Featured post

Nora Fatehi Brings the Ultimate Celebration Vibe with “Thira Nee Endhan Tharani Thira Nee” from KD: The Devil*

 *Nora Fatehi Brings the Ultimate Celebration Vibe with “Thira Nee Endhan Tharani Thira Nee” from KD: The Devil* The excitement surrounding ...

Saturday, 28 February 2026

Hombale Films Expands Horizons: Steps into Overseas Distribution

 Hombale Films Expands Horizons: Steps into Overseas Distribution*



After redefining Indian cinema with landmark blockbusters like KGF Chapter 1, KGF Chapter 2, Kantara, Kantara Chapter 1, Salaar and Mahavatar Narasimha

 

Hombale Films announces its official entry into Overseas Distribution.


This strategic expansion marks a significant new chapter in the company’s journey, driven by a clear vision to take Indian cinema to a wider global audience. With a strong track record of mounting large-scale films that resonate across languages and cultures, Hombale Films now aims to build a structured and focused International distribution network.


Importantly, this initiative will not be limited to films produced by Hombale Films. The company will collaborate with filmmakers and production houses across India to ensure diverse Indian stories reach audiences worldwide.


By stepping into overseas distribution, Hombale Films strengthens its commitment to expanding the global footprint of Indian cinema  bringing it closer to viewers in every corner of the world.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது

 *ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!*



ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha  போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.


இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது.


இந்த விரிவாக்கம், இந்திய சினிமாவை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் தாண்டி ஒலிக்கும் திரைப்படங்களை உருவாக்கிய அனுபவத்துடன், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான நோக்கத்துடன் சர்வதேச விநியோக வலையமைப்பை உருவாக்க முனைகிறது.


குறிப்பாக, இந்த முயற்சி ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களுக்குள் மட்டுமே அடங்கிவிடாது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, பல்வகை இந்தியக் கதைகளை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் இலக்காகும்.


வெளிநாட்டு விநியோகத் துறையில் கால் பதிப்பதன் மூலம், இந்திய சினிமாவின் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் தனது உறுதிப்பாட்டை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மேலும் வலுப்படுத்துகிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்திய சினிமாவை இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லும் புதிய அத்தியாயம் இதுவாகும்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது

 *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!*



மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின்  டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.


டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என  பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக  ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் கதை எதை மையமாகக் கொண்டது என்பது குறித்து முழு விவரம் வெளியாகாதபோதிலும், டீசர் மிகப் புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.


இந்த சீரிஸ்  மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.  மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். முன்பு ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என அற்புதமான இரண்டு படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட படைப்புகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மனித உணர்வுகள், சமூக அரசியலின் நுணுக்கங்கள் மற்றும் இயல்பான கதை சொல்லும் பாணியில் தனித்துவம் கொண்ட இயக்குநர் மணிகண்டன், இந்த OTT முயற்சியிலும் அதே வலிமையை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் சேதுபதியின் எளிமையான ஆனால் ஆழமான நடிப்பு, கதைக்கு மேலும் உயிரூட்டும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்த நிலையில் இந்த டீசர் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.


இந்த சீரிஸில் நடிகர் பட்டியலிலும் பல வலுவான பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன்

VJ. பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்துறை அனுபவம் கொண்ட இந்த நடிகர்கள் இணைந்திருப்பது, சீரிஸின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முத்து என்கிற காட்டான் தமிழ் OTT உலகில் வித்தியாசமான கதையமைப்புடன் வெளியாகும் முக்கியமான சீரிஸாக பார்க்கப்படுகிறது. டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் படைப்பாக இது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.



தொழில் நுட்ப குழு

தயாரிப்பு  - ஜியோ ஹாட்ஸ்டார்,

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ்

இயக்குநர்கள் -  B. அஜித் குமார், M. மணிகண்டன்

கதை / திரைக்கதை - M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்

ஒளிப்பதிவு -  N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்

எடிட்டர் -  B. அஜித் குமார்

இசையமைப்பாளர் -  ராஜேஷ் முருகேசன்

கலை இயக்குநர் - ஜாக்கி, சாபு மோகன்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

Link : 

https://youtu.be/PZEwB1fWtkY?si=D1Qeh679tkFWLOlq

Poster of 1st Single ‘Tabaahi’: Yash and Kiara Bring Passion and Desire to the World of Toxic: A Fairy Tale for Grown-Ups, Song out on 2nd March

 Poster of 1st Single ‘Tabaahi’: Yash and Kiara Bring Passion and Desire to the World of Toxic: A Fairy Tale for Grown-Ups, Song out on 2nd March*



The poster of the first single Tabaahi sets the tone for what promises to be an intense and passionate musical chapter from Toxic: A Fairy Tale for Grown-Ups. Featuring Rocking Star Yash and Kiara Advani in a windswept seaside embrace, the visual speaks of fire, desire and raw emotion — even before a single note has been heard.


Yash appears strong and grounded, while Kiara holds him with urgency, creating a moment charged with chemistry and intensity. Dressed in soft white with natural, flowing hair, she contrasts his rugged presence, making the visual feel both intimate and explosive. The vast ocean in the backdrop mirrors the scale of their emotion — restless, untamed and impossible to ignore.


While the song itself is set to release on 2nd March, the excitement around Tabaahi is already mounting. Composed and sung by Vishal Mishra — known for delivering emotionally resonant chartbusters — the track marks a powerful collaboration within the world of Toxic. With Mishra’s strong melodic identity and expressive vocal depth, anticipation is steadily building ahead of its release on 2nd March.


The film stars Yash, Nayanthara, Huma Qureshi, Rukmini Vasanth and Tara Sutaria in pivotal roles. Written by Yash and directed by Geetu Mohandas, Toxic: A Fairy Tale for Grown-Ups is being shot simultaneously in Kannada and English, with dubbed versions across Hindi, Tamil, Telugu and Malayalam — reinforcing its global scale. Produced by KVN Productions and Monster Mind Creations, the film is slated for release on 19 March 2026.

ராக்கிங் ஸ்டார் ' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups)

 *ராக்கிங் ஸ்டார் ' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'தபாஹி ' மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது*



'தபாஹி' - ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: யாஷ் - கியாரா இணைந்து மார்ச் 2 ஆம் தேதி டாக்ஸிக் உலகின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டு வருகிறார்கள். டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார்  கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் முதல் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது


'தபாஹி' ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்:


டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார்  கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தில் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க இசை அத்தியாயமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் கியாரா அத்வானி காற்று வீசும் கடலோரத்தில்  அன்போடு இருக்கும் காட்சி.. ஒரு மெட்டு கேட்கப்படுவதற்கு முன்பே நெருப்பு, ஆசை மற்றும் உணர்வைப் பற்றிப் பேசுகிறது.


யாஷ்- கியாரா இருவரும் கட்டியணைத்துக் கொண்டு கடற்கரையில் நடக்கும் காதல் மிக்க தருணத்தை உருவாக்குகிறார்கள். இயற்கையான அலைபாயும் கூந்தலுடன் மென்மையான வெண்ணிற உடை அணிந்து கியாரா தோன்றுவது.. மேலும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காட்சி நெருக்கமானதாகவும், பிரத்யேகமானதாகவும் இருப்பதையும் இந்த ஜோடி உணர வைக்கிறார்கள். பின்னணியில் உள்ள பரந்த கடல் ...அவர்களின் உணர்ச்சியின் அளவை பிரதிபலிக்கிறது. அது அமைதியற்றது... அடக்கப்படாதது... புறக்கணிக்க முடியாதது.


இந்தப் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தபாஹி-யை சுற்றியுள்ள உற்சாகம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது.  உணர்வு ரீதியாக எதிரொலிக்கும் தரவரிசைப் பாடல்களை வழங்குவதில் பெயர் பெற்ற விஷால் மிஸ்ரா இசையமைத்து பாடிய இந்தப் பாடல் 'டாக்ஸிக்' உலகில் ஒரு சக்தி வாய்ந்த பங்களிப்பை குறிக்கிறது. மிஸ்ராவின் மெல்லிசை வெளிப்படையான குரல் இனிமையுடன் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் முன்பே அதற்கான எதிர்பார்ப்பு சீராக அதிகரித்து வருகிறது.


இந்தப் படத்தில் யாஷ், நயன்தாரா,  ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யாஷ் எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார்  கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grown Ups) கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் பதிப்புகளுடன் அதன் உலகளாவிய வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா

 *மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!*









Rocks Nature Entertainment வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். 


ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 


விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.., 


இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன் பேசியதாவது.., 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆடிடோரியத்தில் சதூர் படத்துக்காக  நடந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் சந்தித்தோம். இன்று மீண்டும் இங்கே நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த அணியுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. முதலில் எங்கள் இயக்குநர் அகஸ்டின் பிரபுவுக்கும் தயாரிப்பாளருக்கும் என் நன்றி. அவர்களின் நம்பிக்கையும் முயற்சியுமே இந்த திட்டத்தை சாத்தியமாக்கியது. புதிய டீமாக இருந்தாலும், வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தைரியமாக செயல்பட்டுள்ளோம். இந்த டீமின்  முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒன்று. அனைவரும் உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நடிகர் அஜித் விக்னேஷ் பேசியதாவது.., 

இந்த நிகழ்ச்சியின் உண்மையான ஹீரோக்கள் நீங்கள் – பத்திரிகையாளர்கள் மற்றும் ரிப்போர்டர்கள் தான். பெரிய பெயர்கள் இல்லாமல், ஒரு புது டீமாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நீங்கள் எழுதிப் பொதுமக்களிடம் கொண்டு சென்றால் இந்த படத்தின் பெயரே பெரியதாகும். இயக்குநர் கதை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்தது; கடல் காட்சிகள் சவாலாக இருந்தது. பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தாலும், இயற்கைக்கு முன் நாமெல்லாம் சிறியது என்பதே பெரிய பாடம். பல சிரமங்களை தாண்டி மிகவும் நேர்மையாக இந்த படத்தை முடித்துள்ளோம். இந்த கதையின் உண்மையான ஹீரோ இயக்குநரே. 700க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பல வருடப் பயணத்திற்குப் பிறகு இது எங்களின் முதல் வெளியீட்டு படம். படத்தை பார்த்து உங்கள் உண்மையான விமர்சனத்தை எழுதுங்கள் – நீங்கள் தான் எங்களின் மிகப்பெரிய ஆதரவு.


எடிட்டர் கார்த்திக் செல்வம் பேசியதாவது.., 

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த அகஸ்டின் சார் மற்றும் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு மான்ஸ்டர் கதையை பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சி செய்துள்ளோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. எல்லா தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திரையரங்கில் பார்க்கும்போது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள்.


நடிகர்  அசோக் குமார் பேசியதாவது.., 

இங்கு  வருகை  தந்துள்ள பத்திரிக்கை, ஊடக மற்றும் சமூக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் அகஸ்டின் மற்றும் தயாரிப்பாளர் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


ஜாலியாக சொன்ன ஒரு வார்த்தையை சீரியஸாக எடுத்துக் கொண்டு எனக்கு முக்கியமான ரோல் கொடுத்தது என் அதிர்ஷ்டம். இது என் முதல் முழுநீள திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பு.

அஜித் ப்ரோ மிகவும் இயல்பாக நடித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அமர் ப்ரோவுடன் 15 ஆண்டுகளாக குறும்பட பயணம் செய்து, இப்போது இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி. இஷிதா முழு அர்ப்பணிப்புடன் தமிழ் வசனங்களை தயார் செய்து நடித்தார். DOP அமல் ப்ரோ கடின உழைப்பால் ஒவ்வொரு ஷாட்டையும் சிறப்பாக்கினார். CGI மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைல் இருந்தாலும், நம் மண்ணின் மணமும் கலாச்சாரமும் கலந்த கதை இது. என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.


ஒளிப்பதிவாளர் அமல் டோமி பேசியதாவது.., 

இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நாங்கள் ஒரு சிறிய முயற்சியாக இந்த படத்தை எடுத்துள்ளோம்.

அதை நீங்கள் அனைவரும் சேர்ந்து பெரிய வெற்றியாக மாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவே எங்களுக்கு மிகப் பெரிய பலம்.

மிக்க நன்றி. 


நடிகர் சாமி பேசியதாவது.. 

இது என் முதல் மேடைப் பேச்சு; மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த ஹீரோ அஜித் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றி. கல்லூரி நாட்களிலிருந்தே அவர் எனக்கு சினிமா குறித்து ஊக்கமளித்தார். அகஸ்டின் அண்ணா ஒரு செல்ஃபி பார்த்து நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்தார். எந்த ஆடிஷனும் இல்லாமல் நேரடியாக வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். கடலில் நடந்த ஷூட்டிங் மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது.

‘மெகலடான்’ அம்சம் இந்த படத்தை வித்தியாசமாக காட்டும். என்னுடன் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.


நடிகர் நிர்மல் பேசியதாவது.., 

இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பை நம்பி கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. டீசர் மிகவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆக்டிங் மற்றும் டெக்னிக்கல் டீம் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். டைரக்டர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். எனக்கு கொஞ்சம் நெர்வஸாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமர் எனக்கு சகோதரன் போல; பல வேலைகளில் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். இந்த படத்திலும் சில ஸ்டண்ட் காட்சிகளில் இணைந்து செயல்பட்டோம். பெரும்பாலும் கடலில் ஷூட்டிங் நடந்தது. கடலுக்குள் நீந்தும் காட்சிகள் சவாலாக இருந்தது. ஆனால் எல்லாமே நன்றாக முடிந்தது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த படம் அடுத்த நிலைக்கு செல்ல உங்கள் ஆதரவு தேவை.

எங்கள் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி. 


நடிகர் அமர் பேசியதாவது.., 

அழகான அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி.

அஜித், அஷோக் சொன்னது போல இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு அவசியம். படம் வெற்றி பெற்றால் நாமெல்லாரும் வெற்றி பெறுவோம். இங்கே வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. என்னைப் பற்றிச் சொன்னால், முன்பு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். சமீபத்தில் ‘ஸ்டீபன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தேன். இந்த படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்த அகஸ்டின் ப்ரோவுக்கு நன்றி. இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானது. என் நெருங்கிய நண்பர்கள் அஷோக், நிர்மல், அஜித் இதில் நடித்துள்ளனர்.


அஷோக் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். நிர்மல் ஒரு மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன். அகஸ்டின் ப்ரோவுடன் எனக்கு எட்டு ஆண்டுகளாக பயணம். பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அவர். என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


நடிகை இஷிதா பேசியதாவது.., 

அனைவருக்கும் வணக்கம் , நான் இஷிதா . இந்த படத்தில் ‘நாவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். முதலில் முழு குழுவினருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மொழி வேறுபாடு இருந்தாலும், என்னை மிகவும் அன்பாக  ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாகவே இங்கே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்த கப்பலின் கேப்டன், நம்முடைய இயக்குநர் அகஸ்டின். பிரபு சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் கூட வைக்க நினைத்தால், “ப்ராசஸ்ஸை நம்புங்கள்” என்று அவர் சொல்வார். இன்று டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்தை நிறைய அன்பும் ஆர்வமும் கொண்டு உருவாக்கியுள்ளோம். இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்.  மேலும், Rock Nature Entertainment நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சிறப்பு நன்றி. பலருக்கு ஆதரவு அளித்து இந்த படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர் அவர். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நன்றி.


தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் பேசியதாவது..,  

கடைசியாக “சதூர்” ட்ரெய்லர் வெளியிட்டபோது கிடைத்த ஆதரவுக்கு நன்றி. அதற்கு கிடைத்த வரவேற்பு  முழுவதும் உங்கள் ஆதரவினால் தான்  வந்தது. டிரெய்லருக்குப் பிறகு பல டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு பிரிவியூ காட்டியபோது நல்ல ஃபீட்பேக் கிடைத்தது. சில கரெக்ஷன்ஸ் மற்றும் ஆலோசனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் சரிசெய்து படத்தின் தரத்தை மேம்படுத்தினோம். இதற்கிடையில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என்று யோசித்தோம்.அப்படித்தான் “மகரம்” ஆரம்பமானது.


என் இன்ஜினியரிங் ஃபேக்டரியில் நடந்த ஒரு கலந்துரையாடலில்தான் இந்த ஐடியா வந்தது.

அங்கேயே “ராக்ஸ் சினிமாடிக் யூனிவர்ஸ்” உருவானது. இந்த யூனிவர்ஸின் முதல் ரிலீஸாக “மகரம்” வர இருக்கிறது. எங்கள் முதல் படத்திலிருந்தே இருந்த டீம் இங்கும் தொடர்கிறது. மேலும் புதிய திறமைகளும் இந்த யூனிவர்ஸில் இணைந்துள்ளனர். இனி வரும் அனைத்து ப்ராஜெக்ட்களிலும் இந்த டீம் இருக்கும். இயக்குநர் அகஸ்டின் அடுத்து ஹாலிவுட் படம் செய்யப்போகிறார்.   உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி. 


இயக்குநர் அகஸ்டின் பிரபு பேசியதாவது.., 

இங்கே வந்துள்ள அனைத்து ரிப்போர்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தின் லீட் ரோலில் அஜித், ஹீரோயினாக இஷீதாசா நடித்துள்ளனர். அமர் ரமேஷ், நிர்மல், ஷாம், அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். ஒளிப்பதிவை அமல் செய்துள்ளார்; எடிட்டிங் கார்த்திக்; இசை ஆதர்ஷ் நந்துரு. இந்த படம் உருவாக முக்கிய காரணம் தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் சார்.

அவரின் நம்பிக்கையால்தான் இந்த திரைப்படம்  தொடங்கியது. நான்கு கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கும் கனவு எனக்கிருந்தது.

பெரிய தயாரிப்புகள் செய்யாததை சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.


ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே “மகரம்” உருவானது. “சதூர்” படத்திற்கும் முன் இதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70% காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க் இருந்தாலும் தரத்தில் சலுகை செய்யவில்லை.


பெரிய டீம்களுக்கு கூட சவாலான இடங்களில் நாங்கள் பணியாற்றினோம். சின்ன பஜெட் என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசை இருந்தது. டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இதற்கு பின்னால் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் ஆதரவு இருந்தால் இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் நிச்சயம் வெற்றி பெறும். இந்தப்படம் ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தை தரும். அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி. 


தொழில் நுட்ப குழு விபரம் 


கதை, திரைக்கதை, இயக்கம்: A. அகஸ்டின் பிரபு

இசை: ஆதர்ஷ் சந்திரசேகரன்

எடிட்டர்: கார்த்திக் செல்வம்

ஒளிப்பதிவு: அமல் டோமி

உடை  வடிவமைப்பு: டிரக்ஷா & குழு

VFX மேற்பார்வை: A. அகஸ்டின் பிரபு

இணை இயக்குனர்: செந்தில் குமார்

தயாரிப்பு நிறுவனம்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்: ராம் மணிகண்டன்

PRO: A. ராஜா

பப்ளிசிட்டி டிசைனர்: கேசவன்

கலை இயக்குனர்: காளி

ஒலி கலப்பு: K. சக்திவேல்

நிற அமைப்பு (Colorist): சியாயுதீன்

 https://youtu.be/IsWC8fuHJGI

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில்,

 *மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா*









*நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா*


*எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும் - விமல்*


*வடம் கமர்சியல் திரைப்படம் தான்... ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம் - நடிகர் விமல்*


மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், 'ஆடுகளம்'நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,*


'' நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ... அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.


நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ -காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.


நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்'' என்றார்.


நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில், '' வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் புது தயாரிப்பாளரை போல் இல்லாமல் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். விமலுடன் தொடர்ந்து நான் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் இந்த படத்தில் நட்டியுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.


பொதுவாக ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிறைவடைந்த பிறகு தான் சக நடிகர்கள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சிறப்பாக நடிக்கிறீர்கள் மேலும் மெருகேற்றுங்கள் என உற்சாகப்படுத்தினார் நட்டி. இது எனக்கு பெருமிதமாக இருந்தது அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பாண்டி முனி' என்ற பாடல் மிகப்பெரிய 'வைப்'பாக இருந்தது. இதற்காக டி. இமானுக்கு நன்றி.


நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி இப்போது எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது. எனக்கு முக்கியமான கேரக்டரை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட கேரக்டர் அதுதான். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். '' என்றார்.


இயக்குநர் கேந்திரன் பேசுகையில், ''கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன் அப்போது அவர் நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா..! என்றார். நான் நிச்சயமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரும், நானும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.


இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களை தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு போட்டோவை பார்த்தேன்.‌ அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரை தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாக படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌


இந்தப் படத்தில் விமலுடன் நடித்த 'பாண்டி முனி' எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது 'ஆக்ஷன்' என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்.


விமல் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட பிறகு பணிகள் வேகம் எடுத்தன. இந்தப் படம் இவ்வளவு விரைவாக நிறைவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.


நான் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேசவில்லை. மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்


நடிகை சனஸ்கா ஸ்ரீ பேசுகையில், '' நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.‌


புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார்.


நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன்.


இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் இன்று காலையில் தான் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி'' என்றார்.


இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், '' மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய முதல் படம் இது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இந்த நிறுவனம் தொடர்ந்து பல பல வெற்றி படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 60, 70 முறை சந்தித்திருப்போம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நொறுக்குத் தீனியை எடுத்து வந்து அன்பை வெளிப்படுத்துவார். அதேபோல் படத்திற்கும் தேவையான அனைத்து விசயங்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் செலவு செய்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப்பெரிய சொத்து தயாரிப்பாளர் ராஜசேகர் தான். அவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள் போல இருப்பார்கள். அவர்களுடைய நட்பு இப்படத்தை கடந்தும் தொடரும் என நம்புகிறேன்.


இயக்குநர் இப்படத்தின் கதையை என்னிடம் முதலில் சொன்ன பிறகு நான் இசையமைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன். அப்போதுதான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். அதனால் முதலில் ஒரு நடிகரை பேசி தீர்மானித்து உறுதி செய்து விட்டு வாருங்கள் என சொன்னேன். விமல் சார் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.


இன்றைக்கு இருக்கும் ஜென் ஸீ இளைஞர்களுக்கு இவருடைய 'ஒற்றை வார்த்தை ' மிகவும் பிடிக்கும். இது ஒரு நல்ல விசயம்தான்.  மனதில் தோன்றுவது தான் பேசுகிறார் என்பது வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு இயல்பான மனிதராக இருப்பதற்காக விமலை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.


இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறேன்.  இந்த திரைப்படத்தின் பாடல்களை என்னுடைய டி ஐ சவுண்ட் ஃபேக்டரி நிறுவனத்திற்கு வழங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.


நட்டி சார் நம் திரைத்துறையின் சொத்து. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு  பற்றிய படம். அது தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஷபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.


எந்த படமாக இருந்தாலும் லைட் அண்ட் சவுண்ட் தான் முக்கியம். ஒரு இயக்குநருடைய கற்பனையை கொடுப்பதே லைட் அண்ட் சவுண்ட் தான். அதில் லைட் என்ற விசயத்திற்கு காரணமான ஒளிப்பதிவாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்.  


இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர். அவர் வணங்கும் தெய்வம் அவருக்கு எல்லா அருளையும் வழங்க வேண்டும்.


என்னுடைய அனுபவத்தில் இறை மீது நேசம் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஒரு போதும் வீழ்ச்சி இல்லை. அதனால் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.


நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், '' இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தயாரிப்பாளரின் விருந்தோம்பலை பற்றி அனைவரும் சொன்னார்கள் எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது.


நான் இப்படத்தின் முழு திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதை காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என கேட்டேன். நம்முடைய தேசத்தில் தான் 'ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்' என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதை சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.  


விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் 'ஓம் காளி ஜெய் காளி' எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.


இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும் அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.  


இந்த படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும்.‌ இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.


தீபா- சரவணன் சக்தி- பால சரவணன்- ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.


சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை... இதை இந்த படம் பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் 'ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்' இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


நடிகர் விமல் பேசுகையில், ''  இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த 'பாண்டி முனி' பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.


எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும்.  ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.


ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக  நடித்திருக்கிறார்.


எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.


படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தயாரிப்பாளை பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் 'வடம்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.


ஆயிரம் துணை நடிகர்கள்-  மக்கள்-  மாடு பிடி வீரர்கள்-  சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,' நீ சென்று ஆறுதல் கூறு' என்று சொல்லிவிட்டேன்.


அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Friday, 27 February 2026

தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில்

 தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி s தாணு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான T.ராஜேந்தர், இயக்குனர் SP முத்துராமன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கர், 
















இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாலா, தயாரிப்பாளர் L.K.சுதிஷ், தயாரிப்பாளர் சத்ய ஜோதி TG தியாகராஜன், தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குனருமான தயாகராஜன், 

தயாரிப்பாளர் AM ரத்னம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமி, இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் SR பிரபு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சரண், இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் T.சிவா, Fefsi மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் பேரரசு உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Thursday, 26 February 2026

Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review

Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thaai kilavi  ன்ற படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Radhika Sarathkumar Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca னு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது Sivakumar Murugesan . Sivakarthikeyan and Sudhan Sundaram தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படம் நாளைக்கு தான் release ஆகுது.  சென்னை ல இருக்கிற Tagore Film Center  ல இந்த படத்தோட special screening அ selected guests க்கு மட்டும் போட்டு காமிச்சிருந்தாங்க. அதுல ஒருத்தர் தான் கமல் ஹாசன். இந்த படத்தோட முதல் review யும் அவரு தான் குடுத்திருக்காரு. ராதிகா ஓட performance யும் இந்த படத்தோட கதையையும் பாராட்டி அவரோட social media பக்கத்துல post அ போட்டு இருந்தாரு. அதுமட்டுமில்ல director அப்புறம் producer ஆயும் பாராட்டி இருக்காரு.  சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



மதுரை ல இருக்கற உசிலம்பட்டி ல தான் இந்த படத்தோட கதை நடக்குது. ராதிகா சரத்குமார் தான் பவுன்தாய் ன்ற character  ல நடிச்சிருக்காங்க. இவங்க வட்டி குடுக்கற தொழில் அ தான் பண்ணிட்டு இருக்காங்க. இவங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே எல்லாரும் அரண்டு போய்டுவாங்க. என்ன தான் இவங்க வட்டி குடுத்தாலும் சரியா வட்டி பணத்தை வசூலிக்க correct ஆனா time க்கு வந்துருவாங்க. அதுனால தான்  ஊர் ல இவங்கள பாத்து பயந்து போய் இருப்பாங்க. இவங்க எப்போ தான் இறந்துபோவாங்க நும் ஊர் மக்கள் காத்துகிட்டு இருப்பாங்க. இவங்க சாகனும் னு அந்த ஊர் ல இருக்கறவங்க எல்லாரும் கடுவுள் கிட்ட வேண்டிக்கறாங்க. திடுருனு ஒரு நாள் ஜுரத்துல படுத்துடுறாங்க. இவங்க இந்த நிலைமை ல இருக்கும்போது திடுருனு ஒரு நகை வியாபாரி பவுன்தாய் ஓட காலை  தொட்டுட்டு போறாரு. இவங்களோட  பசங்க யாரு னு விசாரிக்கும்போது அந்த நகை வியாபாரி ஒடனே உங்க அம்மா 160 பவுன்  நகை பண்ணிருக்காங்க னு சொல்லுறாரு. இதுவரைக்கும் அம்மாகிட்ட பேசாத பசங்களும் இந்த நகைக்காக பேச ஆரம்பிக்குறாங்க. இவங்க மட்டும் கிடையாது இந்த பசங்களோட மனைவிகளும் தான். இப்போ இந்த நகையோட நிலைமை என்ன ? பவுன்தாய் ஓட நிலைமை என்னன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

படத்தோட technical  aspects  னு பாக்கும்போது director  இந்த கதையை கொண்டு போன விதத்துக்கு அவருக்கு கைதட்டல் குடுக்கலாம். ஒரு பாட்டியை main  character  அ வச்சு ஒரு interesting  ஆனா கதையை குடுத்திருக்காரு. அதுமட்டும் இல்ல மதுரை ஓட பாணி ல நக்கலும் நையாண்டி க்கும் இந்த படத்துல பஞ்சம் இல்ல. இன்னொன்னு குஷி படத்துல vijay யும் jyothikka ஆவும் விளக்கு அனைய கூடாது ரெண்டு பேரும் ஓடி வந்து அந்த விளக்கை பாத்துப்பாங்க. அந்த scene அ இந்த படத்துல கொஞ்சம் differnent அ காமிச்சிருக்காரு. இந்த scene கண்டிப்பா audience க்கு பிடிக்கும்.   vilnivas  k  prasanna  ஓட music  and  bgm  ரெண்டுமே பக்கவா இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. sanlokesh ஓட editing crisp ஆவும் sharp ஆவும் குடுத்திருக்காரு. vivek vijayakumar ஓட cinematography யும் இந்த படத்துக்கு பலம் தான். 

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது radhika sarathkumar ஓட நடிப்பை பத்தி சொல்லியே ஆகணும். இவங்க இந்த character க்காக 4 மணிநேரம் makeup க்காக செலவு பண்ணிருக்காங்க. அந்த hardwork இந்த படம் பாக்கும்போது audience க்கு நல்லாவே தெரியும். இவங்களோட body language , dialogue delivery எல்லாமே தரமா இருந்தது. இன்னும் சொல்ல போன அந்த character ஆவே வாழ்ந்துருக்காங்க  னு தான் சொல்லணும். singampuli பவுன்தாய்  ஓட ஒரு பையன இருப்பாரு. இவரு அடிக்கற லூட்டி எல்லாம் audience அ சிரிக்க வைக்கிற அளவுக்கு இருக்கு. இவரு தீவிர kamalhasan ஓட ரசிக்கன இருப்பாரு. கமல் songs க்காக இவரு சண்டை போடுறது எல்லாமே ரசிக்கிற விதமா இருக்கும். மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காரு.    

மொத்தத்துல ஒரு நல்ல jolly ஆனா entertaining ஆனா  கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை உங்க family ஓட theatre ல போய் பாக்குறது miss பண்ணிடாதீங்க. .

Aazhi Movie Review

Aazhi Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aazhi படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல R. Sarathkumar · Indrajith Jagajith · Devika Satheesh · Vaiyapuri · Sreejith Ravi · Birla Bose னு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது madhav ramadasan . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு.  sajith  krishna  தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



moorthy அ நடிச்சிருக்க sarathkumar nagarcoil ல boat mechanic அ இருக்காரு. இவரு weapons அ கடத்துற தொழில் ளையும் இருக்காரு. இவருக்கு கோவமும் அதிகமாவே  வரும். இவரை avoid பண்ணுறது தான் எல்லாருக்கும் நல்லது அந்த மாதிரி terror ஆனா character அ இருப்பாரு. இவரோட பொண்ணு தான் mukila வா நடிச்சிருக்க devika satheesh. இவங்க arul அ நடிச்சிருக்க indhrajith sukumaran அ love பண்ணிட்டு இருப்பாங்க. இவரு ஒரு poor class family அ சேந்தவரு. இவங்க ரெண்டு பேரும் சேந்து இருக்கற video வை பாக்குறாரு moorthy. இதை பத்தி தன்னோட பொண்ணு கிட்ட கேட்கவே மாட்டாரு. திடுருனு ஒரு நாள் arul அ கடத்தி அவரோட boat ல வச்சுடுறாரு. இதுக்கு அப்புறம் நடக்கற கதை தான் ரொம்ப thrilling ஆவும் suspense ஆவும் போகுது. 

படத்துல நெறய dialogues இல்லனாலும் characters பண்ணுற actions ஏ கதையை ரொம்ப  clear அ சொல்லிடுது. இதுல வர characters ஓட expressions, bodylanguage, அவங்க எடுக்கற violence னு எல்லாமே இந்த படத்துல strong ஆவும் அமைச்சிருக்கு. sarathkumar தான் இந்த படத்தோட பலம் னு சொல்லுலாம். இவரோட moorthy character ரொம்ப அமைதி ஆவும் அதே சமயம் பயங்கரமாவும் இருக்காரு. enjoyment க்காக லாம் இவரு மத்தவங்கள கொலை பண்ணவோ அடிக்கவோ மாட்டாரு. இருந்தாலும் இவரோட behaviour disturbing ஆவும் intense ஆவும் இருக்கு. இந்த படத்தோட கதை ரொம்ப சிம்பிள் தான். ஒரு boat ல இருக்கற ரெண்டு பேர் , இவங்க என்ன பண்ணுறாங்க. moorthy அவரோட கோவத்தை control பண்ணுவார் இல்லையா ன்றது  தான். arul அ நடிச்சிருக்க indrajith ஓட performance யும் நல்ல இருந்தது. இருந்தாலும் இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 

இந்த படத்துல குடுத்திருக்க climax யும் கதைக்கு ஏத்த மாதிரி strong அ இருந்தது.  characters க்கு நடுவுல இருக்கற emotions அ இருக்கட்டும், tension அ இருக்கட்டும் அது எல்லாமே deep அ explore பண்ணிருக்காரு director. anand nair ஓட cinematography இந்த  intense ஆனா கதை க்கு super அ camera work பண்ணிருக்காரு. william francis ஓட  bgm அப்புறம் songs ரெண்டுமே இந்த கதைக்கு அழகா set ஆயிருக்கு. ஒரு பக்காவான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

Fourth Floor Movie Review

Fourth Floor Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம fourth floor  ன்ற படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Aari Arjunan, Deepshika, Pavithra, Subramaniya Shiva, Aditya Kathir & Thalaivasal Vijayனு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது R. Sundara Pandi . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு.  mano creations  தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


இது ஒரு interesting ஆனா pshycological thriller  கதை. aari arjuna live in relationship ல இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துக்காக இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு போயிடுறாங்க. lover யும் அவங்க பொன்னும் apartment ல இருக்கற fourthfloor  ல தான் ஒரு வீடு வாங்கிருப்பாங்க. அந்த நேரத்துல தான் கொலைகளும் நடக்குது. அப்போ தான் திடுருனு அவரோட  lover  யும் குழந்தையும் காணாம போயிடுறாங்க. அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க investigate பண்ண ஆரம்பிக்குறாரு. அப்படி பண்ணும்போது real estate பண்ணுற ஒரு scam அ கண்டுபிடிக்குறாரு.  அது murder வரைக்கும் போகுது. அதுமட்டுமில்ல இதுல realestate  business பண்ணுறவங்க போக foreign  investors யும் சம்பந்த பட்டிருக்காங்க. இவங்கள police  தான் protect பண்ணுறாங்க. அது என்ன மர்மம். aari arjuna அவரோட family அ கண்டு பிடிச்சிடுவாரா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது aari arjuna ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு தரமான படத்துல நடிச்சிருக்காரு னு சொல்லலாம். ஒரு நல்ல comeback குடுத்திருக்காரு. இவரோட bodylanguage , dialogue delivery , body language எல்லாமே நல்ல இருந்தது. deepshika  ஓட performance யும் decent அ இருந்தது. subramanya shiva ஓட portions யும் நல்ல இருந்தது. 

ஒரு suspenseful ஆனா thrilling கதைக்களம் தான் இது சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

Thadayam Movie Review

Thadayam Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thadayam ன்ற webseries ஓட  review அ தான் பாக்க போறோம். இந்த series ல  Samuthirakani, Shivada, Raj Tirandas, Munnar Ramesh, Sundharpandyan, Prem, Kotravai, Vishakan, Pulipandi னு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது Navinkumar Palanivel .  இவரு தான் இந்த series ஓட கதையையும் எழுதிருக்காரு. சோ வாங்க இப்போ இந்த series ஓட  கதைக்குள்ள போலாம். 

இந்த series ஒரு உண்மையான சம்பவத்தை தழுவி தான் எடுத்திருக்காங்க. இந்த கதை 1995 ல இருந்து 1999 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. adhiyamaan  அ நடிச்சிருக்க சமுத்திரக்கனி ஒரு sincere ஆனா police ஆனா அவரை எல்லாருமே  தப்பா தான் புரிஞ்சுக்கறாங்க. இவரு வேலை ல ரொம்ப கண்ணும் கருத்துமா இருப்பாரு அதே மாதிரி நெறய cases அ solve யும் பண்ணிருக்காரு. இருந்தாலும் இவருக்கு proper ஆனா recoginition அ குடுத்திருக்க மாட்டாங்க. இவரு investigate பண்ணுற methods எல்லாமே different அ இருக்கும் அதுனால இவரு கூட வேலை செய்யுற எல்லாருமே இவரை criticise தான் பண்ணிட்டு இருப்பாங்க. 

