Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Sunday 30 April 2023

மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது

 "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது


ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.


இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.






"மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. 


முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரூபாக்‌ஷா பத்திரிகையாளர் சந்திப்பு

 *விரூபாக்‌ஷா  பத்திரிகையாளர் சந்திப்பு*

*''நான் சென்னை பையன்''- 'விரூபாக்‌ஷா’ நாயகன் சாய் தரம் தேஜ்*

*''தமிழும், தமிழ்நாடு எனக்கு பிடிக்கும்''- நடிகை சம்யுக்தா*

*''கதை தான் கதாநாயகன்'' - ''விரூபாக்‌ஷா’தயாரிப்பாளர் பேச்சு.*







*''எனக்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேசன்''- 'விரூபாக்‌ஷா’  நாயகன் சாய் தரம் தேஜ்.*


''நான் சென்னை பையன் தான். 'விரூபாக்‌ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்'' என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார்.


தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. 


அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.


ஏப்ரல் 21ஆம் தேதியன்று தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம், வெளியான ஒரு வாரத்திற்குள் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத், இயக்குநர் கார்த்திக் வர்மா, நடிகை சம்யுக்தா, படத்தின் நாயகனான சாய் தரம் தேஜ் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில், ''  தமிழில் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என முப்பத்தைந்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இயக்குநர் எஸ் பி முத்துராமன், அகத்தியன் உள்ளிட்ட பலருடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் சரியான வாய்ப்பு அமையவில்லை. தற்போது ' ‘விரூபாக்‌ஷா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். இந்த திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.'' என்றார்.


தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், '' இந்தத் திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தெலுங்கில் வெளியானவுடன் அன்றே பார்த்தேன். இரண்டேகால் மணி நேரத்திற்கு ஒரு புதிய உலகத்திற்கு சென்று வந்த அற்புதமான அனுபவத்தை அளித்தது. தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத் கதையின் மீது நம்பிக்கை வைத்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். 'புஷ்பா' இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, அறிமுக இயக்குநர் கார்த்திக்கின் இயக்கம், சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தாவின் நடிப்பு.. என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது.  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை தொடர்பு கொண்டு இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் இந்த திரைப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதேபோன்ற வெற்றியை தமிழிலும் சாத்தியமாக்க வேண்டும் என ஞான வேல் ராஜா விரும்பினார். இந்தத் திரைப்படம் 'அருந்ததி' மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம். தமிழ் ரசிகர்களுக்கு மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்‌ஷா’ 'நிச்சயமாக பிடிக்கும். ‘விரூபாக்‌ஷா’  எனும் டைட்டில் பவர்ஃபுல்லாக இருக்கிறது. படத்தின் டப்பிங் பணிகளை விரைவாக நிறைவு செய்து படத்தை மே மாதம் 5 ஆம் தேதிக்கு வெளியாகும் வகையில் திட்டமிட்டு உழைத்த தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார்.  தமிழில் 'அருந்ததி முதல் ஆர் ஆர் ஆர் 'படம் வரை ஏராளமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்த ‘விரூபாக்‌ஷா’ படமும் இடம்பெறும்.'' என்றார்.


நாயகன் சாய் தரம் தேஜ் பேசுகையில்,'' நான் சாதாரண சென்னை தி. நகர் பையன் தான். 91ல் அடையாறில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் தமிழில் நாயகனாக வெற்றி பெற வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன்.  அந்தக் கனவு ‘விரூபாக்‌ஷா’  படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் வெற்றியை பெற்றது போல், தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தமிழில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து, எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்ததற்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன். அவர் நடித்த 'சந்திரமுகி' படம், கதையின் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்த படத்திலும் கதையின் நாயகிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு வித்தியாசமான கதையும், சுகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் காரணம்'' என்றார்.


நடிகை சம்யுக்தா பேசுகையில், ''  எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் பிடிக்கும். 'வாத்தி' படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். ஒரு திரைப்படம் வெளியாகி அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் '‘விரூபாக்‌ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம். ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், ஒலி... என அனைத்தின் சிறப்பம்சங்களும் திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓ டி டி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன், தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.


இயக்குநர் கார்த்திக் வர்மா பேசுகையில், '' தமிழ் மொழியில் இயல்பாக பேச வராது. இருந்தாலும் தமிழ் திரைப்பட ஆளுமைகளான மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என ஏராளமான திறமையாளர்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் மக்களின் திரைப்பட ஆர்வம்  எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் வெளியான 'பீட்சா', நயன்தாரா நடித்த 'மாயா' ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்திற்கு சுகுமார் சாரின் திரைக்கதை வெற்றி பெற வைத்திருக்கிறது. முதலில் நாயகனை சந்தித்தபோது அவர் என்னிடமிருந்து காதல் கதையைத்தான் எதிர்பார்த்தார். ஆனால் நான் '‘விரூபாக்‌ஷா’ கதையைச் சொல்லும் போது, முதலில் தயங்கி பிறகு ஒப்புக்கொண்டார். இந்த திரைப்படம், திரையரங்கிற்கு வருகை தந்து கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். தெலுங்கு ரசிகர்கள் ரஜினி சார், கமல் சார், சூர்யா சார், கார்த்தி சார்.. ஆகியோருக்கு வரவேற்பும், ஆதரவும் அளித்தது போல், தமிழ் ரசிகர்கள் சாய் தரம் தேஜுக்கும் ஆதரவும், வரவேற்பும் அளிப்பார்கள். '' என்றார்.

Saturday 29 April 2023

மா சீதா நவமி'யை கொண்டாடும் வகையில், 'ராம் சியா ராம்'

 *'மா சீதா நவமி'யை கொண்டாடும் வகையில், 'ராம் சியா ராம்' எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.*


இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் 'மா சீதா நவமி' என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 'ஆதி புருஷ்' படக் குழுவினர், சீதா தேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரத்யேக மோசன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு- தன்னலமற்ற தன்மை- துணிச்சல் மற்றும் தூய்மையின் பிம்பமாக திகழும் சீதாதேவியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கிருத்தி சனோன்  பிரத்யேகமாகத் தோன்றும் மோசன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் இதனுடன் 'ராம் சியா ராம்..' எனும் பக்தி கலந்த மெல்லிசையின் முன்னோட்டத்துடன் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள். 




ஸ்ரீராமராக நடித்திருக்கும் பிரபாஸிற்கு துணைவியாக ஜானகி எனும் சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருக்கிறார். மோசன் போஸ்டரில் இவரது தோற்றம், தூய்மை- தெய்வீகம் மற்றும் அந்த கதாபாத்திரத்தின் துணிச்சலையும் பிரதிபலிக்கிறார். மேலும் இதனுடன் 'ராம் சியா ராம்' எனும் பக்தி உணர்வு மிக்க மெல்லிசை ஒலிப்பது... ஸ்ரீராமர் மீது சீதாதேவி வைத்திருக்கும் அசைக்க இயலாத பக்தியினை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. இந்த மோசன் போஸ்டர், பார்வையாளர்களை ஆன்மீகம் மற்றும் பக்தி உணர்வு மிக்க உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மேலும் இந்த  பாடலை சச்சே- பரம்பரா எனும் குழுவினரால் இசைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிசன்குமார் ,ஓம் ராவத், பிரசாத் சுதார் இவர்களுடன் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படுகிறது.

திரைப்பட நடிகர், நண்பர் அஜித் குமார் அவர்களை வைத்து

 திரைப்பட நடிகர், நண்பர் அஜித் குமார் அவர்களை வைத்து எண்ணற்ற திரைப்படங்களையும் என் மகன் சிலம்பரசனை வைத்து காளை, வாலு போன்ற படங்களையும் மற்றும் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து தனக்கென்று ஒரு வரலாறு படைத்த நிக் ஆர்ட்ஸ் S.S.சக்ரவர்த்தி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என மனதிற்கு அதிர்ச்சி அளித்தது.



அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


இப்படிக்கு, 

டி. ராஜேந்தர் M.A,

தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,

கௌரவ ஆலோசகர்,

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.

ONE LAST TIME, ONE LAST RIDE

 *ONE LAST TIME, ONE LAST RIDE!*


*ADVANCE BOOKING OF MARVEL STUDIOS’ GUARDIANS OF THE GALAXY VOLUME 3 OPENS ACROSS INDIA TODAY - BOOK YOUR TICKETS NOW!*


The advance booking of Marvel Studios’ much waited fun big-ticket entertainer ‘Guardians of the Galaxy Volume 3’ has opened nationwide. Early reactions to the film, call it the most 'emotional', 'full of heart' and 'exciting movie of the franchise'. This marks the last journey of this crazy band of misfits riding together. 


Fans are going to be in for an emotional and fun roller coaster ride, coming next week. 


*Official announcement link:* https://www.instagram.com/p/Crm8bqjyFGa/


The film stars Chris Pratt, Zoe Saldana, Dave Bautista, Karen Gillan, Pom Klementieff, featuring Vin Diesel as Groot, Bradley Cooper as Rocket, Sean Gunn, Chukwudi Iwuji, Will Poulter and Maria Bakalova.

 

James Gunn is the director and also wrote the screenplay. Kevin Feige produces with Louis D’Esposito, Victoria Alonso, Nikolas Korda, Sara Smith, and Simon Hatt serving as executive producers. 


Marvel Studios’ “Guardians of the Galaxy Vol. 3” releases in India on 5th May 2023 in English, Hindi, Tamil and Telugu. Only in Cinemas.

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்

 மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர் வெளியிட நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ‘கள்வா’ குறும்படத்தின் இயக்குனர் ஜியா, இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், ஒளிப்பதிவாளர் ஷரண் தேவ்கர் சங்கர், கதாநாயகி அட்சயா ஜெகதீஷ், கதாசிரியர் அப்சல், இணை இயக்குனர் ரெங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 




விழாவில் அஜ்மல் பேசும்போது, ‘குறும்படங்கள்தான் இப்போதெல்லாம் பெரிய படங்களாக வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருகின்றன. அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் ‘கள்வா’ குறும்படமும் பெரிய திரைக்கு வர வேண்டும், சாதிக்க வேண்டும். இதற்காக இயக்குனர் ஜியா மற்றும் அவரது படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.


நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசும்போது, ‘கள்வா குறும்படம், ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என நம்புகிறேன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஜியா சார், இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்’ என்றார்.


நடிகர் ஸ்ரீமன் பேசும்போது, ‘பெரிய படம், குறும்படம், மீடியம் படம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. படம் கொஞ்சமாக நன்றாக இருந்தாலே அதை பெரிய வெற்றிப் படமாக மக்கள் கொண்டாட தவறுவதில்லை. இன்று நிறைய குறும்படங்கள்தான் பெரிய படங்களுக்கு ஏணிப்படியாக அமைகின்றன. அந்த வகையில் ‘கள்வா’ படமும் ஃபீச்சர் ஃபிலிமாக வர வேண்டும். அதற்காக ஜியாவுக்கும் ‘கள்வா’ படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மே மாதம் 5ம் தேதி வெளியாகும் எங்கள் ‘தீர்க்கதரிசி’ திரைப்படம் தனியாக வந்து ஜெயிக்கலாம் என நினைத்திருந்தோம். இந்த நிலையில் ‘கள்வா’ குறும்படமும் இந்த மாதமே ரிலீஸ் ஆவதால் ஒரு பயம் வந்திருக்கிறது. அதுதான் குறும்படத்துக்கான ஒரு பவர்’ என்றார்.


நடிகர் துஷ்யந்த் பேசும்போது, ‘எந்த படமாக இருந்தாலும் அதற்கு மீடியாவின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் ‘கள்வா’ குறும்படத்துக்கும் எங்களது ‘தீர்க்கதரிசி’ படத்துக்கும் நீங்கள் (மீடியா) ஆதரவு தர வேண்டும்’ என்றார்.


நடிகர் ஜெய்வந்த் பேசும்போது, ‘கள்வா படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். வரும் 5ம் தேதி ‘தீர்க்கதரிசி’ படம் வெளியாகிறது. எங்கள் படத்துக்கும் ‘கள்வா’வுக்கும் உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை’ என்றார்.


‘கள்வா’ இயக்குனர் ஜியா பேசுகையில், ‘இது ரொமான்டிக் திரில்லர் கதை கொண்ட படம். வழக்கமான குறும்படங்களிலிருந்து இது மாறுபட்டு, ஒரு ஃபீச்சர் ஃபிலிம் போலவே இருக்கும். இதில் கருத்து எதுவும் கூறவில்லை. முழுக்க முழுக்க என்டர்டெயினர்தான். ‘கள்வா’ என்பதற்கு திருடன் என்று அர்த்தம் என சிலர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். கள்வா என்றால் மனதை கொள்ளையடித்தவன் என்று பொருள். இது சங்க இலக்கியத்திலிருந்து எடுத்த தலைப்பு. இந்த கதைக்கு இந்த தலைப்புதான் சிறப்பாக இருக்கும் என்று எழுத்தாளர்கள் சுபாவும் தெரிவித்தார்கள். எழுத்தாளர் அப்சல் எழுதிய ‘ஹவுஸ் அரெஸ்ட்’ என்ற சிறுகதையின் ‘நாட்’எடுத்துக்கொண்டு, இதற்கு நான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். இதில் ஹீரோவாக ‘181’ உள்பட சில படங்களில் நடித்துள்ள விஜய் சந்துரு நடித்திருக்கிறார். மாடலும் குறும்பட நடிகையுமான அட்சயா ஜெகதீஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எனது படக்குழுவை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஷரண், இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், எடிட்டர் பிரேம், இணை இயக்குனர் ரெங்கா, உதவி இயக்குனர்கள் செல்வா, திலீப் உள்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த குறும்படத்தை ஃபீச்சர் ஃபிலிமாக எடுத்தால் கார்த்தி ஹீரோவாகவும் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம். காரணம், இந்த கதைக்கு அவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள். இந்த குறும்படத்துக்கு மீடியாவின் ஆதரவு தேவை. உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.


