Featured post

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara;

 Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By...

Saturday, 29 August 2020

ஊடகநண்பர்களுக்கு வணக்கம்

ஊடகநண்பர்களுக்கு வணக்கம்

ஒரு குரலாய் ...

உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் .

@usctofficial வழங்கும் உலகளவில் பிரம்மாண்டமான நிகழ்நிலை இன்னிசை கச்சேரி . 12 - ஆம் தேதி செப்டம்பர் மாதம் அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது .இந்த பேரிடர் சமயங்களில் வாழ்வாதாரத்திற்க்காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திறட்டி உதவுவதே இதன் நோக்கம்.

நம்மை மகிழ்வித்த கலைஞர்களுக்கு நாம் கைகொடுக்கும் நேரமிது

நன்றி வணக்கம்

நிகில் முருகன்
28:08:2020

ஒரு குரலாய்

29.09.2020

USCT வழங்கும் “ஒரு குரலாய்”

இந்த ‘பாண்டமிக்’கோவிட் -19 சமயத்தில் பொழுதுபோக்கு துறை பேரிடரை எதிர்கொள்கிறது . நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் , பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது . இவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதே அமைப்பின் நோக்கம் . இதற்காக USCT “ஒரு குரலாய்” எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி உலகளவில்
செப்டம்பர் 12-ஆம் தேதி 2020 அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது . உங்களுக்காகவே சிறந்த பாடல்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் பிரபலங்களுடன் உரையாடல்கள் வழங்க இருக்கிறோம்.


USCT திரு. விஜய் சேதுபதி அவர்கள் மற்றும் திரு. சிவகார்த்திகேயன் அவர்கள் இசை நிகழ்ச்சியின் போஸ்டர் வெளியிட்டு எங்களுக்கு ஆதரவை தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் திரு. ஶ்ரீநிவாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து  பாடகர்கள் திரு.உன்னிக்ருஷ்னன் , திருமதி. சுஜாதா மோகன் , திரு. ராகுல் நம்பியார், திரு. ரஞ்சித் கோவிந்த் , திரு. ஹரிசரண் , திருமதி . சைந்தவி பிரகாஷ் , அவர்கள் அறங்காவலர்களாக பொறுப்பேர்கிறார்கள்.


எங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் , முயற்சிகளுக்கும் நீடித்த ஆதரவளித்து உறுதுனையாக நிற்கும் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய இந்த புதிய முயர்சிக்கு நீங்கள் தந்த பேராதரவை என்றென்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.


இந்த இசை நிகழ்ச்சிக்கு ஃபேஸ்புக் இந்தியா தங்கள் முழு ஆதரவை தருகிறது மற்றும் இவர்களுடன் சில்வர்ட்ரீ நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டது இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு டிஜிட்டல் ஆதரவு அளிப்பது ஊடகா எனும் நிறுவனம் . நிதி திரட்ட உதவும் வலைதளம் ‘insider.in ‘

இந்த ‘ஒரு குரலாய்’ நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்


Donation link: https://bit.ly/3ly8BsW


USCT- இன் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் போஸ்டர்

Facebook - www.facebook.com/usctofficial
Instagram - www.instagram.com/usctofficial
Twitter - www.twitter.com/usctofficial

No comments:

Post a Comment