Featured post

காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன்

 காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம்....

Thursday, 31 July 2025

சமகால அரசியலை பேச வரும் "நாளை நமதே"*

 *சமகால அரசியலை பேச வரும்  "நாளை நமதே"*






ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம்

சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.


 அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார்.



தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு,  ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில்  அரசியல்படங்கள் பெரு வெற்றியையும் பெற்றிருக்கின்றன.


நாளை நமதே படம் முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 


தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும், அதிலும் பெண்கள் அரசியல்படுத்தப்படுவதும் , அரசியல்படுவதும்  காலத்தின் கட்டாயம் . அந்த கருத்தை இந்தப்படம் வலியுருத்துகிறது.


அரசியல் படம் என்றால் எப்போதும் ஆர்ப்பாட்டம், அழுகை என்றில்லாமல்  நகைச்சுவையும், நையாண்டியும் எளிய மனிதர்களின் வாழ்வியலும் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.



கிராமத்து மனிதர்களின் குரூரமான பக்கங்களும் இன்னும் ஆழமாக பதிந்திருக்கும் பிற்போக்குத்தனங்களையும் இந்தப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது.


நடிகர்களோடு நிஜ கிராமத்து மனிதர்கள் பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.


இத்திரைப்படம் பல உலக சினிமா விழாக்களில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,  சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலோர்  புதுமுகங்களாக இருப்பது படத்திற்கு பெரும் பலம்.


நிஜமான ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். விரைவில் திரையில் வெளிவரவிருக்கிறது  நாளை நமதே திரைப்படம்.

Sathya Jyothi Films family, which has been delivering blockbuster films to the top stars of

 Sathya Jyothi Films family, which has been delivering blockbuster films to the top stars of Tamil cinema for four generations, continues its great legacy*



*Sathya Jyothi Films continues its success journey with 'Thalaivan Thalaivi', starring Vijay Sethupathi and Nithya Menen and directed by Pandiraj, which is running successfully in theatres*


Renowned for delivering blockbuster hits across four generations to the biggest stars of Tamil cinema, Sathya Jyothi Films once again proves its golden touch with its latest release, 'Thalaivan Thalaivi'.


Starring Vijay Sethupathi and Nithya Menen in lead roles and directed by acclaimed filmmaker Pandiraj, the vibrant family entertainer hit theatres last Friday and has since been enjoying a victorious run in cinemas worldwide.


Carrying forward the legendary legacy of film icons like Mr. T. Govindarajan of Venus Pictures and Mr. R. M. Veerappan of Sathya Movies, Sathya Jyothi Films—under the visionary leadership of T. G. Thyagarajan—has set new benchmarks in Tamil film production. Now entering its fourth generation, the cinematic torch is being carried forward with great enthusiasm and commitment by Senthil Thyagarajan and Arjun Thyagarajan, who continue to leave their mark in the Tamil film industry.


With 'Thalaivan Thalaivi', Sathya Jyothi Films has once again proven that a collaboration with top-tier stars invariably leads to a blockbuster, reinforcing the production house's unmatched consistency in delivering hits across decades and generations.


The production house boasts a rich legacy of historic films including: 'Rickshawkaran' and 'Kaavalkaaran' featuring Makkal Thilakam M.G. Ramachandran (MGR), 'Uthama Puthiran' starring Nadigar Thilakam Sivaji Ganesan, 'Kalyana Parisu' starring Gemini Ganesan, 'Moondru Mugam', 'Panakkaran' and 'Baadsha' with Superstar Rajinikanth, 'Moondram Pirai' and 'Kaaki Sattai' featuring Ulaga Nayagan Kamal Haasan, 'Honest Raj' starring Vijayakanth, 'Andha 7 Naatkal' starring K. Bhagyaraj, 'Idhayam' starring Murali, 'Kizhakku Vaasal' with Karthik, 'Viswasam' with Ajith Kumar and 'Captain Miller' starring Dhanush. 


Now, with 'Thalaivan Thalaivi', Vijay Sethupathi adds his name to this stellar line-up of icons in what is already being celebrated as another mega-hit.


Audiences are thronging theatres with their families to watch this emotional and heartwarming family drama, expressing immense joy and connection to the story.


Overwhelmed by the audience’s warm reception, producers T. G. Thyagarajan, Senthil Thyagarajan, and Arjun Thyagarajan have extended their heartfelt gratitude to fans and conveyed their appreciation to the entire cast and crew of 'Thalaivan Thalaivi'.


Stay tuned—an official announcement regarding Sathya Jyothi Films’ next production is coming soon!


***

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை

*தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் குடும்பம்* 



*விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் 'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்*

 


வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்து வருகின்றனர். 


சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பான குடும்ப திரைப்படம் 'தலைவன் தலைவி' உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்களுடன் சத்யஜோதி குடும்பம் இணைந்தாலே பிளாக்பஸ்டர் வெற்றியில் தான் முடியும் என்பது தசாப்தங்கள் மற்றும் தலைமுறைகள் தாண்டி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. 


மக்கள் திலகம்' எம்ஜிஆர் நடித்த 'ரிக்ஷாக்காரன்' மற்றும் 'காவல்காரன்', நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'உத்தம புத்திரன்', ஜெமினி கணேசன் நடித்த 'கல்யாண பரிசு', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மூன்று முகம்', 'பணக்காரன்' மற்றும் 'பாட்ஷா', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை' மற்றும் 'காக்கி சட்டை', கேப்டன் விஜயகாந்த் நடித்த 'ஹானஸ்ட் ராஜ்', கே. பாக்யராஜ் நடித்த 'அந்த ஏழு நாட்கள்', முரளி நடித்த 'இதயம்', கார்த்திக் நடித்த 'கிழக்கு வாசல்', அஜித் குமார் நடித்த 'விஸ்வாசம்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய மெகா ஹிட் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி'யும் ரசிகர்களிடமிருந்து உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.


குதூகலமான மற்றும் உணர்ச்சிமயமான குடும்ப திரைப்படமான 'தலைவன் தலைவி' வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்து திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர். 


இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் படக்குழுவினருக்கு பாராட்டுதல்களையும் ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 


Tuesday, 29 July 2025

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube*





In an unprecedented move to democratize content consumption, Aamir Khan has chosen to release his latest film on YouTube movies-on-demand, immediately after its theatrical run, ensuring it reaches every corner of the world at an accessible price.


This bold decision sets a new precedent for film distribution globally. Sitaare Zameen Par will be available exclusively on YouTube and will not be released on any other digital platform.


Aamir Khan today announced the global release of his superhit theatrical film Sitaare Zameen Par, exclusively on YouTube starting on 1 August, 2025. This strategic move marks a bold new distribution approach that delivers one of 2025’s most successful theatrical releases directly into people’s homes. This heartwarming family drama, starring Actor-Producer Aamir Khan, Genelia Deshmukh and featuring a powerful ensemble, including 10 actors with intellectual disabilities, will be available in India at Rs. 100, and in 38 international markets, including USA, Canada, UK, Australia, Germany, Indonesia, Philippines, Singapore, Spain, among others, with pricing localized for each market.  


Aamir Khan’s Sitaare Zameen Par, a spiritual successor to the 2007 classic Taare Zameen Par, celebrates love, laughter, and inclusivity. The film has struck a deep chord with audiences — crossing ₹250 crore worldwide. Audiences can now rent the movie by paying a fee, turning every home and device into a janta ka theatre.


This makes premium cinema accessible to a wider audience, whether in their home or on the move - all they need is an internet connection. For fans who missed it in cinemas or wish to re-watch it, this offers a high-quality, convenient option. To reach even broader and newer audiences in India and globally, Sitaare Zameen Par will offer subtitles and dubs in key languages.


The digital release of Sitaare Zameen Par leverages YouTube's reach and flexible distribution capabilities. This will also be the primary destination where other beloved films from Aamir Khan Productions, will be available in the days to come.


This pivotal collaboration demonstrates YouTube's growing role in democratising reach and evolving distribution strategies, establishing YouTube as a premier destination for post-theatrical film and media content. YouTube’s reach in India and globally is unparalleled. According to Comscore, YouTube reached 4 out of 5 Internet users in India aged 18+, while entertainment videos on YouTube generated over 7.5 billion views on a daily basis globally, in 2024.


Commenting on the launch, Actor-Producer Aamir Khan stated, "For the past 15 years I have been struggling with the challenge of how to reach audiences who do not have geographical access to theatres, or those who are unable to make it to theatres for various reasons. Finally the time for the perfect storm has come. With our government bringing in UPI and India becoming no 1 in the world in electronic payments, with internet penetration in India having grown dramatically and growing everyday, and with YouTube being on most devices, we can finally reach vast sections of people in India, and a significant part of the world. My dream is that Cinema should reach everyone at a reasonable and affordable price. I want people to have the ease of watching Cinema when they want, where they want. If this idea works, Creative voices can tell different stories breaking geographical and other barriers. This will also be a great opportunity for younger creative people entering the field of Cinema. If this idea works, then I see this as a win-win for all.”


Gunjan Soni, Country Managing Director, YouTube India, highlighted the strategic significance of this partnership. "The digital launch of Sitaare Zameen Par exclusively on YouTube underscores a significant step towards democratizing Indian film distribution at a global scale. YouTube is already a key digital destination for premium content, and we’re excited to offer filmmakers and content owners not only our unparalleled digital reach but also the control and flexibility to meet their audiences where they are. Today's launch is far more than a release - YouTube is laying out the red carpet for Indian cinema to stride onto the global stage.”


YouTube offers a robust selection of movies available to buy or rent across diverse languages, genres, including popular Indian and international hits. This offering continues to grow alongside a significant opportunity in India, driven by surging internet penetration, rapid growth in Connected TVs, and increasing mobile consumption. In fact, Connected TV (CTV) is YouTube’s fastest growing screen for the last 5 years in India. These trends reinforce YouTube’s unique position to make premium content accessible on every screen and in every format.


