Featured post

Noise and Grains in association with Sashtha Production to present double delight

Noise and Grains in association with Sashtha Production to present double delight to Coimbatore - Grand concerts featuring Vidyasagar and Vi...

Thursday, 14 November 2019

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியீடு.

குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படம் சற்றே வித்தியாசமாக குடும்ப உறவுகளைக் கொண்டாடும் படமாக உருவாகி வருகிறது. விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இருவருக்கும் பெற்றோராக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சுற்று பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு லோகோ முதல் பார்வை வெளியிட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்கு முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து பாடல் சின்கிள் டிராக், இரண்டாவது பாடல் மற்றும் பாடல் வெளியீட்டு விழா என ஒவ்வொன்றாக விரைவில் வெளியிடப்படும். 2020 ஜனவரியில் இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதால் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment