Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Tuesday, 25 April 2023

ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்

 *ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்..!*


*மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும்  ‘உருச்சிதை’..!*


VDS சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’. அறிமுக இயக்குனர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  புதுமுகங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனிக்கிறார். சண்டைகாட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.  


எங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன் குடும்பப்பாங்கான அதேசமயம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.


இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை கில்ட் தலைவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அவர்கள் வெளியிட்டார். வரும் மே 5 முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment