Featured post

Avatar: Fire and Ash Movie Re view

  Avatar: Fire and Ash Movie  Re view ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம avatar fire and ash படத்தோட review அ தான் பாக்க போறோம். james cameron இயக்க...

Saturday, 2 March 2019

சஸ்பென்ஸ் திரில்லர் கதை சத்ரு மார்ச் 8 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது


ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு,ராஜரத்தினம்ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன்நீலிமாமாரிமுத்துரிஷிசுஜா ருணி,பவன்அர்ஜுன் ராம்ரகுநாத்கீயன்,சாதுகுருமூர்த்திபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  



 
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.    

ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி 
இசை  -  அம்ரிஷ் 
பாடல்கள்   -  கபிலன்மதன்கார்க்கிசொற்கோ
எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே 
கலை  -  ராஜா மோகன்
ஸ்டன்ட்   -  விக்கி 

கதைதிரைக்கதைவசனம்இயக்கம் -  நவீன் நஞ்சுண்டன்
இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ் ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர்  24 மணி நேரத்தில் எப்படி  தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படம் முதலில் முதலிலிருந்து இறுதிவரை விறுவிறுவென இருக்கும்.
மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு மார்ச் ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.


No comments:

Post a Comment