Featured post

காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

 *காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* *நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நா...

Thursday, 20 August 2026

காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

 *காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.*










*நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி*

 *வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை நெஞ்சம் கவரும் கிட்டி*


ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ்

பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி.


 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது.


ஒரு சில கமர்சியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நிச்சயமாக மனதிற்குள் தோன்றும் .

அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறு திரை கதையுடன் பரபர கதைகளைத்துடன் வரப் போகும் படம் தான் கிட்டி.


நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் ஃபார்முலா திரைக்கதையாக தமிழ் சினிமாவில் உள்ளது. 

அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதையால் நிச்சயம் படம் வெளியான பிறகு நிமிர்ந்து நிற்பார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ். 


படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் இயக்குனர் மிகுந்த சிரமம் எடுத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதாபாத்திரங்களில்

இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் தேர்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருப்பது குறிப்பிட்டதக்கது.

மேலும் நாயகன் அசோக்  மனநோயாளியாக நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சொல்லிக் கொடுத்த விதமும் நாயகன் நடித்த விதமும் படத்தில் அருமையாக இருக்கும் என்று இயக்குனர் கூறியது மறக்க முடியாத நிகழ்வு.


மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் 'முருகா' அசோக்கிற்கு இப்படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை .

மேலும் இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக நிச்சயம் வலம் வருவார். 


முருகா அசோக்கிற்கு இப்படத்தில் மூன்று நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


நிஷா,சங்கவி,

 சிமு அத்வானி ஆகிய மூன்று நாயகிகள் உடன், 'ஊமை விழிகள்' பட இயக்குனர் ஆர். அரவிந்த்ராஜ் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகர் ஒய் ஜி மகேந்திரன் சிறப்பு தோற்றத்திலும் .

தயாரிப்பாளர் திருமாறன் விசாரணை அதிகாரியாக வரும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். 


இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி,  சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது.


படத்தின் தொழில்நுட்பக் குழு விபரம். 


இசை - காதர்

ஒளிப்பதிவு -வி.எஸ்.வேலன்

நடனம் - ராக் சங்கர் 

எடிட்டர் - கார்த்திக் பாண்டியன்

ஸ்டண்ட் - 'பாப்புலர்' பாபு

பாடல்கள் - ப்ரியன், சீர்காழி சிற்பி,

தமிழ்மகன்

கலை இயக்குனர் - வாலி

மக்கள் தொடர்பு - சரண்

கதை,திரைக்கதை ,வசனம், இயக்கம்  - நெடுமாறன் மோகன்தாஸ். 

ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் படத்தை தயாரித்திருக்கிறார் .

இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

Sairaa Directs and Stars in the Upcoming Film ‘Hello Miss’

 Sairaa Directs and Stars in the Upcoming Film ‘Hello Miss’*









*First Look Poster of ‘Hello Miss’ Released*


Produced by N. Kumarlal Nehru under the banner of Namaha Movie Makers, the upcoming film is titled ‘Hello Miss’. The film is directed by Sairaa, who also plays the lead role. Bismi makes her debut as the heroine with this film.


The film features an ensemble cast including K.S. Ravikumar, Kalyani Natrajan, Gajaraja, Janaki Suresh, G. Gnana Sambandhan, Senthil Kumari, Bhuvaneswari, Bala Hassan, Dinesh, KPY Sarath, Swaminathan, Sathyan, Birla Bose, Citizen Mani and Maran in important roles.


S.R. Hari Murugan has choreographed the stunt sequences, while Brinda and Dinesh are the choreographers.


சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’*

 *சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’*









*‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு*


நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படத்தின் சண்டைக் காட்சிகளை S.R. ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.


பாடல்களுக்கு யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்வரிகள் எழுதுகின்றனர். ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன், அந்தோணி தாசன், ஸ்வேதா அசோக் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.


ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ் ஜார்ஜ் அமைத்துள்ளார். வி. மாணிக்கவாசகம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ்.எம்.சேகர் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. காதல், இளமை மற்றும் ரசனையான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஹலோ மிஸ்’, ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

While Tamil Nadu Fights Delhi Over NEET, One Free Coaching Centre in Magudanchavadi Has Already Closed the Gap

 While Tamil Nadu Fights Delhi Over NEET, One Free Coaching Centre in Magudanchavadi Has Already Closed the Gap

As the state Assembly presses the Centre to abolish NEET for disadvantaging rural, Tamil-medium students, six students from one village-run coaching centre have just secured their MBBS seats.


Chennai — NEET remains one of the most contested exams in Tamil Nadu politics. The state Assembly passed a unanimous resolution this month urging the Centre to abolish it, after President Droupadi Murmu withheld assent to the state's own NEET exemption bill; the government's Justice A.K. Rajan Committee has found the exam favours affluent, English-medium, urban candidates over government school and Tamil-medium students, exactly the students it disadvantages most.


While that legal and political fight continues in Delhi and the courts, one free coaching centre in a small village has already been closing that same gap, student by student.

At around 8.45 pm on 13 August, as NEET counselling wound down outside the Omandurar Government Estate Hospital campus, Mrs. Gayathri Ananthakrishnan sat alone in her car taking in what a year of work had delivered: six students from her free coaching centre, all from small Tamil Nadu villages, had secured MBBS admission. “That night was a validation of a year of commitment, perseverance, near give-up moments, shared struggles and shared dreams,” she said. “From our homes in our villages, to the classrooms in Magudanchavadi, to the corridors of medical colleges — one incredible journey.”


The Shanmuganathan Kanagavalli Charitable Trust's centre, which Mrs. Gayathri heads, was started in 2024 by M/s Ganga Hospitals Coimbatore, the year her own son sat the exam, serves students from villages including Siluvampalayam, Goundaneri and Vellandhivalasu. Some travelled two hours each way to attend class before working odd jobs and studying at night; a hostel facility was added for girl students facing the steepest climb. “The barriers were rarely about drive or passion,” Mrs Gayathri said, “but access: no coaching nearby, no way to pay fees, a shortage of material in Tamil, and, for girls especially, a lack of encouragement to keep trying.”


Teaching was tailored to each student, Tamil medium or English medium, with weekly tests and Wednesday review meetings. One Tamil-medium student summed up her own struggle simply: “Question purinja thaanae, answer solla mudiyum, madam” — only once I understand the question can I answer it. “It was a struggle, not an exam on equal footing,” Mrs Gayathri said. “What made the difference was the shared dream between student, parent and teacher.”

Mrs Gayathri thanked Ganga Hospital, Coimbatore, for its CSR support, along with consultants Mr Sathish and Mr Rajesh, faculty members Mr Senthil, Mr Sakthivel and Mr Thilagam, coordinator Mr Arun Thangaraj and typist Ms Suganya. “I'm sure these children will pay it forward,” she said, “and soon what started as a ripple will be a wave.”


About the Shanmuganathan Kanagavalli Charitable Trust

The Trust runs a free NEET coaching centre in Magudanchavadi, Tamil Nadu, for students from surrounding villages, focused on first-generation learners, Tamil-medium students and girls facing barriers to coaching access. Founded in 2024 by M/s Ganga Hospitals, it provides tuition, study resources, mentoring and free hostel accommodation for students.

வெளியாகிறது ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்

 வெளியாகிறது ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்'


மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 




இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ' பிகில்' ஐ எம் விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் 'ஆனபரம்பிலே வேர்ல்டு கப்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார். 


படத்தை பற்றி தயாரிப்பாளர் டி . அசோக் பேசுகையில், '' செவன் ஸ்டார் பாய்ஸ் - ஃபுட்பால் சம்பந்தமான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம். இதில் கால்பந்து விளையாட வேண்டும் என தீராத ஆர்வம் கொண்ட 12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள்.. உள்ளூரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் போது மைதானத்தில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் திறமையான விளையாடும் ஆண்டனி வர்கீஸை தங்களுடைய ரோல் மாடல் நாயகனாக கருதுகிறார்கள். இவர்கள் கால்பந்து விளையாட விரும்பினாலும் அதற்கு ஏற்ற மைதானம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதை தெரிந்து கொண்ட ஆண்டனி வர்கீஸ் இவர்களுக்காக ஒரு மைதானத்தை ஏற்படுத்தித் தருகிறார். அந்த மைதானத்தில் சிறார்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடுவதையும், அவர்கள் நுட்பமாக விளையாடுவதையும் பார்த்து வியக்கும் ஆண்டனி வர்கீஸ்... அவர்களுக்கு பயிற்சியாளர் ஒருவர் கிடைத்தால் அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்து, கால்பந்து விளையாட்டின் பிரபல பயிற்சியாளரான ஐ. எம். விஜயனை அணுகுகிறார். அதன் பிறகு சிறார்கள் கால்பந்து விளையாட்டின் அனைத்து நுட்பங்களையும் கற்றுக் கொண்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் அவர்கள் கோப்பையை வெல்கிறார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. தமிழ்நாட்டில் 'மஞ்சும்மல் பாய்ஸ் ' படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல்... இந்த ' 7 ஸ்டார் பாய்ஸ்' படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

Wednesday, 19 August 2026

Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look

 *Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look* 



 *Hitha Studios, the production house behind the upcoming Tamil romantic entertainer *Lightweight, Baby!,* has unveiled the film's first look, starring stand-up comedian Vikkals Vikram and fitness personality Arathy Krishna.


The first look offers a glimpse into the film's unique world, bringing together romance, comedy and competitive fitness in an unexpected way. Set against a vibrant gym backdrop, the poster features Vikkals Vikram in a playful situation as Arathy Krishna, in her element as a fitness personality, shares the frame with him. The contrasting personalities of the lead pair hint at the fun, chemistry and chaos that audiences can expect from the film.


The poster also brings the film's title to life with its playful visual treatment, reflecting the light-hearted and contemporary tone of the story.


For Vikkals Vikram, *Lightweight, Baby!* marks his first film as a leading man. Known for his stand-up comedy and his distinctive comic timing, Vikram also makes his writing contribution to the film as the dialogue writer. Arathy Krishna, who has built a strong presence in the fitness and bodybuilding community, makes her first major screen appearance as the female lead.


The unconventional pairing of a stand-up comedian and a fitness personality forms one of the film's key attractions. While the world of fitness provides the backdrop, *Lightweight, Baby!* explores the relationship between two people from very different worlds, bringing together romance, humour, family expectations and personal ambition.


 *CAST* 


Vikkals Vikram

Arathy Krishna


 *TECHNICAL CREDITS* 


 *Produced by:* Hitha Studios


 *Written & Directed by:* KC Guru


 *Co-Producer:* Sagara Sandesh


 *Director of Photography:* Pramod Kotiyan


 *Music:* Sarvanaa Subramaniam


 *Editor:* Harish Komme


 *Dialogues:* Vikkals Vikram


 *Co-Director:* Kiran Tumbakere


 *Executive Producer:* Sharath Kumar N


 *Art Director:* Shankaragouda


 *Assistant Directors:* Ahmad Varadharajan, Prem Chandran


 *PRO* : Navaneetha Krishnan

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’

 *விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



விரைவில் வெளியாகவுள்ள தமிழ் காதல் பொழுதுபோக்கு திரைப்படமான *‘லைட்வெயிட், பேபி!’* படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதல், நகைச்சுவை மற்றும் போட்டித்தன்மை கொண்ட ஃபிட்னஸ் உலகை வித்தியாசமான முறையில் இணைத்து, திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. வண்ணமயமான ஜிம் பின்னணியில் அமைந்துள்ள இந்த போஸ்டரில், விளையாட்டுத்தனமான சூழலில் விக்கல்ஸ் விக்ரமும், தனது ஃபிட்னஸ் உலகின் இயல்பான தோற்றத்தில் ஆரத்தி கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளனர்.


இருவரின் மாறுபட்ட குணாதிசயங்கள், படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய நகைச்சுவை, காதல், ரசாயனம் மற்றும் குழப்பமான சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றன.

படத்தின் தலைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், கதையின் இலகுவான மற்றும் நவீனமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.


விக்கல்ஸ் விக்ரமுக்கு, *‘லைட்வெயிட், பேபி!’* நாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும். தனது தனித்துவமான நகைச்சுவை நேர்த்திக்காக அறியப்படும் அவர், இந்த படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார்.

ஆரத்தி கிருஷ்ணா, ஃபிட்னஸ் மற்றும் பாடிபில்டிங் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தனது முதல் முக்கியமான திரை அறிமுகத்தை பெறுகிறார்.

ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ஒரு ஃபிட்னஸ் பிரபலமும் இணையும் இந்த வித்தியாசமான கூட்டணி, படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. ஃபிட்னஸ் உலகை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு உலகங்களில் இருந்து வரும் இரு நபர்களின் உறவை, காதல், நகைச்சுவை, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுடன் இணைத்து இப்படம் சொல்லவுள்ளது.


*நடிகர்கள்*


விக்கல்ஸ் விக்ரம்

ஆரத்தி கிருஷ்ணா


*தொழில்நுட்பக் குழு*


*தயாரிப்பு:* ஹிதா ஸ்டூடியோஸ்


*எழுத்து & இயக்கம்:* கே.சி. குரு


*இணை தயாரிப்பாளர்:* சாகரா சந்தேஷ்


*ஒளிப்பதிவு:* பிரமோத் கொட்டியன்


*இசை:* சரவணா சுப்ரமணியம்


*படத்தொகுப்பு:* ஹரிஷ் கொம்மே


*வசனம்:* விக்கல்ஸ் விக்ரம்


*இணை இயக்குநர்:* கிரண் தும்பகேரே


*நிர்வாக தயாரிப்பாளர்:* ஷரத் குமார் என்


*கலை இயக்குநர்:* சங்கரகௌடா


*உதவி இயக்குநர்கள்:* அகமது வரதராஜன், பிரேம் சந்திரன்


*மக்கள் தொடர்பு (PRO):* நவநீத கிருஷ்ணன்

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் 'டிஸ்கோ' - நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்

 **செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் 'டிஸ்கோ' - நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!*




இயக்குநர் உல்லாஸ் செம்பனின் அடுத்த பிரமாண்டம் - டிஸ்கோ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 


நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் 'டிஸ்கோ' - ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்!* 



'அஞ்சக்கள்ளகோக்கன்' (Anchakkallakokkan) படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பன் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'டிஸ்கோ' (Disco) படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.


'அங்கமாலி டைரீஸ்' வெற்றிக்குப் பிறகு, பிரபல நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் இப்படத்திற்கு செம்பன் வினோத் ஜோஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.


செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.


ஆண்டனி வர்கீஸுடன் இணைந்து தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ், செந்தில் கிருஷ்ணா, மணிகண்டன் ஆச்சாரி, அப்பானி சரத், சினோஜ் வர்கீஸ் மற்றும் வினீத் தட்டில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர்கள் அனைவரும் கருப்பு உடையில் கையில் துப்பாக்கிகளுடன் சர்வதேச ஹாலிவுட் ஆக்சன் த்ரில்லர் பாணியில் அல்ட்ரா-ஸ்டைலிஷ் தோற்றத்தில் காட்சிளிக்கின்றனர். டைட்டில் லோகோவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி குறியீடு, இது ஒரு மிகச்சிறந்த ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் கன்-ஃபைட் என்டர்டெய்னராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.


அல்ட்ரா-மாஸ் சர்வதேச ஸ்டைலில் உருவாகியுள்ள 'டிஸ்கோ' திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு:


 இயக்கம்: உல்லாஸ் செம்பன்

 திரைக்கதை: செம்பன் வினோத் ஜோஸ்

 ஒளிப்பதிவு: ஆர்மோ (Armo)

 இசை: மணிகண்டன் அய்யப்பா

 படத்தொகுப்பு: ரோஹித் V.S. வாரியத்

 கலை இயக்கம்: கோகுல் தாஸ்

 சண்டைப்பயிற்சி: கலை கிங்சன்

 ஆடை வடிவமைப்பு: மெல்வி J

 ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்

 விஎஃப்எக்ஸ் (VFX): ஐடென்ட் லேப்ஸ் (Ident Labs)

 விநியோகம்: ஐகான் சினிமாஸ் (Icon Cinemas)

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும்

 *அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!*



*ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் ‘நய்யி நவெல்லி’, இந்த வருடம் அக்டோபர் 16ஆம் தேதி தசரா பண்டிகைக்கு நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*


அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ’நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழும்  திரைப்படமாக இது உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அசாதாரணமான சம்பவங்கள், குடும்பத்தில் வரும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஏராளமான நகைச்சுவை நிறைந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை இப்படம் அழைத்துச் செல்லும். ‘நய்யி நவெல்லி’ 2026 அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


குழப்பங்கள் நிறைந்த மீரட் குடும்பத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகிறாள் கதாநாயகி. ஆனால், அவளது கணவரின் தம்பிக்கு மட்டும் அனைத்திலும் சிறப்பாகத் தோன்றும் அண்ணி உண்மையில் ஒரு சூனியக்காரியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.


அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்திய SVOD ஒரிஜினல்ஸ் பிரிவின் இயக்குநரும் தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், “’நய்யி நவெல்லி’ திரைப்படம் நிச்சயமாக தசரா பண்டிகைக்கானது என்ற உணர்வு எங்கள் அனைவருக்கும் இருந்தது. இதைவிட சிறந்த வெளியீட்டுத் தேதி இருக்க முடியாது. யாமி கெளதம் தர் அற்புதமாக நடித்துள்ளார். படக்குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளோம். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனத்துடன் இணைந்து, இந்த தசராவுக்கு குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக ‘நய்யி நவெல்லி’ இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.


தயாரிப்பாளர் ஆனந்த் எல். ராய் கூறுகையில், “ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் கதையாக ‘நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. ஹிமான்ஷுவும் நானும் முதன்முதலில் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோதே, ஃபேன்டஸி, நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்து குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான அன்பு மற்றும் குறும்புத்தனத்தை யாமி கெளதம் தர் நடிப்பில் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் பல புதுமையான கதைகளை கொடுத்துள்ளது. அவர்களுடன் நாங்கள் முதன்முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


நகைச்சுவை, குழப்பம் மற்றும் பிரம்மாண்டமான பண்டிகை கொண்டாட்டம் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ‘நய்யி நவெல்லி’, பெரிய திரையில் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் அற்புதமான பொழுதுபோக்கு அனுபவத்தை தரவிருக்கிறது. அக்டோபர் 16, 2026 முதல் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்கில் இந்த பிரம்மாண்டமான குடும்ப ஃபேன்டஸி உலகத்தை காணத் தயாராகுங்கள்!

_ISS DUSSEHRA, NAYYI NAVELLI KE SAATH HOGA DHAMAKA_

_ISS DUSSEHRA, NAYYI NAVELLI KE SAATH HOGA DHAMAKA_



*Amazon MGM Studios and Colour Yellow Announce Nayyi Navelli, India’s Very Own Fantasy Family-Entertainer Starring Yami Gautam Dhar!*


_Produced by Aanand L Rai and Himanshu Sharma, Nayyi Navelli is directed by Balaji Mohan and set to release in cinemas nationwide on 16th October 2026!_


Amazon MGM Studios and Colour Yellow announced India’s very own fantasy family-entertainment film, Nayyi Navelli, starring Yami Gautam Dhar—a perfect festive offering that promises to bring audiences together for a fun-filled theatrical experience. Directed by Balaji Mohan and written by Himanshu Sharma and Divy Nidhi Sharma, this grand entertainer, with music by G. V. Prakash Kumar, takes audiences into a world where the extraordinary collides with family chaos, unleashing unexpected twists and plenty of laughs. Nayyi Navelli is set to release in cinemas on 16 October 2026.


