Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Thursday, 28 November 2019

பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது

SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
 இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.

 ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்SK ஏற்றுள்ளார்.  பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள  எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினிNK.



படத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும்  தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.








இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படம் பெரும் பொருட்செலவில்  சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment