Featured post

Amoham Studios White Lamp Pictures Subhashini K presents

 *Amoham Studios White Lamp Pictures Subhashini K presents* *Filmmaker B. Manivarman Directorial* *Taman Akshan-Malvi Malhotra starrer “Jenm...

Sunday, 16 August 2020

ட்ரிப்”படத்தின் அசத்தும்

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life - u  “ !


தமிழில் ஒர் புதுமையாக
காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும்  “ ட்ரிப் “  திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள்  முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட  டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல்,  திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென,   உத்தரவாதம் தந்துள்ளது. இந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள முதல்  சிங்கிள் பாடலான  “what a life -  u” பாடல் படத்தின் மீது இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சிவப்பு, மஞ்சள், பச்சை” படப்புகழ் இசையமைப்பாளர் சித்து  தந்துள்ள பெப்பியான இசை,  கதாப்பாத்திரங்களின்  குணாதிசயங்களை, தனது கொண்டாட்ட வரிகளில் புட்டு வைக்கும் மோகன் ராஜனின் வரிகள், கேட்டவுடன் பிடித்துபோகும் பாடகர்  கானா பாலாவின் குரல், அட்டகாச கலவையாக உருவாகியுள்ள  இந்த   “what a life -  u” பாடல் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்துள்ளது.

இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி கொடிகட்டி பறக்கும் DIVO நிறுவனம், தங்களது எந்தவொரு பாடல் ஆல்பமாக இருந்தாலும், அதை ரசிகர்கள் அனைவரிடமும்  அழகான முறையில் கொண்டு சேர்த்து, வெற்றி பெறச்செய்து விடுவார்கள். இப்பாடலும் ரசிகர்களை ஈர்த்து, அவர்களின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகாக இணைந்திருக்கிறது.


காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில் உருவாகும் “ட்ரிப்”  படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பரபரப்பு தரும் டீஸர்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, “ட்ரிப்” படத்தின் டிஜிட்டல்,  சேட்டிலைட் உரிமையை சன் குழுமம் வாங்கியிருப்பது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

No comments:

Post a Comment