Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Saturday, 3 May 2025

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look"






"Debut Director Raam indhra’s 'Manidhargal' Grabs Attention with First Look"


Debut director Raam indhra's thriller drama set over a single night – “Manidhargal”!


Produced by Studio Moving Turtle and Sri Krish Pictures, “Manidhargal” is a thriller drama helmed by debutant director Raam indhra, featuring a cast of fresh faces. The film delves into the strange nature of human behavior and promises a gripping narrative.


The impressive first look poster of “Manidhargal” was released yesterday by popular film personalities Aishwarya Rajesh, Bobby Simha, Santhosh Prathap, and producer C.V. Kumar.


Set in a unique backdrop, the first look poster visually explores the inner conflicts and entanglements of humans, and has been well-received by cinema enthusiasts and fans alike.


The story unfolds over the course of one night, where director Ram Indira has crafted a novel thriller experience within a different setting.


Speaking about the film, director Raam indhra said:


"This film was made with the help of friends and through a crowdfunding effort. Human minds are complex and change every moment. I wanted to bring that emotional turbulence to the screen. The story revolves around six friends who gather one night for drinks. Within the next six hours, a minor spark turns into a massive problem. We've made it into a gripping thriller that audiences will enjoy. The entire story takes place at night — but not like the night you've seen on screen before. We've portrayed the very feel and tone of night as you would experience it yourself. As Dindigul is my hometown, we completed the full shoot there. I owe a lot of thanks to my people. This will be a completely unique experience for audiences."


The film features debut actors Kapil Velavan, Daksha, Arjun dev Saravanan, Gunavanthan, and Sambasivam in lead roles.


With all production work completed, the team is planning to bring the film to theatres soon. The official theatrical release date will be announced shortly.


Technical Crew:


Written & Direction - Raam indhra

Cinematography -  Ajay Abraham George

Music - Anilesh L mathew

Edit - Dinsa

Art Direction - Mahendhran Pandiyan

lyrics - Karthick Netha

Singer - Kapil Kapilan

Sound mixing - Anand Ramachandran

Makeup - A sabari girisan

Vfx - Antony britto 

DI - Vasanth S karthik

Design - Riverside house 

Sfx - sathish

Stunt - Win veera

First AD - Lokesh k kannan

Co - Producers: Dharanidharan parimala kulothungan, Yuvaraj N


Actors 

Kapil vaelavan 

Dhaksha

Arjun dev Saravanan

Gunavandhan

Sambasivam 


Production - Studio Moving Turtle & Sri Krish Pictures

Producers - Rajendra Prasad, Naveen Kumar, Sambasivam K


Pro : Sathish, Siva (AIM)

பாராட்டுக்களைக் குவிக்கும் மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 பாராட்டுக்களைக் குவிக்கும் மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !! 






அறிமுக இயக்குநர் இராம் இந்திரா  இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும்  திரில்லர் டிராமா  “மனிதர்கள்” !! 


Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”. 


இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் தயாரிப்பாளர் சி.வி. குமார் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர்.


சகதிக்குள் மல்லுக்கட்டும் மனிதர்களை  வித்தியாசமான களத்தில்,  காட்சிப்படுத்தியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், திரை ஆர்வலர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 


ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா. 


படம் குறித்து இயக்குநர் இராம் இந்திரா கூறியதாவது…

இது நண்பர்களின் உதவியால், கிரவுட் ஃபண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப்படம். ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளோம். இது முழுக்க இரவில் நடக்கும் கதை, இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது, நீங்கள் நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். திண்டுக்கல் என் சொந்த ஊர் என்பதால் அங்கேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடித்தோம். என் ஊர் மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். 


இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ்,  சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். திரையரங்கு வெளியீட்டுத் தேதி,  விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தொழில் நுட்ப குழு 

எழுத்து - இயக்கம் -  இராம் இந்திரா 

ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,

இசை - அனிலேஷ் எல் மேத்யூ ,

படத்தொகுப்பு - தின்சா,

கலை - மகேந்திரன் பாண்டியன்,

பாடல் - கார்த்திக் நேத்தா,

ஒப்பனை - அ சபரி கிரிசன்,

துணைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ்,

உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன்,

சண்டை பயிற்சி - வின் வீரா,

ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன்,

சப்தம் - சதீஷ்,

வண்ணம் - வசந்த் செ கார்த்திக்,

வரைகலை - ஆன்டனி பிரிட்டோ,

விளம்பர வடிவமைப்பு  - ரிவர் சைடு ஹவுஸ்.


தயாரிப்பு (producers):

இராஜேந்திர பிரசாத்,

நவீன்,

மு.கி.சாம்பசிவம் (Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures) 


மக்கள் தொடர்பு :  சதீஷ், சிவா (AIM)

Friday, 2 May 2025

என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி

 *'என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி*








*Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்...மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.*



திரைத்துறை எப்போதும் சாதனையாளர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கி வருகிறது. சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குநராகவும்.... கலைஞராகவும்... ஏராளமானவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 63 வயதை தொடும் பெண்மணி ஒருவர் முதன் முதலாக 'என் காதலே' எனும் திரைப்படத்தை இயக்கி முதுமையிலும் சாதனை படைக்கலாம் என்ற தனி முத்திரையை பதித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் தங்களது பொன்னான நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் அதிகமாக உள்ள இந்த சமூகத்தில்... இந்த பெண்மணியின் சாதனை பயணத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் ஏற்படுகிறது. இது தொடர்பாக 'என் காதலே' படத்தின் இறுதிக் கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த லண்டன் வாழ் தமிழச்சியான இயக்குநர் ஜெயலட்சுமியை சந்தித்து உரையாடினோம்.


வாழ்த்துக்கள் மேடம். 


உங்களைப் பற்றி..?


வணக்கம். சிறிய வயதில் இருந்தே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கான சமூக சூழல்- குடும்ப சூழல் ஏற்றதாக இல்லை.  அதிலும் பெண் என்பதால் இந்த சமூகம் விதித்த கட்டுப்பாட்டை மீறி இயங்க கூடிய அளவிற்கு எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு மூன்று பெண் பிள்ளைகள் இருந்ததால் ...குடும்ப வாழ்க்கை அவர்களுக்கான நேரமாக இருந்தது. அதற்காக இந்த உலகம் முழுவதும் 75 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு எனக்கு கிடைத்த பொன்னான ஓய்வு நேரத்தை.. என் லட்சியத்திற்காக முதலீடு செய்யத் தொடங்கினேன். அதனுடைய தொடர்ச்சி தான் 'என் காதலே' எனும் என் படைப்பின் பயணம். 


உங்களுக்கு சினிமா பின்னணி குறித்து ..?


என்னுடைய சகோதரர் ராமசந்திரன் 1979 ஆம் ஆண்டில் இரண்டு (ஆத்தோர ஆத்தா , மாதவனும் மலர்விழியும்)  திரைப்படங்களை இயக்கினார்.‌ எங்களுடைய சகோதரரின் திரைப்படங்களின் மூலம் நடிகர் ரகுவரன் மற்றும் கோவை சரளா ஆகியோர் அறிமுகமானார்கள்.  என்னுடைய மகள் பூஜா பல்லவி- வி எஃப் எக்ஸ் துறையில் பணியாற்றி வருகிறார். '1917 ', 'எக்ஸ் மேன்' என 15க்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதில் '1917 :என்ற திரைப்படம் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறது.  


என் காதலே..?


' என் காதலே' என்பது ஆழமான கருத்தினை பின்னணியாக கொண்டது. இந்த திரைப்படம் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் நான் சொல்ல வந்த கருத்து ஏற்புடையதாக இருக்கும். என் காதல் என்பதற்கும்... என் காதலே என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ..இந்தப் படத்தை ஒரு முறை நீங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும். காதலர்கள் அனைவரும் தங்கள் காதலை வாழ வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனை இந்தப் படத்தில் உரத்து பேசியிருக்கிறேன்.‌ காதல் என்றால் என்ன? காதல் தரும் உறவு என்ன மாதிரியானது? காதலிக்கும் போதும் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்ற மூன்று விசயங்கள் ஏன் அவசியம் என்பதையும் விவரித்து இருக்கிறேன். 

தாய் மாமன் உறவின் உன்னதம் குறித்தும் , அவரின் காதல் உணர்வு குறித்தும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண் கிளப்புக்கு சென்றால் எப்படி செல்ல வேண்டும் என்பதையும்,  கோவிலுக்கு சென்றால் எப்படி செல்ல வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறேன்.


திரைத்துறையில் கற்றதும் பெற்றதும்? 


மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் பணம் என்பது தேவைதான். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அதற்காக பணம்தான் பிரதானம். அதற்காக வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என வாழ்வதுதான் தவறானது.‌ பணத்திற்காக தவறான பாதையிலும் பயணிக்க எத்தனிக்கும் மனிதர்கள் அழிய வேண்டும். நல்லவர்கள் இந்த பூவுலகில் வாழ வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. 


இந்த சினிமாவிற்கு நான் வருவதற்கு மிக முக்கியமான காரணம் என் ஆழ் மனதை ஆக்கிரமித்துள்ள உணர்வுகளே. ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கையை அசலாக வாழ வேண்டும்.


இதுவே என்னை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்த உந்துவிசை என்றும் சொல்லலாம். சமூகத்திற்கு நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடமாவது உண்மையைப் பேச வேண்டும். உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்ற நிலை உருவானால்... இந்த சமூகம் நிச்சயமாக மேம்படும். 

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பாடத்தை நடத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தாலும் அது தவறு என்று சுட்டிக் காட்டும் துணிச்சலை பெற்றிருந்தேன். 


இதன் காரணமாகத்தான் சினிமாவில் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் நேரடியாக இந்த வயதில் படத்தை இயக்கியிருக்கிறேன். சமூகத்தின் மீதுள்ள கட்டற்ற ஈடுபாடு தான் இதன் அழுத்தமான பின்னணி. 


சினிமாவின் நுழைந்ததும் இங்கு பொய்யை மட்டும் தான் பேச வேண்டும் என்ற ஒரு மாயையை- மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு தொடக்கத்தில் தொடர் தோல்விகள் தான் கிடைத்தது. இருந்தாலும் இதனை சவாலாக எடுத்துக் கொண்டு உண்மையை மட்டுமே பேசி இப்படத்தை நிறைவு செய்து இருக்கிறேன். 


சினிமாவில் கடந்த காலங்களில் சமூகத்திற்கு பயனளிக்கும் கருத்துக்களைக் கொண்ட படங்கள்தான் வெளியானது. மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய பல விசயங்களை ஜனரஞ்சகமாக சொன்னது சினிமா. அதனால் தான் அந்த காலகட்டம் சினிமா மக்களால் போற்றப்பட்டது ஆனால் தற்போது சினிமா கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் தவறானவர்களாகத்தான் காட்சிப்படுத்துகிறது. இதனால்தான் சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காக' என் காதலே' படத்தை உருவாக்கி இருக்கிறேன். 


இந்தப் படத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. இந்த சமுதாயத்திற்கு.. சமுதாய நல்லிணக்கத்திற்கு... சமூக மேம்பாட்டிற்கு ...என்னாலான தரமான ஒரு படைப்பையாவது வழங்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தில் தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். 


இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்க்கும் மூன்று மணி நேரமாவது நல்ல விசயங்களை மக்கள் கேட்க வேண்டும்... பார்க்க வேண்டும் ... என்பதற்காகவும் இப்படத்தை இயக்கி இருக்கிறேன். 


தற்போதைய திரைப்படங்கள் அனைத்தும் வன்முறையை தூக்கிப் பிடிக்கும் படங்களாக தான் இருக்கிறது. இதனால் இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கையை வன்முறையான பாதையில் பயணிக்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறார்கள். 


இயக்குநராக சந்தித்த சவால்கள்?


'என் காதலே' படத்தின் பணிகளை தொடங்கும் தருணத்திலிருந்து பல சவால்களை எதிர்கொள்ள தொடங்கினேன். கொஞ்ச நாட்களிலேயே லண்டனில் இருந்து இங்கு வந்து ஏன் சினிமாவை எடுக்க தொடங்கினோம்? என மனதளவில் வருத்தப்படுவதற்கான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது.‌ இங்கு யாரும் கலைக்காக உண்மையாக பணியாற்றவில்லை. எல்லோரும் பொய்களை சொல்லிக் கொண்டும்... பணத்தை பறித்துக் கொள்வதற்காகவும் தான் பேசுகிறார்கள். தவறானவர்கள்.. பொய்யர்கள்... என்று விமர்சிக்க தொடங்கினால்.. உடன் இருப்பவர்கள் எதிர்மறையாக யாரையும் குறை சொல்லாதீர்கள். இது சினிமா. அனைவருடைய ஆதரவும் தேவை என யோசனை சொல்கிறார்கள். 


படப்பிடிப்பு நடைபெற்ற தருணங்களில் என்னை கை தூக்கி விட்டவர்களை விட கீழே தள்ளி விட்டவர்கள் தான் அதிகம். இருந்தாலும் இதையெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் என்ற அளவில் மனதில் துணிவையும், உறுதியையும் கொண்டு படத்தினை நிறைவு செய்து இருக்கிறேன். உலக நாடுகளில் பயணம் மேற்கண்ட போது எனக்கு கிடைத்த புதிய மனிதர்கள் -அவர்களுடனான கசப்பான மற்றும் விந்தையான அனுபவங்கள் -அவற்றின் மூலமாக கற்றுக்கொண்ட விசயங்கள்‌ - இதனை மனதில் வைத்து தான் இந்த சவாலில் வெற்றி பெற்றிருக்கிறேன்.


நடிகர்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?


லிங்கேஷ் - லியா - திவ்யா என ஒவ்வொரு நடிகரையும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருந்ததால் மட்டுமே தேர்வு செய்தேன். இதில் திவ்யா மலையாள பெண்.‌ இந்தப் படத்தில் தான் அறிமுகமாகிறார். மீனவ சமுதாயத்தில் உள்ள பெண் கதாபாத்திரம் அது. நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 



காலேஜ் ரோடு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய நடிகர் லிங்கேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'என் காதலே' எனும் திரைப்படத்தில் அவருடன் இங்கிலாந்து நடிகை லியா, மலையாள நடிகை திவ்யா, காட்பாடி ராஜன், மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, 'சித்தா' தர்ஷன், செந்தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டோனி ஜான் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாண்டி சாண்டெல்லோ இசையமைத்திருக்கிறார்.  படத்தொகுப்பு பணிகளை கோபி கிருஷ்ணா கவனித்திருக்கிறார். மீனவ சமுதாய பின்னணியில் முக்கோண காதல் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்- இயக்குநர் ஜெயலட்சுமி தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் இதில் வரும் எதிர்வரும் ஒன்பதாம் தேதி என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


சாதனை பெண்மணி ஜெயலட்சுமியின் எண்ணத்திலும், உணர்விலும் உருவாகி இருக்கும் 'என் காதலே ' என் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம்.

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் !!

 தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் !! 


தளபதி விஜயின் பிளாக்பஸ்டர் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். 







மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு தான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில்  உருவான பிரம்மாண்டமான “துப்பாக்கி” படத்தில், வில்லனுடன் வரும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். அவரது நடிப்பு, இன்னும் பல வாய்ப்புகளை வாங்கித் தந்தது. வித்தைக்காரன் படத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக கலக்கியவர், தற்போது ரெட்ரோ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். 


விரைவில் வெளியாகவுள்ள சீயான் விக்ரமின்  “துருவ நட்சத்திரம்” படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 


தமிழில் முன்னணி நட்சத்திரங்களான தளபதி விஜய், சீயான் விக்ரம், சூர்யாவுடன் நடித்தது குறித்து கூறுகையில்… 

துப்பாக்கி என் முதல் படம் என்பதால், எனக்கு நிறைய தயக்கம் இருந்தது ஆனால் விஜய் மிக ஆதரவாக, பொறுமையாக சொல்லித்தந்து எங்களைப் பார்த்துக்கொண்டார். அவருடன் ஆக்சன் காட்சிகளில் இணைந்து நடித்தேன், அவரே ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் கலக்குவார், எல்லா சின்ன நடிகர்களிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார். அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. சீயான் விக்ரம் ஒரு பிறவி நடிகர், எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். சீயானின் துருவ நட்சத்திரம் படத்தில் என் கதாப்பாத்திரத்தை கண்டிப்பாக எல்லோரும் பாராட்டுவார்கள், மிக முக்கியமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். சூர்யாவுடன் 18 நாட்கள் ரெட்ரோ படத்தில் பணிபுரிந்தேன், சில காரணங்களால் படத்தில் சில காட்சிகள் வரவில்லை. ஆனால் சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாது. அவர் மிகக் கடுமையான உழைப்பாளி. தமிழ் என் சொந்த நிலம் போல் ஆகிவிட்டது. இங்கு இருக்கும்போது தான் நான் மிக சுதந்திரமாக உணர்கிறேன். இப்போது நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் எனக்கென ஓர் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. 