A picture-perfect bride transforms a chaotic Meerut household into paradise, only for her brother-in-law to suspect that his seemingly ideal sister-in-law may actually be a daayan (witch)!


“As we saw Nayyi Navelli finally come together, there was an instant, collective realization that this is THE Dussehra film. No other date would do it justice,” said Nikhil Madhok, director and head of SVOD Originals, Prime Video India and Amazon MGM Studios. “Yami Gautam Dhar is brilliant and the talented ensemble cast has done a great job. This is our first collaboration with Aanand L Rai and Himanshu Sharma; and they have created a remarkable movie. At Amazon MGM Studios, along with our partners at Colour Yellow, we are confident that Nayyi Navelli will be the first choice of entertainment for family audiences this Dusshera.“


Producer Aanand L Rai added, “Nayyi Navelli is the kind of story that surprises you at every turn. When Himanshu and I first discussed the story, we were immediately drawn to the unique way it brings together families for a fantasy, humour and adventure-filled experience. Yami Gautam Dhar was an instinctive choice, bringing exactly the warmth and mischief the character demands. Amazon MGM Studios has delivered some groundbreaking stories and in our first collaboration with them, we can’t wait to take audiences on this wonderfully unpredictable ride.”


With comedy, chaos, and a larger-than-life festive celebration, Nayyi Navelli promises an entertaining big-screen experience. Save the date and get ready to witness a spectacular family fantasy unfold in a cinema near you!

Many Women Journey Around Gouri Kishan… ‘Tharagai’ First Look Revealed!

 Many Women Journey Around Gouri Kishan… ‘Tharagai’ First Look Revealed!*




The first look poster of ‘Tharagai’, starring Gouri Kishan and produced by Speed Reels Studio, has been released.


‘Tharagai’ is the Production No. 1 of Speed Reels Studio. The film is written and directed by Krish, with Gouri Kishan playing the lead role. Kaali Venkat and Sriman are among the actors appearing in important roles.


Set against the lives, journeys and experiences of women, the film explores the different paths that women take in life.


The first look poster of the film has now been unveiled. Featuring Gouri Kishan at the centre, with women from different ages and backgrounds journeying around her, the poster has created curiosity about the world and story of the film.


The film has music by Siddhu Kumar, with Sundar Sukumaran as cinematographer, Alan P John as editor and Arunshankar as art director.


Centred around a woman's journey, ‘Tharagai’ explores themes of travel, relationships, life choices and freedom.


‘Tharagai’ — A Journey… A Search… Many Women's Paths.

கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட்

*கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!*



ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பு எண் 1-ஆக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


கௌரி கிஷனின் முகத்தை மையமாகக் கொண்டு, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘தாரகை’ படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, அலன் பி. ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.


ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகியுள்ளது.


‘தாரகை’ — ஒரு பயணம்… ஒரு தேடல்… பல பெண்களின் பாதைகள்.




நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’

 *”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!*



தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது என்பதற்கு சான்றாக இந்த வருடம் வெளியான நல்ல கதைக்களங்களைக் கொண்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. உதாரணமாக ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். பான் இந்திய அளவில் பிரம்மாண்டமான திரைப்படங்களையும், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைகளையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. 


பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தமிழ் திரைப்படமான ‘மொத ராத்திரி’ நாளை (ஆகஸ்ட் 21) அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ராஜா கருப்பசாமி இயக்குநராக அறிமுகமாகிறார். ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் ரசிகர்கள் நல்ல கதைகளை எப்போதுமே கொண்டாடுவார்கள். குறிப்பாக, இந்த வருடம் வெளியான ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ போன்ற நல்ல திரைப்படங்களுடன் ரசிகர்கள் தங்களை பொருத்தி கொண்டதால் வரவேற்பைப் பெற்றன. ஒரு தயாரிப்பு நிறுவனமாக, பிரம்மாண்டமான பான் இந்திய வெற்றிப் படங்கள் முதல் குடும்பம், உணர்வுகள் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான சினிமாவை வழங்குவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையிலிருந்துதான் ‘மொத ராத்திரி’ திரைப்படம் உருவாகியுள்ளது” என்றனர். 


மேலும் அவர்கள் கூறியதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ரிஷிகாந்த், அனிஷ்மா மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ராஜா தனது தெளிவான அணுகுமுறை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றால் எங்களை மிகவும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதத்திலிருந்து, படப்பிடிப்புத் தளத்தில் அவர் செயல்பட்ட விதம் வரை, ஒரு அறிமுக இயக்குநருக்குரிய அனுபவத்தைத் தாண்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். திட்டமிட்ட காலத்திற்குள் அவர் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றனர். 


இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்க, அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன் மற்றும் கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


பரத் சங்கர் இசையமைக்க, சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.


புதிய களத்தையும் புது திறமையாளர்களையும் அறிமுகப்படுத்தும் தமிழ் சினிமாவின் மற்றொரு புதிய முயற்சி ‘மொத ராத்திரி’ திரைப்படம் என்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Tamil audiences are always special as they admire and encourage good contents. Modha Rathri

 *“Tamil audiences are always special as they admire and encourage good contents. Modha Rathri will be a delightful treat for them” - Producers Naveen Yerneni & Y. Ravi Shankar*



Tamil cinema continues to witness an exciting shift in audience preferences, with 2026 delivering a string of content-driven successes that have connected strongly with viewers. Films such as ‘Thaai Kizhavi’, ‘Blast’ and ‘Youth’, among several others, have proved that audiences continue to embrace stories that offer something fresh and connect through their content. For Mythri Movie Makers, a banner that has moved seamlessly between large-scale pan-Indian blockbusters and rooted family entertainers, this evolving landscape makes the release of ‘Modha Rathiri’particularly exciting.


With their big-budget Ravi Teja starrer ‘Irumudi Kattu’ hitting screens today, the producers are simultaneously looking forward to the worldwide release of Modha Rathiri tomorrow (August 21), marking another distinctive addition to their Tamil slate. Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar, the film introduces Raja Karuppasamy as a director and features Rishikanth and Anishma Anilkumar in the lead.


Producers Naveen Yerneni and Y. Ravi Shankar say: “Tamil audiences have always had a wonderful appetite for good cinema, and what has been particularly exciting in 2026 is the way content-driven films have found such strong acceptance. Films like ‘Thaai Kizhavi’, ‘Blast’ and ‘Youth’ have shown that when a story connects with people, audiences will wholeheartedly support it. As a production house, we have always believed in presenting diverse kinds of cinema,  from large-scale pan-Indian blockbusters to films rooted in family, emotions and strong storytelling. ‘Modha Rathiri’ comes from that very belief.”


“We are extremely happy to see ‘Modha Rathiri’ reaching audiences tomorrow. Rishikanth and Anishma have delivered performances with tremendous sincerity, while the entire ensemble has contributed wonderfully to the world of the film. Raja has impressed us with his clarity, craftsmanship and understanding of storytelling. From the way he handled the characters to his execution on set, he displayed remarkable maturity for a first-time director and completed the project with great discipline and within the planned schedule. We are proud to have backed his vision and are confident that audiences will enjoy what the entire team has created.”


The producers also express their appreciation for the film's complete creative and technical team, whose collective effort has shaped Modha Rathiri into a rooted family entertainer. Bharath Sankar has composed the music, with Surendran Paranjothi handling cinematography and Ashok Arjunan serving as editor. Poornima Ramaswamy is the Costume Designer and A. Balumahendra is the Art Director.


The film features Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bagavathi Perumal, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan and Kowshik Kabilan, among others.


For Mythri Movie Makers, Modha Rathiri represents yet another opportunity to bring a fresh voice and a new combination of talent to Tamil cinema. With Raja Karuppasamy's directorial debut, a promising lead pair and a strong ensemble coming together, the film is all set to meet audiences worldwide in theatres tomorrow, August 21, 2026.

பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”:

 *“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!*

சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா மற்றும் அவரது மகளின் உணர்வுப்பூர்வமான பயணத்தை ’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 வெளியாகிறது.

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 21, 2026) திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “‘இருமுடி கட்டு’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சிவா நிர்வாணா எங்களிடம் இந்த உணர்வுப்பூர்வமான கதையை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்துவிட்டது. தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான உறவை பார்வையாளர்கள் நிச்சயம் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அதிலிருந்து விரியும் கதை, மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத ஒரு உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். ரவிதேஜா சார் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதுபோன்ற வித்தியாசமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. 


சிவா நிர்வாணா உணர்வுப்பூர்வமான கதையை கொடுத்துள்ளார். பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. நாளை திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார். 


ரவி தேஜா மற்றும் சிவா நிர்வாணா முதன்முறையாக இணையும் இந்தத் திரைப்படத்தில், பிரியா பவானி சங்கர் காவேரி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்து, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“A Story of Family, Emotion and Transformation That Will Entertain & Touch Every Heart”: Mythri Movie Makers on ‘Irumudi Kattu’

 *“A Story of Family, Emotion and Transformation  That Will Entertain & Touch Every Heart”: Mythri Movie Makers on ‘Irumudi Kattu’*

_*Producers Naveen Yerneni and Y. Ravi Shankar look forward to audiences embracing the emotional journey of Ravi Teja and his daughter; the Shiva Nirvana directorial releases worldwide on August 21.*_

At its heart, ‘Irumudi Kattu’ is a story rooted in family, relationships and the powerful bond between a father and his daughter. Directed by Shiva Nirvana, the film presents Mass Maharaja Ravi Teja in a distinctly different emotional space, taking audiences through a journey of pain, faith and transformation. Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under Mythri Movie Makers and presented by T-Series Films, Irumudi Kattu is all set for its worldwide theatrical release on , August 21, 2026.


Speaking about the film and its release, producers Naveen Yerneni and Y. Ravi Shankar say:“We are extremely happy that ‘Irumudi Kattu’ is reaching audiences tomorrow. From the moment Shiva Nirvana narrated the story to us, what stayed with us was its emotional core. The relationship between a father and his daughter gives the film a very relatable foundation, while the journey that unfolds from there takes the story into a much larger and unexpected space. We strongly believe audiences will connect with these emotions.” Ravi Teja sir has delivered a very special performance and it has been wonderful to see him explore such a different emotional space. Shiva has handled the story with great sensitivity, while Priya Bhavani Shankar, Baby Nakshathra and the entire cast have brought tremendous sincerity to their characters. G. V. Prakash Kumar’s music has also added immense value to the film, and we are delighted with the response to ‘Irumudi Kattu’. We sincerely thank the entire team for their commitment and hard work, and we look forward to audiences experiencing the film in theatres on August 21,2026.”

The film stars Priya Bhavani Shankar as Kaveri and Baby Nakshathra in a pivotal role, alongside Sai Kumar, Ajay Ghosh, Ramesh Indira and Swasika. Shiva Nirvana has written and directed the film, with G. V. Prakash Kumarcomposing the music, Vishnu Sharma handling cinematography, Prawin Pudi serving as editor and Sahi Suresh as Production Designer.


Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under the banner of Mythri Movie Makers and presented by T-Series Films, Irumudi Kattu brings together Ravi Teja, Priya Bhavani Shankar and Shiva Nirvana in an emotionally driven theatrical experience centred on family, relationships and transformation. The film is all set to meet audiences worldwide in cinemas on August 21, 2026.

அமரம் '' கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய

 " அமரம் '' கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும்  கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா !














































" அமரம் " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!



திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்

 " அமரன் ".


மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.


கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்  தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது..,


‘அமரம்’ திரைப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எல்லோரும் ஒரு நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைய வேண்டும். அது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில், ‘அமரம்’ படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைந்துள்ளது.


இயக்குநர் அருள் கிருஷ்ணன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடைய உழைப்பினால்தான் இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது.


இந்தப் படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் என்னிடம் கூறியவுடனேயே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் ஒரு ரீமேக் படம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.


ஒரு கட்டத்தில் என்னால் படத்தில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டபோது, துரை பாண்டி இந்தப் படத்தின் பணிகளை முழுமையாக கவனித்துக் கொண்டார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். கதாநாயகன் தேஜஸ் ராஜன் மற்றும் கதாநாயகி ஐரா அகர்வால் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘அமரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும். நன்றி!”


 நாயகன் தேஜஸ் ராஜன் பேசியதாவது..


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்களுடைய படைப்பு தற்போது உங்கள் முன்னால் வந்துள்ளது. படத்தின் டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.


இந்தத் திரைப்படத்தை நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு செய்தோம். புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலில் அதிகாலை 4 மணிக்கும், எண்ணூர் பீச்சிலும் என பல்வேறு இடங்களில் பல கஷ்டங்களுக்கிடையே இந்தப் படத்தை படமாக்கினோம்.


இந்தப் படத்திற்காக 330-க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களது முழு அர்ப்பணிப்புடன், உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இயக்குநர் அருள் கிருஷ்ணன் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தின் வெற்றி விழாவில் என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறேன். இப்படத்திற்கு உங்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி!”


படத்தின் இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசியதாவது..,


“என்னுடைய திரைப்பயணம் என்பது மிக நீண்ட பயணம். நான் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். என்னுடைய ஊரிலிருந்து இதுவரை யாரும் சினிமாவிற்குள் வந்ததில்லை. எனது ஊருக்கு சினிமா என்பது புதிதான விஷயம். நான் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் படத்துறைக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.


தமிழ் சினிமா இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து வருகிறது. தேசிய விருதுகள் பெறுவதிலும், எமோஷனல் படங்களை உருவாக்குவதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆக்ஷன் படங்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை நாம் தவறவிட்டு வருகிறோம்.


அதனால், ஆக்ஷன் படத்தை மையமாக வைத்து, ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களைப் பார்த்து, அதனால் இன்ஸ்பயர் ஆகி, அதுபோன்ற ஒரு மிகச்சிறந்த திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆக்ஷன் படங்களுக்கு மிகச்சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.


பின்னர் என்னுடைய மேனேஜர்கள் மூலம் வேறு சில கதைகளைச் சொல்லியிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டு, ‘இதை நாம் தயாரிக்கலாமே’ என்று கூறினார்.


