Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Thursday, 13 July 2023

நாளை முதல் அமேசான் பிரைமில் வெற்றிப்படமான தண்டட்டி

 நாளை முதல் அமேசான் பிரைமில்  வெற்றிப்படமான தண்டட்டி... 


அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் 'தண்டட்டி'.











இந்தப் படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட 'தண்டட்டி' அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.


சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக S. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு A. வெங்கடேஷ்.நிர்வாகத் தயாரிப்பு ஷ்ராவந்தி சாய் நாத்


'தண்டட்டி' படம் கடந்த ஜூன் 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில்

'தண்டட்டி' படம் ஜூலை 14ம் தேதி அதாவது நாளை முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment