Featured post

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் *திரு.பி.விஸ்வநாதன்* அவர்களை

 மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் *திரு.பி.விஸ்வநாதன்* அவர்களை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் *SOP.விஜய் மகாலிங்கம் B.A.B.L.*, அவர்கள் ...

Tuesday, 23 June 2026

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் *திரு.பி.விஸ்வநாதன்* அவர்களை

 மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் *திரு.பி.விஸ்வநாதன்* அவர்களை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் *SOP.விஜய் மகாலிங்கம் B.A.B.L.*, அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.





அப்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, உசிலம்பட்டி பகுதியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை மாண்புமிகு அமைச்சரிடம் வழங்கினார்.


இக்கல்லூரி அமைக்கப்பட்டால், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வியை எளிதில் தொடரும் வாய்ப்பு ஏற்படும் என்றும், பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இது பெரும் துணையாக அமையும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் *SOP.விஜய் மகாலிங்கம் B.A.B.L.*, அவர்கள் தெரிவித்தார்…

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

 *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*




*குடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்” – அர்ஜுன் தாஸ்*


*நல்ல நெகட்டிவ் ரோல் வந்தால் மீண்டும் செய்வேன்” – அர்ஜுன் தாஸ் பேட்டி*


ஹீத் லெட்ஜரின் ஜோக்கர் என் ஃபேவரைட் வில்லன்” – அர்ஜுன் தாஸ்



தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.


ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.


சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். அந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே…


“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள்  பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.


மேலும், தனது பெற்றோர்களும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள் என்றும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, தனது புதிய படமான கான் சிட்டி குறித்து பேசிய அவர், “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.


தனது கதாபாத்திரம் குறித்தும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் கூறினார்.


தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், தற்போது பல்வேறு வகையான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருவதாக தெரிவித்தார். “நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.


சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமணச் செய்திகள் குறித்த கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார். “எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை,” என்று சிரித்தபடி மறுத்தார்.


ரசிகர்கள் தன்னிடம் அதிகமாக கேட்கும் விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் போது குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்,” என்றார்.


கான் சிட்டி படத்தில் தன்னுடன் நடித்த கலைஞர்களைப் பற்றியும் அவர் பாராட்டிப் பேசினார். “படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது,” என்று கூறினார்.


குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான் என்றார்.


“நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்த பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.


எதிர்காலத்திலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.


தனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன்கள் குறித்து பேசிய அவர், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது என்றார். தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடமாக தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.


“ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்க வேண்டும். ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும். முழுக்க முழுக்க இருண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், அது கதைக்குள் சரியாக பொருந்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.


புதிய முயற்சிகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசும்போது, நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.


மேலும், தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் அவர் சுவாரஸ்யமான குறிப்பை பகிர்ந்தார். “படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்,” என்று மர்மம் கலந்த புன்னகையுடன் கூறினார்.


எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசும்போது, பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அடுத்தடுத்த காலங்களில் வித்தியாசமான கதைகளுடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.

Monday, 22 June 2026

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE

 ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE*


Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events of the year with Toxic: A Fairy Tale for Grown-Ups, as the makers officially announce the film’s worldwide theatrical release date of Wednesday, 26th August 2026. Accompanying the announcement is a striking new poster featuring Yash’s dual avatars, Raya and Ticket, offering audiences a fresh glimpse into the film’s dark, immersive and layered world. Far removed from a conventional celebration of fatherhood, the poster hints at a relationship steeped in tension, power and emotional complexity. Rather than a standard release-date reveal, it teases a story driven by conflicting emotions, hidden dynamics and the larger-than-life world that Toxic continues to build, further fuelling anticipation around one of the most awaited films of the year.


The release strategically positions Toxic in a strong festive corridor in 2026. Arriving on Wednesday, 26th August 2026, the film is poised to capitalise on an extended holiday window that encompasses Varamahalakshmi, Onam, Eid and Raksha Bandhan. The mid-week release allows Toxic to maximise its opening run across the festive period, benefiting from heightened audience engagement in both domestic and international markets. The timing creates an ideal launch pad for a large-scale cinematic event, enabling the film to reach audiences across regions, languages and demographics.


With every asset unveiled so far, Toxic has continued to establish itself as a project driven by ambition, scale and a distinctive creative vision. The film marks the first collaboration between highly acclaimed filmmaker Geetu Mohandas and Rocking Star Yash, bringing together two powerful creative forces, backed by KVN Productions and Yash’s Monster Mind Creations, in what promises to be one of Indian cinema’s most ambitious ventures. Shot simultaneously in Kannada and English, Toxic underscores its aspirations to set a new benchmark for Indian cinema while being designed for audiences across markets. The film will release in Kannada, Hindi, English, Telugu, Tamil and Malayalam, further amplifying its reach. Complementing this vision is a formidable ensemble cast featuring Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth and Tara Sutaria.


As the countdown to release begins, all eyes are now on Toxic and the scale of its theatrical rollout. With a strategic festive release corridor, a mid-week launch designed to maximise the holiday period, strong pan-India appeal, growing international interest and a world-building exercise that continues to intrigue audiences with every reveal, the film is poised to emerge as one of the most significant theatrical releases of 2026.


Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is set for a worldwide theatrical release on Wednesday, 26th August 2026.

டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!*

 *“டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!*


ராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்,  உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !


ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது.


வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும் பிரம்மாண்டமான உலகத்தை இது உணர்த்துகிறது. இதனால், ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.


2026 ஆம் ஆண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தை குறிவைத்து டாக்ஸிக் திரைப்படம் வெளியிடப்படுகிறது. வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய பண்டிகைகளை உள்ளடக்கிய நீண்ட விடுமுறை காலத்தில் படம் வெளியாக இருப்பதால், இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


புதன்கிழமை வெளியீடு என்பதால், நீண்ட விடுமுறை வாரத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த வெளியீடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டும், டாக்ஸிக் திரைப்படம் மிகப்பெரிய கனவு, பிரம்மாண்டம் மற்றும் தனித்துவமான படைப்பாற்றலுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த திரைப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் ராகிங் ஸ்டார் யஷ் ஆகியோரின் முதல் கூட்டணியாகும். KVN Productions மற்றும் யாஷின் Monster Mind Creations இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் பிரம்மாண்டமான முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள டாக்ஸிக், இந்திய சினிமாவுக்கு புதிய தரத்தை அமைக்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ளது. மேலும், கன்னடம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.


இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வெளியீட்டு கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் டாக்ஸிக் திரைப்படத்தின் மீதும் அதன் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு திட்டத்தின் மீதும் திரும்பியுள்ளது. பண்டிகை காலத்தை குறிவைத்த வெளியீடு, நாடு முழுவதும் ரசிகர்களை கவரும் வலிமை, சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் விரிவடைந்து வரும் படத்தின் உலகம் ஆகியவை டாக்ஸிக் திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டின் மிக முக்கியமான திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது


*ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE*


Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events of the year with Toxic: A Fairy Tale for Grown-Ups, as the makers officially announce the film’s worldwide theatrical release date of Wednesday, 26th August 2026. Accompanying the announcement is a striking new poster featuring Yash’s dual avatars, Raya and Ticket, offering audiences a fresh glimpse into the film’s dark, immersive and layered world. Far removed from a conventional celebration of fatherhood, the poster hints at a relationship steeped in tension, power and emotional complexity. Rather than a standard release-date reveal, it teases a story driven by conflicting emotions, hidden dynamics and the larger-than-life world that Toxic continues to build, further fuelling anticipation around one of the most awaited films of the year.


The release strategically positions Toxic in a strong festive corridor in 2026. Arriving on Wednesday, 26th August 2026, the film is poised to capitalise on an extended holiday window that encompasses Varamahalakshmi, Onam, Eid and Raksha Bandhan. The mid-week release allows Toxic to maximise its opening run across the festive period, benefiting from heightened audience engagement in both domestic and international markets. The timing creates an ideal launch pad for a large-scale cinematic event, enabling the film to reach audiences across regions, languages and demographics.


With every asset unveiled so far, Toxic has continued to establish itself as a project driven by ambition, scale and a distinctive creative vision. The film marks the first collaboration between highly acclaimed filmmaker Geetu Mohandas and Rocking Star Yash, bringing together two powerful creative forces, backed by KVN Productions and Yash’s Monster Mind Creations, in what promises to be one of Indian cinema’s most ambitious ventures. Shot simultaneously in Kannada and English, Toxic underscores its aspirations to set a new benchmark for Indian cinema while being designed for audiences across markets. The film will release in Kannada, Hindi, English, Telugu, Tamil and Malayalam, further amplifying its reach. Complementing this vision is a formidable ensemble cast featuring Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth and Tara Sutaria.


As the countdown to release begins, all eyes are now on Toxic and the scale of its theatrical rollout. With a strategic festive release corridor, a mid-week launch designed to maximise the holiday period, strong pan-India appeal, growing international interest and a world-building exercise that continues to intrigue audiences with every reveal, the film is poised to emerge as one of the most significant theatrical releases of 2026.


Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is set for a worldwide theatrical release on Wednesday, 26th August 2026.

Abhishek Nama’s most ambitious project, Nagabandham, is gearing up for a grand theatrical release on July 3rd

 Abhishek Nama’s most ambitious project, Nagabandham, is gearing up for a grand theatrical release on July 3rd.*



With exactly two weeks to go, the team has intensified its Pan-India promotional campaign.


The much-awaited theatrical trailer of the Virat Karrna starrer has been launched today, and it dives deep into the universe the movie set in.



The trailer begins at the sacred Anantha Padmanabha Swamy Temple in Thiruvananthapuram, where a priest reveals that the revered Brahma Kamalam is far more than a golden lotus.


Despite countless attempts by invaders and treasure hunters over centuries, the divine artifact has never been stolen.


When a powerful evil force seeks to possess it for unimaginable powers, Lord Shiva arrives and joins forces with the Naga Sadhus to protect it.


The trailer ends with the revelation of the mystical Nagabandham guarding the temple, setting up an epic clash between divine power and evil.


Abhishek Nama’s extensive research into Indian mythology, history, and temple lore is evident throughout the trailer.


Rich with intriguing details and goosebump-inducing moments, it hints at a narrative spanning multiple timelines.


The storytelling appears ambitious, blending mythology, history, mystery, and adventure into a single cinematic experience.


Mounted on a truly grand scale, Nagabandham impresses with its visual richness.


The film’s expansive world-building is reflected in every frame, with production designer Ashok Kumar creating massive and intricately detailed sets.


The recreation of the Anantha Padmanabha Swamy Temple and its majestic deity stands out as one of the biggest highlights.


Cinematographer Soundar Rajan S elevates the narrative with breathtaking visuals that beautifully capture the film’s spiritual essence and larger-than-life scale.


Complementing the visuals is the powerful score by music directors Junaid Khan and Abhe, whose background music amplifies both the devotional intensity and emotional depth of the narrative.


The action sequences also leave a strong impression.


Credit must go to producers Kishore Annapureddy and Nishitha Nagireddy of NIK Studios for backing such a massive and ambitious project with uncompromising production values. The VFX work, in particular, is world class.


Leading the film is Virat Karrna, who, despite being only one film old, displays remarkable screen presence and charisma.


The trailer suggests he will be seen in a dual-layered role, portraying both an ordinary man and Lord Shiva.


His physical transformation, commanding presence, and dedication to the character are evident throughout.


The trailer also offers glimpses of several key supporting characters, hinting at a rich ensemble that will play crucial roles in the story.


Overall, the trailer promises Nagabandham as a visually spectacular mythological adventure rooted in ancient legends, hidden treasures, and divine mysteries.


https://www.youtube.com/watch?v=OSIdMayJG1c

அபிஷேக் நாமாவின் 'நாகபந்தம்- (Nagabhandham) ' திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

 *அபிஷேக் நாமாவின் 'நாகபந்தம்- (Nagabhandham) ' திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது*



அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான 'நாகபந்தம் '( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 


விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. 


இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் 'பிரம்ம கமலம்' என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். 


பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்... அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை. 


கற்பனைக்கு எட்டாத-  கற்பனை செய்து பார்த்திட இயலாத-  சக்திகளை பெறுவதற்காக ஒரு வலிமை வாய்ந்த தீய சக்தி அதை கைப்பற்ற முயலும் போது, சிவபெருமான் அங்கு தோன்றி அதை பாதுகாக்க நாக சாதுக்களுடன் கைகோர்க்கிறார். 


கோயிலை பாதுகாக்கும் மர்மமான 'நாக பந்தம்' பற்றிய குறிப்புடன் இப்படத்தின் முன்னோட்டம் நிறைவடைகிறது. இது தெய்வீக சக்திக்கும், தீமைக்கும் இடையிலான ஒரு காவிய மோதலுக்கான களத்தை அமைக்கிறது. 


இந்திய புராணங்கள் வரலாறு மற்றும் கோயில் சார்ந்த மரபுகள் குறித்து இயக்குநர் அபிஷேக் நாமா மேற்கொண்ட விரிவான ஆய்வுகள்... இந்த முன்னோட்டம் முழுவதும் வெளிப்படுகிறது. 


சுவாரசியமான விவரங்கள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் நிறைந்த இது... பல காலகட்டங்களை உள்ளடக்கிய ஒரு கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. 


புராணம்- வரலாறு- மர்மம் மற்றும் சாகசம் -ஆகியவற்றை ஒரே சினிமா அனுபவத்துடன் இணைக்கும் வகையில் இதன் கதை சொல்லும் விதம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 


மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள' நாக பந்தம்' தனது பிரம்மாண்டமான விஷுவல்கள் மூலம்  பார்வையாளர்களை கவர்கிறது. 


படத்தின் பிரம்மாண்டமான கதைக்களம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அசோக் குமார் பிரம்மாண்டமான மற்றும் நுட்பமான விவரங்களுடன் கூடிய அரங்குகளை உருவாக்கியுள்ளார். 


அனந்த பத்மநாப சுவாமி கோயில் மற்றும் அதன் கம்பீரமான மூலவர் சிலை ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள விதம்.... படத்தின் முதன்மையான சிறப்பம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது. 


ஒளிப்பதிவாளர் எஸ். சௌந்தர்ராஜன் படத்தின் ஆன்மீக சாராம்சத்தையும், பிரம்மாண்ட அளவையும் அழகாக நேர்த்தியுடன் படம்பிடித்து பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார். 


காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளர்கள் ஜூனைத் கான் மற்றும் அபே ( Abhe) ஆகியோரின் இசை அமைந்துள்ளது. இவர்களின் பின்னணி இசை-  கதையின் பக்தி உணர்வையும், உணர்வுபூர்வமான ஆழத்தையும் ஒரு சேர மேம்படுத்துகிறது. 


படத்தின் சண்டைக் காட்சிகளும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


இத்தகைய பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க படைப்பிற்காக சமரசமற்ற தயாரிப்பு தரத்துடன் படைப்பை வழங்கிய என் ஐ கே ஸ்டுடியோவின் ( NIK Studio)   தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகி ரெட்டி ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக இதில் இடம் பிடித்துள்ள வி எஃப் எக்ஸ் VFX பணிகள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன. 


இப்படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் தனது குறிப்பிடத்தக்க திரை தோற்றத்தையும் ,வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார். 


சாதாரணமான மனிதனாகவும் ... சிவபெருமானாகவும்... என இரண்டு வித தோற்றங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் விராட் கர்ணா தோன்றுகிறார் என முன்னோட்டம் தெரிவிக்கிறது. அவரது உடல் மாற்றம்,  கம்பீரமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தின் மீதான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவை படம் முழுவதும் தெளிவாக தெரிகிறது. 


மேலும் கதையில் முக்கிய பங்குவகிக்கவிருக்கும் ஒரு வலுவான நட்சத்திரக் கூட்டத்தையும் குறிக்கும் வகையில் பல முக்கிய துணை கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் இந்த ட்ரெய்லர் வழங்குகிறது. 


மொத்தத்தில் பழங்கால புராணங்கள் - மறைக்கப்பட்ட புதையல்கள் - தெய்வீக மர்மங்கள் - ஆகியவை அடங்கிய கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு புராண சாகச படமாக 'நாகபந்தம் ' இருக்கும் என ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது.


Sunday, 21 June 2026

இளம் தலைமுறையின் பிரதிபலிப்பாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா

 *இளம் தலைமுறையின் பிரதிபலிப்பாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா*  




*'டேக் எ ஷாட்' ; புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இளம் திறமைசாலிகள் ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா*


தமிழ் திரைப்பட உலகில் பல திறமையான இளம் கலைஞர்கள் உருவாகி வந்தாலும், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை தங்களுக்கென ஒரு தனித்துவமான படைப்பாற்றல் அடையாளமாக மாற்றிக் கொள்வோர் மிகச் சிலரே. அந்த வகையில், தொழில்துறையின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான படைப்புகளில் பணியாற்றி மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றுள்ள இளம் தயாரிப்பாளர்களான ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா இணைந்து, வலுவான கதையம்சங்களும் நவீன சிந்தனைகளும் கொண்ட படைப்புகளை உருவாக்கும் நோக்கில் தங்களது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘டேக் எ ஷாட்’ (Take A Shot)-ஐ தொடங்கியுள்ளனர்.


வெறும் 29 வயதிலேயே திரைப்படத் தயாரிப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்டுள்ள ஆஷீஷா ஸ்ரீனிவாசன், சிஷ்யா பள்ளியின் முன்னாள் மாணவியும், யுனிவர்சிட்டி ஆஃப் நாட்டிங்காம் மற்றும்  லண்டன் இம்பீரியல் கல்லூரியில்  வணிகப் படிப்பில் பட்டம் பெற்றவரும் ஆவார்.  இந்திய சினிமாவில் தலைசிறந்த இயக்குநரான மணிரத்னத்திடம் ‘காற்று வெளியிடை’, ‘வானம் கொட்டட்டும்’, ‘பொன்னியின் செல்வன்’: பாகம் 1 மற்றும் பாகம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில்  தயாரிப்பு பிரிவில் பணியாற்றியவர். பின்னர், ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையிலான லைகா புரொடக்சன்ஸ்  தயாரித்த  ‘வேட்டையன்’ மற்றும் ‘விடாமுயற்சி’ போன்ற பெரிய திரைப்படங்களிலும் பங்காற்றினார். 


‘டேக் எ ஷாட்’ நிறுவனத்தின் இணை நிறுவனரான ரியா கொங்கரா, ரிஷி வேலி பள்ளியின் முன்னாள் மாணவி. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்றவர். 

‘பொன்னியின் செல்வன்’: பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்களின் தயாரிப்பு பிரிவில் பணியாற்றிய  இவர், பின்னர் ‘சூரரைப் போற்று’, ‘இளமை இதோ இதோ’, ‘ரகு தாத்தா’ மற்றும் ‘பராசக்தி’ உள்ளிட்ட  திரைப்படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் (Executive Producer) பணியாற்றினார்.


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் KHxRK திரைப்படத்தின் விளம்பரப் பிரிவில் இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.

.

திரைப்பட உலகை மிக நெருக்கமாகக் கவனித்து, துறையின் மிகுந்த மதிப்புக்குரிய பல ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைத் தங்களது புதிய முயற்சியான ‘டேக் எ ஷாட்’ நிறுவனத்தின் மூலம் ஆஷீஷா மற்றும் ரியா தற்போது புதிய திசையில் கவனம் செலுத்துகின்றனர். பல்வேறு தரப்பு மற்றும் தலைமுறை பார்வையாளர்களுடன் இணைவதற்கான திறன் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதோடு, அர்த்தமுள்ள கதைகள், புதிய பார்வைகள் மற்றும் தனித்துவமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.


அனுபவத்தின் அடித்தளத்திலும், திரைப்படத்தின் மீதான உண்மையான காதலாலும் உருவான ‘டேக் எ ஷாட்’, ஒரே படைப்பாற்றல் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு இளம் தொழில்முறை நிபுணர்களின் கனவுப் பயணமாக திகழ்கிறது.


புதிய தயாரிப்பு நிறுவனமாக வலுவாக உருவெடுத்து வரும் ‘டேக் எ ஷாட்’, தங்களது முதல் திரைப்பட முயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A New Generation of Producers Arrive: Aasheesha Srinivasan and Rhea Kongara Launch ‘Take A Shot’*

 *A New Generation of Producers Arrive: Aasheesha Srinivasan and Rhea Kongara Launch ‘Take A Shot’*




_*From Acclaimed Film Camps to Their Own Banner: Young Producers Aasheesha Srinivasan and Rhea Kongara Launch ‘Take A Shot’*_ 


Tamil cinema has witnessed the emergence of many remarkable talents over the years, but only a few choose to transition from working behind celebrated productions to building a creative identity of their own. Embarking on such an inspiring journey are Aasheesha Srinivasan and Rhea Kongara, two accomplished young professionals who have earned valuable experience across some of the most acclaimed and successful projects in the industry. Together, they have now launched their production house, Take A Shot, aiming to create content that is rooted in strong storytelling and contemporary sensibilities.


At just 29, Aasheesha Srinivasan, a former student of Sishya School and a Business graduate from the University of Nottingham and Imperial College London, has steadily built an impressive profile in film production. She worked in the production department under legendary filmmaker Mani Ratnam on films including Kaatru Veliyidai, Vaanam Kottattum, Ponniyin Selvan: Part 1, and Ponniyin Selvan: Part 2. She further expanded her experience at Lyca Productions, contributing to major projects such as Vettaiyan and Vidaamuyarchi under G.K.M. Tamil Kumaran. More recently, she was associated with the promotional campaign of KHxRK.


Rhea Kongara, co-founder of Take A Shot, is a former student of Rishi Valley School and an Economics graduate from Stella Maris College. Having worked closely on Ponniyin Selvan: Part 1 and Part 2 in the production division, she went on to serve as Executive Producer on notable projects including Soorarai Pottru, Ilamai Idho Idho, Raghu Thatha, and Parasakthi. Among her recent professional engagements was her association with the promotional campaign of KHxRK.


Having observed cinema from close quarters and worked alongside some of the industry's most respected names, Aasheesha and Rhea now channel their experience and creative aspirations into Take A Shot. The Production House aims to craft meaningful stories, fresh perspectives, and distinctive ideas while creating feature films that can connect with audiences across demographics and generations.


Rooted in experience and shaped by a genuine love for cinema, Take A Shot represents the coming together of two young professionals with a shared creative vision.


As "Take A Shot" takes shape as a promising new production house, the official announcement regarding its maiden venture is expected to be made soon.


📧 johnmyson@gmail.com

📞 +91 94449 00048

X: @johnsoncinepro

Insta: @johnsoncinepro

FB: Johnson Pro

Saturday, 20 June 2026

*ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது...

 *ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது... கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!*




ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா இணைந்து தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்தில், இளம் முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'KA16' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. 


ஜீ ஸ்டுடியோஸ், பிரேர்ணா அரோரா மற்றும் கிரண் அப்பாவரம் ஆகியோர் இணையும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார்.


மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில் உருவாகும் இந்தப் படம் வலுவான தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களையும் கொண்டுள்ளது. 


வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், இந்திய திரைப்படத் துறையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அதேபோல், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட பிரேர்ணா அரோரா, இந்தத் திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


கிரண் அப்பாவரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார். நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக்குழு குறித்தான விவரங்கள்

மற்றும் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.