Featured post

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026

 HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026  JioHotstar releases the launch ...

Tuesday, 17 January 2023

பெண் பார்க்கும் வைபவத்தை மையப்படுத்தி ‘கண்ணகி’க்காக

 *பெண் பார்க்கும் வைபவத்தை மையப்படுத்தி ‘கண்ணகி’க்காக உருவாகியுள்ள ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ லிரிக் பாடல் வீடியோ*


*‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ பாடல் மூலமாக ‘கண்ணகி’ அம்மு அபிராமியின் பெண் பார்க்கும் வைபவம்*






SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணகி’ பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். 


யஷ்வந்த் கிஷோர் இந்த படத்தை இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை கவனிக்க, சரத் K படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஷான் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


தற்போது இந்த படத்தில் இருந்து ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ என்கிற பாடளின் லிரிக் வீடியோ தயாராகி உள்ளது. கார்த்திக் நேத்தா எழுதிய இந்த பாடலை ஸ்ரீநிதி பாடியுள்ளார். இந்த லிரிக் வீடியோவை ஜீவி மீடியா ஒர்க்ஸ் கோகுல் வெங்கட் ராஜா உருவாக்கியுள்ளார்.


நான்கு பெண்களின் வெவ்வேறு விதமான வாழ்க்கையை மையப்படுத்தி  உருவாகி வரும் இந்த படத்தில் அதில் ஒருவராக கலை என்கிற இளம் பெண் கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.


திருமணத்திற்கு தயாராகும் அம்மு அபிராமி வரன்பார்த்தல் என்கிற அந்த வைபவத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்கிற கான்செப்டில் இந்த பாடல் உருவாகியுள்ளது. 


இந்தப்பாடல் குறித்து இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் கூறும்போது, “ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெண் பார்த்தல் என்கிற வைபவம் ரொம்பவே முக்கியமானது. அம்மு அபிராமிக்கு அவரது வீட்டினர் திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியில் இருந்து துவங்குவதாக இந்தப்பாடல் ஆரம்பிகிறது. பெண் பார்க்க வரும் மணமகன்களில் ஒருவர் என்ன காரணங்களால் நிராகரிக்கப்படுகிறார் இன்னொருவர் எந்த அடிப்படையில் மணமகனாக ஏற்கப்படுகிறார். இந்த நிகழ்வில் ஒரு மணப்பெண்ணுக்கே உரிய கட்டுப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எப்படி இருக்கின்றன என்பதை கலை என்கிற ஒரு இளம் பெண்ணின் மனதில் இருந்து பிரதிபலிக்கும் விதமாக இந்த பாடல் காட்சி அமைந்துள்ளது” என்கிறார். 


*பாடல் விபரம்*


பாடல் பெயர் : ங்கொப்புரானே ங்கொப்புரானே

இசையமைப்பாளர்: ஷான் ரஹ்மான்

பாடியவர்: ஸ்ரீநிதி

பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா

பாடல் வீடியோ - கோகுல் வெங்கட் ராஜா (ஜி.வி. மீடியாவொர்க்ஸ்)


*நடிகர்கள்* 


அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, கீர்த்தி பாண்டியன், வெற்றி, ஆதிஷ்


*தொழில்நுட்ப குழுவினர் விபரம்*

:

தயாரிப்பு நிறுவனம் : SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT

ஒளிப்பதிவு : ராம்ஜி

இசை: ஷான் ரஹ்மான்

எடிட்டர்: சரத்.K

DI : வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோஸ்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹமது

ஒலி மற்றும் வடிவமைப்பு ஒத்திசைவு : ராஜேஷ் சசீந்திரன்

கலை : குமார் கங்கப்பன்

விளம்பர வடிவமைப்புகள் : கபிலன்

இசை லேபிள் : டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (டிப்ஸ் தமிழ்)

பாடல் வரிகள்: கார்த்திக் நேதா

நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.வினோத்குமார்

தயாரிப்பு : எம். கணேஷ் & ஜே. தனுஷ்

இயக்கம் : யஷ்வந்த் கிஷோர்

No comments:

Post a Comment