing art department works. The film is produced jointly by Trending Entertainment and White Horse Studios K Sasikumar. 

The film’s first leg of shooting which recently commenced in Chennai is briskly progressing as planned by the makers.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப்

 பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மகன் சந்தான கிருஷ்ணன் மற்றும் பிரவத் குமார் மிஷ்ரா-மாதுரி மிஷ்ரா தம்பதியரின் மகள் மனினி மிஷ்ராவின் திருமணம் சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையாட் நட்சத்திர விடுதியில் இன்று காலை 8.15 மணிக்கு இனிதே நடைபெற்றது. 

மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். 

மணிரத்னம்-சுஹாசினி, ராஜீவ் மேனன், ரவிவர்மன், சிவகுமார், கார்த்தி சிவகுமார், ஜீவா, ஆர் டி ராஜசேகர், ஸ்ரீகர் பிரசாத், சுதா கொங்கரா, இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், சாபு சிரில், ஏ ஆர் முருகதாஸ், மேனகா சுரேஷ், தயாரிப்பாளர் தாணு, காளிதாஸ் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர், சத்யஜோதி தியாகராஜன், சுரேஷ் பாலாஜி, பிரியதர்ஷன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் ரவி கே சந்திரன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.