Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Wednesday 22 August 2018

கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்

கதையும்கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்



 


 
வழக்கு எண்18/9”, ஆதலால் காதல் செய்வீர்”,”ஜன்னல் ஓரம்” என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர்நடிகை மனீஷா யாதவ்சமீபத்தில் வெளியான “ஒரு குப்பை கதை” படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும்பத்திரிக்கையாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார்.
நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பதுஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது எனஅவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷாஇந்த பக்குவம் குறித்து அவர் கூறுகையில்,
பாலாஜி சக்திவேல்சுசீந்திரன்கரு.பழனியப்பன்.. என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது.அந்த வகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கினு தான் சொல்வேன். “வழக்கு எண்” நடிச்சிட்ருக்கும் போதே எனக்கு “ஆதலால் காதல்செய்வீர்” வாய்ப்பு கிடைச்சதுஅதே போலதான் “ஜன்னல் ஓரம்” படமும்இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்துகொடுத்திடுச்சுஅங்கிருந்து தான் நான் “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்துக் கொண்டேன்” என்கிறார்அழகு தமிழில்.
தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல்தமிழ் மொழியையும் முழுமையாககற்றுக்கொண்டிருக்கிறார்சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன்ஆனால் இப்போது தான்பிழையில்லாமல்தைரியமாக பேசுகிறேன்” என்கிறார்.
என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லைபடத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது.என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன்கதையும்கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்
என்று அழுத்தம் திருத்தமாக கூறும் மனீஷா யாதவ்தற்போது தீவிரமாக கதைகள் கேட்டு வருகிறார்முன்னணி கதாநாயகன்ஒருவரது படத்தில் நடிப்பதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கும் அவர்விரைவில் அது குறித்த அறிவிப்பையும்வெளியிட இருக்கிறார்.

No comments:

Post a Comment