Featured post

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள...

Thursday, 31 October 2019

அனிருத் பாடிய யாஞ்சி, கண்ணம்மா பாடல்களுக்குப்பிறகு அடுத்த ஹிட் பாடல் ரெடி..!



இசையமைப்பாளர் அனிருத்  பாடும் பாடல்களுக்கு வரவேற்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும்.  அவர் பாடிய "யாஞ்சி" மற்றும் "கண்ணம்மா" பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது  ...... அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் சாம் CS இசையில்  " ஜடா" படத்திற்காக பாடியிருக்கிறார். 


கதிர்  நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இய க்கும் படத்தை பொயட் ஸ்டூடியோ தயாரித்திருக்கிறது. கால்பந்தாட்ட வீரனை ப்பற்றிய படத்திற்கு இசையமைத்திருப்பவர் சாம் CS. 
இந்தப்படத்தில் முக்கியமான ஒரு பாடலை அனிருத் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அனிருத்தை அணுகியிருக்கிறார்கள். 
அனிருத்தும்  பாடலின் டியூனைக்கேட்டு உற்சாகமாகி  பாடலை பாடிக்கொடுத்துள்ளார். 

பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் இசையமைப்பாளர் சாம்CS உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். 

சமீபத்தில் வெளியான 'கைதி' திரைப்படத்தில் சிறப்பான இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் CS அடுத்து வெளிவரவிருக்கும் "ஜடா" படத்திற்கும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார் . விரைவில் வெளியாகவிருக்கும் ஜடா பாடத்தின் குழுவினர் உற்சாகத்தில் உள்ளனராம்.

No comments:

Post a Comment