Featured post

Rise of a New Female Director in Tamil Cinema!

 *Rise of a New Female Director in Tamil Cinema!*  *Maragathamalai - A Super-Cool Fantasy Drama as Summer Treat for Kids!*  *L.G. Movies S. ...

Tuesday, 15 August 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிப்பில்

 *ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் #D51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா*



தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலாவுடன் தனது 51 வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ நாராயணன் தாஸ் நாரங் அவர்களின் ஆசியுடன் சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இந்த படம் தயாராகிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார். 


இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக இணைந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP ஆகியோருடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து பணியாற்றும் முதல் படம் ஆகும்.


தனது விதிவிலக்கான படங்களுக்காக மிகவும் அறியப்பட்ட இயக்குனர் சேகர் கம்முலா முன்னப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை இந்த படத்தில் காட்டும் விதமாக தனித்தன்மையான கதையை எழுதியுள்ளார்



இப்படத்தில் பங்குபெற உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.


நடிப்பு ; தனுஷ் ராஷ்மிகா மந்தனா



இயக்குநர் ; சேகர் கம்முலா 



வழங்குபவர் ; சோனாலி நாரங் 



தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  


தயாரிப்பாளர்கள் ; சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ்


மக்கள் தொடர்பு ;   ரியாஸ் K அஹ்மத் 


மார்க்கெட்டிங் ; ஃபர்ஸ்ட் ஷோ

No comments:

Post a Comment