Featured post

Gajanna Tamil Movie Review

Gajanna Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gajana ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Vedhika, Inigo Prabhakaran, Chandini, Yogi B...

Thursday, 9 February 2023

தேஜாவு' இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும்

 'தேஜாவு' இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படம்


அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். மேலும் தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான 'ரிபீட்' என்ற படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து 'என்ன சொல்ல போகிறாய்' , 'செம்பி' ஆகிய படங்கள் மூலம் திரையுலகில் தடம் பதித்த அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.   



ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை ழென் ஸ்டுடியோஸ் (ZHEN Studios) சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டைன்மெண்ட்ஸ் (ARKA ENTERTAINMENTS) நிறுவனம் இப்படத்தினை இனைந்து தயாரிக்கிறது. 


இது குறித்து இன்று அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'தேஜாவு' மற்றும் 'செம்பி' ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து அரவிந்த் ஶ்ரீனிவாசன் மற்றும் அஷ்வின் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment