Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Thursday, 26 November 2020

“சில்லுனு ஒரு காதல்” – புதிய காதல் கதை

 “சில்லுனு ஒரு காதல்” – புதிய காதல் கதை நெடுந்தொடரின்ப்ரோமோவெளியீடு!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டிலிருந்து இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது!

  ~ ஜனவரி 4, 2021 அன்று தொடங்கி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணியளவில்சில்லுனு ஒரு காதல்கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ~

  சென்னை, 25 நவம்பர் 2020: இம்மாநிலத்தின் பொது பொழுதுபோக்கு கேளிக்கை சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு புதிய காதல் கதை நெடுந்தொடருடன் புத்தாண்டில் உற்சாகமாக களமிறங்கவிருக்கிறதுபுத்தாண்டில் ஒளிபரப்பாகவிருக்கும், அனைவரும் கண்டுகளிக்கக்கூடியசில்லுனு ஒரு காதல்என்ற புத்தம் புதிய காதல் கதை நெடுந்தொடரின் ப்ரோமோவை, இந்த சேனல் இன்று வெளியிட்டது.








 

  ஒரு துடிப்பான பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் ப்ரோமோவில் ஐபிஎஸ் அதிகாரி சூரிய குமாராக சமீர் அஹமது மற்றும் ஒரு அழகான டின் ஏஜ் பெண் கயல்விழியாக தர்ஷினி தோன்றுவதையும் பார்க்கலாம் அவர்கள் ஒரு வழக்கத்திற்கு மாறான சூழலில் சந்திக்கும்போது அவர்களுக்கு இடையிலானகெமிஸ்ட்ரியைகண்கூடாக காணலாம். அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டுவதாக இதன் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

  பிறக்கவிருக்கும் புத்தாண்டில் உங்கள் இதயங்களையும், நெஞ்சங்களையும் தன்வசப்படுத்த, தயார்நிலையில் உள்ள இந்த புதுமையான புதிய காதல் கதையின் ஒரு முன்னோட்டத்தை அறிய இதன் புரோமோவை காணுங்கள்ஒட்டுமொத்த குடும்பத்தினராலும் ஒன்றாக அமர்ந்து ரசித்துப் பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சியானது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது ஜனவரி 4 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு இதன் முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.

 கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).

No comments:

Post a Comment