Featured post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் ட...

Sunday, 14 April 2019

ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்!


சென்னையில் திருமூர்த்தி நகரில் ஏஏ குரு சில்க்ஸ் என்கிற பெயரில் புதிய ஜவுளிக்கடை -ஷோரூம் இன்று  திறக்கப்பட்டது. இத்திறப்பு விழா பிரமாண்டமாக  நடைபெற்றது.இவ்விழாவுக்கு நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு.  சீமா ,வெண்ணிற ஆடை நிர்மலா, பானுபிரியா, நிரோஷா சோனியா ,அகர்வால் நடன இயக்குநர் கலா, anchor திவ்யதர்ஷினி என்று திரையுலக மூத்த இளைய கதாநாயகிகள், சின்னத்திரை நடிகைகள்  வந்து குவிந்தனர். வருகை புரிந்த நட்சத்திரங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த போது   மகிழ்ச்சியுடன் மலரும்  நினைவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
புதிய ஷோரூம் பற்றி உரிமையாளர்  மோகன் பேசும் போது.. 

"என் மனைவி அனிதாவுக்கு ஆடைகள்  வடிவமைப்பதில் தனி ஆர்வமும் ஈடுபாடும் உண்டு அவருடைய கனவு தான் இந்த ஷோரூம் .இதில் இந்தியாவில் பல இடங்களிலிருந்து வரும் பட்டுப் புடவைகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் கலை வேலைப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடைகள் ,சேலைகள் வடிவமைப்பதற்காகவும் சித்திர வேலைப்பாடுகள் செய்வதற்காகவும் 30 கலைஞர்கள் இங்கேயே தங்கிப் பணியாற்றுகிறார்கள் வாடிக்கையாளர்களின் கனவில் மலரும் எண்ணங்களைக் கூட வண்ணங்களாக வடிவமைத்துத் தருகிறோம்.

 சென்னையின் போக்குவரத்து நெரிசலற்ற  இதயப்பகுதியில் இக்கடை அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் "என்று கூறினார்.




























No comments:

Post a Comment