Featured post

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special  குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்! பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்க...

Sunday, 8 January 2023

ஞானமுத்து பட்டறை & ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்

 *ஞானமுத்து பட்டறை & ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'டிமாண்டி காலனி 2' தன்னுடைய படத்தின் முதல் பார்வை போஸ்டர் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது*


சினிமா ரசிகர்கள் குறிப்பாக ஹாரர் பட ரசிகர்களிடையே 'டிமாண்டி காலனி' திரைப்படம் அதன் புதுமையான கதை சொல்லலுக்கும் உறைய வைக்கும் காட்சிகளுக்காகவும் புது பிராண்டாக உருவானது. நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி தற்போது 'டிமாண்டி காலணி2' படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிக அளவில் எகிறி இருக்கிறது. 


கடந்த சில நாட்களாக, 'இருள் ஆளப்போகிறது' என்ற போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதில் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. 


இந்த போஸ்டர்களில் QR கோட் இருக்கிறது. இதை ஸ்கேன் செய்வதன் மூலம் படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் பார்க்கலாம். இது போன்ற புது யுக்திகள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


படத்தின் 40% படப்பிடிப்பு முதல் ஷெட்யூலுடன் முடிவடைந்து அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. படத்தின் வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் & படத்தின் தயாரிப்பாளரும் நன்றி தெரிவித்துள்ளனர். 


'டிமாண்டி காலனி2' படத்தின் டேக்காக 'Vengeance of Unholy' பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 


*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*


இசை: சாம் சிஎஸ்,

ஒளிப்பதிவு: தீபக் D மேனன்,

படத்தொகுப்பு: குமரேஷ் D,

கலை இயக்கம்: ரவி பாண்டி,

சண்டைப் பயிற்சி: கணேஷ்,

ஆடை வடிவமைப்பு: நவதேவி ராஜ்குமார் & மாலினி,


அஜய் ஞானமுத்துவின் ஞானமுத்து பட்டறை மற்றும் விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து 'டிமாண்டி காலனி2' திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பீடுகளுடன் விரைவில் தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment