முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ளது
செப்டம்பர் 7 ம் தேதி வெளியாகிறது













“ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் "













விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “
இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சந்தான கிருஷ்ணன்
இசை - லியாண்டர் லீ மார்டின்
பாடல்கள் - விக்னேஷ் ஜெய்பால்
கலை - மகிரங்கி
எடிட்டிங் - இத்ரீஸ்
ஸ்டன்ட் - ஆக்ஷன் பிரகாஷ்
நடனம் - சுரேஷ்
தயாரிப்பு மேற்பார்வை - ஆத்தூர் ஆறுமுகம்
இணை தயாரிப்பு - M. செந்தில் பாலசுப்ரமணியம்
தயாரிப்பு - விகாஷ் ரவிச்சந்திரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அழகுராஜ்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்.
டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது ? என்பதை படு காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் அழகுராஜா.
No comments:
Post a Comment