கதாநாயகர்கள என்னால போய் ரீச் பண்ண முடியல, காரணம் அவங்களுக்கு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு. அப்போ நடிகர் கார்த்தி சார் ஒரு இன்டர்வியூல சொன்ன மாதிரி, அத ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு நம்மளே நம்மள முதல்ல வெளி கொண்டு வரணும். அவங்கள மாதிரி ஒரு நடிகருக்கு எழுதுன கதையிலயும், நல்ல கதையா, நல்ல திரைக்கதையா இருக்குற பட்சத்துல, ஒரு புதுமுக நடிகர கூட போட்டு அந்த அளவுக்கு ஒரு ஹிட்ட குடுக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு படத்த எடுத்துற முடியும். ஒரு குறைந்த முதலீட்டுலயே, குறைந்த பட்ஜெட்லயே ஒரு  பிரம்மாண்டமான படத்த பண்ண முடியும்னா  அதுக்கான ஒரு பெரிய முயற்சிதான், ஒரு உதாரணம்தான் இந்தப் படம். பிரம்மாண்டமா பண்ணிருக்கோம், அதுக்கு நெறைய திட்டமிடல் தான் காரணம்.


(Trident Arts) ரவீந்திரன் சார் அவங்க வந்து இந்தப் படத்த பத்தி சொல்லும்போது, ஒரு 'புதிய பாதை', ஒரு 'சுப்பிரமணியபுரம்', ஒரு 'பருத்திவீரன்' மாதிரி வரும்னு சொன்னாரு. கல்ட் கிளாசிக்கா (Cult classic) இந்தப் படம் வரும்.


இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது.


இந்திய சூழலில் ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவரை படத்திற்குள் கொண்டு வருவது என்பது பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய சவாலாக இருக்கிறது. நடிகர் யோகிபாபு என்னுடைய நெருங்கிய நண்பர். ‘ஜுங்கா’ படத்திலிருந்து அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தபோது, அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட்ஜெட் காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. சினிமா சூழல் அப்படித்தான் இருக்கிறது.


இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரைப்படமாக இருக்கும். இந்தப் படத்திற்காக பலரும் தங்களுடைய சம்பளத்தைப் பெரிதாக எதிர்பார்க்காமல், எனக்காகவும் இந்தப் படத்திற்காகவும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். இப்போதைக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நாயகி ஐரா அகர்வால் பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். இந்த நாளுக்காக நான் பல மாதங்களாக மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். தற்போது எங்களுடைய படத்தின் இசையும் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இது உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”


படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் தன்னிடம் கூறியபோதே மிகவும் பிடித்திருந்தது ஐரா அகர்வால், அவர் கூறிய விதத்தில் கதையை சிறப்பாக திரையில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.


“இயக்குநர் எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து, மிகவும் அழகாக என்னை நடிக்க வைத்தார். அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படத்தில் எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்”.


என்னுடன் இணைந்து நடித்த கதாநாயகன் தேஜஸ் ராஜனுக்கும் நன்றி, தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றி.“‘அமரம்’ திரைப்படம் நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். எனவே இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் அளிக்க வேண்டும்” நன்றி.


சிறப்பு விருந்தினர் மாமன்ற நடுவர் டாக்டர் V. ராமராஜ் பேசியதாவது..,


“மக்களுக்காக பேசும் மீடியா துறை நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அமரம்’ படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வலியை, அவர்களுக்கான நியாயத்தைப் பேசும் படமாக இப்படம் இருக்கும் என்று அறிகிறேன். இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துச் சென்று உருவாக்கியிருக்கும் படக்குழுவினருக்கும், இதில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


லோக் ஆயுக்தா பற்றிய ஒரு விழிப்புணர்வு தமிழகத்தில் இன்னும் போதுமான அளவில் இல்லை. ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைப்பான லோக் ஆயுக்தா குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.


மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்க வேண்டும். அந்தப் பயணம் இப்போது ஆரம்பமாகிவிட்டது. அதற்கான பயணத்தில் நாம் அனைவரும் இணைவோம் என்று இந்த விழாவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.


‘அமரம்’ திரைப்படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அளிக்க வேண்டும். மக்களின் குரலைப் பேசும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். படக்குழுவினருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!”


மிராக்கிள் மைக்கேல்  புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர்  எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.


தொழில் நுட்ப குழு விபரம்


எழுத்து இயக்கம் -  அருள் கிருஷ்ணன்

இசை - மிக்கி ஜெ .மேயர்

பாடல்கள் - சினேகன்,சௌந்தரராஜன். K

ஒளிப்பதிவு - பரத் குமார்

எடிட்டிங் - R. ஸ்ரீராமர்

கலை இயக்கம் - ஜனார்த்தனன்

ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல்

நடனம் - பூபதி

தயாரிப்பு மேற்பார்வை - A.P.ரவி

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்

தயாரிப்பு - C.R.ராஜன்.


Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை இம்மாதம் 28ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.