Featured post

Pre-release Event of Ameer Starring

Pre-release Event of Ameer Starring UyirThamizukku Movie* Moon Pictures presents 'UyirThamizukku,' a political drama helmed by debut...

Monday 31 July 2023

ராணுவன்’ - இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி

 *‘ராணுவன்’ - இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!*


நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக ’காதல்’, ’ஈரம்’, ’கோ’, ’கற்றது தமிழ்’, ’100’, ‘144’, ’தும்பா’ மற்றும் பல படங்களின் மூலம் தனது அற்புதமான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் காதல் கண்ணன், தற்போது ‘ராணுவன்’ என்றப் பாடலை உருவாக்கியுள்ளார். இதனை விமல், பிரவீன், சிவா தயாரித்துள்ளனர். 








இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட அவர், “எனக்கு எப்போதுமே சமூக ஆர்வலராக பணி செய்ய விருப்பமுண்டு. அந்த அர்ப்பணிப்புடன் சரியான பாதையில் பயணித்து வருகிறேன். இது தொடர்பாக ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் ‘கௌரவ டாக்டர்’ பட்டத்தையும், தொடர்ந்து ‘சிறந்த சமூக ஆர்வலர்’ மற்றும் HRO இன்டர்நேஷனல் வழங்கிய ‘சிறந்த நடிகருக்கான விருது’ போன்ற மதிப்புமிக்க பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். நம் நாட்டைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்திய ராணுவப் படையை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியை சரியான முறையில் செலுத்த விரும்பினேன். அப்போதுதான் நான் இந்தத் திட்டத்தில் இணைந்தேன். விமல் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு பிரவீன் வரிகள் எழுதியுள்ளார்.


அதை ஒருமுகப்படுத்தி, இயக்கும் மகிழ்ச்சியான பணி எனக்கு வழங்கப்பட்டது.  நான் மகிழ்ச்சியடைய முதல் காரணம் இந்திய இராணுவப் படைக்கு நன்றி செலுத்துவது. மற்றொன்று, இந்தப் பாடலின் மூலம் நான் இயக்குநராகப் பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பாடல் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புக்காக மட்டுமே. இதன் பின்னால் எந்தவொரு வணிக நோக்கமும் இல்லை. இந்த பாடலை ஆகஸ்ட் 15, 2023 அன்று சுதந்திர தினத்தன்று வெளியிடுகிறோம். அனைத்து திரையரங்குகளிலும் அந்தந்த காட்சிகள் தொடங்குவதற்கு முன் பாடல் திரையிடப்பட்டால் அது இந்திய இராணுவத்தினருக்கு கொடுக்கும் அற்புதமான மரியாதையாக இருக்கும்” என்றார்.


இந்தப் பாடலில் இயக்குநர்-நடிகர் காதல் கண்ணனுடன் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடலுக்கு சபீர் அலிகான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் பாடலின் மொத்த படப்பிடிப்பும் 3 நாட்களில் முடிந்துவிட்டது. இந்த பாடலின் பர்ஸ்ட் லுக்கை திரைக்கதை மன்னன் மற்றும் நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட திரு. கே பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment