Featured post

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள...

Thursday, 26 September 2019

ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக  தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம்.


நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக்கும் இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.


ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம்  40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.


விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டார்.


அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார்.


புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


Click here to watch ; https://youtu.be/Uj_nET9MTEQ 

No comments:

Post a Comment