வில்லன் குணச்சித்திரம் என கதப்பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்திப் போகும் ஆஷிஃப் அடுத்தடுத்து, தமிழின் முன்னணி இயக்குநர் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கவுள்ளார். அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Bollywood Actor Md Asif Making Waves in Tamil Cinema!

Bollywood Actor Md Asif Making Waves in Tamil Cinema!







Md Asif, who made his Tamil film debut through Thalapathy Vijay’s blockbuster Thuppakki, is now impressing audiences with key roles in films alongside leading Tamil stars. He recently acted in an important role in Suriya’s latest release Retro.


Originally from Mumbai, Md Asif has always had a strong passion for acting. His first opportunity came through Thuppakki, a grand film directed by A.R. Murugadoss and starring Thalapathy Vijay. In the film, Asif played a significant role alongside the villain, marking his entry into Tamil cinema. His performance opened doors to several other opportunities. He later played a customs officer in Vettaikaaran, and now shares screen space with Suriya in Retro.


Md Asif  will also be seen in a crucial role in the upcoming film Dhruva Natchathiram, starring Chiyaan Vikram.


Speaking about acting with Tamil cinema’s top stars—Thalapathy Vijay, Chiyaan Vikram, and Suriya—Md Asif  shared:


“Thuppakki was my first film, and I was quite nervous. But Vijay was very supportive and patiently guided us throughout. I acted with him in action scenes, and he never used a stunt double—he truly shines in such sequences. He treats every actor equally, no matter their stature. I admire his simplicity and hope to work with him again.”


About Vikram, he said:


“Chiyaan is a born actor. Whatever role he’s given, he transforms completely. In Dhruva Natchathiram, I’ve played a very important role, and I’m confident the audience will appreciate it.”


On his experience working with Suriya:


“I worked on Retro for 18 days. Though some of my few scenes didn’t make the final cut due to certain reasons, acting with Suriya was unforgettable. He’s an incredibly hardworking artist.”


Md Asif  now considers Tamil Nadu his second home:


“Tamil cinema feels like my own land. It’s here that I feel most free. I’ve started receiving many offers from the Tamil industry now. My dream is to earn a place in the hearts of Tamil fans.”


Known for his strong presence in villainous and character roles, Md Asif  is set to appear in upcoming films with leading Tamil directors and stars. Official announcements regarding these exciting projects will be made soon.

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல்

 *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’  திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!*



*வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!*


நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை இருந்த அதிகபட்ச ஓப்பனிங் வசூலான ‘தசரா’வின் ரூ.38 கோடிகளை கடந்துள்ளது.


இந்த அதிரடி வசூல் வெறும் இந்தியாவில் மட்டும் இல்லை. வட அமெரிக்காவிலும் இந்த படம் $1 மில்லியனை கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி, நானி நடித்த படங்களில் மிக உயர்ந்த வசூலையும், ஒரே நாளில் இந்திய படங்களின் வசூலில் முதலிடத்தையும் பிடித்து, $1.18 மில்லியன் வசூலுடன் சாதனை படைத்துள்ளது.


முக்கியமான ரிலீஸ்கள் இல்லாத ஒரு மாதத்தில், ‘HIT 3’ தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்திய சினிமாவிற்கும் ஒரு புத்துயிர் ஊட்டும் படமாக மாறியுள்ளது. இது நானியின் முந்தைய ஹிட் படங்களைவிட மட்டுமல்லாமல், நேற்று வெளியாகிய அனைத்து இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளி, மொழி எல்லைகளைக் கடந்து, தலைசிறந்த முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது.


மேலும், வரும் வாரங்களில் பெரிய படங்கள் இல்லாத சூழ்நிலையில், இப்படத்தின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நாளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே மிக அதிக அளவில் உள்ளன — இது ஒரு நாள் அதிசயமல்ல, இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் பிக்பாங் தொடக்கம்தான்!

Natural Star Nani’s HIT: The 3rd Case Collects Record-breaking 43 Cr+ On Day One Worldwide

 *Natural Star Nani’s HIT: The 3rd Case Collects Record-breaking 43 Cr+ On Day One Worldwide*



Natural Star Nani has arrived at a whole new level of superstardom. Basking under the glory of back-to-back blockbusters, the ever-evolving star has detonated the box office with his latest high-octane crime thriller, HIT: The 3rd Case, which is wreaking absolute mayhem in theatres worldwide.


From the moment the first show hit screens, HIT: The 3rd Case turned into a rampaging force, obliterating expectations and rewriting opening day records. Defying the trend for thrillers, which usually garner decent openings compared to masala blockbusters, Sailesh Kolanu directorial venture has exploded with a sensational Rs 43+ crore worldwide gross on Day 1 — the highest day one collection of Nani’s career, storming past the Rs 38 crore opening of his previous record-setter, Dasara.


But the storm wasn’t limited to India. In North America, the movie made a seismic impact by crossing the $1 million mark on day one. As of 10 PM, the North America Day 1 tally to an astounding $1.18 million, the best-ever for a Nani starrer and the top Indian opener in the region for the day.


Amid a month littered with underwhelming box office results, HIT 3 has become the beacon of revival for Tollywood and Indian cinema. It didn’t just outperform Nani’s past hits — it led the entire pack of Indian releases on the same day, stamping its dominance with the highest first-day gross among all new films across languages.


With no major releases in sight and sky-high word of mouth boosting its momentum, HIT 3 is primed for a historic run. Advance bookings for day two are already through the roof, signalling that this is not just a one-day wonder — it's the beginning of a box office juggernaut.

The Alliance Company Celebrates 125 Glorious Years and Marks the Release of 25

The Alliance Company Celebrates 125 Glorious Years and Marks the Release of 25 Books authord by Crazy Mohan and released by Kamal Hassan on May 1, 2025


The Alliance Company, a pillar of excellence and tradition in the Tamil publishing industry, proudly announces its milestone achievement of completing 125 remarkable years of publishing quality books in Tamil. 125 years of existence is no mean achievement for any organization and have been pioneers in publishing books of literary and other diverse values. Our authorship includes all popular writers like Devan, Cho S. Ramaswamy, Vaali, Actor Sivakumar, Actor Suriya and so on. From the inception, the forte of our publishing house has been publishing translations of many great Indian writers from Hindi, Bengali, Marathi, Kannada, Telugu, Malayalam to Tamil, which includes Bank





im Chandra Chatterjee, Sarat Chandra Chattopadhyay, Rabindranath Tagore. Mahatma Gandi Visited our stall in 1946 and said “I appreciate Alliance Publications’ Founder Shri. V. Kuppuswamy Iyer who is publishing great books in Tamil.”

As part of its 125th-anniversary celebrations, The Alliance Company is thrilled to unveil the prestigious release of 25 books authored by the beloved humourist, playwright, and screenwriter Crazy Mohan. These books, spanning his iconic plays, witty essays, and timeless humour, has been released on May 1, 2025. 

The 25 titles include: Allaudin and 100 Watts Bulb; Anbulla Maadhuvirku; Ayya…! Amma…! Amammaa…!; Beware of Maadhu; Chocolate Krishna; Crazy Ghost; Crazy Kishkindha; Crazyai Kelungal Vol. 1; Crazyai Kelungal Vol. 2; Crazyudan Siriyungal Vol. 1; Crazyudan Siriyungal Vol. 2; Gethaa Ubhadesam; Google Gadothgajan; Here is Kasi; Honeymoon Couple; Jurassic Baby; Maadhu +2; Maadhu Mirandal; Madhil Mel Maadhu; Marriage Made in Saloon; Meesai Aanalum Manaivi; Middleclass Murder; Orru Babyin Diary Kuruppu; Return of Crazy Thieves; Satellite Samiyar.

The books were released by Kamal Hassan and the dignitaries on stage included Ravi Appasamy, K. S. Ravikumar, Actor Jayaram, Maadhu Balaji, Alliance Srinivasan and S. B. Kanthan. This event was not just a tribute to Crazy Mohan’s unparalleled contribution to Tamil theatre and literature, but also a testament to The Alliance Company’s enduring legacy of bringing exceptional literary works to readers across generations.

லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3

 லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 போட்டியில் வெற்றி பெற்றது






சென்னை, மே 2025 – ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 பட்டம் பெறும் இறுதிப் போட்டியில், லோயோலா கல்லூரி கால்பந்து அணி STEDS HCLF SFC அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக டாக்டர் ஆர். ஆனந்த குமார், IAS, மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.


போட்டியின் சிறப்பம்சங்கள்


தமிழ்நாட்டை சேர்ந்த 18 முன்னணி அணிகள் மூன்று மாதங்கள் நீண்ட இந்த போட்டியில் பங்கேற்றன.


ஒவ்வொரு குழுவிலிருந்தும் முன்னணி நான்கு அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறின.


இறுதிப் போட்டியில் லோயோலா கல்லூரி மற்றும் STEDS HCLF SFC அணிகள் தீவிரமாக மோதின.



விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள்


1. மிஸ்டர் நவநீதன், Managing Director, Motodoctor App



2. மிஸ்டர் சாண்டி, இந்தியாவின் புகழ்பெற்ற நடன இயக்குனர், நடனக் கலைஞர் மற்றும் நடிகர்



3. மிஸ் கல்யாணந்தி சச்சிதானந்தம், உறுப்பினர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழக அரசு



அவர்கள் தெரிவித்த ஊக்கமளிக்கும்  வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள், போட்டியாளர்களுக்கு  சிறப்பு சேர்த்தது.


PORKKALAM பற்றி


PORKKALAM என்பது Football Makka நிறுவனத்தின் முக்கியமான போட்டி. இதை பொர்னாட் தாம்சன் மற்றும் ஹாரிசன் ஜேம்ஸ் ஆகியோர் நிறுவியுள்ளனர். இப்போட்டி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இளம் கால்பந்து திறமைகளை வளர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.


Football Makka பற்றி


Football Makka என்பது தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் கால்பந்து திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் உருவான ஒரு முயற்சி. PORKKALAM மற்றும் இதர நிகழ்வுகள் மூலம் சமூக ஒற்றுமை, போட்டித் தன்மை மற்றும் கால்பந்தின் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கிறது.

Loyola College Wins Turf Town Presents PORKKALAM Season 3

 *Loyola College Wins Turf Town Presents PORKKALAM Season 3*






Chennai, May’2025 - Loyola College Football Team triumphed over STEDS HCLF SFC with a 3-0 victory in the grand finale of Turf Town presents PORKKALAM Season 3 at Jawaharlal Nehru Stadium. The event was graced by notable dignitaries, including Dr. R. Ananda Kumar, IAS, and renowned filmmaker Pa. Ranjith.


*Tournament Highlights*


18 top teams from Tamil Nadu participated in the three-month-long tournament.

- The top four teams from each group advanced to the knockout rounds.

- Loyola College and STEDS HCLF SFC battled it out in the thrilling final.


*Esteemed Dignitaries at the Prize Distribution Ceremony*


The prize distribution ceremony was honored by the presence of:


1. *Mr. Navaneethan*, Managing Director of Motodoctor App

2. *Mr. Sandy*, Renowned Indian choreographer, dancer, and actor

3. *Ms. Kalyananthy Satchithanantham*, Member, Widows and Destitute Women Welfare Board, Government of Tamil Nadu


Their inspiring words and warm appreciation added to the celebration, acknowledging the teams' exceptional talent and sportsmanship.


*About PORKKALAM*


PORKKALAM is a flagship tournament by Football Makka, a football media and development initiative founded by Bernaud Thomson and Harrison James. The tournament aims to nurture and spotlight young talent from across Tamil Nadu, promoting grassroots football development.


*About Football Makka*


Football Makka is a Tamil Nadu-based initiative dedicated to promoting local footballing talent. Through PORKKALAM and other initiatives, it fosters community spirit, competition, and celebration of football.

கபளிஹரம் கதாநாயகன் தக்‌ஷன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து,

 கபளிஹரம் கதாநாயகன் தக்‌ஷன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து, கதாநாயகர்களாக நடிக்கும் படம் "I AM WAITING". 









மகிழ் புரொடக்சன்ஸ் C.பியூலா தயாரிப்பில், N.P.இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகிறது "I AM WAITING".


கசாப்பு கடை நடத்தி வரும் ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கையை மையமாக வைத்து ஆக்‌ஷனுடன் உருவாகியுள்ள படம் "I AM WAITING".


ஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்‌ஷன் ஹீரோ தக்‌ஷன் விஜய்!


அசோக், தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். 


N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளார். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் C.பியூலா மகிழ்.


படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது!


"I AM WAITING" என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!


@GovindarajPro

Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from

 *Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from Sekhar Kammula’s Bilingual Cinematic Spectacle Kuberaa*






Setting the stage for one of the most anticipated films of the year, the first single "Poyivaa Nanba" from the Tamil-Telugu bilingual Kuberaa has officially been released — and it’s already making waves! Sung by the multi-talented Dhanush with lyrics by acclaimed wordsmith Viveka and choreography by the energetic Shekar VJ, the song has struck a chord with fans across the globe, trending on YouTube within hours of its launch.


The music for Kuberaa is composed by the celebrated Devi Sri Prasad, a name synonymous with blockbuster soundtracks across South Indian cinema and Bollywood. With over 100 films under his belt and a career spanning 25 illustrious years, DSP’s powerful composition for "Poyivaa Nanba" reinforces his reputation as a true musical magician. The National Award-winning composer once again proves why he’s one of India’s most beloved artists.


Directed by the nationally acclaimed Sekhar Kammula, known for masterpieces like Dollar Dreams and Fidaa, Kuberaa promises to deliver a cinematic experience rich in emotion, storytelling, and star power. Following his National Film Award-winning debut, Kammula has become a household name for delivering authentic, heartfelt narratives — and Kuberaa is shaping up to be another jewel in his crown.


Boasting a stellar ensemble cast featuring Dhanush, Nagarjuna, Rashmika Mandanna,Jim Sarbh, and Dalip Tahil, Kuberaa is produced by Sunil Narang and Puskur Ram Mohan Rao under the banners of Sri Venkateswara Cinemas LLP and Amigos Creations Pvt. Ltd. The film is complemented by Niketh Bommi's captivating cinematography, Karthika Srinivas' sharp editing, and costumes designed by Kavya Sriram and Poorva Jain.


The electrifying response to "Poyivaa Nanba" is just the beginning. Fans are eagerly counting down the days to witness Kuberaa’s grandeur on the big screen.


*CAST:*

Dhanush

Nagarjuna 

Rashmika Mandanna 

Jim Sarbh

Dalip Tahil


*CREW:*

Producers: Sunil Narang, Puskur Ram Mohan Rao  

Director: Sekhar Kammula  

Music: Devi Sri Prasad  

Cinematography: Niketh Bommi  

Editing: Karthika Srinivas  

Costume Design: Kavya Sriram, Poorva Jain  

Produced by: Sri Venkateswara Cinemas LLP, Amigos Creations Pvt. Ltd.  

Public Relations: Riaz K Ahmed, Paras Riyaz

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்* 





ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், விநியோகஸ்தர் ஜி.என். அழகர்சாமி, ஃபைனான்சியர் பதம், இயக்குநர் திருமலை, தயாரிப்பாளர் ராஜராஜன், ஒளிப்பதிவாளர் பிரமோத், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் சரவணன் மற்றும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி வரவேற்றனர். 


'அடங்காதே' ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள 'அடங்காதே' படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். 


அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். 


'அடங்காதே' குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, "இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி," என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், "திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி," என்று தெரிவித்தார்.


ஜி.வி. பிரகாஷ் குமாரே 'அடங்காதே' திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை பி.கே. வர்மா கவனிக்க, டி. சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு ஏ.ஆர். மோகனும், சண்டைப் பயிற்சிக்கு ராஜசேகரும், நடன இயக்கத்திற்கு தினேஷும், வடிவமைப்புக்கு 24 ஏஎம் டியூனி ஜானும் பொறுப்பேற்றுள்ளனர். பாடல் வரிகளை கபிலன், சாஹிதி, அருண்ராஜா காமராஜ், உமாதேவி, பார்வதி மற்றும் சிவகங்கா எழுத, உடைகளை சுஜித் வடிவமைத்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எம். செந்தில்; நிர்வாகத் தயாரிப்பு: எம். சுரேஷ் ராஜா, டி, ரகுநாதன்; ஸ்டில்ஸ்: தேனி முருகன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.


***