Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Thursday, 28 March 2019

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் "தயாரிப்பு எண் 34" படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!


சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" படத்தின் பெரிய பெரிய அறிவிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று புகழ்பெற்ற சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்தை துரை செந்தில்குமாரும் (தயாரிப்பு எண் 34), மற்றொரு படத்தை ராட்சசன் புகழ் ராம்குமாரும் (தயாரிப்பு எண் 35) இயக்குகிறார்கள் என்று வெளியான அந்த அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மிகவும் பிரபலமான பலர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்திய வரவாக, மிகவும் திறமையான மற்றும் துடிப்பான நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவர் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.

இயக்குனர் துரை செந்தில்குமார் இது குறித்து கூறும்போது, "நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் இணைவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வெவ்வேறு பரிமாணங்களில் அவரின் மிகச்சிறப்பான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அவரும் இந்த படத்தில் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.

No comments:

Post a Comment