Featured post

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர்

 *துருவ் விக்ரம் நடிக்கும்,  “பைசன் காளமடான்”  திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!* இயக்குநர் மார...

Wednesday, 29 June 2022

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும்

 முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது  !

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.



தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக  “டெவில்” மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment