Featured post

We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt

 We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt acclaim at the prestigious 14th DSPFF-24. ...

Friday 25 January 2019

Vaandu movie news and stills

MM POWER CINE CREATIONS    சார்பில் DATO . N . முனியாண்டி, மதி எட்டியான்   தயாரித்திருக்கும் திரைப்படம் வாண்டு.
 இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப்படம் வாண்டு. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை  எனப் பெரியோர் சொல்வார்கள் அதை அழுத்தமாக  சொல்லியிருக்கும் திரைப்படம் தான் வாண்டு. 
இயக்குநர் படம் பற்றி கூறுகையில்
   1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப்படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் தான் இப்படத்தின் விறு விறு கதை.  வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும்  எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும் என்றார்.
 எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியிருக்கும், இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட்  உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.

நடிகர்கள்  மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள்
சீனு
ஆல்வின்,
எஸ்.ஆர்.குணா,
ஷிகா
சாய் தீனா
மகா காந்தி
மெட்ராஸ் ரமா
வின்னர் ராமச்சந்திரன்
ரவி ஷங்கர்


இசை                               -              A .R . நேசன்
ஒளிப்பதிவு                  -              ரமேஷ் V . மகேந்திரன்
படத்தொகுப்பு            -              ப்ரியன்
கலை                               -              JPK . பிரேம்
சண்டைப்பயிற்சி     -              ஓம் பிரகாஷ்
பாடல்கள்                      -              மோகன்ராஜ்
நடனம்                            -              பாபி ஆண்டனி

கதை திரைக்கதை ,  வசனம், இயக்கம்             -  வாசன் ஷாஜி

ரிலீஸ்  ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட்











No comments:

Post a Comment