இவரோட life இப்படி போயிடு இருக்கும்போது தான் lakshmi யா நடிச்சிருக்க sshivada department ல புதுசா join பண்ணுறாங்க. இந்த நேரத்துல தான் தொடர்ந்து பல கொலைகள் நடந்துட்டு இருக்கு. investigation பண்ணும்போது அதியமான் க்கு நெறய clues கிடைக்குது. ஆனா higher officials இதை accept பண்ணிக்க மாற்றங்க. ஆரம்பத்துல lakshmi க்கும் இவரோட behaviour பிடிக்காது அதுக்கு அப்புறம் போக போக  இவரை நம்ப ஆரம்பிச்சுடுறாங்க. அதோட இவரோட instincts யும் மதிக்க ஆரம்பிக்குறாங்க. 

கொலைகள் நடந்துட்டு இருக்கும்போது இந்த கொலைகளை பண்ணுறது psychopath னு நினைப்பாங்க. இருந்தாலும் adhiyamaan வேற ஒரு opinion அ வைக்குறாரு. இந்த கொலைகளை பண்ணுறது தனி ஆளு கிடையது னு சொல்லுறாரு. இந்த கொலை பண்ணுறவங்க தமிழ்நாட்டை சேந்தவங்க கிடையாது andhra pradesh அ சேந்தவங்கள இருக்கலாம் னு சொல்லுறாரு. இதுக்கு காரணம் இந்த மாதிரி கொலைகள் tamilnadu andhra border ல இருக்கற areas ல நடந்திருக்கும். இந்த clue அ main அ வச்சு lakshmi யும் adhiyamaan யும் tirupathi station க்கு போய் விசாரிக்குறாங்க. அப்போ தான் இவங்களுக்கு shocking அ இன்னொரு விஷயம் தெரிய வருது. அது என்னனா இதே pattern ல மொத்தமா 72 கொலைகள் நடந்திருக்கும். 

இதை இன்னும் deep அ investigate பண்ணும் போது எல்லா கொலைகளையும் நெறய விஷயங்கள் ஒத்துப்போகும். killer க்கு பணம் மேலயோ இல்ல பொருள் மேலயோ ஆசை இருக்காது. அதே மாதிரி எல்லா crime scene ளையும் வீடு சுவத்துல ஒரு question mark யும் வரைஞ்சு வைச்சிருப்பாங்க. இந்த கொலைகளுக்கு சரியான  ஆதாரங்கள் கிடைக்காதனால தான் pending ல போட்டு வச்சிருப்பாங்க. இப்போ andhra police யும் tamilnadu police யும் சேந்து வேலை செய்ய ஆரம்பிக்குறாங்க. அப்போ தான் இந்த question mark க்கு பின்னாடி இருக்கற அர்த்தம் என்னது, எந்த காரணத்துக்காக 72 கொலைகள் நடந்திருக்கு ன்றதா investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த series ஓட மீதி கதையை இருக்கு. 

இதுல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது samuthirakani ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. இவரோட bodylanguage அப்புறம் dialogue delivery எல்லாமே பக்காவா இருந்தது. sshivada ஓட performance யும் நல்ல இருந்தது. ஆரம்பத்துல இவங்க அதியமான் மேல சந்தேகம் படுறது அப்புறம் அவரோட சேந்து investigate பண்ணுற transformaation எல்லாம் super அ இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு அவங்க best performance அ குடுத்திருக்காங்க. 

series ஓட technical aspects னு பாக்கும்போது camerawork நல்ல இருந்தது. கதை 1995 ல நடக்கறதுனால அதுக்கு ஏத்த மாதிரி colour palette , tone , angle எல்லாமே perfect அ குடுத்திருந்தாங்க. series ல வர bgm யும் அட்டகாசமா இருந்தது. director audience க்கு ஏத்த மாதிரி thrilling ஆனா கதைக்களத்தை தான் குடுத்திருக்காரு. ஆரம்பத்துல இருந்து ending வரைக்கும் அந்த tension யும் suspence யும் கொஞ்சம் கூட குறையல. 

ஒரு intense ஆனா thrilling ஆனா webseries தான் இது. zee 5 ல மறுபடியும் ஒரு super ஆனா series அ கொண்டு வந்திருக்காங்க. must watch னு தான் சொல்லுவான். so miss பண்ணாம போய் பாருங்க.

Little Wings Movie Review

Little Wings Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்மlittle wings ன்ற ஒரு shortmovie  ஓட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Manimegalai, Nitharsana C. Kalidoss & Madurai Ramjiநடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது Naveen Mu .  இவரு தான் இந்த படத்தோட  கதையையும் எழுதிருக்காரு.  இந்த short film நெறய global film festival ல பாராட்டி பேசிருக்காங்க.  சோ வாங்க இப்போ இந்த படத்தோட   கதைக்குள்ள போலாம். 




ஒரு couple அ focus பண்ணி தான் கதை நகருது. இதுல husband ரொம்ப நோய்வாய் பட்டுருக்காரு. wife தான் சம்பாதிச்சு family அ பாத்துக்குறாங்க. work யும் பாத்துகிட்டு வீட்டையும் பாத்துக்குறாங்க. முடிஞ்சளவுக்கு ரெண்டு side ளையும் hardwork போடுறாங்க. இருந்தாலும் இவங்களோட husband எல்லாத்துலயும் குறை தான்  சொல்லிட்டு இருக்காரு. எப்பப்பாத்தாலும் non veg food தான் wife கிட்ட கேட்குறாரு. அவங்க வழக்கற கோழியை கொன்னு chicken வைக்க சொல்லுவாரு ஆனா அந்த கோழி ஆழ தான் இவங்களுக்கு வருமானம் வருது னு சொல்லி அதா கொள்ளை மாட்டேன் னு சொல்லிடுறாங்க. ஒரு நாள் இவங்க இல்லாத நேரமா பாத்து அந்த கோழியை வெட்ட போறாரு அப்போ ஒரு விஷயம் நடக்குது. அது என்னன்றது தான் மீதி கதையை இருக்கு. 

life ஓட reality அ எடுத்து சொல்லுற மாதிரியான ஒரு கதைக்களம். படத்துல நடிச்சிருக்க lead pair நல்ல நடிச்சிருக்காங்க.  Saravanamuthu Soundarapandi & Meenakshi Soman ஓட camera work இந்த கதைக்கு அழகா set ஆயிருக்கு. santhosh Dayanidhi  ஓட music  and bgm நல்ல இருந்தது. அப்புறம் philomin  raj ஓட editing யும் crisp and  short அ இருந்தது. 
மொத்தத்துல ஒரு நல்ல   கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal*

 *A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal*



The Tamil Nadu distribution of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups has been locked at a staggering ₹63 crore advance on a commission basis, marking one of the most significant deals in the territory in recent years. The scale of this acquisition underlines the massive expectations surrounding the film and positions it among the biggest upcoming releases in the state.


The rollout across Tamil Nadu will be executed through a powerful multi-distributor strategy to ensure maximum reach and territorial strength. Chennai City will be handled by Think Studios under Swarup Reddy, while the Chengalpet area will be distributed by White Nights, led by Trident Ravi. The Coimbatore, North and South Arcot, Tirunelveli, and Kanyakumari territories will be overseen by S Picture Srinivasan. Meanwhile, the key circuits of Madurai & Ramnad, Trichy & Thanjavur, and Salem will be managed by 5 Star Senthil. This structured territorial distribution model is designed to secure strong showcasing across both single screens and multiplex chains statewide.


Collectively expressing their excitement about the collaboration, the Tamil Nadu distribution partners said, “Toxic: A Fairy Tale for Grown-Ups is easily one of the most anticipated Indian films in recent times, and the love it already has in Tamil Nadu is incredible. The way audiences here have embraced Yash over the years is truly special. We are thrilled to come on board as distribution partners for a film of this scale and ambition. It’s not just a big release for us — it’s an exciting moment to be associated with one of the most awaited films in Indian cinema today”


Trade experts attribute the scale of this deal to the phenomenal success of K.G.F: Chapter 2 and the widespread popularity and acceptance of Yash in Tamil Nadu. Over the years, Tamil audiences have showered immense love on the star, celebrating his commanding screen presence and distinctive aura, and embracing him as one of their own — a rare cross-border connect that continues to translate into strong theatrical confidence.


With a ₹63 crore advance deal and a robust territorial network in place, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to be one of the biggest releases in Tamil Nadu, primed for a monumental opening across the state.


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026. The film also stars Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles.

யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின்

 *யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார்  கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது*



'ராக்கிங் ஸ்டார்' யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. 


அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு-  சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும்.


அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இது போன்று கட்டமைக்கப்பட்ட பிராந்திய விநியோக முறை- மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிஃபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ் ஆகிய இரண்டிலும் வலுவான திரையிடலை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஒத்துழைப்பு குறித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு விநியோகஸ்தர்கள்,


'' டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்'  ( Toxic: A Fairy Tale for Grown Ups) சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய அளவிலான படங்களில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே யாஷ் மீது இருக்கும் அன்பும் , ஆதரவும் சிறப்பானது. இங்குள்ள பார்வையாளர்கள் யாஷை ஏற்றுக்கொண்ட விதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த அளவிலான லட்சியம் கொண்ட ஒரு படத்திற்கான விநியோகத்தில் நாங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய வெளியீடு மட்டுமல்ல.. இன்று இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுடன் இணைந்திருப்பதும் உற்சாகமான ஒன்றாகும் '' என்றனர்.


'கே ஜி எஃப் :பார்ட் 2 ' படத்தின் அற்புதமான வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் யாஷ் மீதான பரவலான புகழ் மற்றும் வரவேற்பு ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் அளவிற்கான காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் பார்வையாளர்கள் யாஷ் மீது மிகுந்த அன்பைப் பொழிந்து.. அவரது திரை ஆதிக்கத்தையும், தனித்துவமான புகழையும் கொண்டாடி, அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எல்லையைத் தாண்டிய அரிய பிணைப்பு. அதனால் இந்த ஒப்பந்தம் வலுவான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.


63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் மற்றும் வலுவான பிராந்திய நெட்வொர்க்குடன் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic :A Fairy Tale for Grown Ups) தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் மாநிலம்  முழுவதும் பிரம்மாண்டமான மற்றும் விரிவான வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ' டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grown Ups) திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இதன் டப்பிங் பதிப்புகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. கே வி என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations) தயாரித்த 'டாக்ஸிக்' திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.‌


*A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal*


The Tamil Nadu distribution of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups has been locked at a staggering ₹63 crore advance on a commission basis, marking one of the most significant deals in the territory in recent years. The scale of this acquisition underlines the massive expectations surrounding the film and positions it among the biggest upcoming releases in the state.


The rollout across Tamil Nadu will be executed through a powerful multi-distributor strategy to ensure maximum reach and territorial strength. Chennai City will be handled by Think Studios under Swarup Reddy, while the Chengalpet area will be distributed by White Nights, led by Trident Ravi. The Coimbatore, North and South Arcot, Tirunelveli, and Kanyakumari territories will be overseen by S Picture Srinivasan. Meanwhile, the key circuits of Madurai & Ramnad, Trichy & Thanjavur, and Salem will be managed by 5 Star Senthil. This structured territorial distribution model is designed to secure strong showcasing across both single screens and multiplex chains statewide.


Collectively expressing their excitement about the collaboration, the Tamil Nadu distribution partners said, “Toxic: A Fairy Tale for Grown-Ups is easily one of the most anticipated Indian films in recent times, and the love it already has in Tamil Nadu is incredible. The way audiences here have embraced Yash over the years is truly special. We are thrilled to come on board as distribution partners for a film of this scale and ambition. It’s not just a big release for us — it’s an exciting moment to be associated with one of the most awaited films in Indian cinema today”


Trade experts attribute the scale of this deal to the phenomenal success of K.G.F: Chapter 2 and the widespread popularity and acceptance of Yash in Tamil Nadu. Over the years, Tamil audiences have showered immense love on the star, celebrating his commanding screen presence and distinctive aura, and embracing him as one of their own — a rare cross-border connect that continues to translate into strong theatrical confidence.


With a ₹63 crore advance deal and a robust territorial network in place, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to be one of the biggest releases in Tamil Nadu, primed for a monumental opening across the state.


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026. The film also stars Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles.