Featured post

அஜய் தேவ்கன் மற்றும் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த 'கராத்தே கிட்:

 அஜய் தேவ்கன் மற்றும் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' ஹிந்தி டிரெய்லரை வெக...

Tuesday, 19 March 2019

ஜெனிவாவில் நடை பெற்ற 40 வது ஐ.நா கூட்ட தொடரில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்


சட்ட மன்றத்தில் முன்னாள் மறைந்த முதலமச்சர் அம்மா ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக போடப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி  ஜெனிவாவில் நடை பெற்ற 40 வது ஐ.நா  கூட்ட தொடரில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்கள்  உரையாற்றினார்.





இதில் , 24.10.2014 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடந்த கூடாது என்று அம்சங்கள் கொண்டு தீர்மானத்தை வலியுறுத்தி பேசினார், இந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பதிவு செய்தார்.

பன்னாட்டு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்திற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்க கூடாது.

இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்க வேண்டும் என்று இந்த அமர்வில் கலந்து கொண்டு வலியுறுத்தினார் ..

ஜெனிவா, ஐ.நா மன்றத்தில்  உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment