Featured post

கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால்

 கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற...

Friday, 6 September 2019

ப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்



'தாதா 87' படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.


தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று  நடிகைகள் ஆவர். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment