Featured post

Carmeni Selvam', a film starring Samuthirakani, Gautham Vasudev Menon and directed by Ram Chakri

 Carmeni Selvam', a film starring Samuthirakani, Gautham Vasudev Menon and directed by Ram Chakri is produced by Arun Rangarajulu on Pat...

Monday, 1 September 2025

Carmeni Selvam', a film starring Samuthirakani, Gautham Vasudev Menon and directed by Ram Chakri

 Carmeni Selvam', a film starring Samuthirakani, Gautham Vasudev Menon and directed by Ram Chakri is produced by Arun Rangarajulu on Pathway Productions banner*





*A fun-filled family entertainer that narrates the journey of life, ‘Carmeni Selvam’ is set to release in theaters this Deepavali*


A new film produced by Arun Rangarajulu under Pathway Productions is titled 'Carmeni Selvam'. Directed by Ram Chakri, the film stars Samuthirakani and Gautham Vasudev Menon in prominent roles.


Lakshmipriya plays opposite Samuthirakani, while Abhinaya pairs with Gautham Vasudev Menon in this film. ‘CarMeni Selvam’ is shaping up to be a fun-filled family entertainer with a mix of comedy and sentiment.


Speaking about the film, director Ram Chakri said, “‘Carmeni Selvam’ is being made as a movie that audiences of all ages can enjoy. Selvam (Samuthirakani), who has been living a peaceful and calm life, suddenly develops a greed for money. As he starts running behind it, the events that happen in his life have been crafted into a screenplay filled with humour."


Sree Saravanan is the Creative Producer of the movie. Yuvaraj Dakshan handles cinematography for 'Carmeni Selvam'. In this movie, a new concept has been introduced – Music as a Service (MaaS). Music Cloud Technologies has scored music with this model.


Editing is taken care of by Jagan R.V. and Dinesh S. Production Designer: Shankar. Lyrics are penned by Mani Amuthavan, and choreography is by Harish Karthik Z6. Stills: Varuun V, Costume Designer: Swedhulekshmi S, Costumer: S. Nagasathya.


Under the banner of Pathway Productions, produced by Arun Rangarajulu and directed by Ram Chakri, the film ‘Carmeni Selvam’ starring Samuthirakani and Gautham Vasudev Menon has completed its shooting and the post-production work is in its final stage. The team is planning to release the film in theatres for Deepavali.


***

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்





*வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது*



பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்மேனி செல்வம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 


சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகிறது. 


திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, "அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்," என்றார். 


'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாளுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைக்கிறார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா. 


பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்” படக்குழு !!

 ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்”  படக்குழு !!



நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!


நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. 


இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம்  உலகளாவிய  ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.


அந்த முயற்சியை மேலும் ஒரு படி முன்னேற்றி, ஹாலிவுட் #ConnekktMobScene நிறுவனத்தின் க்ரியேட்டிவ் கண்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் வைஸ் பிரெசிடெண்ட் அலெக்ஸாண்ட்ரா E. விஸ்கோந்தியை சந்தித்து, ஹாலிவுட் ஒத்துழைப்பை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிப்படையாக அறிவிக்கபடவில்லை என்றாலும், இந்த சந்திப்பு,  தி பாரடைஸ் படத்தை, சர்வதேச தரத்தில் நிலைநிறுத்தும் படக்குழுவின் உறுதியை, மேலும் வலுப்படுத்துகிறது.


படக்குழுவினர் தொடக்கம் முதல், இந்த படத்தை சாதாரண பிராந்திய வெளியீடாக அல்லாமல், உலகளாவிய நிகழ்வாகவே நடத்தி வருகின்றனர். பல மொழிகள், பல சினிமா மார்க்கெட்டுகள், பல தரப்பான ரசிகர்களிடம் தீவிர விளம்பரங்கள் மூலம் இயற்கையான ஆர்வத்தை உருவாக்கியதால், படம் வெளியாவதற்கு முன்பே அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


2026 மார்ச் மாதம் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்கள் தி பாரடைஸ் படத்தை இந்தியாவில் இருந்து வெளிவரும், மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. மேலும் சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் இணைத்து, சர்வதேச மொழி பதிப்புகளை உலகம் முழுவதும் வெளியிட ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே மாபெரும் கனவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு இன்னொரு உலகளாவிய பரிமாணத்தை சேர்க்கும்.


இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராகவ் ஜுயால் தனது டோலிவுட் அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை C.H.சாய் மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எடிட்டர் நவீன் நூலி, புரடக்சன் டிசைனர் அவிநாஷ் கொல்லா ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.


“தி பாரடைஸ்” படம், 2026 மார்ச் 26 அன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உட்பட உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகிறது.

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்!

 நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி !! 















பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! புதிய கண்டுபிடிப்புகளைத் தேடி வருகிறது.


தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் "பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்" என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, புதுமையான முயற்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உள்ளது.


இந்த நிகழ்ச்சியை, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை, புகழ்பெற்ற நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்க உள்ளார்.


இந்நிலையில் இந்நிக்கழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் பார்த்திபன் கூறியதாவது… 


நாளைய அப்துல்கலாம் ஆகவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த கனவை உருவாக்க நினைத்த RAV, A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை, அதே போல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம், அது மாதிரி அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டேன்.


இப்படியான ஒரு முன்னெடுப்பை பிரம்மாண்டமாக எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சிக்கு என் நன்றிகள்.  இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. பல கனவுகளோடு வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து, அவர்களின் கனவை ஒரு கட்டத்திற்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்த நிகழ்ச்சிக்கு, நான் உடன் நிற்பது எனக்கு மகிழ்ச்சி. கலாம் சாருக்கும் எனக்கும் இடையே  நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. அதைப்பற்றி நிகழ்ச்சியில் நான் நிறைய பகிர்ந்துகொள்வேன். 


இந்த நேரத்தில் நான் நடிகர் விவேக் சாரை அதிகம் மிஸ் செய்கிறேன். பல படவாய்ப்புகள் எனக்கு வந்தபோது அதை பொருத்தமான வேறு நபர்களுக்கு நான் அனுப்பியிருக்கிறேன் அதே போல இந்த நிகழ்ச்சியையும் நடிகர் விவேக் இருந்திருந்தால் அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன். இதற்கு பொருத்தமானவர் அவர் தான். அவரில்லாததால் இந்த நிகழ்ச்சியை நானே ஏற்று நடத்துகிறேன்.


சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்த நிகச்சியை நான் தொகுத்து வழங்குவது எனக்குப் பெருமை என்றார். 



ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தளமான, சபா டோஸ் அவர்களின் "பிட்ச் இட் ஆன்" முயற்சி, தென்னிந்தியா முழுவதும் பயணித்து அசாதாரணமான கண்டுபிடிப்புகளைத் தேடும் ஒரு புரட்சிகரமான நிகழ்வை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நகரங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களின் யோசனைகளை வணிக ரீதியாக மாற்றியமைக்க ஒரு முன்னோடியான வாய்ப்பை வழங்குகிறது.


தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் சிறந்த கண்டுபிடிப்புகளை, புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 கண்டுபிடிப்புகள் சென்னையின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அங்கு, சிறந்த 10 கண்டுபிடிப்புகள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் வழிகாட்டும் 15 நாள் இன்குபேஷன் திட்டத்தில் பங்கேற்கும்.

இந்தியாவின் அடுத்த பெரிய யோசனை, தொலைவான ஒரு கிராமத்தின் எளிய கேரேஜிலேயே இருக்கலாம்.


இந்த நிகழ்ச்சி, கண்டுபிடிப்புக்கும் தொழித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு பாலமாக அமையும்.

Lokah Chapter 1 Chandra.Movie review

 Lokah  Chapter 1 Chandra. Movie review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lokah   chapter 1 chandra.  இந்த படத்தை இயக்கி இருக்கறது dominic arun.  இந்த படத்தை produce பண்ணி இருக்கறது dulquer salman.  இந்த படத்தில Kalyani Priyadarshan, Naslen, Sandy, Arun Kurian, Chandu Salimkumar, Nishanth Sagar, Raghunath Paleri, Vijayaraghavan, Shivajith Padmanabhan, Nithya Shri, Sarath Sabha, Tovino Thomas, Sunny Wayne, Dulquer Salmaan, Mammootty, Soubin Shahir, Balu Varghese னு பல பேர் நடிச்சிருக்காங்க. இந்த படம் தெலுகு ல Kotha-Lokah Chapter 1: சந்திரா ன்ற பேர் ல ரிலீஸ் ஆகுது. 



சோ வாங்க இந்த படத்தோட கதையை அ பாப்போம். kalyani தான் chandra வா நடிச்சிருக்காங்க. இவங்களுக்கு supernatural abilites அ கண்டுபிடிக்கும்போது நெறய சவால்களா எதிர்கொள்ளுறாங்க. ஏதோ ஒரு காரணத்துக்காக bangalore ல வராங்க. அங்க செட்டில் ஆகி ஒரு  coffee ஷாப் ல வேலை  பாக்கறாங்க.

bangalore ல ஏற்கனவே organ trafficking நடந்துட்டு இருக்கும். இதை தடுத்து நிறுத்துறத்துக்காக police தீவிரமா விசாரிக்க ஆரம்பிக்குறாங்க. அப்போ தான் எல்லா clues யும் chandra வை நோக்கி காமிக்குது. உண்மைல chandra தான் இதுல சம்பந்த பற்றுக்காங்களா, இல்ல chandra க்கு எதிரா செய்யப்பட்ட சதியா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதை அ இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட் performance னு பாக்கும் போது kalyani priyadharshan ஓட acting வேற level ல இருந்தது. இவங்களோட expressions அ இருக்கட்டும் dialogue delivery அ இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா இருந்தது. முக்கியமா fight sequence ல செமயா பண்ணிருந்தாங்க. sandy master தான் Inspector Nachiyappa Gowda வா நடிச்சிருக்காரு. இவரு investigate பண்ணற scenes எல்லாமே super அ இருந்தது. இந்த படத்துல Chandu Salim Kumar, Arun Kurian யும் comedy  role ல அசத்திருக்காங்க னு தான் சொல்லணும். Dulquer Salmaan,Tovino Thomas,Sunny Wayne,Mohanlal,Thilakan எல்லாருமே cameo ரோல் ல தான் வராங்க. இவங்களோட characterization யும் apt ஆவும் கதைக்கு பொருந்தியும் இருந்தது. 


இப்போ இந்த படத்தோட technical aspect அ பாக்கலாம். dominic arun தான் இந்த படத்தோட கதையை எழுதிருக்காரு. இது  superhero film அ இருந்தாலும் அவ்ளோ interesting அ கொண்டு வந்திருக்காங்க. என்னதான் கதை bangalore ல நடந்தாலும் kerala ஓட folklore கதைகளையும் கொண்டு வந்திருக்கறது பாக்குறதுக்கே fresh அ இருந்தது. 


படத்தோட first half அ பாக்கும் போது ஓவுவுரு character க்கும் detailing குடுத்து introduce பண்ணி இருந்தாங்க. interval க்கு முன்னாடி chandra கேரக்டர் க்கு ஒரு twist அ குடுத்து first half அ முடிக்கறாங்க. கதை கொஞ்சம் guess பண்ணற மாதிரி இருந்தாலும் அத கொண்டு வந்த விதம் ரொம்ப நல்ல இருந்தது. Nimish Ravi ஓட cinematography அ பத்தி பேசியே ஆகணும். இவரோட cinematography தான் இந்த படத்துக்கு topnotch ல இருக்கு. அதுவும் action scenes எல்லாமே super அ கேமரா ல பதிவு பண்ணிருக்காரு. Chaman Chakko ஓட editing work இந்த படத்துக்கு பக்கவா set ஆயிருந்தது. Jakes Bejoy ஓட music யும் bgm யும் இந்த படத்தை ஒரு  level மேல எடுத்துட்டு போய்டுச்சுன்னே சொல்லலாம். 



நெறய thrilling ஆனா twist இருக்கற superhero படம் பாக்கணும்னா இந்த படம் உங்களுக்காக தான். மறக்காம உங்க family அண்ட் friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.