The platform is a critical and continuous part of a film’s entire journey, from building initial buzz with teasers, trailers, and music, and now extending to seamless on-demand streaming. According to a Kantar survey, viewers in India often watch videos on YouTube when considering new purchases in entertainment, and agree that YouTube has top content in music (94%) and entertainment (94%). As viewers become more participative, fandoms on YouTube help create more stickiness for content, allowing filmmakers to build engaged and passionate fandoms.


Directed by RS Prasanna, written by Divy Nidhi Sharma, Sitaare Zameen Par stars Aamir Khan, Genelia Deshmukh and introduces ten new faces. Next up, Aamir is producing Lahore 1947 starring Sunny Deol and Preity Zinta, and Ek Din, featuring Junaid Khan and Sai Pallavi, both under his banner Aamir Khan Productions.

அமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன்

 *அமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன் பர்’திரைப்படத்தை YouTube-இல் வெளியிடுகிறார் !!*





திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி  வெற்றி பெற்ற  திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம்  உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில்,  திரைப்படத்தை பார்த்து மகிழ முடியும்.


இந்த புதிய அதிரடி முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாகும். “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை YouTube-இல் மட்டுமே பார்க்க முடியும்,  வேறெந்த  டிஜிட்டல் பிளாட்ஃபாரங்களிலும் இப்படத்தை காண முடியாது.


அமீர் கான் இன்று தனது சூப்பர்ஹிட் திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல்  வெளியீட்டை, ஆகஸ்ட் 1, 2025 முதல் YouTube-இல் பிரத்தியேகமாக வெளியிடுவதாக  அறிவித்துள்ளார். இந்த புதிய அதிரடி  நடவடிக்கை,  2025 இன் மிகவும் வெற்றிகரமான திரையரங்க வெளியீடுகளில் ஒன்றை,  நேரடியாக மக்களின் வீடுகளுக்கு வழங்கும் ஒரு துணிச்சலான புதிய விநியோக அணுகுமுறையைக் குறிக்கிறது. நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் இணைந்து நடித்துள்ள இந்த மனதைக் கவரும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இந்தியாவில் ரூ. 100 விலையிலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 சர்வதேச நாடுகளில், அவர்கள் நாட்டின்  சந்தைக்கேற்ற விலையிலும்  கிடைக்கும்.



2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் சீக்குவலாக உருவான அமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம், அசத்தலான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக, அனைவராலும் கொண்டாடப்பட்டது.  உலகளவில் ₹250 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்தது.  பார்வையாளர்கள் இப்போது கட்டணம் செலுத்தி, படத்தை Movies on Demand இல் எடுத்து, ஒவ்வொரு வீட்டையும் ஒரு தியேட்டராக மாற்றலாம்.


இது பிரீமியம் சினிமாவை பரந்த பார்வையாளர்களுக்கு, அவர்கள் வீட்டிலோ அல்லது பயணத்திலோ அணுகக்கூடியதாக ஆக்குகிறது - அவர்களுக்குத் தேவையானது இணைய இணைப்பு மட்டுமே. திரையரங்குகளில் தவறவிட்ட அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இது உயர்தர, வசதியான விருப்பத்தை வழங்குகிறது. இந்தியாவிலும் உலகளவில் இன்னும் பரந்த மற்றும் புதிய பார்வையாளர்களை அடைய, “சித்தாரே ஜமீன் பர்” முக்கிய மொழிகளில் வசன வரிகள் மற்றும் டப்பிங் சேவைகளையும் வழங்கும்.


இந்த முயற்சியின் சிறப்பம்சங்கள்:


இணையம் இருந்தாலே போதும் – எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். திரையில் பார்த்தவர்கள் மீண்டும் பார்ப்பதற்கும், மிஸ் செய்தவர்கள் இப்போது அனுபவிப்பதற்கும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழுடன் பல முக்கிய மொழிகளில் வசனங்கள் (Subtitles) மற்றும் டப்பிங் வசதி வழங்கப்படுகிறது. Aamir Khan Productions-இன் பல படங்களும் எதிர்காலத்தில் YouTube-இல் இதே மாதிரியான முறையில் வெளியாகும்.


இந்த முக்கிய அறிவிப்பு, YouTube, அணுகலை ஜனநாயகப்படுத்துவதிலும், விநியோக உத்திகளை உருவாக்குவதிலும், சீரியலுக்கு பின்னால் திரைப்படம் மற்றும் ஊடக உள்ளடக்கத்திற்கான முதன்மையான இடமாக YouTubeஐ  நிறுவுவதிலும், டிஜிட்டல் உலகில்  அதன் வளர்ந்து வரும் பங்கையும் நிரூபிக்கிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் YouTubeஐ பயன்படுத்துவது மிக எளிதான மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது.  காம்ஸ்கோரின் கூற்றுப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில்  இந்தியாவில் 5 இணைய பயனர்களில் 4 பேரை YouTube அடைந்துள்ளது, அதே நேரத்தில் YouTube இல் பொழுதுபோக்கு வீடியோக்கள் 2024 ஆம் ஆண்டில் உலகளவில் தினசரி 7.5 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


இந்த திரைப்பட வெளியீடு  குறித்து நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான் கூறுகையில்..,

 

"கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத  பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன். இறுதியாக அதற்கு மிகசரியான  நேரம் வந்துவிட்டது. நமது அரசாங்கம் UPI-ஐ கொண்டு வந்தவுடன், மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது, இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது, மேலும் பெரும்பாலான சாதனங்களில் YouTube இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும். சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க குரல்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான  வெற்றியாக நான் பார்க்கிறேன்."



YouTube India இயக்குநர் குஞ்ஜன் சோனி கூறியதாவது…  


"சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை YouTube இல் பிரத்தியேகமாக டிஜிட்டல் முறையில் வெளியிடுவது, இந்திய திரைப்பட விநியோகத்தை உலக அளவில் ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. YouTube ஏற்கனவே பிரீமியம் உள்ளடக்கத்திற்கான ஒரு முக்கிய டிஜிட்டல் இலக்காக உள்ளது, மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்களுக்கு எங்கள் இணையற்ற டிஜிட்டல் அணுகலை மட்டுமல்லாமல், அவர்கள் இருக்கும் இடத்தில் தங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய வெளியீடு ஒரு வெளியீடாக மட்டுமல்லாமல் - இந்திய சினிமா உலக அரங்கில் முன்னேற YouTube சிவப்பு கம்பளம் விரிக்கிறது."


பிரபலமான இந்திய மற்றும் சர்வதேச ஹிட் திரைப்படங்கள் உட்பட பல்வேறு மொழிகள், வகைகள், திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வகையில், YouTube ஏராளமான திரைப்படங்களை வழங்குகிறது. இணைய ஊடுருவல், இணைக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் விரைவான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மொபைல் நுகர்வு ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வாய்ப்புடன் இந்த சலுகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உண்மையில், இணைக்கப்பட்ட தொலைக்காட்சி (CTV) இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக YouTube இன் வேகமாக வளர்ந்து வரும் திரையாகும். பிரீமியம் உள்ளடக்கத்தை ஒவ்வொரு திரையிலும் ஒவ்வொரு வடிவத்திலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான YouTube இன் தனித்துவமான நிலையை இந்தப் போக்குகள் வலுப்படுத்துகின்றன.


டீஸர்கள், டிரெய்லர்கள் மற்றும் இசையுடன் ஆரம்ப பரபரப்பை ஏற்படுத்துவது முதல், இப்போது தடையற்ற ஆன்-டிமாண்ட் ஸ்ட்ரீமிங் வரை விரிவடைந்து வரும் ஒரு திரைப்படத்தின் முழு பயணத்திலும் இந்த தளம் ஒரு முக்கியமான மற்றும் தொடர்ச்சியான பகுதியாகும். காந்தார் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பார்வையாளர்கள் பொழுதுபோக்குத் துறையில் புதிய வாங்குதல்களைக் கருத்தில் கொள்ளும்போது பெரும்பாலும் YouTube இல் வீடியோக்களைப் பார்க்கிறார்கள், மேலும் YouTube இசையில் (94%) மற்றும் பொழுதுபோக்கு (94%) ஆகியவற்றில் சிறந்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பார்வையாளர்கள் அதிக பங்கேற்பாளர்களாக மாறும்போது, YouTube இல் உள்ள ரசிகர்கள் உள்ளடக்கத்தில் சிறப்பானதை உருவாக்க உதவுகிறார்கள், இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஈடுபாடு மற்றும் ஆர்வமுள்ள ரசிகர் கூட்டங்களை உருவாக்க அனுமதிக்கிறது.


திவி நிதி சர்மா எழுத்தில், அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில்,  பத்து புதிய முகங்களுடன் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். அடுத்து, சன்னி தியோல் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடிக்கும் 'லாகூர் 1947' படத்தையும், ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'ஏக் தின்' படத்தையும் தனது ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆமிர் கான் தயாரித்து வருகிறார்.

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!

 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !! 













மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி” ஆகஸ்ட்  1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் !!  


Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE வழங்கும், போகி 



இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில்,  சமூக அக்கறை மிக்க அழுத்தமான  படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. 


சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 


நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் நபி நந்தி, ஷரத், "லப்பர் பந்து" ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன்  சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில்  P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார். 


இயக்கம்: விஜயசேகரன். S 

ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜா C சேகர் 

இசையமைப்பாளர்: மரியா மனோகர்

எடிட்டர்: சுரேஷ் அர்ஸ் 

பாடல்கள்: கவிஞர் சினேகன்

வசனம் : S.T.சுரேஷ்குமார் 

கலை: A.பழனிவேல் 

சண்டை பயிற்சி: அன்பறிவ்

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் & சதீஷ் (AIM)

டிரெய்லர் எடிட்டர்: ஜென் முத்துராஜ்

கோவாவில் ஒன்று கூடிய சினிமா நட்சத்திரங்கள். மகிழ்ச்சியான கொண்டாட்டம்!

