Featured post

Amoham Studios White Lamp Pictures Subhashini K presents

 *Amoham Studios White Lamp Pictures Subhashini K presents* *Filmmaker B. Manivarman Directorial* *Taman Akshan-Malvi Malhotra starrer “Jenm...

Wednesday, 18 November 2020

முதல் வர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) த்ரில்லர் வெப்

 முதல் வர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) த்ரில்லர் வெப் சீரிஸான ‘பப்கோவா’ பற்றிய அறிவிப்பை ஜீ5 வெளியிட்டது


நடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்


அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை. 


ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை. 






பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


'பப்கோவா' வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.


இசை: சாந்தன்

எடிட்டர்: அஸ்வின் இக்னாஷியஸ்

கலை இயக்குனர்: சிவ குமார்

வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது

https://youtu.be/hLYJhtmuqiM

No comments:

Post a Comment