Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Tuesday, 13 December 2022

*தேங்க்யூ டார்லிங் , எனக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைக்குமென எனக்கே

 *தேங்க்யூ டார்லிங் , எனக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைக்குமென எனக்கே நம்பிக்கை இல்லாதிருந்த போது என்னை நீ நம்பினாய்  நடிகர் பிரபாஸுக்கு அழகாக பதிலளித்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி*






இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன்  இணைந்து பிரபாஸ் கொடுத்த பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது.  பிரபாஸின்  நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. படத்திற்கு அவர் பெரும்பலமாக அமைந்தார். 


இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி நட்புறவில்  படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். 

அதில் லேட்டஸ்ட்டாக  நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. 


சமீபத்தில் பாகுபலி இயக்குனர்  எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார், இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

-

" @ssrajamouli  அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.


சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்."


என பதிவிட்டுள்ளார்.


https://www.instagram.com/p/CmEy7KzP_I6/?igshid=YzFkMDk4Zjk=


இந்த மனமார்ந்த  வாழ்த்துகளை பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி அதற்கு கீழ் கண்டவாறு பதிலளித்துள்ளார்


தேங்க்யூ டார்லிங்.

"என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்...🥰🤗"


https://www.instagram.com/p/CmEy7KzP_I6/?igshid=YzFkMDk4Zjk=





ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால்  மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்க படங்களில் இடம்பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களின் வரிசையில் பிரபாஸின் பாகுபலியும் ஒன்றாகும்.  மேலும்,  நடிகர் பிரபாஸ் - இயக்குநர் ராஜமௌலி நட்புறவு எப்போதுமே ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டணியும் அந்த உறவை மதித்து ஒருவரை ஒருவர் பாராட்டி வருகின்றனர். 




நடிகர் பிரபாஸ் அடுத்ததாக சலார், கீர்த்தி சனோன் உடன் ஆதிபுருஷ், தீபிகா படுகோனுடன் ப்ராஜெக்ட் கே மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் ஸ்பிரிட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வரிசை  ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அவரது படம் திரையரங்கில் வரும் காலத்திற்காக இந்தியா முழுதும் ரசிகர்கள் ஏக்கத்துடன்  காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment