Featured post

Hari Hara Veera Mallu Movie Review

Hari Hara Veera Mallu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம most expecting telugu படம் Hari Hara Veera Mallu: Part 1 - Sword vs Spirit  ன்...

Monday, 14 January 2019

கராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் மகன்கள்

கராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் 
ஸ்டன் சிவாவின் மகன்கள்

37வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது. 

இன்று (13 ஜனவரி, ஞாயிறு) நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76KG பிரிவில் கலந்து கொண்ட  ஸ்டிவன் குமாரும், 70KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர். 

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் ஸ்டன் சிவா, லாஸி சிவா, கனகராஜ், அல்தாப் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment