Featured post

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள...

Monday, 30 September 2019

எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரளா சமாஜமும் இணைந்து அக்டோபர் 2 முதல் 6 ஆம் தேதி வரை சென்னையில் நடத்தும் தென்னிந்திய நாடக விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரளா சமாஜமும் இணைந்து அக்டோபர் 2 முதல் 6 ஆம் தேதி வரை சென்னையில் நடத்தும் தென்னிந்திய நாடக விழா அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது. மிக்க மகிழ்ச்சி. 

அவ்விழாவில் மூத்த நாடக கலைஞர்களும் தென்னிந்திய நடிகர்  சங்க உறுப்பினர்களுமான திருமதி.J.கமலா மற்றும் திரு.காஞ்சி சிவராஜ் ஆகியோர்கள் பங்கேற்பது, 32 நாடக குழுக்கள் நாடகங்களை நிகழ்த்துவதும், அதில் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்பதும், அவ்விழாவின் அரங்கங்களுள் ஒன்றுக்கு இந்தியத் திரைப்படத்துறையில் கின்னஸ் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகையும் எங்கள் சங்க மூத்த உறுப்பினருமான மறைந்த திருமதி.  ‘ஆச்சி’ மனோரமா பெயரை சூட்டியிருப்பதும், அந்த அரங்கத்தை மூத்த நடிகையும் எங்கள் சங்க உறுப்பினர் குமாரி.சச்சு அவர்கள் திறந்து வைப்பதும் மற்றும் நாடக துறையிலும், திரைத்துறையிலும் பணியாற்றும் நடிகர் / நடிகையர்கள் திரைக்கலைஞர்கள் பங்கேற்கும் நாடக நிகழ்வுகள் இடம்பெறுவதும், நாடக கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு இது போன்ற நாடக விழா நடத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மேற்கண்ட நாடக விழாக்கள் மிகவும் சிறப்பாக அமைவதற்கு ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின்’ சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாரட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!

No comments:

Post a Comment