Featured post

Desingu Raja 2 Movie Review

 Desingu Raja 2 Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம desingu raja part 2 படத்தோட review அ தான் பாக்க போறோம். ezhil தான் இந்த படத்தை direct பண்...

Tuesday, 17 November 2020

எழுந்துவா இசையே" இலங்கை இசைக்கலைஞர்களின்

 *"எழுந்துவா இசையே" இலங்கை இசைக்கலைஞர்களின் இசை அஞ்சலிப்பாடல் இன்று வெளியாகியுள்ளது.*


உலக இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்த மறைந்த பாடகர், அமரர் பத்மசிறீ,டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் இணைந்து  அஞ்சலிப் பாடலொன்றை உருவாக்கியுள்ளனர்.







அவுஸ்திரேலியாவில் இருக்கும்  இலங்கை இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்பாடல்வரிகளை ஜெயலலிதா மறைந்தபோது "வானே இடிந்ததம்மா"  என்ற இரங்கல் பாடலை எழுதி கவனம் பெற்ற தமிழ் சினிமா பாடலாசிரியர்,  கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.


பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான எம்.சிவகுமார்,கே.மகிந்தகுமார்,பிரேமானந்த்,சுருதி பிரபா,நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியாந்தன்,கிருஸ்ண குமார்,கந்தப்பு ஜெயந்தன்,கே.சுஜீவா,மடோனா,அருண்குமாரசுவாமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 


அவுஸ்திரேலியாவின் வொன்டர் மீடியா புரடக்ஸன் தயாரித்துள்ள இப்பாடலின் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம். ஒலிக்கலவை கோகுல் கிருஸ்ணா,ஒளிப்பதிவு நியாஸ் ஹம்ஸா,சுமதி குமாரசுவாமி,

வெங்கட் முரளி,செம்மையாக்குனர் இமானுவல் பிலிப் ஜோன்ஸன்,கணனிவரைகலை,சிராஜ் பரபுராத், ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.  


உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொராண காரணமாக வெளியீடு தாமதமான இப்பாடல்  இன்று வெளியாகியுள்ளது.



*எழுந்து வா இசையே பாடல்*


*SPB OFFICIAL TRIBUTE SONG Link* https://youtu.be/xhuP951_h9c

No comments:

Post a Comment