Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Saturday, 14 January 2023

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் 16 புதிய தெலுங்கு

 *சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் 16 புதிய தெலுங்கு படங்களின் லைன்- அப் குறித்து வெளியிட்டிருக்கிறார்கள்!*

*இந்த 16 படங்களும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய பின்பு நெட்ஃபிலிக்ஸ் 2023  கண்டெண்ட் தளத்தில் வெளியாக உள்ளது*.   

 உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையைத் தரக்கூடிய  நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தற்போது 2023-ல் தன்னிடம் உரிமம் இருக்கக்கூடிய 16 தெலுங்கு படங்களின் லைன்- அப் மற்றும் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர், இல்லத்திரைகளிலும் இந்தப் படங்கள் மக்களை மகிழ்விக்க இருக்கிறது. திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை பார்த்து ரசித்த மக்கள் தற்போது வீட்டிலும் பார்த்து ரசிக்க இருக்கிறார்கள். 















சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை நெட்ஃபிலிக்ஸ் தளம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.  ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இந்த வருடம் என்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 


நெட்ஃபிலிக்ஸ் இந்தியா தளத்தின் கண்டெண்ட் VP  மோனிகா ஷெர்கில் இனி வர இருக்கும் படங்களின் வரிசை குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக கதைகள் வரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டக்கூடியவர்கள். அதனால், அவர்கள் விரும்புவதைக் கொடுப்பதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.  ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு வரவேற்பு இருந்த நிலையில், தற்போது புதிய தெலுங்கு படங்களின் வரிசையை பார்வையாளர்களுக்கு அறிவிக்க இருக்கிறோம். 


இந்த புதிய ஸ்லாட் பல்வேறு வகைகளிலான புதிய ஜானர்களில் படங்களைக் கொண்டு வருவதுடன் தென்னிந்தியாவில் இருந்து பல திறமைகளையும் வெளிக்கொண்டு வர வழிவகுக்கும். டப்பிங் மற்றும் திரைக்குப் பின்னால் நாங்கள் செய்யும் வேலைகளின் மூலம் இந்தப் படங்களை இந்தியா முழுவதும் மற்றும் உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் கொண்டு சேர்க்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.  


*மொத்தப் படங்களின் பட்டியலையும் கீழே கொடுத்துள்ளோம்*


1. தயாரிப்பு நிறுவனம்: ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: போலா சங்கர்,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

2. தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: அமிகோஸ்,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


3. தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் & க்ளாப் எண்டர்டெயின்மெண்ட்,

டைட்டில்/புராஜெக்ட்: மீட்டர்,

மொழி: தெலுங்கு


4. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,

டைட்டில்/புராஜெக்ட்: படி (Buddy),

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


5. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: புட்ட பொம்மா,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


6. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: பிவிடி 04,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


7. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: தில்லு ஸ்கொயர்,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


8. தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்- SLVC,

டைட்டில்/புராஜெக்ட்: தசரா மற்றும் புரொடக்‌ஷன் நம்பர் 6,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


9. தயாரிப்பு நிறுவனம்: பீப்பிஸ் மீடியா ஃபேக்டரி/ அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: தமாகா,

மொழி: தெலுங்கு


10. தயாரிப்பு நிறுவனம்: யூவி கிரியேஷன்ஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: கார்த்திகேயா 8 மற்றும் புரொடக்‌ஷன் நம்பர் 14,

மொழி: தெலுங்கு


11. தயாரிப்பு நிறுவனம்: GA2 பிக்சர்ஸ்/ அல்லு அரவிந்த் வழங்குகிறார்/ எழுத்து- சுகுமார்,

டைட்டில்/புராஜெக்ட்: 18 பேஜஸ்,

மொழி: தெலுங்கு


12. தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா llp,

டைட்டில்/புராஜெக்ட்: VT 12,

மொழி: தெலுங்கு


13. தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா llp/ எழுத்து- சுகுமார்,

டைட்டில்/புராஜெக்ட்: விருபக்ஷா,

மொழி: தெலுங்கு


14. தயாரிப்பு நிறுவனம்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ்,

டைட்டில்/புராஜெக்ட்: SSMB 28,

மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்


*நெட்ஃபிலிக்ஸ் குறித்து:*


நெட்ஃபிலிக்ஸ் , உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் எண்டர்டெயின்மெண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். 190 நாடுகளில் 223 மில்லியன் மெம்பர்ஷிப்புடன் உலகம் முழுவதும் பார்வையாளர்கள் டிவி சீரிஸ், டாக்குமெண்ட்ரிஸ், சிறப்புப் படங்கள் மற்றும் மொபைல் விளையாட்டுகளை வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு மொழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். நெட்ஃபிலிக்ஸ் உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், நிறுத்தலாம், தொடர்ந்து பார்க்கலாம் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றதுபோல திட்டங்களையும் மாற்றலாம்.

No comments:

Post a Comment