 *கோவாவில் ஒன்று கூடிய சினிமா நட்சத்திரங்கள். மகிழ்ச்சியான கொண்டாட்டம்!*








90களின் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல் பல நடிகர்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களுடன் ஒரு மாயாஜாலமாக இருந்தது.


நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருந்தினர் பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் எப்போதும் ஆற்றல்மிக்க நடன இயக்குநரும் இயக்குநருமான பிரபு தேவா ஆகியோர் அடங்குவர். மேலும் பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இவர்களுடன், 90களில் வெள்ளித்திரையை ஆண்ட முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்தனர்.


கடற்கரை சந்திப்புகள் முதல் பொன்னான திரைப்பட நினைவுகளை மீண்டும் அசைபோடுவது வரை, இந்த குழுவினர் பல தசாப்த கால நட்பையும், சினிமா பாரம்பரியத்தையும் கொண்டாடி மகிழ்ந்தனர். தென்னிந்திய சினிமாவை வடிவமைத்த ஒரு மறக்க முடியாத சகாப்தத்திற்கு இந்த சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியானதாக  அமைந்தது. திரையிலும், திரைக்கு வெளியேயும் உருவான உறவுகளை அனைவரும் போற்றி மகிழ்ந்தனர்.


இந்த நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் கோவாவில் மீண்டும் ஒன்றிணைந்து, புன்னகைகளையும், கதைகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதைக் கண்டு ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

90s Stars Reunite in Style: A Joyful Celebration in Goa

 *90s Stars Reunite in Style: A Joyful Celebration in Goa!*







It was a vibrant walk down memory lane as some of the most celebrated stars of the 90s reunited for a fun-filled gathering in Goa! From iconic filmmakers to beloved actors, the reunion was nothing short of nostalgic magic, with laughter, memories, and heartfelt moments taking center stage.


The star-studded guest list included veteran directors K.S. Ravikumar, Shankar, Lingusamy, Mohan Raja, and the ever-energetic choreographer-director Prabhu Deva. Popular actors Jagapathi Babu and Meka Srikanth added to the charisma, joining a bevy of leading ladies who ruled the silver screen in the 90s — Simran, Meena, Sangavi, Malavika, Sangitha, Reema Sen, Maheshwari, and Sivaranjani.


From beachside bonding to reliving golden film memories, the group had a ball of a time, celebrating decades of friendship and cinematic legacy. The reunion was a heartwarming tribute to an unforgettable era that shaped South Indian cinema, with everyone cherishing the bonds built both on and off-screen.


Photos and videos from the event are already going viral, delighting fans who are overjoyed to see their favourite stars together once again — sharing smiles, stories, and sunshine in Goa!

வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா

 *வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்!*

வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, "வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு 'ஆவன் ஜாவன்'என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் பாடல். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இணைந்து ஒன்றாக நடனம் ஆடுகின்றனர். இந்த பாடலை பிரம்மஸ்திரா படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'கேசரியா' பாடலை உருவாக்கிய பிரிதம் தாதா, அமிதாப் பட்டாசார்யா மற்றும் அரிஜித் சிங் ஆகியோர் இணைந்து வார் 2 படத்திற்கு பாடியுள்ளனர் .பிரிதம் தாதா,அமிதாப்,அரிஜித் மற்றும் ஹ்ரித்திக்,கியாரா என இவர்களின் உற்சாகம் முதன்முறையாக திரையில் ஒன்றாக இணைகிறது.


தாளமிக்க, காதலாக நிரம்பிய 'ஆவன் ஜாவன்' பாடலை இத்தாலியில் படமாக்கினோம். இந்த பாடலை படமாக்கியது வார் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற மிக இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்றாகும்.இந்த வாரத்தில் அனைவரும் இந்த பாடலை கேட்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.”


வார் 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில், உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Yash Raj Films to drop War 2’s first song, Aavan Jaavan, a groovy, romantic song featuring

 *Yash Raj Films to drop War 2’s first song, Aavan Jaavan, a groovy, romantic song featuring superstars Hrithik Roshan and Kiara Advani this week!* 

Director of War 2, Ayan Mukerji, today revealed on his social media that the first song of War 2 is titled Aavan Jaavan and it is a groovy, romantic song featuring superstars Hrithik Roshan and Kiara Advani! 


Check out Ayan’s post here in which he gave us a sneak peek into Aavan Jaavan through a still from the song: https://www.instagram.com/p/DMr205XsEwz/?igsh=aXY2bXdscGJkeGV4

 

Ayan also revealed that the team behind his blockbuster song Kesariya from Brahmastra are reuniting for Aavan Jaavan! 


Ayan wrote, “Pritam Dada. Amitabh (Bhattacharya). Arijit (Singh). Hrithik and Kiara’s lovely energy as they come together on screen for the first time.

Groovy and Romantic, Aavan Jaavan - was the soundtrack for our Italian shoot, and creating it was one of the most joy-filled experiences and memories of making War 2 for all of us! Can’t wait for everyone to listen to it this week.”


War 2 releases on August 14th in theatres worldwide in Hindi, Telugu & Tamil.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும்

 *இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!*



இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம். 


இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.


'அவதார்: ஃபயர் & ஆஷ்' படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார். 


மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி வாரியர் நெய்திரி (ஸோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகசத்தை  பார்வையாளர்கள் பெற இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா மற்றும் அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.


'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடுகிறது.

[7/29, 3:18 PM] Pro Ashwini D One: TRAILER OUT NOW 🔥

@JimCameron’s game-changing universe returns!

#Avatar: Fire and Ash – the biggest Hollywood release of the year – hits Indian theatres Dec 19 in 6 languages via @20thCenturyIN!


🎬 English: https://youtu.be/V9uJ3mcOFA0

🇮🇳 Hindi: https://youtu.be/UuGf9fYHOpo

🇮🇳 Tamil: https://youtu.be/6NTFK_6yr6I

🇮🇳 Telugu: https://youtu.be/6VmJ_VCjCG0

🇮🇳 Kannada: https://youtu.be/kViZAuiay7g

🇮🇳 Malayalam: https://youtu.be/UWlTmkWPRzU


Return to #Pandora with Jake, Neytiri & the Sully family!

#AvatarFireAndAsh @officialavatar @20thcentury @20thcenturyIN @Sureshchandraa @Abdulnassaroffl @Donechannel1

Vijay Devarakonda’s Pre-Release Event

 *Vijay Devarakonda’s Pre-Release Event!* 






Vijay Devarakonda’s much-anticipated film Kingdom is all set to hit theatres worldwide on July 31, 2025. In celebration of this milestone, the actor visited Chennai to interact with the Tamil press and media fraternity, sharing his experiences working on the film.


Kingdom, directed by Gowtham Tinnanuri, has already grabbed headlines with its powerful trailer and Anirudh Ravichander’s dynamic musical score. The film, a high-octane emotional action drama, is jointly produced by Naga Vamsi S and Sai Soujanya under the banners of Sithara Entertainments and Fortune Four Cinemas, and presented by Srikara Studios.


Speaking at the event, Vijay Devarakonda said: “I thank the people of Tamil Nadu for the love and support they’ve shown me throughout my journey. Today is a special day as Kingdom is releasing on July 31, and I’m thrilled to share this moment with you all.


When director Gowtham Tinnanuri narrated the script, he reminded me of how well his previous film Jersey was received in Tamil Nadu. Right from the beginning, we knew Kingdom needed to be made for both Telugu and Tamil audiences. The story is deeply rooted in the coastal regions of Andhra and Tamil Nadu and later extends to Sri Lanka,  regions that share similar cultures and emotions.


The film blends strong emotions with action, reminiscent of classic Rajinikanth sir’s movies. Though we are promoting the film across Andhra and Telangana, Chennai is the only place I’m personally stepping out to promote outside Telugu states,  that’s how special you all are to me.


I also want to thank Suriya Anna for his heartfelt gesture. I hesitated to ask him, saying, ‘I want to ask you something… but feel free to say no.’ But he graciously lent his powerful voice to the teaser, which elevated Kingdom’s impact even before its release.


Anirudh has poured his heart and soul into the film’s music. He performed at our pre-release event just yesterday, and today he’s already in Chennai, fine-tuning the final copy of Kingdom to be sent overseas. I keep saying, if I could, I would kidnap Anirudh and keep him with me always!


When Anirudh praised just 40 minutes of the film, the audience immediately embraced it. People may not trust my words fully, but they do trust Anirudh. That’s the power he holds.


Our cinematography is also something to watch for  Girish Gangadharan handled 40% of the film before moving on to Coolie, and the remaining was shot by Jomon.


I’ve given my best to this role,  I even shaved my head for a particular transformation. I play a constable in the early part of the story and go through a drastic evolution. I hope to take on a full-length cop role someday.


Every time I visit Chennai, the press and media treat me like family. I deeply value these interactions, they’ve always been genuine and warm.”


After the event, Vijay Devarakonda spent time clicking photos and sharing light moments with members of the press and media fraternity, showing his gratitude for their support.


Kingdom, an intense blend of action and emotion, hits screens worldwide July 31, 2025. The film is backed by a stellar crew and promises a gripping theatrical experience in both Tamil and Telugu.



*Technical Crew*



Music Composed By: Anirudh

Cinematographer’s: Jomon T John ISC & Girish Gangadharan ISC

Editor: Navin Nooli 

Production Designer: Avinash Kolla

Costume Designer: Neeraja Kona

Lyrics: Super Subu & Vishnu Edavan

Tamil Dialogues: K.N. Vijayakumar

Song Choreographer: Vijay Binni

Action Choreographer’s: Yannick Ben,  Chethan D’Souza &  Real Satish

Colorist: Ranga 

Sound Design: Sync Cinema

Audiography: Vinay Sridhar

VFX Supervisor:  Vasudeva Rao M 

PRO: Suresh Chandra-Abdul Nassar

விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்!

 விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்!






விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.


கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது.


விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது:


“என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.


இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.


இந்தப் படம்  உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று , அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான பிரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து பிரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் .


சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. "நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்… இல்லன்னா பரவாயில்லை" என்று தயங்கி கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கே முன்பே உருவானது.


அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். நேற்று ப்ரீ-ரிலீஸ் இவெண்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், இன்று சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதி பணிகளை பார்வையிடுகிறார்.நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்!


அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை எல்லோரும் நம்ப மாட்டாங்க, ஆனா அனிருத் சொன்னா நம்புவாங்க. அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கு.


படம் முழுவதும் வித்தியாசமான சினிமாட்டோகிராபி இருக்கு – கிரீஷ் கங்காதரன் படம் முழுவதிலிருந்தும் 40% வேலை செய்தார், பின் அவர் 'கூலி' படத்துக்காக சென்றுவிட்டார். மீதியை ஜோமோன் சுட்டுள்ளார்.


இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம்.


விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது.


நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் என்னை ஒரு குடும்ப உறவினராகவே பார்க்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த நெகுழ்ச்சியை தருகிறது.”


விழா முடிந்ததும், விஜய் தேவராகொண்டா ஊடக நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து, அன்பும் நன்றியும் தெரிவித்து, அனைவரோடும் நெருக்கமாக பழகினார்.


ஜூலை 31, 2025, அன்று வெளியாகவுள்ள “கிங்டம்”, அதிரடி மற்றும் உணர்வுகளின் மாபெரும் கலவை. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும். இப்படம், சிறந்த தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்டு, திரையரங்கில் விருந்தாக அமையும்.


தொழில்நுட்பக் குழு:

இசை: அனிருத்

ஒளிப்பதிவாளர்கள்: ஜோமோன் T ஜான் ISC & கிரீஷ் கங்காதரன் ISC

தொகுப்பு: நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவிநாஷ் கொல்லா

ஆடை வடிவமைப்பாளர்: நீரஜா கோனா

பாடல் வரிகள்: சூப்பர் சுப்பு & விஷ்ணு எடவன்

வசனங்கள்: கே.என். விஜயகுமார்

நடன இயக்குநர்: விஜய் பின்னி

ஸ்டண்ட் இயக்குனர்: யானிக் பென், சேதன் D’சூசா & ரியல் சதீஷ்

கலர் கிரேடிங்: ரங்கா

ஒலி வடிவமைப்பு: Sync சினிமா

ஆடியோகிராபி: விநய் ஸ்ரீதர்

VFX மேற்பார்வையாளர்: வசுதேவ ராவ் எம்

PRO : சுரேஷ் சந்திரா - அப்துல் நசார்

ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

 *'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்*






*இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி*



'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.


பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.


பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார்.


அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்( App)பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.‌


இசை ரசிகர்கள் இதற்கு முன் இப்படியொரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அனுபவத்தை அனுபவித்திராத வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏராளமான இசை ரசிகர்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி விசாலமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இசை ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி - இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.


'ராக்ஸ்டார்' அனிருத் - பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் கூடுதலான வசதிகள் - ஒப்பற்ற இசை அனுபவம் - ஆகியவை ஒன்றிணைந்திருப்பதால் அனிருத்தின் #Hukum மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே பல உலக நாடுகளில் நடைப்பெற்ற 'ராக்ஸ்டார்' அனிருத்தின் #Hukum இசை நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னையில் நடைபெறுவதால் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!  


 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி  விழா !!  





















“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. 


உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  


இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 


இந்நிகழ்வினில் 


“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது… 


எல்லோருக்குமே மிகப்பெரிய நன்றி. உங்களால் தான் இந்த சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நீங்கள் தான் இந்த சீரிஸை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். என் கணவர் பிரபாகரன் தான் இதன் தயாரிப்பாளர், ஆனால் என் பெயர் போட்டு என்னை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார். இந்த சீரிஸ் நடந்த போது பல கஷ்டங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, இரவு பகல் தூங்காமல் அவர் கஷ்டப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சினிமா மீது உள்ள ஆசையில் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். பல அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் கடின உழைப்பு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. அவருக்கான அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது மாதிரி தொடர்ந்து பல படைப்புகளை தயாரிக்க வேண்டும். இந்த குழுவில் எல்லோருமே கடின உழைப்பை தந்துள்ளார்கள். சரவணன் சார் அசத்திவிட்டார். நம்ரிதா எங்கள் அழகி, க்யூட்டான ஹீரோயின், புராஜக்டுக்கான தேவை என்னவாக இருந்தாலும் தயங்காமல் செய்வார். ஆர்ட் டைரக்டர், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாக செய்துள்ளீர்கள். கேப்டன் பாலாஜி செல்வராஜ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அவர் புரடியூசருக்கான டைரக்டர். 14 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். அவர் கடின உழைப்பாளி. இவர்களின் உழைப்புக்கான பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை மக்களிடம் சேர்த்த ZEE5க்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 


“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன்  பேசியதாவது… 

எங்கள் டீம், சரவணன் அண்ணன், இந்த முழு வெப் சீரிஸை, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது தெலுங்கு இந்தியிலும் இது டப்பாகி கொண்டிருக்கிறது. சரவணன் அண்ணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார் நன்றி. நம்ரிதா அருமையாகச் செய்துவிட்டார். ஆர்ட் டைரக்டர் பாவனா இதில் ஒரு செட் கூட செட் எனச் சொல்ல முடியாத படி, அருமையாகச் செய்துள்ளார். இயக்குநர் பாலாஜியும் நானும்  நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் 14 நாட்களில் மொத்த சீரிஸையும் முடித்துத் தந்தார். அந்தளவு கடினமான உழைப்பாளி. மியூசிக் டைரக்டர் நீங்கள் தந்த இசைக்கு நன்றி. இந்த சீரிஸுற்கு முழுக்காரணமாக இருந்த என் மனைவிக்கு நன்றி. நான் சினிமா ஆசையில் வந்தவன். இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ZEE5க்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய பத்திரிக்கை ஊடக நண்பர்க்கு நன்றி. 


நடிகர் சரவணன் பேசியதாவது… 

எல்லோருக்கும் வணக்கம், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி. 


இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசியதாவது… 

பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி. 


நடிகை நம்ரிதா  பேசியதாவது..,

மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி. 


காஸ்ட்யூம் டிசைனர் மரியா பேசியதாவது..,

அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லையென்றால் இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருக்க முடியாது. என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த சசிகலா மற்றும் பிரபாகரன், இயக்குநர் பாலாஜி ஆகியோருக்கு  நன்றி 


ஆர்ட் டைரக்டர் பாவனா பேசியதாவது..,

என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. என் குருவுக்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி


எடிட்டர் ராவணன் பேசியதாவது..,

என்னை நம்பிய இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. நல்ல சீரிஸை பாராட்டிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 


இசையமைப்பாளர் விபின் பாஸ்கர்  பேசியதாவது..,

என் குரு ஜேம்ஸ் வசந்தன் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், எங்களுக்கு முழு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. சரவணன் சார், நம்ரிதா கலக்கி விட்டார்கள். தயாரிப்பாளர் பிரபாகரன் சாருக்கு நன்றி. என் நண்பர் இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. 


ஒளிப்பதிவாளர் கோகுலகிருஷ்ணன் பேசியதாவது..,

இந்த புராஜக்ட் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. இதை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 


நடிகர் அரோல் D சங்கர் பேசியதாவது..,

விடியும் முன் படத்திலிருந்து இயக்குநர் பாலாஜியைத் தெரியும். அங்கு ஆரம்பித்த பயணம், இங்கு வரை வந்தது மகிழ்ச்சி. பிரபாகரன் அவரை முதலில் அஸிஸ்டெண்ட் என நினைத்தேன். அண்ணா அண்ணா என அழைப்பா,ர் அவர் தான் தயாரிப்பாளர் என்றவுடன் நான் சார் என அழைக்க ஆரம்பித்துவிட்டேன். கடினமான உழைப்பாளி. நல்ல நடிகராக வரக்கூடியவர். நம்ரிதா ஹீரோயின் போலவே இருக்க மாட்டார். இயல்பாக இருப்பார். அழகாக நடித்துள்ளார். சரவணன் சார் இது பத்தாது, இன்னும் பெரிய அளவில் உங்களிடம் சண்டை போட வேண்டும், இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும். இந்த சீரிஸை பாராட்டி மக்களிடம் சேர்த்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 


நடிகர் குப்புசாமி பேசியதாவது… 

எல்லோருக்கும் வணக்கம், நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன், நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகது, ரிலீஸானால் ஓடாது. நான் முதலில் நடித்த படம் சட்டம் என் கையில், 34 வருட உழைப்புக்குப் பலனாக இந்த வெற்றி வந்துள்ளது. சட்டமும் நீதியும் எனக்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சூரி அண்ணா இயக்குநர் பாலாஜி சார் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்கள்.  மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வது பெரும் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்குத் துணையிருந்த அனைவருக்கும் நன்றி. 


நடிகர் சௌந்தர் பேசியதாவது… 

தயாரிப்பாளர் பிரபாகரன் என் மச்சான். நான் அவனை சினிமாவுக்கு வராதே என பலமுறை சொல்லி, சண்டை போட்டுள்ளேன். ஆனால் கேட்க மாட்டான். பிடிவாதமானவன், இந்த வெற்றி அவனது உழைப்பால் வந்தது. அவன் லட்சியம் மீது அவனுக்கு இருந்த வெறி தான் அவனை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த சீரிஸை சின்ன பட்ஜெட்டில் எடுத்து, அதை அதற்கு அதிகமாக விளம்பரம் செய்து ஜெயித்திருக்கிறான். அவனுக்கு வாழ்த்துக்கள். இந்த சீரிஸை எடுத்துத் தந்த குழுவிற்கு வாழ்த்துக்கள். சரவணன் சித்தப்பு இந்த சீரிஸிற்கு முழு பலமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


சட்டமும் நீதியும் சீரிஸில்  நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.


சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.


சட்டமும் நீதியும் சீரிஸை  ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகக் கண்டுகளியுங்கள்.