கள்வா டெக்னீஷியன்கள்:


கதை - அப்சல். எடிட்டிங் - பிரேம். இசை - ஜேட்ரிக்ஸ். ஒளிப்பதிவு - ஷரண் தேவ்கர் சங்கர். இணை இயக்கம் - ரெங்கா. கலை - செல்வா. திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜியா.


நடிப்பு: விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால்.

Friday 28 April 2023

The Minister for Youth Welfare and Sports Development Udhayanidhi Stalin met

 The Minister for Youth Welfare and Sports Development Udhayanidhi Stalin met and felicitated Ms. Rindhiya V, a Chess player from Tamil Nadu who has participated and won prizes in various International and National level Chess Tournaments including Commonwealth Chess Championship and National Chess Championship on Wednesday, 




12th April 2023 at Jawaharlal Nehru Stadium, Chennai. Dr. Padmavathi.S, Principal and Dr. S. Rukmani, Vice Principal of Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women, T. Nagar, Chennai accompanied Ms. Rindhiya V during the meet up

சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின்

 சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி வே.ரிந்தியா அவர்கள், ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, 




அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெள்ளி, தங்கம், மற்றும்  வெண்கலப்பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவ்வாறு உலகளவில் தமிழகத்தின் பெருமைதனை பறைசாற்றிக் கொண்டிருக்கும் வே.ரிந்திகா அவர்கள் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஷசுன் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தமிழகத்தின்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவரின் வாழ்த்துதலையும் பாரட்டுதலையும் பெற்றார்.

Thursday 27 April 2023

உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும்

 *'உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்' என இந்த தொடரின் ஷோ ரன்னரான டேவிட்  வெயில் தெரிவித்திருக்கிறார்.*


ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் 'சிட்டாடெல்'. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO இந்த இணைய தொடருக்கான பிரத்யேக கதை சொல்லலை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த இணைய தொடர் இந்திய மற்றும் இத்தாலிய நாட்டின் தயாரிப்பாகவும், புத்திசாலித்தனத்துடன் இணைக்கும் பரபரப்பான உளவு தொடராகவும் உருவாகி இருக்கிறது. மேலும் இது உளவு பார்த்தலில் பிரத்யேக பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் குறிப்பிடுகிறது. 



பரபரப்பான ஸ்பை திரில்லரான சிட்டாடெலை உலகளாவிய படைப்பாக உருவாக்கியதில், அமேசானின் ஒரிஜினல் தொடர்பான 'ஹண்டர்ஸை' உருவாக்கிய ஷோ ரன்னரான டேவிட் வெயில் முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். மேலும் 'சிட்டாடெல்' இணைய தொடரின் 'கிரியேட்டிவ் ஸ்பை மாஸ்டர்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது நுட்பமான வழிமுறை, கதை சொல்வதில் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு... ஆகியவற்றால் இந்த இணையத் தொடரை நேர்த்தியாக வடிவமைப்பதில் சிறந்த ஒத்துழைப்பை அவர் வழங்கி இருக்கிறார். 


