Featured post

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா

 *சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!* சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிரு...

Wednesday, 5 April 2023

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் ஏப்ரல்

 *மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது*


கிரியேட்டிவ் ஜீனியஸ் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் க்ளிம்ப்ஸாக இதன் கான்செப்ட் டீசர் ஏப்ரல் 8 நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இதற்கான சிறிய க்ளிம்ப்ஸ் ஒன்று புதன்கிழமை வெளியானது. இதில் புஷ்பா ராஜின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும்படி ‘புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என தலைப்பிடப்பட்டு வெளியாகி இருக்கிறது. இந்த சிறிய க்ளிம்ப்ஸ் கான்செப்ட் டீசருக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.


‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது.

No comments:

Post a Comment