Featured post

உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் ...

Monday, 31 August 2020

நடிகர் திரு.சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய

நடிகர் திரு.சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளைக்கு இருபது லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். முதலில், அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா


தொற்று நோய் பரவல் காரணமாக தொழிலை இழந்து நிற்கும் இன்றைய சூழலில் நாடக மற்றும் மூத்த திரைப்பட  நடிகர்  நடிகைகள்  பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திரு. சூர்யா அவர்கள் வழங்கியுள்ள இந்த இருபது லட்ச ரூபாய் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இரண்டாயிரம் நபர்களுக்கு  விரைவில் பிரித்து வழங்கப்படும்.
- தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை .
31.8.2020

No comments:

Post a Comment