'கிரியேட்டிவ் ஸ்பை மாஸ்டர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது குறித்து ஷோரன்னரான டேவிட் வெயில் பேசுகையில், '' நாங்கள் உருவாக்கும் இந்த முழுமையான உளவு பிரபஞ்சத்தில் வசனம் உள்ளிட்ட அனைத்து விசயங்களையும் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றிருக்கிறோம். உலகம் முழுவதும் இந்திய தொடரையும், இத்தாலிய தொடரையும் அறிவித்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் உள்ள தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிருக்கிறோம். மேலும் முழு கதையையும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறோம். இந்த இணையத் தொடரில் வெவ்வேறு கலாச்சாரங்கள் மூலம் வெவ்வேறு மொழிகளில் சொல்லப்பட்ட விசயங்கள் உண்மையானது. நாம் கதையை பார்வையிடும் போது.. மேற்கத்திய கண்ணோட்டம் மட்டுமல்லாமல், உண்மையான அசல் தொடர் ஒன்றினை பார்வையிடுவதைப் போல் ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கிறோம். சக படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இதை சாத்தியமாக்கியிருப்பது அசாதாரணமானது'' என்றார். 


ரூசோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியரால் உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்கள் கொண்ட 'சிட்டாடெல்' எனும் இணைய தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் வெளியாகிறது. இந்த உலகளாவிய இணைய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.

Puratchi Thalapathy meets Thalapathy!

 Puratchi Thalapathy meets Thalapathy! 


Ahead of the release of the teaser of actor Vishal's upcoming film 'Mark Antony' at 06:30 PM today, Thalapathy Vijay met the film's crew who wanted to show the teaser of the film to him. 

 

Describing the meeting, Puratchi Thalapathy Vishal said, "Thalapathy Vijay was happy to see the teaser of Mark Antony and appreciated the team a lot. He said that he was pleased to do this for him as he considered him his dear friend." This kind gesture of Thalapathy Vijay moved the crew present there. 










Thalapathy Vijay was presented with a bouquet by the team, while Puratchi Thalapathy Vishal, as always, refrained from gifting a bouquet, instead presented Thalapathy Vijay with a receipt for serving food at the Mother Teresa Nursing Home in his name.

 

Following this, actor Vishal told actor Vijay that his long-time desire to direct a film started with 'Thupparivalan 2' and that he would continue to direct films and has also prepared two stories for the star. Mightly impressed with the former's conviction to direct films, the latter gave his consent to act in his direction and said, "Nanba! Let's travel together in this beautiful journey called Cinema". 


During this meeting Vinod Kumar, producer of 'Mark Antony', director Adhik Ravichandran, cinematographer Abhinandan Ramanujam and executive producer Harikrishnan were also present.

தளபதியை சந்தித்த புரட்சி தளபதி

 தளபதியை சந்தித்த புரட்சி தளபதி....


நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும்  “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர்  இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவருவதை தொடர்ந்து நடிகர்  ''தளபதி" விஜய் அவர்களை சமீபத்தில்  "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது உடனே  அழைப்பு விடுத்தார்.

 










 புரட்சி தளபதி விஷால் - தளபதி விஜய்   சந்திப்பின் போது  "மார்க் ஆண்டனி"  திரைப்படத்தின் டீஸர் கண்டு  மகிழுந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால் அவர்களிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று  விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.  

 

அதன் பின் தனது  நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை   "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம்  கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக  நடிகர்  விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது  "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்"  என்று  விஜய் கூறி மேலும் உற்சாக படுத்தினர்.


இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர்  அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

தளபதியை சந்தித்த புரட்சி தளபதி

 *தளபதியை சந்தித்த புரட்சி தளபதி....*


*நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும்  “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர்  இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவருவதை தொடர்ந்து நடிகர்  ''தளபதி" விஜய் அவர்களை சமீபத்தில்  "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது உடனே  அழைப்பு விடுத்தார்.*

 










 புரட்சி தளபதி விஷால் - தளபதி விஜய்   சந்திப்பின் போது  "மார்க் ஆண்டனி"  திரைப்படத்தின் டீஸர் கண்டு  மகிழுந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால் அவர்களிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று  விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.  

 

அதன் பின் தனது  நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை   "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம்  கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக  நடிகர்  விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது  "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்"  என்று  விஜய் கூறி மேலும் உற்சாக படுத்தினர்.


இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர்  அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

In Less than 24 hours, the screens will get

 In Less than 24 hours, the screens will get emblazoned with the reign of Cholas! Tickets sold like hot cakes for opening weekend. 


#Manirathnam's #PonniyanSelvan2 worldwide release from tomorrow.






















#CholaTour #CholasAreBack 

#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX 


🌟 @chiyaan @actor_jayamravi @Karthi_Offl #AishwaryaRaiBachchan @trishtrashers #AishwaryaLekshmi #SobhitaDhulipala