Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Friday 29 November 2019

நடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்

நடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன் - அபி சரவணன்*


நடிகனாக அல்ல நார்மலனா மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

அண்ணன் கோபி அவர்களின் தயாரிப்பில்  ராகுல் பரமஹம்சா அவர்களின் இயக்கத்தில் உருவான  கருத்துக்களை பதிவு செய் திரைப்பட இசை வெளியீடு நிகழ்வுக்கு  சென்றிருந்தேன்....

சமுதாயத்தில் சமூக வலைதளங்களால் சீரழியும் பெண்களை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுததும் வகையில படம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

 பத்திரிக்கையாளர் சங்க தலைவர் #சுபாஸ்,  இயக்குனர் நடிகர் திரு.#போஸ்வெங்கட், இயக்குனர் #கஸ்தூரிராஜா அவர்கள், தயாரிப்பாளர் #கேடிராஜன், இயக்குனர் நடிகர் 
#எஸ்வி சேகர் அவர்கள், கவிஞர் #பொற்கோ அவர்கள், ஔிப்பதிவாளர் #நட்டி அவர்கள், பிஆர்ஓ சங்கதலைவர் விஜய முரளி
என  என்னை தவிர மற்ற சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தமிழ் திரைத்துரையில்  தனக்கென தனித்தடம் பதித்த சாதனையாளர்கள்.

அது சரி...  திரைத்துறையில் இவ்வளவு  சாதித்த ஜாம்பாவான்கள் மத்தியில் ....

அது யாருங்க இந்த #மீராமிதுன்..

உலக சமாதான தூதுவரா? தேவலோகத்திலிருந்து  இறங்கி வந்த ரம்பையா? ஊர்வசியா?  கண்ணகியா?  அன்னை தெரசா அவர்களை போல சமுகசேவகியா யாரு இந்தம்மா?

கொஞ்சம் கூட மேடை நாகரீகம் தெரியாத இந்தம்மாவ எல்லாம் எதுக்கு சார் சிறப்பு விருந்தினரா அழைக்குறீங்க... 

 திரு. #பாக்யராஜ் சார்   இந்தியாவின் தலை சிறந்த கதையாசிரியர்..நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிகைஆசிரியர்... அதெல்லாம்  விடுங்க...  அவரு வயசு என்ன... அவரு தகுதி என்ன...  

இந்தம்மா #மீராமிதுன்லாம அவரு வயது அனுபவத்துக்கு முன் ..... தூசிக்கு சமம்... என்னா ஒரு அகம்பாவத்துல கால் மேல கால்  போட்டு உட்காந்திருக்காங்க...
     
 மேடையில் எழுத்தாளர் சங்க தலைவர் #பாக்யராஜ் சார் இசையமைப்பாளர் சங்க தலைவர் #தினா சார் கூட ஏதோ ஒரு விசயம் பேசிட்டுக்காரு...  
ரெண்டு பேருக்கு நடுவில் உட்காந்திருந்த இந்தம்மா மீரா மிதுன்க்கு காலை கீழ போடத்தெரியாதா?

 மேடை ஏறுனதுல இருந்து கால்மேல காலை போட்டு உட்கார்ந்து இருக்குறது மீரா மிதுன் அவங்க மேனரிசமா இருக்கலாம்...  

ஆனா வயதிலும் அனுபவத்திலும் திறமையிலும் புகழிலிலும் தன்னை விட பலமடங்கு உயர்ந்த ஜாம்பவான் தன் தலை குனிந்து பேசும்பாது... இத்தனை அகம்பாவமாக  கால் மேல் கால் போட்டு இருக்கும் மீரா மிதுனை  வன்மையாக கண்டிக்கும் முன்...  இவ்ளோ பண்ணிட்டு அந்தம்மா பேச வந்தவுடன கைதட்டி விசிலடிச்சி ஆராவராம் பண்ற  ஒருகூட்டம் இருக்கே... அவங்கள தான் சொலலனும்..

  நடிகைன்னா அவங்களும்  சாதாரண பெண்கள் தான்... அவர்களது தொழில் நடிப்பது அவ்வளவு  தான்.... 

   ஆண்களுக்கு முன்  இப்படி கால்மேல் கால் போட்டு உட்காருவது தான் பெண்சுகந்திரமா?
 மேடைக்கு கீழ் பார்வையாளர்களாக எத்தனையோ வயதில் மூத்த  ஆண்களும் பெண்களும் பத்திரிக்கையாளர்களம் அமர்ந்திருக்கின்றனர்... அவர்கள் வயதிற்கு ஒரு மரியாதை வேண்டாமா?

  கருததுக்களை பதிவு செய் என்ற இந்த படததின் இசை வெளியீட்டு விழாவில் இந்த மேடையில் எந்த ஆண்களாவது  இப்படி கால் மேல் கால்  போட்டு அமர்ந்து இருக்கிறார்களா?  அத்தனை தகுதிகள் இருந்தும் அடக்கமாக இருப்பதால் தான் அவர்கள் விருந்தினர்களாக மேடையை அலங்கரிக்கின்றனர்...

இந்த மாதிரி  நேற்று பெய்த மழையில்  இன்று பூத்த காளான் மீரா மிதுனை எல்லாம் அவர்களுக்கு சமமாக உட்கார வைத்தால் இப்படிதான்.... 

 இந்தம்மா மட்டுமல்ல  இதுவரை  பொது மேடையில் கால் மேல் கால் போட்டு அமரும்  எல்லா நடிகைகளுக்களுக்கும் மட்டுமல்ல  இது போல் அமரும்  எல்லா பெண்களுக்கும் எனது வேண்டுகோளோ அல்லது  வன்மையான கண்டனங்களோ... எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்...  

மேடை என்பது உங்கள் திறமைக்கு மற்றவர்கள் கொடுத்த அங்கீகாரம் தானே தவிர  உங்கள் அகம்பாத்திற்கான இடமல்ல...


 வேறு மாநில  பெண்கள் தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்தால்   அவர்களுக்கு  தமிழ் பெண் போல சேலைகட்டி பூ வைத்து கொலுசு போட்டு  வளையல் மாட்டி  மூக்குத்தி போட்டு திரையில்  அழகு பார்க்கும்  நமது தமிழ் பட  இயக்குனர்கள்.. தங்கள்  கதாநாயகியாக இறக்குமதி செய்யும் வேறு மாநில பெண்களுக்கு தங்கள் கதையில் கதாபாத்தரத்தை சொல்லி  சம்பளமும் தருவதோடு  சேர்த்து நமது தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சாரமான வயதில் பெரியவர்களை மதிப்பதை பற்றியும் சொல்லி கொடுத்தால் இந்த  மாதிரியான சில்லறைகள் இனிமேல் ஆடாது...

இந்த  விழாவில்  இந்தம்மா மீரா மிதுன் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடவடிக்கைகளுக்கு  சக நடிகனாக மட்டுமல்ல  தமிழ்நாட்டை சேர்ந்த  சாதாரண மனிதனாகவும் மிக கடுமையான கண்டனங்கள்...  
     
மன வேதனையுடன்       
அபிசரவணன்

No comments:

Post a Comment