Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Tuesday 28 November 2023

பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 *’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*


ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. 


























சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவித்தார்கள். அதன் பிறகு என்னை நம்பி யாருமே பணம் தரவில்லை. கேஜேஆர் சாரிடம் போய் படம் செய்யலாம் என்று சொன்னதும் அவர் உடனே சரி என்றார். அந்தப் படம்தான் ‘டிக்கிலோனா’. ஞானவேல் சாருக்கும் நன்றி. சந்தீப் கிஷன், அஞ்சலிக்கும் நன்றி. என் நண்பர்கள், குடும்பம், மனைவிக்கும் நன்றி.  ‘டிக்கிலோனா’ முடித்தப் பிறகு எனது அசிஸ்டெண்ட் ராம் வைத்து படம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஹரிஷ் இந்தப் படத்திற்குள் வந்த பிறகுதான் இது பெரிய படமாக மாறியது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி”.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”.


நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும்விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.


இயக்குநர் அருண்ராஜ் காமராஜா, “படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதையும் தாண்டி நண்பர்கள் ரீ யூனியன் போல இது உள்ளது. புது திறமைகளை கொண்டு வரும் ஸ்ரீனிஸூக்கு நன்றி. இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ்தான் படம். எம்.எஸ். பாஸ்கர் சார் படத்தில் ஈவிலாக இருப்பார். ஹரிஷ் கல்யாண் வயலண்ட்டாக நடித்துள்ளார். எல்லோருக்கும் முன்பு இந்தப் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வாழ்த்துகள்”.


நடிகை பிரார்த்தனா, “எம்.எஸ். பாஸ்கர் சார் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார். அவருடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் அவருடைய மகளாக நிறைய கற்றுக் கொண்டேன். ஹரிஷ் கல்யாண், இந்துஜா, இயக்குநர் ராம் என அனைவருக்கும் நன்றி”.


நடிகர் சுரேஷ், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக ஸ்ரீனிஸ் கேட்டபோது எனக்கு குழப்பாகவே இருந்தது. ஆனால், என்னுடைய நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தில்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிப்புக்கு புதிது என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால், இயக்குநர் ராம் நிறைய ஊக்கம் கொடுத்தார். எனக்கு படத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி”.


நடிகர் ராகுல் மணி, “2013ல் நான் ஒரு படம் ஹீரோவாக நடித்தேன். பத்து வருடம் கேப் வந்துவிட்டது. ஆனால், எனக்கு ஊக்கம் கொடுத்து கூப்பிட்ட இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்து என அனைவருக்கும் நன்றி. படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”.


இயக்குநர் ரவிக்குமார், “இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். பல இடங்களில் விறுவிறுப்பாகவும் சூடாகவும் இருக்கும். இயக்குநரின் முதல் படம் போல இருக்காது. நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்”


இயக்குநர் ரத்னகுமார், “தயாரிப்பாளரின் ஸ்ரீனிஸின் பிறந்தநாள் இன்று கிடையாது. டிசம்பர் 1தான். இயக்குநர் ராமும் நன்றாக செய்துள்ளார். இந்த படத்தின் டீமோடு எனக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஹரிஷ், பிரார்த்தனா, இந்துஜா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளியான பின்பே உங்களுக்கேத் தெரியும்”. 


இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “பக்கத்துவீட்டுக்காரர்களுக்குள் நடக்கும் சண்டைதான் இந்தப் படம். ரொம்ப எளிமையான கதை என்பதை விட சாமானியர்களின் பிரச்சினையைப் பேசும் படம். ‘குட்நைட்’ படத்தைப் போல எளிய கதையாக இருக்கும். ஹரிஷ், இந்துஜா என அனைவருமே சின்சியரான திறமையான நடிகர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.


இயக்குநர் கார்த்திக் யோகி, “இந்தப் படம் பார்த்துவிட்டேன். இயக்குநர் ராமுக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. ஹரிஷின் திறமை சிறப்பாக இதில் வெளிப்பட்டுள்ளது. இந்துஜா, பிரார்த்தனா, தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி”. 


கலை இயக்குநர் ராகுல், “’லவ் டுடே’ படம் போல, இந்தப் படமும் எனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டீமும் நிறைய சப்போர்ட் கொடுத்தார்கள். சந்தோஷமாக இருந்தது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக இது இருக்கும்”.


ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி, “சினிமாவில் நிறைய இயக்குநர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இயக்குநர் ராம் சிறப்பாகக் கொடுத்துள்ளார். அனைவருக்கும் நன்றி”.


எடிட்டர் பிலோமின்ராஜ், “படத்தின் டிரெய்லர் போலவே படமும் சிறப்பாக இருக்கும். உங்களைப் போலவே நானும் படத்திற்கு ஆவலாக உள்ளேன்”.


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்., “இந்தப் பிரச்சினைக்களுக்காக எல்லாம் படம் எடுப்பீர்களா என நிறைய கமெண்ட்ஸ் இதன் டீசரில் பார்த்தேன். ஈகோதான் இங்கு பெரிய பிரச்சினை. படத்தில் வில்லன் பெரிதாக இருந்தால் படம் ஹிட்டாகும். அதுபோல, இந்தப் படத்தில் வில்லன் பெரிதாக இருக்கும். எளிய கதையை படம் முழுக்கக் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநருக்கு முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியமானது. அதனால், இயக்குநர் ராம் இரண்டாவது படத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஹரிஷ், எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். உங்களை படம் ஏமாற்றாது” என்றார். 


நடிகை இந்துஜா, “இந்த அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எல்லோருடைய கதாபாத்திரங்களும் படம் பார்க்கும் உங்களுக்கு நிச்சயம் கனெக்ட் ஆகும். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ற போது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால், கதை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். இதில் ஹரிஷ்- எம்.எஸ். பாஸ்கருடைய ஈகோ பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். படம் வெளிவருவதற்கு முன்பே படம் குறித்தான பாசிடிவ் டாக் ஆரம்பித்து விட்டது. ஹரிஷ் எப்போதும் பாசிட்டிவான நபர். இந்த நல்ல குணத்திற்காகவே அவர் பெரிய இடத்திற்குப் போக வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘பார்க்கிங்’ அமைய வேண்டும். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்ட். அவருடன் நடிப்பது எனக்குப் பெருமை. நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். செட்டில் கதைகள் எல்லாம் சொன்னார். பிரார்த்தனா, ரமா அம்மா என எல்லோருமே இயல்பாக நடித்துள்ளனர். பிலோமின்ராஜ், சாம் சி.எஸ். என அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். இந்த நேர்த்தியான படத்தைக் காண்பிக்க ராமின் எழுத்து உதவியது. இந்த லைனை வைத்து ஒரு முழுநீளப் படம் கொடுத்ததற்கு நன்றி ராம். அவருடைய தெளிவினால்தான் நாங்களும் நம்பிக்கையோடு நடித்தோம். நல்ல படம் நடித்த நிறைவு உள்ளது. நன்றி”.


இயக்குநர் ராம், “எனது குடும்பத்திற்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீனிஸ் சாருக்கும் என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அவர் எனது அண்ணன் போல. முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டதும் சுதன் சாருக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்திற்காக என்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணித்த அனைவருக்கும் நன்றி. நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன். ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை. நிறைய விஷயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்துஜா, பிரார்த்தனா, ரமா என அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். பிலோமின், சாம் சி.எஸ். என இந்தப் படத்தில் அமைந்த தொழில்நுட்ப அணி எனக்கு மிகப்பெரிய பலம். குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார். 


நடிகர் ஹரிஷ் கல்யாண், “ஒரு படம் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தை தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன். அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உங்களுடைய படம் போல நினைத்து இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்து மேடையில் பாராட்டிய இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு நெகட்டிவ் ஷேட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Mani Sharma On Board- Ustaad Ram Pothineni, Puri Jagannadh, Charmme Kaur

 Mani Sharma On Board- Ustaad Ram Pothineni, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects Crazy Indian Project Double iSmart



Sensational director Puri Jagannadh and Melody Brahma Mani Sharma’s is a blockbuster combination. Pokiri, Chirutha, iSmart Shankar, etc. were extraordinary audio and box office hits. The combo is back as Mani Sharma is on board for the director’s latest flick Double iSmart with Ustaad Ram Pothineni. Given the prequel, iSmart Shankar was also a musical hit, the sequel surely is going to have a chartbuster album. The shoot of the movie is currently underway in Mumbai.


Bollywood star Sanjay Dutt plays an important and lengthy role in the movie which also features some noted actors in important roles. Fans are eager to see the face-off between Ram and Sanjay Dutt.


Double iSmart in the deadly combination of Ram and Puri, is being produced by Puri Jagannadh and Charmme Kaur under the banner of Puri Connects.


Puri Jagannadh penned a story that has a big span and he is presenting the lead actors in completely stylish avatars. Ram sports the stylish best look in the movie.


Double iSmart is being made on a high budget with technically high standards. The makers will reveal the other cast and crew of the movie soon.


Double iSmart will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages for Maha Shivaratri on March 8, 2024.


Cast: Ram Pothineni, Sanjay Dutt


Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

Stunt Director: Kecha, Real Satish

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் ‘சமரன்’

 நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் ‘சமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’  விருது!





கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் இவர் பணி புரிந்துள்ளார். திரு. சாபு சிரில் மற்றும் திரு. கதிர் இவர்களின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார். இந்தப் படத்தில் இவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ என்ற பெருமை மிக்க விருது கிடைத்துள்ளது. 


நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்த  போது இந்த விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை சாதித்ததற்காக தன்னுடன் பயணித்த தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு இந்த தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன் பாலாஜி.

Friday 24 November 2023

பெரிய திரை வெற்றியிலிருந்து ஓடிடி ஆதிக்கம் வரை:

 *பெரிய திரை வெற்றியிலிருந்து ஓடிடி ஆதிக்கம் வரை: தொடர்ந்து உச்சம் தொடும் ‘இறுகப்பற்று’*

 


திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பேசும் ’இறுகப்பற்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது 


பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இறுகப்பற்று’. இதில் ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், அபர்நதி, சானியா ஐயப்பன், விக்ரம் பிரபு, விதார்த் மற்றும் ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் திறம்பட நடித்திருந்தனர். திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கதை, திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.


இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. அர்த்தமுள்ள கதை, சுவாரசியமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் மற்றும் யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றின் காரணமாக இது அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் பெருவாரியான பாராட்டைக் குவித்தது. 


வெளியான சில நாட்களிலேயே, சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், படத்தின் சிறிய காணொலிகள், திரையரங்குக்கு வெளியே ரசிகர்களின் கருத்து, படத்தின் வசனங்களை ட்வீட்டாகப் பகிர்தன் என நெட்டிசன்கள் படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர். நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும்,படம் நேர்மறையாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் பகிர்ந்திருந்தனர். மேலும் இந்தப் படம் தொடர்பான பல்வேறு ஆரோக்கியமான விவாதங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. 


திரையரங்கில் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல OTT தளமான நெட்ஃபிக்ஸில் இறுகப்பற்று தனது ஸ்ட்ரீமிங் பயணத்தைத் தொடங்கியது. திரையரங்க வெளியீடு போலவே ஓடிடியில் வெளியான பிறகும் உடனடியாக மக்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற ஆரம்பித்தது. முக்கியமாக வெளியான நாளிலிருந்து இன்று வரை நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் இறுகப்பற்று தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. படத்தின் தரத்திற்கு இதுவே சான்றாகும்.


தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "இறுகப்பற்று திரைப்படத்தின் அற்புதமான வரவேற்பு எங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மக்களின் பாராட்டுகளைப் பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறோம். உணர்வுப்பூர்வமான, உண்மைத்தன்மையை கொண்ட ஒரு கதைக்களம் பார்வையாளர்களிடம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆழமான, தனித்துவமான கதைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற எங்கள் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்"


இத்திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் கரு, அதன் கதாபாத்திரங்கள், அவை பேசும் உணர்ச்சிகள் என அனைத்தும் எல்லை கடந்து அனைவரையும் தொடும், உலகளாவிய ரசிகர்களுக்கானது. இதனால், படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து படத்தின் ரீமேக் உரிமைக்கான போட்டி அதிகரித்துள்ளது. பிற மொழிகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு இந்த நெகிழ்ச்சியான படைப்பைக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 


பார்வையாளர்களின் தொடர் ஆதரவிற்கு இறுகப்பற்று படக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. OTT தரவரிசையில் முக்கிய இடம்பிடித்ததோடு, இப்படத்தின் தாக்கம் பல ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் வாழும் என்று நம்புகிறது. இவற்றையெல்லாம் விட முக்கியமாக, இறுகப்பற்று இன்னும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


- Johnson PRO

From Big Screen Success to Digital Domination: "Behold" Continues to Reign Supreme on

 *From Big Screen Success to Digital Domination: "Behold" Continues to Reign Supreme on OTT Charts*



After captivating all sections of audience in the theatres, Potential Studios' Irugapatru continues its domination in OTT charts too after debuting on Netflix. 


Featuring an ensemble cast which comprised talents like Shraddha Rama Srinath, Abarnathi, Saniya Ayyappan, Vikram Prabhu, Vidharth and Shree, Irugapatru was directed by Yuvaraj Dayalan. This relationship drama explores the complexities of human connections, particularly among married couples.


The film hit the theatres on October 6 and immediately went on to become a superhit. It received significant praise due to its captivating story, screenplay, dialogue and outstanding performances, which have struck a deep chord with audiences.


Within few days of its release, social media was abuzz with memes, brief video clips and dialogue from Irugapatru, taken the world of netizens by storm, becoming viral. The film's powerful couple therapy like narrative and relatable characters have also ignited many discussions across platforms and has made a positive emotional impact with viewers.


After its blockbuster theatrical run, Irugapatru started to stream on the popular OTT platform Netflix from November 6. The film was an instant it and is having an amazing run in the platform. From the day of its release, Irugapatru continues to trend within the top 10 places which is a testament to both its timeless appeal and the storytelling's enduring force.


Producer SR Prabu conveyed his appreciation for the tremendous response, saying, "We are humbled and ecstatic about Irugapatru's amazing reception. It's encouraging to see how the film's emotional heft and genuineness resonate with viewers. The triumph of the movie validates our dedication to elevating captivating narratives to the forefront."


The universal themes explored in "Irugapatru" makes it an ideal candidate for adaptation, as its emotional resonance and relatable characters transcend cultural boundaries. Hence, following the phenomenal success the remake rights of the movie is in demand. Producers and filmmakers from other regional languages are expressing keen interest in bringing this poignant relationship drama to new audiences in their landscape. 


The "Irugapatru" crew is grateful for the audience's continued support and believes that the film's influence will live on in people's hearts for years to come, even while it continues to top the OTT charts. It is to be noted that even after the ott debut, the film still continues its dream run in several theatres thoughtout tamilnadu.


- Johnson PRO

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி

 *இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!*



'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.


'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.


 திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின்  வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது. சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால  அவலங்களை  இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும்  இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.


இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுமார் ஆறுமாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.


பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர்  இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்),

'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', NGK, 'தங்கலான்' போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார். ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ (கலை),  எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலி கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு),  

ஜி.முத்துக்கனி (மேக்கப்),

மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

Filmmaker Raju Murugan & SP Cinemas present

 *Filmmaker Raju Murugan & SP Cinemas present* 

*’Parari’ First Look revealed* 

Filmmaker Raju Murugan, who has delivered a laudable slew of movies like Cuckoo, Joker, Gypsy and Japan in association with SP Cinemas is presenting the  film 'Parari’. Director Lokesh Kanagaraj revealed the film’s first look, which has been garnering great response. The film is directed by Ezhil Periyavedi, a former assistant to Raju Murugan. 



The makers mention that ‘Parari’ refers to the group of people, whose Migrates from their native places, to various places for their living.


Parari speaks about the the lives of ordinary people dwelling around Thiruvannamalai.  This film dealing with the contemporary societal issues involving caste, linguistic, and religious grounds, will not alone leave a deep impact on the society, but will be a starting point for some revolutionary change in the thinking process of every human. The entire shooting of this film was completed in a span of 45 days across the exotic locales of Thiruvannamalai and its surrounding villages, Bangalore and Krishnagiri. 

 

The film stars Hari Sankar of ‘Thozhar Venkatesan’ fame as the protagonist and newcomer Sangeetha Kalyan as the female lead character. The film’s star-cast comprises newcomers, who underwent acting training for 6 months. Most of these actors have pursued proper acting academic training at Pondicherry University Arts Department, Delhi National School of Drama, Bangaluru National School of Drama and some of them are even Ph.D scholars. 


Sean Roldan, the creator of several elegant melodies is composing music for this film.

Uma Devi, who has gifted music lovers with wonderful lyrics from the movies like Madras, Kabali, Kaala, Thangalaan and many movies is penning lyrics for this movie. G. Muthukani (Makeup), S. Azhagiya Koothan and Suren.G (Sound Design), Suren.G (Sound Mixing), Fire Karthi (Stunt), Abinaya Karthik (Choreography), A.R. Sukumaran BFA (Art), Sam RDX (Editor), Sridhar (DOP) and Suresh Chandra-Rekha D’One (PRO) are the others in the technical crew.

Tuesday 21 November 2023

When Nayanthara turned into a professional cook for ‘Annapoorani’*

 *When Nayanthara turned into a professional cook for ‘Annapoorani’* 












Actress Nayanthara remains synonymous with earnest hard work and dedication when it comes to breathing wholesome lives into her respective characters onscreen. Undoubtedly, she remained an adorable icon for more than a couple of decades for this radically distinctive nature. The actress, yet again, exhibits her acting prowess in her upcoming movie ‘Annapoorani’- The Goddess of Food, directed by Nilesh Krishnaa, and produced by Zee Studios, NAAD SStudios & Trident Arts, which is all set for worldwide theatrical release on December 1, 2023. 


Since the film revolves around the world of Cooking, the actress made sure that she gives her 100% best for her role as chef. The team had a real chef on the sets during the cooking sequences to give the inputs. Actress Nayanthara was humble enough to take the inputs, and she performed even the minute cooking nuances like Pan flipping, Tossing, and many more that are owned as perfect traits of a chef. The team affirms that there isn’t a single cheating shot and Nayanthara has performed it without any dupes. 


Since the film is made on a grand scale and many contents had to be filmed, Nayanthara stayed on the sets even during the lunch and dinner breaks without stepping into the caravan. Actress Nayanthara is well-known for her professionalism, and here’s something that left everyone awestricken on the sets of ‘Annapoorani’. There was a particular occasion, where she had some personal commitments planned after shooting. What was supposed to get over by 10 p.m. got extended till 12 a.m. midnight. When the crew informed her that the shooting could be continued the next day owing to her personal work, she decided to stay back and get the shooting done, since the setup was grand, and important sequences were to be filmed. Finally, she stayed till early morning 5 a.m. to complete the sequence. 


The entire team of ‘Annapoorani’ is raving about the discipline, dedication, and professionalism of Lady Superstar Nayanthara, which they believe has inspired them vividly. 


The film features Jai, Sathyaraj, KS Ravikumar, Redin Kingsley, Achyuth Kumar, Kumari Sanchu, Renuka, Karthik Kumar, Suresh Chakkaravarthy, and many others as the pivotal characters. 


Thaman S is composing music, Sathyan Sooryan is handling cinematography and Praveen Antony is overseeing editing works. G Durairaj (Art), Arul Sakthi Murugan (Dialogues), Prashanth S (Additional Screenplay), Sanjay Raghavan (Creative Producer), Linda Alexander (Executive Producer), Venky (Publicity Designer) and Suresh Chandra-Rekha D’One (PRO) are the others in the technical crew.

அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய

 *‘அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய நயன்தாரா!*











திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் நடிகை நயன்தாரா எப்போதுமே தயங்குவதில்லை. இந்த தனித்த விஷயம்தான் சந்தேகத்திற்கு இடமின்றி திரைத்துறையில் அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு படமாக அவர் 'அன்னபூரணி- The Goddess of Food’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 

 

இந்தத் திரைப்படம் சமையலைச் சுற்றி வருவதால், செஃபாக நடிகை நயன்தாரா தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். மேலும், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது. சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார் நயன்தாரா. இதில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை என்றும், நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார் என்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது. 


படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததால் நடிகை நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்துள்ளார். நடிகை நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு 'அன்னபூரணி' படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார். 


இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (உரையாடல்கள்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளவர்கள்.